Archive
Dominos Pizza and some useless Research
பாரிஸ் ஹில்டனை அறியாத அமெரிக்கர்கள் அரிது.
ஹில்டன் ஹோட்டல் என்னும் பெயர் கேள்விபட்டதாக இருந்தாலும்,
சுய அடையாளத்துக்காக ‘முப்பதே நாட்களில் முன்னூறு
மில்லியன் செலவழிப்பது எப்படி’ என்று செய்து காட்டி
புகழ் பெறுபவர். பணக்காரர்கள் மத்தியில் மட்டுமே தன்னுடைய
பெயரை நிலை நாட்டியவர், இணையத்தின் உபயத்தால்
இப்போது சன் டிவி, ரேடியோ மிர்ச்சி வரை அடிபட
ஆரம்பித்துள்ளார்.
போதையில் மயக்கமுற்ற நிலையில், பாய் ·ப்ரெண்ட் காம லீலா வினோதங்களைப் படம் பிடித்து ‘யாம் பெற்ற இன்பம் …’ என இணையத்தில் ஒரு இரண்டு நண்பர்களுக்கு அனுப்ப, அவர்கள் ஒரு நாலு பேருக்கு அனுப்ப, இன்று பட்டி தொட்டி எங்கும் ‘ஹில்டன் வீடியோ பார்த்தாச்சா’ என்று புள்ளி ராஜா
அளவுக்கு செல்வாக்குடன், ·பாக்ஸ் டிவியிலும் ‘கதையல்ல…
நிஜம்’ மாதிரி ஒரு நிஜ நாடகம் நடத்துகிறார்.
டாமினோஸ் பீட்ஸா வரவழைப்பவர்கள் அதிகம் சொல்லும்
போலி பெயர் ‘பாரிஸ் ஹில்டன்’. அண்களுக்கு அமெரிக்காவின் அட்டர்னி
ஜெனரல் ஜான் ஆஷ்க்ரா·ப்ட் பெயர் பயன்பட்டிருக்கிறது. ஜனநாயக கட்சி
சார்பாக நிற்க போகும் ஹோவார்ட் டீனின் ஆதரவாளர்கள், ஜார்ஜ் புஷின்
கட்சிகாரர்களை விட அதிகம் அன்பளிப்பு வழங்குகிறார்கள். அம்மணமாகக் கதவை
திறப்ப்வர்களும் இருக்கிறார்கள். காது, மூக்கு, வாய் என வளையம் இன்ன
பிற சொருகிக் கொண்டவ்ர்களை விட அரைகுறை ஆடையாளர்கள்
அதிகம் வழங்குகிறார்கள்.
சதாமை கைப்பிடித்த அன்றும், மடோனாவும் ப்ரிட்னியும் பின்னிப்
பிணைந்து கிஸ் அடித்த எம்டிவி விழா அன்றும் தாராளமாகக்
கொடுத்திருக்கிறார்கள்.
நம்ம ஊரு டாமினோஸ் மக்களிடம் tip வருகிறதா,
என்று அதிக அளவு விற்பனையாகிறது, என்ன
பெயர் சொல்லி அழைக்கிறார்கள் (எவ்வளவு சிம்ரன்),
எப்படி எதிர்கொண்டு அழைக்கிறார்கள் போன்ற
விவரங்களை கேட்டு சொல்லுங்களேன்!
குழந்தை எழுத்தாளர் சங்கம் – ஆர். பொன்னம்மாள் (4)
தாய்மாமன் வீட்டிலிருந்த என் அன்னை தன் மாமன் மகனை மணக்க ‘எழுதக் கூடாது’, என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது. பாட்டியின் கண்ணீர் அன்னையின் பேனாக்களை மூடிக் கொள்ள வைத்தது.
முதல் கதை பிரசுரமான நாள்: நவ. 28, 1956
திருமணமான நாள்: ஜன. 28, 1958.
தந்தையின் அனுமதியோடு சில கதைகள் மீண்டும் பிரசுரமாக ஆரம்பித்தது. முதல் குழந்தை பிறந்த நாள்: ஜன. 19, 1960. ஆறாவது மாதம் ஜுரத்தில் அந்தக் குழந்தை மடிந்ததால் தன் எழுத்துப் பணியைத் துறந்த என் தாய் குடும்பமே உலகம் என வாழ்ந்தார்கள்.
என் தமையனுக்கு 15 வயது. என் தமக்கைக்கு 13 வயது. என் தந்தை விரும்பிப் படிக்கும் ‘தினமணி’ நாளிதழில் குழந்தை எழுத்தாளர் சங்க (கு.எ.ச.) சிறுகதைப் போட்டி அறிவிப்பு வெளி வந்திருந்தது. அக்காவும், அண்ணனும் தூண்ட மீண்டும் எழுத ஆரம்பித்தார்கள்.
நவ. 13, 1976 அன்று ‘எல்.எல்.ஏ. பில்டிங்கில்’ (தேவநேயப் பாவாணர் நூலகத்தில்) ஏவிஎம் பரிசளிப்பு விழா நடக்கப் போவதாகவும், என் தாய்க்கு இரண்டாம் பரிசு கிடைத்திருப்பதாகவும் கடிதம் வந்தது. இப்போது எங்கள் குடும்பத்துக்கே இறக்கை முளைத்திருந்தது. விழாவில் கலந்து கொண்டு பரிசை வாங்கி வந்தோம்.
(கொஞ்சம் இடைச் செருகல்: கு.எ.ச.வின் 1978 வரலாற்றுப் போட்டியில் கலந்து கொண்ட என் சகோதரியும், ‘திரு.வி.க. வாழ்க்கை வரலாற்று’க்கு ஏவிஎம் வெள்ளிப் பதக்கம் பெற்றாள்.)
1983-இல் என் தாய் எழுதிய ‘கருணை விழிகள்’ என்ற நாவல் கு.எ.ச. மூலமாக முதல் பரிசான தங்கப் பதக்கத்தைப் பரிசாகப் பெற்றுத் தந்ததோடு, கோகுலத்தில் தொடராகவும் வெளிவந்து சிறுவர்களிடையே பெரும் பாராட்டினை பெற்றது.
(சிறு குறிப்பு வளரும்)
Recent Comments