Archive
ஒரு கடிதம் – சிபிச்செல்வன்
உயிர்மையில் டிசம்பர் இதழில் 53ஆம் பக்கத்தில் ‘கவிதைத் திருவிழா’ என்ற நிகழ்வைப் பற்றிய குறிப்பில் என்னுடைய “நீண்ட கட்டுரை பார்வையாளர்களின் பொறுமையைக் கடுமையாகச் சோதித்தது” என்று உள்ளது.
நான் படித்த கட்டுரையின் தலைப்பு ‘எண்பதுகளில் தமிழ்க் கவிதையின் போக்குகள்’. 80களிலிருந்து 90 வரை தமிழ்க் கவிதைகளின் போக்கைக் குறித்து சுமார் 100 கவிதை நூல்களை வாசித்து ஒன்பது பக்கங்கள் எழுதப்பட்ட கட்டுரை அது. பத்து ஆண்டுகள் என்பது ‘நீண்ட காலம்’. என் கட்டுரை ‘நீண்டது’ என்பதையும் இத்துடன் சேர்த்துப் பார்த்துக் கொள்ள வேண்டும். மிக விரிவாக 100 பக்கங்களுக்குக் குறையாமல் எழுதப்பட வேண்டிய கருத்துகளை 9 பக்கங்களுக்குள் எழுதியிருக்கிறேன்.
கவிஞர்கள் சந்திப்பில் வாசிக்கப்பெற்ற கட்டுரைகளில் அதிக எதிர்வினைகளை எழுப்பிய கட்டுரையும் என்னுடையதே. அந்த எதிர்வினைகளுக்கான பதிலையும் அந்த அரங்கத்திலேயே கூறினேன். இவை தவிர அரங்கிற்கு வெளியிலிருந்தும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அக்கட்டுரையின் ‘அதிர்வுகள்’ பரவியுள்ளன. சிலர் தங்கள் பெயர்கள் அக்கட்டுரையின் சேர்க்கப்படவில்லையென்று வருத்தப்பட்டார்கள். சிலர் தங்களை விமர்சித்திருந்தமைக்காக வருத்தப்படவும் செய்கிறார்கள். இவையெல்லாம் அக்கட்டுரையின் முக்கியத்துவத்தைக்
காட்டுகின்றன. ‘பொறுமையச் சோதித்த’ கட்டுரையையும் சிலர் கவனமாகக் கேட்டு எதிர்வினையாற்றிவிடுகிறார்கள்.
சிபிச்செல்வன்
சென்னை
நன்றி: உயிர்மை/சன. 2004
வேட்டு வைத்த பூண்டு – ஆனந்த் சங்கரன்
வலைப்பூவில் அமெரிக்க உணவு வகைகள், உணவகங்கள் பற்றி படித்த பொழுது எனக்கு என்னுடைய அலுவலகத்தில் நடந்த இந்தச் சம்பவம் நினைவுக்கு வந்தது.
சுமார் ஒன்னறை ஆண்டுகளுக்கு முன் நான் பிரபல அமெரிக்க கம்பெனி ஒன்றில் வேலை செய்து வந்தேன். ஐநூறுக்கும் மேற்பட்டோர் வேலை செய்த அலுவலகத்தில், நம்மவர்களின் (இந்தியர்கள்) எண்ணிக்கை நிறைய உண்டு. இந்தியர்கள் நிறைய இருந்தாலும் தென்னிந்தியர்கள் ஒரு சிலரே இருந்தோம். மற்றவர்கள் வடநாட்டினர். (எனக்கு பேஸின் ப்ரிட்ஜை தாண்டினாலே வட நாடுதான்).
