Archive

Archive for February 26, 2004

மிஸ்டர் மியாவ்

February 26, 2004 Leave a comment

ஜூனியர் விகடன்: “முன்பு தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என்று கரூரில் ஒரு கோயிலில் சில இளைஞர்கள் கோபுர உச்சியில் நின்று போராடினார்கள். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேபோல ஒரு காட்சியை Ôதென்றல்Õ படத்திலும் வைத்திருக்கிறார் தங்கர். இந்த காட்சியைப் பார்த்த குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் மெய்சிலிர்த்துப் போய், தங்கருக்கும் பார்த்திபனுக்கும் பாராட்டுக் கடிதங்களை அனுப்பியிருக்கிறார்.”

Categories: Uncategorized

அ.தி.மு.க-வில் கார்த்திக்..

February 26, 2004 Leave a comment

JuniorVikatan.com: “தேர்தல் சூட்டில் அடுத்து வறுபடத் துவங்கியிருக்கிறார் நடிகர் கார்த்திக். வெளியுலகப் பிரவேசத்தை எப்போதும் விரும்பாத கார்த்திக், கடந்த புதன்கிழமை காலை பதினோரு மணிக்கு அ.தி.மு.க|வின் தலைமைக்கழகம் அமைந்துள்ள ராயப்பேட்டை லாயிட்ஸ் சாலையில் ராதாரவியோடு திடீரென பிரசன்னமாகி அரசியல் பரபரப்பில் ஐக்கியமாகியிருக்கிறார்.

அலுவலகத்துக்கு சற்று முன்பாக காரை நிறுத்திவிட்டு ராதாரவியுடன் நடைபோட்டு அந்த அலுவலகத்தில் நுழைந்த கார்த்திக், அங்கிருந்த கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் ஓ.எஸ்.மணியனிடம் ஒரு கடிதம் அடங்கிய கவரைக் கொடுத்துவிட்டு, கையோடு கொண்டு வந்திருந்த பூச்செண்டையும் கொடுத்தார்!

அப்படியே பக்கத்து அறையையும் எட்டிப்பார்த்த கார்த்திக், அங்கு இருந்த அமைச்சர் வளர்மதி, செங்கோட்டையன், சுலோசனா சம்பத் ஆகியோரைச் சந்தித்து, ÔÔநான் அ.தி.மு.க. அனுதாபிÕÕ என்று சொல்லி திரும்பியிருக்கிறார். ”

Categories: Uncategorized

ஜெயமோகன்

February 26, 2004 Leave a comment

ஜெயமோகனிடம் நீங்கள் கேள்வி கேட்கலாம். அதற்கு முன் அவருடைய
படைப்புகள் சிலவற்றையாவது படித்திருப்பது அவசியம்!?

திண்ணை

இரு கதைகள்: வி கெ என் (அஞ்சலி , மொழியாக்கம் : ஜெயமோகன்)
வடக்குமுகம் ( நாடகம் )
படுகை: திசைகளின் நடுவே தொகுதியில் உள்ளது.
பதுமை (நாடகம்)
மாடன் மோட்சம்: 1991 புதிய நம்பிக்கை
கண்ணாடிக்கு அப்பால்: தினமணி தீபாவளி மலரில் வெளிவந்த கதை. கூந்தல் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.
முகம்
தேவதை: இந்தியா டுடே இதழில் வௌ¤யானது
போதி: ‘நிகழ் ‘ – 1990
மாபெரும் பயணம்
நதிக்கரையில் – 1: கதைசொல்லி- மார்ச் மே 99
நதிக்கரையில் – 2: கதைசொல்லி- மார்ச் மே 99
நிழல்

நான்காவது கொலை !!! என்ற இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த துப்பறியும்
தமிழ்த் தொடர்கதை ஆகஸ்ட் முதல் வாரத்திலிருந்து தொடராக திண்ணையில் வெளிவரும்
எழுதுபவர் ஜெயமோகன் !!!

