Archive

Archive for March 26, 2004

நட்சத்திர லைப்ரரி – பாலகுமாரன்

March 26, 2004 Leave a comment

தொகுப்பு : சந்துரு

விஸ்வநாதனின் மனிதநேயம் என்ற கவிதைப்புத்தகத்தை சமீபத்தில் படிக்க நேர்ந்தது. புதுக்கவிதை என்று சொல்லப்பட்டாலும் மரபுக்கவிதை ஒட்டிய அவருடைய எழுத்தில் நல்ல சுவையிருக்கும்.

Baalakumaran‘‘ஏசு நாதரும் விஸ்வ நாதரும்
நேசம் வைத்த நம்
நெஞ்சின் உணர்வுதான்
கன்னி மேரியோ கன்யா
குமரியோ
தன்னை அறிந்தவர் கண் ணில் ஒன்றுதான்
பொய்யை மட்டுமே
போற்றும் வாழ்க்கையில்
தெய்வ உண்மைகள்
தெரிவதில்லைதான்
மண்டைக் காட்டிலே
மனித சக்திகள்
சண்டை போடவா சமயம்
வளர்ந்தது?
பெண்டு பிள்ளைகள் துண்டம்
துண்டமாய்க்
கொண்டு போகவா கோவில்
வைத்தது?
மத வளர்ச்சியா? மனித நேயமா?
எது உயர்ச்சியாய் இவர்க்குப் பட்டது!’

கவிஞர் விஸ்வநாதனுக்குத் தனியாக கடிதம் எழுத வேண்டும் என்று தோன்றியது. அதற்குப் பதில் இதோ, இங்கேயே அதைப் பற்றி எழுதி விட்டேன்.

‘சமரசம்’ என்று ஒரு இஸ்லாமிய மாத இதழ் எனக்கு அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள். அதை நான் விடாது படிப்பது வழக்கம். சமீபத்திய சமரசத்தில், ‘ஹாஜிகளே என்ன கொண்டு வந்தீர்கள்?’ என்று பாகிஸ்தானிய சிந்தனையாளர் எழுதிய கட்டுரை ஒன்றை தமிழாக்கி வெளியிட்டிருக்கிறார்கள். எல்லா சமயத்திலும் இடித்துரைப்பு நிகழத்தான் வேண்டும் என்பதை எனக்கு அந்தக் கட்டுரை தெளிவாகச் சொல்லியது.

படிப்பது ஒரு பெரிய சுகம். அது நல்ல ஒரு காதற் பெண்ணோடு கைகோர்த்து சுற்றித் திரிவதுபோன்ற இதம்.

நன்றி: குமுதம்.காம்

Categories: Uncategorized

வேலை கெட்ட வேலை :)

March 26, 2004 Leave a comment

எனக்கு வேற வேலையே கிடையாது என்பது போல் தோன்றியதால், இன்னுமொரு சுய பரிசோதனைச் சாவடி பக்கம் நுழையச் சொன்னார். நிறைய கேள்வி, நடுநடுவே அதை இன்ஸ்டால், இதை நிறுவவா, என்ற சில தொல்லைகளுக்கு ‘NO’வும், மற்ற சுவாரசியமான சிந்திக்க வைத்த ரசனையான கேள்விகளுக்கு உண்மையான பதிலும் கொடுத்த பின்னர் வந்த முடிவுகள்:


HELPER WHO FINDS MISSING CHILDREN OVER THE INTERNET


(Submissive Introvert Concrete Feeler )

Like just 10% of the population you are a HELPER WHO FINDS MISSING CHILDREN OVER THE INTERNET (SICF). You are very tentative in the world and introverted with people–which means you are the shy and silent type. Hence the Internet. But behind your reserved exterior lies a dedicated person with a passion for the concrete truth who wants to, in his heart of hearts, help find missing children.
God bless you.

Categories: Uncategorized

ஆய்த எழுத்து – யாக்கைத் திரி (ஃபனா)

March 26, 2004 Leave a comment

ஏ.ஆர்.:

ஃபனா?

ஆண்:

யாக்கைத் திரி — காதல் சுடர்

ஏ.ஆர்.:

அன்பே

ஆண்:

ஜீவன் நதி — காதல் கடல்

ஏ.ஆர்.:

நெஞ்சே

ஏ.ஆர்.:

பிறவி பிழை — காதல் திருத்தம்
நெஞ்சே

இருதயம் கல் — காதல் சிற்பம்
அன்பே

ஆண்:

யாக்கைத் திரி — காதல் சுடர்

ஏ.ஆர்.:

ஃபனா?

குழு:

தொடுவோம், தொடர்வோம், படர்வோம், மறவோம், துறவோம்
தொடுவோம், தொடர்வோம், படர்வோம், மறவோம், இறவோம்

பெண்:

ஜென்மம் விதை — காதல் பழம்
லோகம் த்வைதம் — காதல் அத்வைதம்
சர்வம் சூன்யம் — காதல் பிண்டம்
மானுடம் மாயம் — காதல் அமரம்

உலகத்தின் காதல் எல்லாம் ஒன்றே அது
உள்ளங்கள் மாறி மாறிப் பயணம் போகும்

ஆண்:

யாக்கைத் திரி — காதல் சுடர்

ஏ.ஆர்.:

அன்பே

ஆண்:

ஜீவன் நதி — காதல் கடல்

ஏ.ஆர்.:

நெஞ்சே

ஏ.ஆர்.:

பிறவி பிழை — காதல் திருத்தம்
நெஞ்சே

இருதயம் கல் — காதல் சிற்பம்
அன்பே

ஆண்:

யாக்கைத் திரி — காதல் சுடர்

ஏ.ஆர்.:

ஃபனா?

குழு:

தொடுவோம், தொடர்வோம், படர்வோம், மறவோம், இறவோம் (முன்று முறை)

ஏ.ஆர்.:

மப மப சரிகமபதநிச…. ஆ?

நன்றி: வாலி
ரசித்தவர்: உயிர் எழுத்து மடலாடற் குழு

Categories: Uncategorized

குறள்வழி

March 26, 2004 Leave a comment

முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்
தகநக நட்பது நட்பு.

இன்முகம் காட்டுவது மட்டும் நட்புக்கு அடையாளமல்ல; இதயமார நேசிப்பதே உண்மையான நட்பாகும்.

ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான்சாம் துயரம் தரும்.

திரும்பத் திரும்ப ஆராய்ந்து பார்க்காமல் ஏற்படுத்திக் கொள்கிற நட்பு, கடைசியாக ஒருவர் சாவுக்குக் காரணமாகிற அளவுக்குத் துயரத்தை உண்டாக்கி விடும்.

ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னு முயிர்க்கு.

பிறர் குற்றத்தைக் காண்பவர்கள் தமது குற்றத்தையும் எண்ணிப் பார்ப்பார்களேயானால் புறங்கூறும் பழக்கமும் போகும்; வாழ்க்கையும் நிம்மதியாக அமையும்.

நன்றி: :: திருக்குறள் – கலைஞர் உரை ::

Categories: Uncategorized