Archive

Archive for March 25, 2004

நான் கற்றுக் கொண்ட பாடங்கள்

March 25, 2004 Leave a comment

பாடங்கள்

1. எழுதுவதில் படு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். நட்பு முறையில் கிண்டலடித்தால் கூட கேலியாகும் அபாயம் இருக்கிறது. குறை கூறும் விமர்சனத்தை வைத்தாலும், தனிமனிதத் தாக்குதலாக நினைக்க வாய்ப்புண்டு.

2. அக்கா அண்ணாக்களுடன் பிணக்குக் கொள்வது போல் அல்ல இணையச் சண்டைகள். வெட்டு, குத்து, ரத்தம் எல்லாமே virtual-ஆக வர வாய்ப்புண்டு.

3. எவருக்கும் அறிவுரை போல் தோற்றம் தரும் நினைவூட்டல் மடல்களோ, செல்ல ஐடியாக்கள் பட்டியலோ தேவையற்றது.

4. தனி மடலாக அனுப்பித்தாலும், வலைப்பதிவில் கிறுக்கினாலும், மைக்ரோசா·ப்ட்டின் அழிக்கப்பட்ட மடல்களைத் தோண்டியெடுத்தது போல் மீண்டும் கிளறப்பட்டு, உங்களுக்கு எதிராக வினையாகலாம்.

5. எவரையும் ‘நண்பர்தானே… தவறாக எடுத்துக் கொள்ள மாட்டார்’, என்று நினைக்க வேண்டாம்.

6. சில சமயம் துணிச்சல் அதிகம் கொள்ளாமல் கோழையாகக் காட்சியளிப்பது நல்ல பெயரையும், வீரராகத் தோற்றம் காண்பிப்பது தியாகியாகவும் — பார்ப்பவருக்கு மயக்கத்தை உண்டு செய்யலாம்.

7. பெரியாரையும் பிரபாகரனையும் விமர்சிப்பதை விட்டுவிட்டு ஜெயலலிதாவையும் ஜார்ஜ் புஷ்ஷையும் விமர்சிப்பதே non-controversial and the secret to remain unbranded. அப்படி விமர்சிக்கத்தான் வேண்டுமென்றால் முகமூடி அவசியம் போட்டுக் கொள்ள வேண்டும்.

8. கருப்பு-வெள்ளையாக எந்த விஷயத்தையும் அணுக கிடையாது. எல்லாமே shades of grey.

9. விருந்தினர்களின் வீட்டில் அவர்களுக்காக பாத்திரம் கழுவும் வரை நம்ம வீடு. நமக்காகவும் உழைக்க ஆரம்பித்தால் அவர்களின் சொந்த வீடாகி நாம் அன்னியனாகப் போய்விடுவோம்.

10. இந்த மாதிரி பாடங்களை வெளியில் சொல்லாமல், உங்கள் நோட்பேடில் எழுதிக் கிழித்து விடல் அல்லது கடாசிவிட்டு ‘குப்பைத் தொட்டி’யையும் காலியாக்கி (சந்தேகமாக இருந்தால்) கடின இயக்கியை (hard-drive) format-உம் செய்துவிடல் நலம்.

Categories: Uncategorized

செய்தித்தாள் வடிவில் தினமணி

March 25, 2004 Leave a comment


தினமணியை அச்சு வடிவில் படிக்கலாம்:

தமிழகம் இருள்கிறது; அது நாடு முழுவதுவும் பரவுகிறது: கருணாநிதி

நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8.4 சதம் உயர்ந்துள்ளதாக மத்திய அரசு கூறிவருகிறது. ஐநா. வளர்ச்சிப் பிரிவு, ஆசிய வளர்ச்சி வங்கி போன்றவை 6 சதம் உயர்ந்துள்ளது எனக் கூறியுள்ளது. இந்தியா ஒளிரவில்லை; புளுகுகிறது. 100 கோடி மக்களில் 40 சதம் பேருக்கு எழுதப் படிக்கத் தெரியாது. 100 கோடியில் 33 கோடி மக்களுக்கு ஊட்டச்சத்து குறைவு, 14 கோடி மக்களுக்கு அடிப்படை சுகாதார வசதி இல்லை. 23 கோடி பேருக்கு பாதுகாக்கபபட்ட குடிநீர் இல்லை. 42 கோடி பேருக்கு ஒரு நாள் வருவாய் ரூ.45-க்கும் குறைவு. இந்தியரில் 29 கோடி பேர் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளனர்.

மேலும் ஆண்டுக்கு மலேரியா, காசநோயால் 4 லட்சம் பேர் மரணமடைகின்றனர். 5 வயதுக்கு உட்பட்ட 20 லட்சம் குழந்தைகள் சத்து குறைபாட்டால் உயிரிழக்கின்றன. 40 லட்சம் பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 99-2000 ஆண்டுகளில் நாட்டின் உணவு உற்பத்தி 21 கோடி டன். ஆனால் 2002-03ம் ஆண்டில் அது 18 கோடி டன்னாகக் குறைந்தது.