நான்காவது கொலை !!! (அத்தியாயம் : ஒன்று)
நான்காவது கொலை!!! (அத்தியாயம் : இரண்டு)
நான்காவது கொலை!!! (அத்தியாயம் : மூன்று )
நான்காவது கொலை !!! ( அத்யாயம் நான்கு)
நான்காவது கொலை!!! (அத்தியாயம் : ஐந்து)
நான்காவது கொலை!!!(அத்யாயம் ஆறு)
நான்காவது கொலை!!! (அத்யாயம் – ஏழு)
நான்காவது கொலை!!! (அத்யாயம் எட்டு)
நான்காவது கொலை!!! (அத்யாயம் – ஒன்பது )
நான்காவது கொலை !!! (அத்யாயம் 10)
நான்காவது கொலை !!!(அத்யாயம் 11)
நான்காவது கொலை!!!(அத்தியாயம் 12)
நான்காவது கொலை !!! (அத்யாயம் 13)
நான்காவது கொலை!!! (அத்யாயம் 14)

என்னுடைய பின்னூட்டங்கள்:

1. ‘நான்காவது கொலை’ எழுதியதன் நோக்கம் என்ன?

2. எனக்கு அறிமுகமாகம் அண்டை வீட்டார்கள், தமிழ்ச்சங்க நண்பர்கள் என்று
சிலருக்கு தமிழ் புத்தகங்கள் அறிமுகம் செய்வதை முயற்சித்து வருகிறேன்.
இதுவரை விகடன், கல்கி, காலச்சுவடு படித்து வந்தவர்கள். புதுமைபித்தன்,
நரசய்யா, இரா.முருகன், சு.ரா. என நான் கொடுக்கும் புத்தகங்களை ரசிக்கிறவர்கள்,
‘விஷ்ணுபுரம்’ கொடுத்தால் திருப்பியடிக்கிறார்கள். நானே மிகவும் கஷ்டப்பட்டு
அறுபது பக்கம் தாண்டுகிறேன். ஏன்?

3. செய்திகளை சிறுகதையாக்கித் தருவது சிறப்பா? வரலாறாகவே மிகைப்படுத்தி
சுவைபட சொல்லல் மேலா?

Categories: Uncategorized

ஜெயமோகனும் இலக்கியமும்

February 26, 2004 Leave a comment

திண்ணை

விஷ்ணுபுரம் விவாதமும் மீட்புவாதமும்.
தமிழ் நாவல்கள் விமர்சகனின் சிபாரிசு.
அமெரிக்காவில் தமிழன்னைக்கு சமாதி!
தமிழில் சிறுபான்மை இலக்கியம்
சமீபத்திய சிறந்த நூல்கள் ஒரு பட்டியல்

கலைச்சொற்களைப்பற்றி
தமிழ் நவீன பயன்பாட்டுக்கு உதவுகிறதா?
முடிவின்மையின் விளிம்பில்

சுஜாதாவின் அறிவியல் சிறுகதைகள்
சாக்கியார் முதல் சக்கரியா வரை
உலகெலாம்…[சேக்கிழாரின் கனவு ]
ஜெயகாந்தனின் இந்திய முற்போக்கு அழகியல் -1
ஜெயகாந்தனின் இந்திய முற்போக்கு அழகியல் — 2
இனக்குழு அழகியலின் முன்னோடி: கி.ராஜநாராயணன் படைப்புகள்

கலாச்சாரம் பற்றிய மாலன் கேள்விகளுக்குப் பதில்
தொன்னையைக் கொண்டு பாயசம் குடிக்கலாம். கடலைக் கடக்க முடியாது. – மாலன்: (கலாச்சாரம் பற்றிய பதில்களுக்கு எதிர்வினை)
கலாச்சாரம் செவ்வியல் இன்னபிற : மாலனுக்கு பதிலாக சில …
கலாச்சாரம் பற்றிய விவாதம் — சில கேள்விகள்

அவதூறுகள் தொடாத இடம்
இலக்கிய விவாதங்களும் எல்லைமீறல்களும்

கு.ப.ராஜகோபாலன்: நவீனத்துவ சிறுகதை வடிவின் முன்னோடி
ரவி சீனிவாஸின் இலக்கிய உலகங்கள்
மௌனியின் படைப்புக்களின் இலக்கிய இடம்
மறக்கப்பட்ட புன்னகை- எம் எஸ் கல்யாணசுந்தரத்தின் படைப்புகள்
தேவதேவனின் வீடு :ஒரு குறிப்பு
நீல பத்மநாபனின் நாவல்கள் சாதாரணத்துவத்தின் கலை
பூக்கும் கருவேலம்–பூமணியின் படைப்புலகம்
தேவதேவனின் கவிதையுலகம்
அசோகமித்திரன் படைப்புலகுக்கு ஒரு வாசல்
தஞ்சை ஆபிரகாம் பண்டிதர்
மகாராஜாவின் இசை

