Archive
ஆட்டோகிராஃப் – திரைப்பாடல் விமர்சனம்
இசை: பரத்வாஜ்
நட்சத்திரங்கள்: சேரன், கோபிகா, ஸ்னேஹா
இயக்கம் & தயாரிப்பு: சேரன்
1. ஞாபகம் வருதே – பரத்வாஜ் – 2.5 / 4
‘அவரவர் வாழ்க்கையில் ஆயிரமாயிரம் மாற்றங்களை’ப் பிடித்தவர்களுக்கு, இந்தப் பாடலும் பிடிக்கும். பட்டியலிடுவது கொஞ்சம் அலுப்பு தட்ட வைத்தாலும், வரிகளை காயப்படுத்தாத இசை.
பிடித்த வரிகள்:
‘முதல் முதல் பார்த்த டூரிங் சினிமா
முதல் முதல் வாழ்ந்த கிராமத்து வீடு
முதல் முதல் அழுத சினேகிதன் மரணம்’
புளித்த வரிகள்:
‘முதல் முதல் குடித்த மலபார் பீடி
முதல் முதலாக விரும்பிய இதயம்’
2. ஜகதோ தாரண – ஸ்ரீவித்யா, ரேஷ்மி – 3 / 4
என்ன ராகம் என்று தெரியாது. ஆனால் கேட்பதற்கு ரம்மியமாக இருக்கிறது. ஒரு மெல்லிய மாலையில் காபியை வைத்துக் கொண்டு பனி விழுவதை வேடிக்கை பார்க்கும்போது கேட்பதற்கு ஏற்ற பாடல். சரளி வரிசை வந்தாலும் போரடிக்காமல் உள்ளது.
3. கிழக்கே பார்த்தேன் – யுகேந்திரா, ஃபோனி – 1.5 / 4
எதற்காக பாடல் நடுவில் ‘ராப்’ நுழைந்தது என்று தெரியவில்லை. தோழியின் பெருமைகளை அடுக்கும் சாதாரணமான இசை கொண்ட பாடல். கேட்காமலும் விடமுடியாது; கேட்டாலும் மனதில் இடம் கேட்டு ஆக்கிரமிக்காது
பிடித்த வரிகள்:
‘என் பயணத்தில் எல்லாம் நீ கைகாட்டி மரமாய் முளைத்தாய்
தோழி ஒருத்தி கிடைத்தால் இங்கு இன்னொரு பிறவி கிடைக்கும்
இதுவரை இந்த உண்மை ஏன் தெரியவில்லை எவருக்கும்?’
4. மனமே நலமா – பரத்வாஜ் – 2 / 4 (பிட் பாடல்)
கொஞ்சம் பீட்… கொஞ்சம் கொஞ்சல்…
5. மனசுக்குள்ளே தாகம் – ஹரிஷ் ராகவேந்திரா, ரேஷ்மி – 2 / 4
மெலடிக்கு மலையாளம் ரி-மிக்ஸ் கொடுத்த வார்த்தைகள். ஆங்காங்கே எட்டிபார்க்கும் ஸேக்ஸும், மலையாள வாத்தியங்களும் மெருகேற்றுகிறன. ஹரிஷும் ஏமாற்றவில்லை.
பிடித்த வரிகள்:
அனேகமாக மொத்தப் பாடலையும் சொல்ல வேண்டும்.
புளித்த வரிகள்:
‘தமிழ்நாட்டு வெட்கம் வந்துச்சோ…’
6. நினைவுகள் நெஞ்சில் – உன்னி மேனன் – 1.5 / 4
காதல் பிரிவில் வரும் துக்கப் பாடல். சோகரசத்தை விட தாலாட்டு போல் தெரிகிறது. இசையமைப்பாளரும் பாடலாசிரியரும் இன்னும் கொஞ்சம் மனதைப் பிழிந்திருக்க வேண்டிய பாடல்.
‘என்னை எனக்கேப் பிடிக்கவில்லை
காரணம் கேட்டால் தெரியவில்லை’
7. ஒவ்வொரு பூக்களுமே – சித்ரா – 2.5 / 4
நெடுந்தொடர் முன் வரும் பாடல் போல் உள்ளது. (ஆனால், நன்றாகவே உள்ளது). சேரனுக்கு ஸ்னேஹா கொடுக்கும் அட்வைஸ் படலமாக இருக்கலாம். அதை நினைத்தால் பாடல் இன்னும் மெருகேறுகிறது.
பிடித்த வரிகள்:
‘மலையோ அது பனியோ நீ மோதி விடு
ஓரு கனவு கண்டால்
அதை தினம் முயன்றால்
ஓரு நாளில் நிஜமாகும்’
புளித்த வரிகள்:
சில cliches இருந்தாலும் இனிமையான பாடல்.
8. மீசை வைச்ச பேராண்டி – கோவை கமலா, கார்த்திக் க்ரூப் – 3 / 4
‘பார்த்திபன் கனவில்’ கூட குத்தல் பாட்டு வைத்திருக்க வேண்டும். இங்கு பெணகளினால் ஏற்படும் சோகத்தை கூத்தாக சொல்லும் பாடல். ஜாலியாக ஆடிவிட்டு, தெருத்துவத்தை சிலாகிக்கவும் உள்ள ‘பெப்ஸி’ உங்கள் சாய்ஸ் பாடல். ட்ராஃபிக் ஜாமில் மாட்டிக் கொண்டால் ஒலிப்பேழையோடு சத்தமாகப் பாடி ‘டைம்பாஸ்’ செய்யுங்கள்.