எனக்கு இரண்டு இருக்கைகள் தள்ளி ஒரு தமிழ் பேசும் கன்னடரும் இருந்தார். வேலையில் கில்லாடி. கொடுத்த வேலையை திறம்பட செய்யக்கூடியவர். ஆனால் அவருடைய பிரச்சனையே அவருடைய பழக்க வழக்கத்தை மாற்றிக் கொள்ளாததுதான். வீட்டில் எப்படி பேசுவாரோ அதே போல் சத்தமாக தொலைபேசியில் உரையாடுவார் (அதுவும் தமிழ், கன்னடம் ஆகிய மொழிகளில்). அருகில் இருப்போருக்கு கேட்குமோ அவர்களுக்கு எரிச்சலாக இருக்குமே என்று துளியும் யோசிக்கமாட்டார். போதாத குறைக்கு அனைவரிடமும் நட்பாக பேசுகிறோம் என்று நினைத்துக் கொண்டு அனைவரின் பர்சனல் விஷயங்களிலும் மூக்கை நுழைப்பார். எனக்கே இது பல முறை எரிச்சல் மூட்டியுள்ளது. ஒரு முறை அவரிடம் இதைப் பற்றி பேசப்போக அதில் இருந்து என்னிடம் ‘காய்’ விட்டுவிட்டார்.
இதெல்லாம் கூட தேவலை, ஆனால் தினமும் காலையிலும் மதியத்திலும் அவர் செய்யும் அலும்பு இருக்கிறதே ! யப்பா.. தாங்காது.
வந்ததும் வராததுமாய் ஊறுகாய் பாட்டிலை (பூண்டு ஊறுகாய் அவர் மேஜை மீது எப்பொழுதும் இருக்கும்) திறந்து வைத்துக் கொண்டு அந்த அறையையே நாறடிப்பார். எனக்கும் பூண்டு பிடிக்கும்தான் ஆனால் ஒரு அளவு இருக்கிறது. அந்த அறையில் வேலை செய்யும் மற்ற அமெரிக்க நண்பர்களுக்கு தாங்காது. அவர்கள் முகம் சுளிப்பார்கள் – வெளியே எழுந்து போவார்கள். ஆயினும் இவர் அதை ஒரு பொருட்டாகவே எண்ண மட்டார்.
அமெரிக்கர்களிடம் ஒரு நல்ல குணம் (அதுவே வேட்டு வைக்கும் குணம்) இருக்கும். தனக்கு ஒரு விஷயம் பிடிக்கவில்லையென்றால் அதை முகத்தில் அறைந்தார் போல் சொல்ல மாட்டார்கள். பேசாமல் இருந்துவிட்டு அதை வேறு விதமாக காட்டுவார்கள். எனது நண்பர் விஷயத்திலும் இதுதான் நடந்தது.
அலுவலகத்தில் ஆட்குறைப்பு செய்த பொழுது அந்த நண்பர் வேலை போயிற்று. இத்தனைக்கு மிக முக்கிய பணியை அவர் செய்து வந்தார். அவருடைய இழப்பு கம்பெனிக்கு பெரிய நஷ்டம். ஆனாலும் அவர் வெளியே அனுபப்படார். எனக்கும் கத்தி வருமோ என்று பயந்தேன். நல்ல வேளையாக தப்பித்தேன்.
ஆட்குறைப்பிற்கு ஒரு நாள் நானும் என் மேனேஜரும் உரையாடிக்கொண்டிருந்த பொழுது, என்னிடம் விளையாட்டாக ‘உன் அருக்கில் இருப்பானே அந்த பேமானிக்கு ஏன் வேலை போச்சு தெரியுமா ?’ என்று நக்கலாக கேட்டார். நான் வெறும் புன்முறுவல் செய்தேன். ‘அவனுடைய வேலை நன்றாக இருந்தாலும் அவனுடைய பூண்டும், பேச்சும் அவன் வேலைக்கு வேட்டு வைத்தது.’ என்று கூறி மற்றொரு பேமானியை உபயோகித்தார்.
மேலிடம் செய்தது சரியா தவறா என்ற ஆராய்ச்சியை விட நாம் கவனமாக இருப்பது நமக்குதானே நல்லது !!
காதல் சொல்லும் பாடல்
‘பேரரகன்’ சூர்யாவே பேசியிருக்கும் சுவாரசியமான வசன கவிதை ராகாவில் மனதைக் கவர்ந்தது.
