Archive
இந்தியாவின் தலைசிறந்த வலையமைப்பு கொண்ட பல்கலை.: பிட்ஸ்
இந்தியா டுடே குடும்பத்தில் இருந்து வெளிவரும் பிஸினஸ் டுடே கம்பியிணைப்பில் முண்ணனியில் இருக்கும் நிறுவனங்களின் தலை இருபதை வெளியிட்டுள்ளது. பட்டியலில் இருக்கும் ஒரே கல்விக் கூடம் பிட்ஸ், பிலானி.
பிஸினஸ் டுடே கட்டுரையில் இருந்து:
இந்தியப் பல்கலைக்கழகங்களிலேயே மிகப் பெரிய வலைப் பின்னல், ஜனவரி ஏழாம் தேதி முதல் இயங்க ஆரம்பித்தது.இருபது கிமீ வடத்தைக் கொண்டு நாலாயிரத்துக்கும் மேல் இடங்களில் வலையுடன் இணைய முடியும். சில முக்கிய இடங்களில் 802.11பி கொண்டு கம்பியில்லா வலைப்பின்னலும் எட்ட முடிகிறது.
சிறந்த தொழில்நுட்பங்களும், பத்திரபடுத்தப் பட்ட பாதுகாப்பு அரண்களும் புத்தம்புதிய மிண்ணனுவியல் உத்திகளும் சிஸ்கோ, விப்ரோ எனப் பெருந்தலைகளின் பங்குகளுடன் வடிவமைக்கப் பட்டிருக்கிறது.
இளைஞர்களிடையே மூன்றாவது ஒருங்கிணைப்பு குழு! – கேடிஸ்ரீ
சென்னை ஆன்லைன்:
பொதுவாகவே இன்றைய கல்லூரி மாணவர்கள், இளைஞர்களுக்கு தேசப்பற்று, மொழிப்பற்று, மண்ணின் மீது பிடிப்பு, சமூக அக்கறை இல்லை… இன்றைய இளைஞர்கள் சினிமா, வன்முறை, பார்ட்டி, டிஸ்கோ என்கிற ரீதியில்தான் வலம் வந்துக்கொண்டிருக்கிறார்கள் என்கிற எண்ணம் உங்களிடம் இருந்தால், இப்போழுதே, இந்த கணத்திலேயே அந்த எண்ணங்களை மாற்றிக்கொள்ளுங்கள்… எங்களுக்கும் சமூகஅக்கறை, மொழிப்பற்று, நாளைய இந்தியாவைப் பற்றிய கனவுகள் எல்லாம் இருக்கிறது என்று உரத்த குரலில் குரல் கொடுக்கிறார் கபிலன் வைரமுத்து.
”தமிழகத்தில் இதுவரை இரண்டு முறை இளைஞர்களின் ஒருங்கிணைப்பு நிகழ்ந்திருக்கிறது.. முதல் ஒருங்கிணைப்பு சுதந்திரப்போராட்ட காலத்தில் ஏற்பட்டது. அன்றைய காலத்தில் இளைஞர்களிடையே நாட்டின் சுதந்திரம், அடிமை சங்கிலியிலிருந்து வெளிவர வேண்டும் என்கிற எழுச்சியும், கோஷமும் ஏற்பட்டது. −ரண்டாம் முறை இளைஞர்களின் ஒருங்கிணைப்பு திராவிட இயக்க எழுச்சி தோன்றிய கட்டத்தில் ஏற்பட்டது. அன்றைய காலக்கட்டத்தில் இளைஞர்களை சுயமரியாதை இயக்கங்களும், திராவிட வளர்ச்சியின் பரிமாணங்களும் ஒருங்கிணைத்தது.” என்கிறார் கபிலன்.
தனிமனிதனின் முகத்தினால் மக்களுக்கு ஒர் இயக்கம் தெரியவருவதைவிட அவர்களின் கொள்கைகளின் மூலலே அந்த இயக்கம் மக்களிடையே தெரிய வேண்டும் என்பது இவர்களின் நோக்கம்… ஆகையால் இவ்வியக்கத்திற்கு என்று தனியாக தலைவர் கிடையாது என்பது சிறப்பம்சம்.