காதைக் கிழிக்காத இசையையும், திரைப்பாடல்களில் வைரவரிகளைத் தேடுபவர்களுக்கும் உருப்படியான சமாசாரம் நிறைய இருக்கு. அவசியம் கேளுங்க
ஆட்டோகிராஃப் – திரைப்பாடல் (2)
இசை: பரத்வாஜ்
பாடகர்: சித்ரா
பாடலாசிரியர்: ???
F:
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே
ஓவ்வொரு விடியலும் சொல்கிறதே
இரவானால் பகல் ஒன்று வந்திடுமே
நம்பிக்கை என்பது வேண்டும் நும் வாழ்வில்
லட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்
மனமே ஓ மனமே நீ மாறிவிடு
மலையோ அது பனியோ நீ மோதி விடு
உள்ளம் என்றும் எப்போதும்
உடைந்து போகக் கூடாது
என்ன இந்த வாழ்க்கையென்ற
எண்ணம் தோன்றக் கூடாது
எந்த மனிதன் நெஞ்சுக்குள்
காயம் இல்லை சொல்லுங்கள்
காலபோக்கில் காயமெல்லாம்
மறைந்து போகும் மாயங்கள்
உளி தாங்கும் கற்கள் தானே
மண் மீது சிலையாகும்
வலி தாங்கும் உள்ளம் தானே
நிலையான சுகம் காணும்
யாருக்கில்லை போராட்டம்
கண்ணில் என்ன நீரோட்டம்
ஓரு கனவு கண்டால்
ஆதை தினம் முயன்றால்
ஓரு நாளில் நிஜமாகும்
மனமே ஓ மனமே நீ மாறிவிடு
மலையோ அது பனியோ நீ மோதி விடு
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே
வாழ்கைக் கவிதை வாசிப்போம்
வானம் அளவு யோசிப்போம்
முயற்சி என்ற ஒன்றை மட்டும்
முச்சு போல சுவாசிப்போம்
லட்சம் கனவு கண்ணோடு
லட்சியஙள் நெஞ்சோடு
உன்னை வெல்ல யாருமில்லை
உறுதியோடு போராடு
மனிதா உன் மனதைக் கீறி விதை போடு மரமாகும்
அவமானம் தடுத்தால் நீ எல்லாமே உரமாகும்
தோல்வியின்றி வரலாறா?
துக்கம் என்ன என் தோழா?
ஓரு முடிவிருந்தால் அதில் தெளிவிருந்தால்
அந்த வானம் வசமாகும்
மனமே ஓ மனமே நீ மாறிவிடு
மலையோ அது பனியோ நீ மோதி விடு
ஆட்டோகிராஃப் – திரைப்பாடல்
பாடி இசையமைத்தவர்: பரத்வாஜ்
பாடலாசிரியர்: ???
ஞாபகம் வருதே ஞாபகம் வருதே
ஞாபகம் வருதே
பொக்கிஷமாக நெஞ்சில் புதைந்த நினைவுகள் எல்லாம்
ஞாபகம் வருதே
ஏதோ ஒன்றை தொலைத்தது போலே
ஏதோ மீண்டும் பிறந்தது போலே
தாயே என்னை வளர்த்தது போலே
கண்களின் ஓரம், கண்ணீர் வருதே
ஞாபகம் வருதே ஞாபகம் வருதே
ஞாபகம் வருதே
முதல் முதல் பிடித்த தட்டாம்பூச்சி
முதல் முதல் திருடிய திருவிழா வாட்ச்சு
முதல் முதல் குடித்த மலபார் பீடி
முதல் முதல் சேர்த்த உண்டியல் காசு
முதல் முதல் பார்த்த டூரிங் சினிமா
முதல் முதல் ஜெயித்த சடுகுடு போட்டி
முதல் முதல் வாழ்ந்த கிராமத்து வீடு
முதல் முதல் ஆக்கிய கோட்டாஞ்சோறு
முதல் முதல் போன சிகு புகு பயணம்
முதல் முதல் அழுத சினேகிதன் மரணம்
ஞாபகம் வருதே ஞாபகம் வருதே
ஞாபகம் வருதே
முதல் முதலாக பழகிய நீச்சல்
முதல் முதலாக ஓட்டிய சைக்கிள்
முதல் வகுப்பெடுத்த மல்லிக டீச்சர்
முதல் முதலாக அப்பா அடித்தது
முதல் முதலாக சாமிக்கு பயந்தது
முதல் முதலாக வானவில் ரசித்தது
முதல் முதலாக அரும்பிய மீசை
முதல் முதலாக விரும்பிய இதயம்
முதல் முதலாக எழுதிய கடிதம்
முதல் முதலாக வாங்கிய முத்தம்
ஞாபகம் வருதே ஞாபகம் வருதே
ஞாபகம் வருதே
ஞாபகம் வருதே ஞாபகம் வருதே
ஞாபகம் வருதே
Recent Comments