அவன்:
ஒரு அழகான பொண்ணு இருந்தா
அதவிட ஒரு அழகான பையன் இருந்தான்
அவங்க ஒரு நாள் சந்திச்சாங்க
அவள்:
என்னது…?
அவன்:
அவளுக்குத் தமிழே வராதுடி
அவள்:
போடா…
அவன்:
ஹே… ஒகே.. ஓகே…
அவளுக்கு அவனப் பிடிச்சது
ஆனா சொல்லலை
ஏன்னு தெரியலை
அவள்:
என்ன…?
அவன்:
ஓண்ணுமில்லே…
அவள்:
சொல்லு!?
அவன்:
அந்தப் பொண்ணு பேசுவா.. பேசுவா…
பேசிட்டே இருப்பா
ஆனா
அது அவனுக்குப் பிடிச்ச ராகம்
அவனுக்கு தூரத்தில இருந்தா தெரியாது
பரவாயில்லை
தன்னுடைய உலகத்தை அவளோடப் பெரிய பெரிய கண்களில் பார்த்தான்
அவ கையெழுத்துக் கிறுக்கல்
ஆனா
அதை எடுத்து
பைத்தியமா இருந்தான்
அவ நடக்கிறப்பக் கொஞ்சம் கசமுசா என்றிருக்கும்
ஆனா அவ முடி அசையறதைப் பார்த்தால்
அந்தக் காற்றுக்கேப் பொறாமை வரும்
அவள்:
ஹே…
நிறுத்து… நிறுத்து
அவன்:
You know Priya
He just loved everything about Her
அவ முடி
அவ நெற்றி
அவ கண்
அவ மூக்கு
அவ கன்னம்
அவ உதடு
அவ கழுத்து
அவ ….
கோரஸ்:
த்தநந…த்தநந…
அவன்:
அவளப் பத்தின நிறைய விஷயம் அவனுக்குப் பிடிக்கலே
அவ பேசற விதம்
ஸ்மோகிங்
The way she behaves
இப்படி நிறைய
நிறையக் கிண்டல் பண்ணியிருக்கான்
அவளப் பிடிச்சிருக்கு
அவன யாருக்கும் பிடிக்கலே
He was really bad Priya
ஆனா தனியா
எப்பவும் தனியா இருந்தான்
அவளுக்கு அவனப் பிடிச்சது ப்ரியா
Don’t know Why
ப்ரியா…!
ஏன் ப்ரியா…?
ஏன் என்னை?
கல்யாணம் பண்ணிக்கோ
எப்பவும் உன்கூடயே இருக்கணும்
உன்னைக் காதலிக்கணும்
உன்னைத் தொல்லை பண்ணனும்
உனக்காக வீட்டுக்கு வரணும்
உன் மடியில் தூங்கணும்
இதே மாதிரி எனக்கொரு குட்டி ப்ரியா வேணும்
அவளை பார்த்துகிட்டே எனக்கு வயசாயிடும்
நான் உன்னோடுதான் சாகணும்
அப்படியில்லேன்னா
சாகணும்
இங்கே…
இப்போ
இளவேனில் கால வாழ்த்துக்கள்
பொங்கல பொங்கல வைக்க
மஞ்சள மஞ்சள எடு
தங்கச்சி தங்கச்சி தங்கச்சி
புஞ்சையும் நஞ்சையும்
இந்த
பூமியும் சாமியும்
இனி
நம் கட்சி நம் கட்சி நம் கட்சி
பூப்பூக்கும் மாசம் தை மாசம்
ஊரெங்கும் வீசும்
பூ வாசம்
சின்னக்கிளிகள் பறந்து ஆட
இன்று கவிகள் குயில்கள் பாட
புது ராகம் புது தாளம்
ஒன்று சேரும் நேரம் இந்நேரம்
வாய்க்கலையும் வயற்காட்டையும்
படைத்தான் எனக்கென
கிராம தேவதை
தெம்மாங்கையும் தெருக்கூத்தையும்
நினைத்தால்
இனித்திடும் வாழும்நாள் வரை
குழந்தைகள் கூட
குமரியும் ஆட
மந்தமாருதம் வீசுது
மலையமாருதம் பாடுது
ஊ…
நான் தூங்கியே
நாளானது
அது ஏன்…
எனக்கொரு மோகம் வந்தது
பால்மேனியும் நூலானது
அது ஏன்…
அதுக்கொரு தாகம் வந்தது
மனதினில் கோடி
நினைவுகள் ஓடி
மன்னன் யாரெனத் தேடுதோ
உன்னைப் பார்த்ததும் கூடுதோ
ஓ…
பாஸ்டனில் கொஞ்சமாக ஸ்பிரிங் ஆரம்பமாவதற்கான அறிகுறிகள் தெரிய ஆரம்பித்துள்ளன…! மேலேயுள்ள படம் அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் ‘சுட’பட்டது.