மேலும் மகளிருக்கு நேரும் அவலங்கள் ஏராளம். 30 4நிமிடத்துக்கு ஒரு பெண் கற்பழிக்கப்படுகிறார். 42 நிமிடத்துக்கு ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிறார். 49 நிமிடத்துக்கு ஒரு பெண் கடத்தப்படுகிறார். 93 நிமிடத்துக்கு ஒரு பெண் படுகொலை செய்யப்படுகிறார்.


Pazhani Tramsபழனி மலையில் பக்தர்களின் வசதிக்காக அமைக்கப்படும் “ரோப்கார்’ திட்டத்தின் நிறைவுக் கட்டப் பணி முழுவீச்சில்
நடைபெற்று வருகின்றது. பக்தர்கள் அமர்ந்து செல்லும் பெட்டிகளை இணைக்கும் பணியில் ஊழியர்கள்.


திருக்குறள்: (எண் – 541)
அதிகாரம்: செங்கோன்மை.

ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை.

யாரிடத்திலும்(குற்றம் இன்னதென்று) ஆராய்ந்து, கண்ணோட்டம் செய்யாமல், நடுவுநிலைமை பொருந்தி, (செய்யத் தக்கதை) ஆராய்ந்து செய்வதே நீதிமுறையாகும்.


நிரந்தர நிம்மதி – என்.எஸ்.எம். ஷாகுல் ஹமீது:

“எல்லாம் விதியின் செயல் என்பது அறியாமையின் வெளிப்பாடு’, “விதியை மதியால் வெல்வோம்’ என்பது அறிவின் செயல்பாடு’ என்று கோடிட்டுக் காட்டியிருப்பது, சோர்ந்து போயிருப்பவனை தூக்கி நிறுத்த உதவும் உத்வேக வரிகள் என்பதில் சந்தேகமில்லை.

ஆனால் உண்மை விளக்கம் அப்படி இருக்க முடியாது. பழியை எதன் மீதாவது போட்டு நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள ஆர்வம் இருந்தால் மட்டுமே, விதியைப் பழித்து மதியால் வென்றதாகப் பூரித்துக் கொள்ளலாம். ஆயினும் பாவம் ஓரிடம் பழி ஓரிடம் என்பதுபோல, எல்லாவற்றுக்கும் விதியைக் காரணம் காட்டுவதும், விதியை மதியால் வெல்லலாம் என்பதும் உண்மை நியதிக்குப் புறம்பானது.

“விதி’ என்பது, என்றோ எழுதி வைக்கப்பட்ட ஓர் அழுக்கடைந்த புத்தகம் என்று நாம் நினைத்தால், “மதி’ என்பது “விதி’யை வெல்லத்தக்கது என்பது சரியாகும். ஆனால், “எழுதிச் செல்லும் விதியின் கைகள், எழுதி எழுதி மேற்செல்லும்..’ என்பதுதான் வரலாறு காட்டும் உண்மை.


தென்சென்னையின் பிரச்சினைகள்: போக்குவரத்து நெரிசல்; குடிநீர்ப் பஞ்சம்

TR Baalu & Baadar Sayeedhதிருவல்லிக்கேணி, தி.நகர், மயிலாப்பூர், சைதாப்பேட்டை, ஆலந்தூர், தாம்பரம் ஆகிய 6 தொகுதிகளை உள்ளடக்கிய தென் சென்னை மக்களவைத் தொகுதியில் தேசியப் பிரச்சினைகளை விட, உள்ளூர்ப் பிரச்சினைகளே தொகுதி மக்களின் கவனத்தை ஆக்கிரமித்துள்ளன.

பொதுவாக ஜாதி ரீதியாக வாக்குகள் பிரியாத, “காஸ்மாபாலிடன்’ தொகுதி. மயிலாப்பூர், மாம்பலம், நங்கநல்லூர், தாம்பரம் என பரவலாக வசிக்கும் பிராமணர்கள், அடுத்த நிலையில் தலித், வன்னியர், நாடார், முதலியார், மீனவர் சமூகத்தவரும் கணிசமாக வசிக்கின்றனர். பாஜகவோ, காங்கிரஸோ இங்கு மோதிக் கொள்ளாததால் வல்லரசாக்கும் வாஜ்பாயா? அயல்நாட்டு சோனியாவா? என்று முன்னிறுத்தப்படும் வாதம் இங்கு முக்கியத்துவம் பெறவில்லை.


Glance @ Entertainment from TN

Categories: Uncategorized