இவரின் இரண்டாவது கவிதை தொகுப்பு ‘என்றான் கவிஞன்’. தினசரி தான் போகும் ரயில், பார்க்கும் ரயில் நிலையம், வகுப்புகள், மாணவர்கள், கல்லூரி காதல் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு இவர் பார்த்த நிஜங்கள் அத்தனையும் கவிதை வடிவில் ‘என்றான் கவிஞன்’ மூலம் சொல்லியிருக்கிறார். இந்த கவிதை தொகுப்பில் விவேகானந்தரின் ஓர் சிந்தனையை அவருடைய பாணியிலேயே கவிதையாக வடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
”பற்றற்றிரு’ எனக்கு பிடித்த தத்துவம்” என்கிறார் கபிலன். தந்தை வைரமுத்துவின் ‘வளர்சிதை மாற்றம்’ என்கிற கவிதை தனக்கு பிடித்த கவிதை என்கிறார் கபிலன்.
தமிழ் மீடியத்தில் படித்துவிட்டு கல்லூரிகளில் ஆங்கில வகுப்பில் பாடம் படிப்பவர்களின் மனரீதியான போராட்டத்தை இவரின் இரண்டாவது தொகுப்பான ‘என்றான் கவிஞன்’ என்கிற கவிதைத் தொகுப்பில் ‘தமிழ்மீடியம்’ என்றொரு கவிதையின் மூலம் அழகாக சொல்லப்பட்டிருக்கிறது.
தமிழிலேயே படித்து தொழிற்நுட்ப கல்லூரிகளில் நுழையும் மாணவர்கள் எப்படிப்பட்ட துன்பங்களை அனுபவிக்கிறார்கள் என்பதை சித்தரிக்கும் வகையில்… மொழி ரீதியான துன்பம் அவர்களுக்கு மனரீதியான துன்பமாக மாறிவிடுகிறது… மிகச் சிலர் தான் அதில் போராடி வெளிவருகிறார்கள்… பெரும்பாலானவர்கள் அந்த நான்கு ஆண்டுகளாகவும் வெளிச்சம் இல்லாத ஓர் இருட்டறையாகவே இருக்கிறது…
மேலும் விவரங்களுக்கு:
தொலைபேசி எண் 24844767
மின்னஞ்சல் : to_kabilan@hotmail.com
திருச்சியில் விபத்து
52 people killed in Tiruchirappalli fire: மணமகன் உட்பட 52 பேர் திருமண மண்டப விபத்தில் உயிரழந்து விட்டார்கள். அமெரிக்காவில் பொதுமக்கள் கூடும் இடங்களில் சட்டென்று வெளியேறுவதற்கு நிறைய வாசல்கள் வைத்திருப்பார்கள். ஹோட்டலின் ஒவ்வொரு அறையிலும், தீ பற்றிக் கொண்டால் எவ்வாறு வெளியேற வேண்டும் என்பதை விளக்கி யிருப்பார்கள். இங்கு வந்தவுடன் தங்கிய விடுதியில் அதைப் பார்த்து, அடிக்கடி விபத்து ஏற்படுமோ என்று விசாரிக்க வைக்கும்படி படம் போட்டு, அம்புக்குறியிட்டு தப்பிப்பதற்கு வழி சொல்லுவார்கள்.
விபத்துக்களைத் தடுக்க முடியாது. துயர் தீர்க்கும் உதவியாவது நேரத்தேக் கிடைத்து உயிர் பலிகளைத் தடுக்க வேண்டும்.
கதை விட வாங்க – 4 (பா. ராகவன்)
பழைய பெட்டிகளைக் கொஞ்சம் குடைந்துகொண்டிருந்தேன். எழுத
ஆரம்பித்து அதிசுமார் 20 கதைகள் வரை பிரசுரமாகியிருந்த தொண்ணூறுகளின்
முற்பகுதியில் எனக்கான சிறுகதை இலக்கணம் என்று ஒரு பத்திருபது
பாயிண்டுகள் எழுதிவைத்தேன்.
இப்போது தற்செயலாக அகப்பட்ட அந்தக் குறிப்புகளை
இங்கே போடலாம் என்று தோன்றியது. காப்பிரைட்
என்னுடையது அல்ல. யார்யாரோ சொன்னதன் தொகுப்பு
அல்லது திரட்டு அல்லது திருட்டு.
1. கையெழுத்துப்பிரதியாக 5 பக்கங்களுக்கு மேல் ஒரு சிறுகதை
வளராமல் பார்த்துக்கொள்.(பெரும்பாலான
சப் எடிட்டர்களுக்கு இது விஷயத்தில் பொறுமை இருப்பதில்லை)
2. தன்மை ஒருமையில் ஒரு டிரா·ப்ட் எழுதிக்கொண்டு பிறகு
அதை தேர்ட் பர்சனுக்கு மாற்றி எழுதுவது நல்லது. நான் என்று
தொடங்கி எழுதும்போது தான் கதையில் ஒரு உயிர்ப்பு வருகிறது.