பிரமிள்
Introduction to lesser known authors in thamizh:
தருமு சிவராம் என்றழைக்கப்பட்ட பிரமிள், 04-20-39 இல் இலங்கை திருகோணமலையில் பிறந்து வளர்ந்தவர்; எழுபதுகளின் ஆரம்பத்திலேயே இந்தியா வந்து விட்டார். பிறகு தம் பெரும்பாலான வாழ்நாளைச் சென்னையிலேயே கழித்தார். வேலுர் அருகிலுள்ள கரடிக்குடியில் 11-6/97இல் மறைந்தார்.
தமது இருபதாவது வயதில், சென்னையிலிருந்து வெளிவந்த ‘எழுத்து’ பத்திரிக்கையில் எழுத ஆரம்பித்த இவர், பிறகு தமிழகத்திலேயே வாழ்ந்து தம் படைப்புகளை வெளிப்படுத்தியதால், ஒரு தமிழக எழுத்தாளாராகவே மதிக்கப் பட்டார். இலங்கை எழுத்துலகமும் இவ்வாறே இவரை கணித்து வந்துள்ளது.
நவீன தமிழ் இலக்கியத்தில் பாரதிக்கும், புதுமைபித்தனுக்கும் பிறகு தோன்றிய ஒரு மகத்தான ஆளுமை பிரமிள் ஆவார். புதுக்கவிதை, விமர்சனம், சிறுகதை, நாடகம் போன்றவற்றில் இவரது படைப்பாற்றல் ஒரு உயர்ந்த பட்சத்தை எட்டியிருக்கிறது. ஓவியம், களிமண் சிற்பங்கள் செய்வதிலும் திறமை படைத்தவர்; இவரது ஆன்மீக ஈடுபாடு, இலக்கிய ஈடுபாட்டுக்கும் மேலானதாக இருந்து வந்திருக்கிறது. ‘படிமக் கவிஞர்’ என்றும், ‘ஆன்மீகக் கவிஞர்’ என்றும் சிறப்பிக்கப்பட்ட இவரது கவித்துவம், இரண்டாயிரமாண்டுத் தமிழ்க் கவிதை வரலாற்றில், தனித்துயர்ந்து நிற்பதாகும்.
அவரின் சில கவிதைகளுக்கும், முழு விவரங்களுக்கும் ஃபாரம் ஹப் செல்லவும்.
ஆறாம்திணை கவிதைத் தொகுப்பு:
திசை மாற்றம் பட்டகம்
“ஒரு இலக்கிய முயற்சி உருவாவதற்கு மூன்று சக்திகள் துணை புரிகின்றன. இவைகளின் மூலபுருஷர்கள் முறையே எழுதுபவன், வாசகன், பிரசுரிப்பவன் இந்த முறை தான் சரியான முறை. ஆனால் யதார்த்த நிலையில் பிரசுரிப்பவன், வாசகன், எழுதுபவன் என்று மாறியிருந்தால் இலக்கியப் படைப்புகள் தரம் தாழ்கின்றன” – நகுலன்.
விடுகதை:
நீயும் நானும் பார்த்திருக்க
பொன்னாங்கண்ணி பூத்திருக்க – அது என்ன?
Recent Comments