Archive

Archive for January 4, 2004

அர்மீனியாவுக்கும் அணுகுண்டு: பாக். புது திட்டம்

January 4, 2004 Leave a comment

பாராவின் பதிவை பிரதிபலிக்கிறது
டைம்ஸ்.

* பாகிஸ்தானுக்கு என்றுமே தனி வழி. வட கொரியா, ஈரான், லிபியா
என்று பல நாடுகளுக்கு அணு அயுத தொழில் நுட்பத்தை தாரை
வார்த்துள்ளது.

* ரஷியாவிற்கு எதிராக ஒரு நட்பு நாட்டின் அவசியம் கருதி கண்டுக்காமல்
விட்டு விட்டிருந்தார்கள்.

* நெதர்லாண்ட்ஸில் இருந்து 1976-இல் பாகிஸ்தான் திரும்பிய முனைவர் கான்
பல முக்கியமான வடிவமைப்புகளைத் திருடி எடுத்துக் கொணர்ந்துதான் முக்கிய
திருப்பம்.

* ‘மேற்கத்திய நாடுகளின் எதிரி பாகிஸ்தான் மட்டுமல்ல; ஒட்டுமொத்த
இஸ்லாமுக்கும் எதிரிகள்’ என்கிறார் கான்.

* யூரேனியம் செண்ட்ரி·ப்யூஜ்களை தயாரிக்கும் வித்தைகளை
‘யான் பெற்ற இன்பம் …’ என 1998-இல் கான் அறிவியில் சஞ்சிகைகளில்
வெளியிட்டு விடுகிறார்.

* 1987-இல் வெளியிடப்பட்ட ஆராய்ச்சி முடிவுகள், இந்தியாவை
மிரட்டவும் எச்சரிக்கவும் பயன்படுகிறது.

* ‘அழுகிற பிள்ளை பால் குடிக்கும்’ என்பது போல் அமெரிக்க உளவுத் துறை
1986-இல் பாகிஸ்தானிடம் அணுகுண்டுக்கான யூரேனியம தயார் என்ற அறிக்கை
சமர்ப்பிக்கப் பட்டவுடன் நான்கு பில்லியன் (அம்மாடியோவ்…) டாலர் உதவித்
தொகை வழங்கப் படுகிறது.

* சைனாதான் எல்லாவற்றிற்கும் கால்கோள் போட்டது. 1960-இலேயே
பக்கத்து வீட்டுக்காரருக்கு அணுகுண்டுகள் தயரிக்க பாலபாடம் ஆரம்பித்தது.

* பதிலுக்கு உதவி செய்ய முனைவர் கானும் தான் எடுத்து வந்த ஐரோப்பிய
வடிவமைப்புகளை சீனாவுடன் பகிர்ந்து கொள்கிறார்.

* மாப்பிள்ளை கொடுத்து மருமகள் எடுப்பது போல் வட கொரியாவிடம்
ஏவுகணை வித்தையை வாங்கி செண்ட்ரி·ப்யூஜ் நுட்பங்களைத் தர
ஒப்புக் கொண்டார்கள்.

* முஷார·ப்பை இதுவரையில் தர்மசங்கடத்தில் ஆழ்த்தாமல் இருக்க இவற்றை
பொதுஜனத்திற்கு வெளியிடுவதை தவிர்த்து வந்தவர்கள், இப்பொழுது டைம்ஸ்,
போஸ்ட் இன்ன பிற நாளிதழ்கள் மூலம் அமெரிக்கர்களை வெளிச்சத்துக்கு
அழைக்கிறார்கள்.

* ஜெர்மானி, இத்தாலி, தாய்வான், ஜப்பான் என்று பல தேசங்கள், கைகள் மூலம்
பொருட்கள் வட கொரியாவிற்கும் மற்ற அமெரிக்க எதிரிகள் கையிலும்
சிக்காமல் தடுக்கிறார்கள். சீனா போன்ற மற்ற நாடுகள் உதவுகிறதா, தடுக்கிறதா
என்று சொல்லவில்லை.

* அமெரிக்காவிற்கு எதிரானவர்கள் அனைவருமே நண்பர்களாக விளங்கி,
ஒற்றுமையோடு, ஒருவருக்கொருவர் உதவிக் கொள்கிறார்கள்.

பாடம்: அமெரிக்காவை ஏமாற்றுவது எளிது. ஆனால், ஏமாறியதாகக்
காட்டிக் கொள்ளாது.

Categories: Uncategorized

பாகிஸ்தானின் அனவருக்கும் அணுசக்திக் கொள்கை

January 4, 2004 Leave a comment

நன்றி: நியு யார்க் டைம்ஸ்

A brochure from Dr. Khan’s laboratory, advertising technology used in centrifuges to make nuclear arms, was circulated to aspiring nuclear states and a network of middlemen. It was provided to The New York Times by the Institute for Science and International Security, in Washington.