ஆனால் கதைக்கு நான் கூடாது என்பதால் எழுதிவிட்டு அவனாக்கிக்
கொள்வது பெட்டர்.
3. ஒரு செண்டன்ஸில் நாலைந்து சொற்களுக்கு மேல் கூடாது.
4. நாலு பேராவுக்கு ஒரு வர்ணனை வை. பெண்ணையோ, பேயையோ
உன்னையோ எதையாவது ரெண்டு வரி
வருணிப்பதன் மூலம் கொஞ்சம் வாசனை கூடுகிறது.
5. கதாபாத்திரம் ஒரு அலைவரிசையில் இயங்கிக்கொண்டிருக்கும்போது
நீ குறுக்கே மூக்கு நுழைக்காதே. கதாபாத்திரத்தின் கருத்துடன்
உன்னுடையது ஒத்துப்போகாவிட்டால் ஒன்றும் கொலைபாதகம் இல்லை.
6. கூடியவரை சிறுகதையில் காலம் காட்டாதே. அதாவது
மணி, நாள், மாதம், வருஷமெல்லாம் வேண்டாம்.
உணர்ச்சிகளை முக்கியப்படுத்து. தேவையானபோது மட்டும் சம்பவங்கள்.
7. செகண்ட் பர்சனில் கதை எழுதிப்பழகு. அது தொழில்நுட்பத் தேர்ச்சி தரும்.
8. புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், கி.ரா., இவர்களெல்லாம்
சிறுகதையில் மிகவும் சாதித்தவர்கள் என்பார்கள். ஆனால்
உனக்கு உதவாது. ஆரம்பத்தில் நீ பின்பற்றவேண்டியவர்கள்
ஜானகிராமன், சுஜாதா, ஆதவன், சுப்ரமணியராஜு, சுந்தரராமசாமி
ஆகியோர் மட்டுமே.
9. ஒரு போதும் முழுக்கதையை முடிவு செய்துவிட்டு எழுதத்
தொடங்காதே. உனக்கு அந்த உரிமை இல்லை. முதல் வரிக்கு
மட்டும் முயற்சி செய். கதை தன்னை உற்பத்தி செய்துகொள்ளும்.
10.சிறு சிறு விவரங்கள் சிறுகதைக்கு முக்கியம். ஒரு கதையில்
ஆள், உயரம்,வாசனை,நடை, நாற்றம்,லே அவுட், மேனரிசம்,கோபம்,
புன்னகை,அழுகை, துடிப்பு, வேகம்,சூழல், செயல், செயலின்மை,
பேச்சு, மௌனம் இதெல்லாம் வரவேண்டும்; தெரியவேண்டும்.
11. வசனங்கள் கூடியவரை குறைவாக இருக்கவேண்டும். வசனம்
என்பது நாடகத்தின் கருவி. சிறுகதைக்கு மௌனமே சிறப்பு.
12. ஒரு கதை எழுதுமுன் ஒரு நல்ல கதையைப் படி. உனக்கு
உகந்தது, அசோகமித்திரனின் மகா ஒற்றன், ஆதவனின்
கருப்பாக, உயரமாக…, லா.ச.ரா.வின் த்வனி. இந்த சமயத்தில்
தி.ஜாவையோ சுஜாதாவையோ தொடாதே. வாசனை ஒட்டிக்கொள்ளும்.
13. எழுதி முடித்ததும் கடைசியிலிருந்து வெட்டிக்கொண்டு வா.(வரிவரியாக.)
14. மிரட்டும் சொற்கள் வெண்டாம். எளிமையே ஆபரணம்.
15. ஒவ்வொரு கதை எழுதி முடிக்க முடிந்ததும் கடவுளுக்கு நன்றி சொல்லு.
பி.கு: இவையெல்லாம் என்க்கு நானே சொல்லிக்கொண்டவை.
இன்றுவரை, அநேகமாக அனைத்து ரூல்களையும்
பின்பற்றுகிறேன்.யாருக்காவது உபயோகப்படுமானால் சந்தோஷம்.
நன்றி: புத்தகப் புழு மடலாடற் குழு
Recent Comments