புன்னகைக்கும் கதைசொல்லி — -அ.முத்துலிங்கத்தின் படைப்புகள் குறித்து…. (முதல் பகுதி)
புன்னகைக்கும் கதைசொல்லி — -அ.முத்துலிங்கத்தின் படைப்புகள் குறித்து…. (இறுதிப்பகுதி)
புலிநகக் கொன்றையை முன்வைத்து ஓர் உரையாடல், பி ஏ கிருஷ்ணன் [தொகுப்பு அருண்மொழி நங்கை]
” நீங்கள் அதன்மேல்தான் நிற்கிறீர்கள் !” அ.முத்துலிங்கம் நேர்காணல்

தக்கையின்மீது நான்கு கண்கள் – குறும்படம்
மாறுதலின் இக்காலகட்டத்தில்…….: எட்டு நூல் வௌ¤யீட்டு விழாவில் ஏற்புரை
ஹெப்சிபா ஜேசுதாசனுக்கு விருது விழா.

அன்புள்ள ஆசிரியருக்கு
சுந்தர ராமசாமிக்கு அன்புடன்
‘ XXX ‘ தொல்காப்பியம்
குறள்- கவிதையும் நீதியும்

மு .தளையசிங்கம் விமரிசனக்கூட்டம் பதிவுகள்
மு .தளையசிங்கம் விமரிசனக்கூட்டம் பதிவுகள் – இரண்டாம் பகுதி
மு.தளையசிங்கத்தின் தத்துவமும் மெய்யியலும் – 1 ( மு .தளையசிங்கத்தை புரிந்துகொள்வதற்கான் அடிப்படைகள்.)
மு.தளையசிங்கத்தின் தத்துவமும் மெய்யியலும் (பகுதி : இரண்டு – மு .தளையசிங்கம் என்ன சொல்கிறார் ?)
மு.தளையசிங்கத்தின் தத்துவமும் மெய்யியலும் – பகுதி :மூன்று – தளையசிங்கத்தின் முக்கியத்துவம் என்ன?
மு .தளையசிங்கம் விமரிசனக்கூட்டம் பதிவுகள் – மூன்றாம் பகுதி

குற்றாலம் பதிவுகள் இலக்கிய அரங்கு – அனுபவப் பதிவுகள். -1
குற்றாலம் பதிவுகள் இலக்கிய அரங்கு – அனுபவப் பதிவுகள். -2

வரலாற்றின் மனசாட்சியை தீண்டும் குரல் ( எழுதிய “பின்தொடரும் நிழலின் குரல்” நாவல் விமர்சனம்): க . மோகனரங்கன்

Categories: Uncategorized

ஒரு விபூதியும் Matterum…

February 26, 2004 Leave a comment

நேற்று பல அமெரிக்கர்கள் விபூதி வைத்துக் கொண்டு வந்திருந்தார்கள். எல்லோருடைய
நெற்றியிலும் கருஞ்சாம்பல்; சிலர் வட்டமாக, சிலர் திலகமாக; இன்னும் சிலர் பஸ்ஸின்
கூட்டத்தில் தேய்ந்து விட்டடது போல; பலருக்கு ஒரு பெரிய கட்டை விரல் அவசரமாகத்
தீற்றி விட்டது போல. விசாரிக்க தைரியம் வரவில்லை. கண்ணும் கண்ணும் சந்தித்த
ஒரு விநாடியில் சிநேகப் புன்னகைத்து, விசாரித்ததில் ‘ஆஷ் வெட்னெஸ்டே’ தெரிய வந்தது.
அமெரிக்காவுக்கு வந்து ஆறு வருடங்கள் ஆகிவிட்டாலும்,
ரயிலில் அலுவலகம் சென்று வருவது இப்போதுதான். இதுவரை இந்த விஷயத்தை அறியாமல்,
என் கேள்விகளுக்கு தெளிவு தரும் வலைபக்கங்களை படிக்கிறேன். தமிழில் எங்காவது எழுதியுள்ளார்களா?


