Archive
இந்தியனென்று சொல்லடா… இந்தியில் பேசடா…
தமிழ் தழைக்குமா என்று இலக்கிய உலகில் இருபத்தி ஆறாம் முறையாக (நான் கணக்கு வைத்துக் கொள்ள ஆரம்பித்ததில் இருந்து) விவாதம் நடந்து கொண்டிருக்க, இந்த ஹிந்திகாரர்களை நினைத்தால் பொறாமையாய் இருக்கிறது. இன்னும் பெயரிலிகள் கால் வைக்காத விரல் விட்டு எண்ணக் கூடிய வலைப்பதிவுகள் மட்டுமே (நானறிந்த வரையில்) உள்ளன. சேவாக் தன்மானம் பார்க்காமல் ஆங்கிலக் கேள்விகளுக்கு ஹிந்தியில் பதிலளிக்கிறாராம். அவர்களும் நியாயமான கோபத்துடன், ஆங்கிலப் பத்திரிகைகளை மொத்தமாக தாக்கியும், ஹிந்தியில் பேசுவதில என்ன அவமானம் என்றும் (நம்மைப் போன்றே) கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்…
எனக்கு ஒரு டவுட்: பந்து வீச்சாளர் ‘பாலாஜி’ தமிழில் பேசினால் இந்திய ஊடகங்கள் வறுத்தெடுப்பதை விடுங்கள்; இவர்காள் என்ன சொல்வார்கள்!
(பின்னறிவிப்பு: “நான் ஹிந்திக்கு எதிரியல்ல; ஹிந்தி எதிர்ப்புக்கு ஆதரவாளனுமல்ல”)
அட்வைஸ் கொடுக்க வயசு ஒரு தடையா?
பதினேழு வயதே நிரம்பிய பாடகியானாலும் ஸ்டேசி ஆர்ரிகோ, ஆடை துறக்கும் சக பாடகிகளை கிண்டலடிக்கிறார். க்ரிஸ்டினாவும் ப்ரிட்னியும் பெண்ணினத்துக்கே இழுக்கு என்று சொல்லிவிட்டு, தான் ஒருபோதும் பாடல் விற்பதற்காகவோ, புகழ் பெறுவதற்காகவோ ஆடை குறைப்பு நடத்தமாட்டேன் என முழங்குகிறார். உண்மையான கவர்ச்சியான தன்னம்பிக்கை நிறைந்த மனதையும், மரியாதை தரக் கூடிய தோற்றத்தையும், பண்பட்ட நடத்தையையும் கொண்ட மதிக்கத்தக்க பெண்ணாக வேண்டும் என்னும் இவர் போன்ற எம்.டி.வி கால கலைஞர்களை பார்ப்பது அரிது.
உலக விற்பனை பட்டியலில் ஐந்தாம் இடத்தில் உள்ள இவர் பாடுவது என்ன பாடல் தெரியுமா? தற்கால கிறித்துவ போதகப்பாடலகள்!
எனக்குப் பிடித்த பத்து நடிகர்கள்
1. கிரீஷ் கர்னாட் – ‘காதலன்’ படத்தில் பார்த்திருப்பீர்களே!?
2. நக்மா – ‘பாட்சா’ படம் ஒன்று போதுமே!?
3. பிரபு தேவா – ‘காதலன்’ படத்தில் பார்த்திருப்பீர்களே!?
4. வடிவேலு – ‘ஊர்வசி… டேக் இட் ஈஸி ஊர்வசி’ பார்த்ததுண்டா!?
5. எஸ்.பி.பி. – – ‘காதலன்’ படத்தில் பார்த்திருப்பீர்களே!?
6. ரகுவரன் – – ‘காதலன்’ படத்தில் பார்த்திருப்பீர்களே!?
7. நந்திதா தாஸ் – ‘அழகி’ படத்தில் பார்த்திருப்பீர்களே!?
8. சீமா பிஸ்வாஸ் – தலை பத்தில் இப்படித்தான் பெயர்கள் போட வேண்டும்!
9. நாகேஷ் – தலை பத்தில் இப்படித்தான் பெயர்கள் போடக் கூடாது
10. இயக்குநர் ஷங்கர் – ‘காதலிக்கும் பெண்ணின் கைகள் தொட்டு நீட்டினால்’
பாட்டில் ஒரு விநாடி அசத்துவாரே…. பார்த்திருக்க மாட்டீர்கள்!
ஊக்கம்: மரத்தடி மடலில் சுரேஷ்
Recent Comments