Archive
சுற்றுபுற வீடுகள் – 1
பவித்ராவின் ஷாங்ரி-லாவில் ஃப்ளூபுல்லின் டாஃக்லர் விளையாட்டு கிடைத்தது. வலைப்பதிவில் விநியோகஸ்த உரிமை கொடுத்த வாரம் நிறைய விளையாடித் தோற்று அவமானத்தில் கம்மென்று இருந்து விட்டேன். நேற்று மீண்டும் விளையாடியதில் முதல் தடவையே வெற்றி!
இருபது தடவையில் முடித்திருந்தேன். கொஞ்சம் அலசி ஆராய்ந்து அடுத்த முறை ஆறே ஆட்டத்தில் சுத்தம் செய்தேன். இதை விடக் குறைவாக எடுக்க வேண்டும் என்ற ஆசையில் தொடர்ந்து ஆடியதில் பனிரெண்டு முறை ஆகிப் போச்சு. நீங்களும் ஆடிப் பார்த்து எத்தனை தடவையில் முடித்தீர்கள் என்று உண்மையை சொல்ல வேண்டும்.
என்னுடைய மற்றும் ஐகாரஸ் போன்ற முக்கியமான பலரின் சுந்தர வசிப்பிடமான மயிலாப்பூரின் அந்தக் காலங்கள் வரும் எஸ்.வி.வி நாவலை நான் முழுவதும் படித்துப் பார்க்க வேண்டும்.
‘கல் ஹோ ந ஹோ’ இன்னும் திருட்டு வட்டில் பிஸியாக பலர் வீட்டில் சுற்றிக் கொண்டிருப்பதால் பார்க்கவில்லை. ஆனால், ரிடிஃப் அலசலலும் பவித்ராவின் விமர்சனமான “படம் முழுக்க New Yorkஐத் தான் வட்டமிடுகிறது. இருந்தாலும், யதார்த்தம் மீறாமல், இயல்பாக எடுத்திருக்கிறார்கள்” கருத்துகளும் நேர் எதிர். நான் படம் பார்த்த பிறகுதான் எதார்த்தத்தை குறித்த கருத்துகளை சொல்ல முடியும்.
The Sum of All Fears: A Glance
படம்: எல்லா பயங்கரத்துக்கும் ஒரு மொத்த கவலை
கதைத்தது: ஊர் பேர் தெரியாதவன் ரஷிய முதல்வன் ஆகிறார்.
அவர்தான் அடுத்த நெ.1 என்று ஜோசியம் சொன்ன துடுக்கு
007, பெரிய பதவிக்கு வரும் சமயம், அமெரிக்காவில்
அணுகுண்டு வெடிக்கிறது. அதன் பிறகு?
நடந்தது: பதினைந்தே நிமிடத்தில் என்னுடைய மனைவி ‘கொர்.. கொர்ர்…’
மேலும் நடந்தது: அணுகுண்டு வெடித்த இடங்களுக்கு நடுவே, ஹீரோ, வில்லன்களை
விரட்டி சென்று அடித்து உதைத்து, லேட்டாக வரும் போலீஸிடம்
ஒப்படைப்பது.
நடக்காதது: அணுகுண்டு வெடிப்பதற்கு ஒரு வினாடியே பாக்கி இருக்கும் போது,
ஹீரோ களத்தில் குதித்து, கம்பிகளை சோதித்து, சிந்தித்துத் துண்டிப்பது.
ரசித்தது: காத்திருக்கும் காதலியிடம், ரஷியா செல்வதாக உண்மை சொல்லி,
திட்டு வாங்குவது.
ரசிக்காதது: க்ளைமாக்ஸில் மாற்றி மாற்றி பட்டன் தட்டி, வெடி வெடிப்பது.
விரும்பியது: வேலையில் புதியவர், நிதானிக்காமல் செயலில் இறங்குவது.
கேட்டது: ‘நான் அறிவுரை கேட்டா, நீ நிசமாவே பேசணும்னு அர்த்தம் இல்ல!’
ஒத்துக்கொண்டது: ‘மக்கள் ஹிட்லரை பைத்தியக்காரன் என்கிறார்கள். அவர் லூசு இல்லை; முட்டாள்.’
பிடித்தது: இரண்டு மணி நேரம் ரொம்ப யோசிக்காமல் ஒரு படம் பார்த்தது.
புரியாதது: ஹீரோவின் காதலி அழகாக இருந்தாலும், ஒன்றுமே செய்யாமல்,
(குறைந்தபட்சம் ஒரு டூயட் கூட இல்லாமல்) எதற்கு வந்து போகிறார்?
தெரிந்து கொண்டது: ஊர் ரெண்டு பட்டால், கூத்தாடிக்குக் கொண்டாட்டம்!
தெரியாதது: ஐநா, NATO, மற்ற நாடுகளால் இன்னொரு உலக யுத்தத்தைத் தடுக்க முடியாதா?
Recent Comments