போன வாரம் ஒரு நாள், என்னுடைய ஆங்கில வலைப்ப்பதிவுக்கு திடீரென்று விருந்தினர்
வருகை எகிற ஆரம்பித்தது. ஓரிருவரே சுட்டி கொடுத்திருப்பதும், என்னுடைய
நண்பர் ஒருவர் மட்டுமே பார்வையிடும் ஆங்கில காப்பி/பேஸ்ட் பதிவுக்கு எப்படி இப்படி
ஒரு வரவேற்பு என்று விளங்கிக் கொள்ள முயன்றேன். எல்லாம் அந்த மனீஷா செய்த
மாயாஜாலம். ‘ஏக் சோடிஸி லவ் ஸ்டோரி’ என்று பந்தா செய்து ஏமாற்றிய மாதிரி
மீண்டும் ஒரு முயற்சி செய்வதை எண்டிடிவி
சொல்லியிருந்தது. அதை எடுத்து லிங்கியிருந்தேன். வலையில் பலரும்
மனிஷாவின் சூடான ‘டம்’ படத்துப் புகைப்படங்கள் என விழுந்து விழுந்து தேட,
கூகிள் சுறுசுறுப்பாக தேடி கொடுத்திருக்கிறது. கூட்டம் இப்பொழுது வழக்கம் போல் குறைந்து விட்டது. கூகிள் எப்படியோ
புத்திசாலித்தனமாக என்னுடைய வலைப்பதிவுக்கும் சூடான விஷயத்துக்கும் சம்பந்தமில்லை என்று
முடிவு செய்து கழற்றிவிட்டுவிட்டது. Sex Sells!

Categories: Uncategorized

சுஜாதாவிடம் சில கேள்விகள்

February 26, 2004 Leave a comment

அம்பல அரட்டை

kajan: புகழ் அடைந்தவர்கள் மீடியாவில் கருத்துச் சொல்லும் போது
அக்கருத்தில் தங்களுக்கு நிச்சயமற்ற தன்மை இருப்பின்
அது பற்றி கதைக்கலாமா ?

krishnan: சார் location பார்க்க ஏன் பாடலாசிரியர் செல்ல
வேண்டும் (வைரமுத்து bangkok போனது பற்றி) ?

ஹரன்பிரசன்னா: சுஜாதா.. பின்நவீனத்துவம் பற்றி தமிழில் எதாவது
புத்தகம் இருக்கிறதா?

சுந்தர்: ஷங்கர்.. உங்கள் கருத்தில் உடன்பாடில்லை.. இந்தியர்கள்
வௌ¤தேசத்தில் மட்டுமே கடுமையாக உழைக்கிறார்கள் என்று எந்த general சொன்னார்?

krishnan: சார் நீங்கள் foreign film festivalsக்கு செல்வதுண்டா..
சென்னையில்? மற்ற இடங்களில் ?

krishnan: சார் சாகித்ய அக்கா தம்பி சாரி..அக்காதமி மீது உங்களுக்கு
என்ன கோவம் 🙂

ஹரன்பிரசன்னா: வணிகப்பத்திரிகைகளில் வரும் பெரும்பாலான சிறுகதைகள்
மிக மோசமாக இருக்கின்றன. அதற்கென ஒரு வாசகர் கூட்டம் இருக்கிறதா?
இல்லை ஆழமாகப் படிக்காதவர்களை அந்தக் கூட்டத்தில் சேர்த்துவிட்டார்களா?

ஹரன்பிரசன்னா: சுஜாதா.. அன்னியன் ஏன் தவறு? எனக்குத் தலை வெடித்துவிடும்.
சீக்கிரம் சொல்லுங்கள். 😦

usha1986: சுஜாதா, சின்ன வயதில் உங்களுக்கு நடிக்க ஆசை வரவில்லையா?

shankar: sir i want to participate in director discussion for thrshing out
stories? how it be possible? what to do for that? that too part time??

krishnan: நன்றி பிரசன்னா..சார் ஆசியுடன் ழ அமைப்பு மாதிரி கைப்பேசி
கலைச்சொற்கள் தொடங்கலாமா ?

ஹரன்பிரசன்னா: வர்ணஜாலம் என்றொரு படம் எண்டமூரி வீரேந்திரநாத்தின்
கதை எனக்கேள்விப்பட்டேன். நிஜமா?

krishnan: சார் நான் கூட ஆயுத எழுத்து எதோ ஆங்கில படத்தின் inspiration
என்று கேள்விப்பட்டேன்..உண்மையா ?

ஹரன்பிரசன்னா: உயிரே நாவல் வடிவம் எப்போது வெளிவரும்? அல்லதுவந்துவிட்டதா?

விடைகளுக்கு: அம்பல அரட்டை.

Categories: Uncategorized