Categories: Uncategorized

பெயரிலிகளுக்கு ஒரு வரப்பிரசாதம்

January 4, 2004 Leave a comment

காசியின் இன்றைய நியூக்ளியஸ் வலைப்பதிவில்
‘யாரோ’க்களின் இணைய முகவரியை கண்டுபிடிக்கும் வழிகளை சொல்கிறார்.
ஹெரால்ட் ட்ரிப்யூனின் வலைப்பக்கங்களுக்கு
சென்றால் நமது கணினிக்களை நச்சரிக்கும் கிருமிகளையும்,
நாம் செல்லும் அல்லது தடுக்கி விழுந்து விடும் வலைப்பக்கங்களில்
இருந்து தற்காத்துக் கொள்ளும் வழிகளையும் அறியலாம்.

அரேபியாவில் இருந்து கொண்டு அமெரிக்கா என்றும், வேவு
பார்க்கும் ஓற்று நிரலிகளையும், இன்ன பிற ஜந்துக்களையும்
நம் வலை மேய்தலில் இருந்து காக்க உதவுகிறார்கள். அந்தரங்கம்
புனிதமானது!?

சத்தியமாய் நான் பெயரிலியோ, முதுகெலும்பிலனாரோ அல்ல!

Categories: Uncategorized

மயூரா நெட் – வலைத்தமிழ் அந்தம்

January 4, 2004 Leave a comment

சுவைத்தவை: ”
‘வள்ளுவர்செய் திருக்குறளை
மறுவறநன்கு உணர்ந்தோர்கள்
உள்ளுவரோ மநுவாதி
ஒருகுலத்துக்கு ஒருநீதி’

– மனோன்மணீயம்

திருக்குறளில் அடங்கியுள்ள 1330 குறள்களும் கவியோகி மகரிஷி சுத்தானந்த பாரதியாரின் ஆங்கில மொழியாக்கத்துடனும், பேராசிரியர் – டாக்டர் மு. பெரி. மு. இராமசாமி அவர்களின் எளிய உரையுடனும் பகுதி பகுதியாகப் பிரித்து இவ்வலைத்தளத்தில் பிரசுரிக்கப்பட்டிருக்கின்றது. குறித்த இணைப்பினை அழுத்தி அவற்றினைப் பார்வையிடலாம். “

Categories: Uncategorized

புத்தக அறிமுகங்கள் – ஆர். பொன்னம்மாள் (5)

January 4, 2004 Leave a comment

கடவுளின் கருணை, கல்லுக்குள் ஈரம், புடமிட்ட பொன், மனமாற்றம் முதலான நான்கு கதைகள் கொண்ட முதல் தொகுப்பு பழனியப்பா பிரதர்ஸ் மூலமாக வெளியிடப்பட்டது.

புடமிட்ட பொன்: ஒரு சிறுவன் வீட்டை விட்டுப் போனால் எப்படிபட்ட துன்பங்களை அனுபவிக்க நேரிடும், பெற்றோரை தண்டிப்பதாக எண்ணி அவன் வாழ்க்கையை அவலப்படுத்திக் கொள்ளும் விதத்தை சித்தரிக்கிறது. இதைப் படிக்கும் சிறுவர், சிறுமியர் வாழ்க்கை என்பது, திரைப்படம் அல்ல. பணக்காரன் கையில் செல்லக் குழந்தையாய் வாழ்வோம் என்பது கனவு என்பதைப் புரிந்து கொள்வார்கள்.

தந்தை மகனை டேபிள் துடைப்பவனாகப் பார்த்தும் கூட கண்ணீரை சொரியாமல், கட்டிப் பிடித்துக் கொண்டு வீட்டுக்கு வா என்று அழைக்காமல் பேசுவது பெற்றோருக்கு எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்று உணர்த்தலாம்.

கல்லுக்குள் ஈரம் பொல்லாதவனான ஒரு பையனின் கல் போன்ற மனதிலுள்ள ஈரத்தை ஒரு சிறுமி பொறுமை என்னும் உளி கொண்டு உடைத்து வெளிபடுத்தும் விதத்தை சொல்லும் கதை. (இரண்டாம் பரிசு என்பது சற்றே வயதான குழந்தைகளுக்கு என்பதாலே என்று விழாவில் திரு. எம். எஸ். சுப்புலக்ஷ்மி அவர்கள் வெளிப்படுத்தினார்கள்.

கருணை விழிகள்: மோகன் ஏழைச் சிறுவன். சென்னைக் கடற்கரையில் சுண்டல் விற்பவன். பெற்றோரை இழந்த அவனுக்கு பாட்டி மட்டுமே உறவு. ஏழையாலும் பிறருக்கு உபகாரமாக வாழ முடியும் என்பதை உணர வைக்கும் நாவல். பாட்டியின் கருணை நிரம்பிய விழிகள் சாகாமல் மோகனோடு படிப்பவர் விழிகளையும் ஈரமாக்குகின்றன. இது வானதி பதிப்பகத்தாரின் 1984-ம் ஆண்டு வெளியீடு.

அன்பு உள்ளம்: ராஜேஷ¤ம், அவன் தங்கையும் விடுமுறையில் மாமா வீடு சென்று பின்னர் காணாமல் போய் பெற்ற அனுபவங்களைச் சொல்லும் சிறுவர் நாவல். 1978-இல் பழனியப்பா பிரதர்ஸ் வெளியீடு. இதை வெளியிட்டவர் கவர்னராயிருந்த திரு. பட்வாரி அவர்கள்.

(சிறு குறிப்பு வளரும்)

Categories: Uncategorized