Home > Uncategorized > அப்புசாமி.காம்

அப்புசாமி.காம்


ஜோக் போட்டி:
உங்களால் சிரிக்க முடியும். ஆனால் பிறத்தியாரைச் சிரிக்க வைக்க முடியுமா? உதடு ஒரு அரை இன்ச் அகன்றால் கூடப் போதும்.

அப்புசாமி டாட் காம் நடத்தும் ஜோக் போட்டியில் உடனே கலந்து கொள்ளுங்கள். உங்கள் ஜோக் பரிசுக்குரியதாகத் தேர்ந்தெடுக்கப் பட்டால் ஒரு அருமையான வாட்ச் பரிசாகக் கிடைக்கும். மூன்று பரிசுகள் தருவதாக உள்ளது. குலுக்கல் சமாசாரமே கிடையாது. மிகச் சிறந்த மூன்று ஜோக் தேர்ந்தெடுக்கப்படும். ஒவ்வொருவருக்கும் ஒரு வாட்ச் பரிசாக வழங்கப்படும்.

வெளிநாட்டில் வசிப்பவர்கள் பரிசு கிடைத்தால் ஐயோ நமக்கு எப்படி வாட்ச் வந்து சேரும் என்று கவலைப்பட வேண்டாம். இந்தியாவிலுள்ள உங்கள் உறவினர் அல்லது நண்பர் முகவரி தெரிவித்தால் அவரிடம் ஒப்படைக்கப்படும். அடுத்தாற்போல் இந்தியா வரும் போது நீங்கள் பெற்றுக் கொள்ளலாம். (அதுவரையும் அப்புறமும்கூட கடியாரம் ஓடிக் கொண்டுதானிருக்கும்.) ஒருத்தரே நிறைய ஜோக் அனுப்பலாம்.

ஜோக் அனுப்ப வேண்டிய முகவரி : e-mail : editorappusami@yahoo.co.in


புளுகு – எஸ்.வி.வி.:
சாதாரணமாய் மனித சுபாவம், ஏழ்மைத் தனம் வாஸ்தவமாயிருந்தாலும் வெளியில் காட்டிக் கொள்ளாமல் பணக்காரன் போல நடிக்கும். கடன் கேட்க வருபவனிடத்தில் மாத்திரம் இல்லாத ஏழ்மைத்தனத்தையும் சிருஷ்டி பண்ணிக்கொண்டு சொல்லும். கவர்ன்மெண்டு பணத்தை ஏமாற்றுகிற விஷயத்தில் எதுவும் புளுகு ஆகாது. யாரும் நம்மைப் புளுகன் என்று சொல்லவே மாட்டார்கள். இந்தப் புளுகெல்லாம் கிடக்கட்டும். இவை ஏதோ ஓர் அனுகூலத்தை உத்தேசித்துச் சொல்லுகிறவை. ஒரு காரிய சாதகமுமில்லாமல் புளுகுகிறார்களே அதை என்னவென்று சொல்லுகிறது ”மூற துட்டை மூட்டையாய் அளக்கிறானடா அப்பா” என்றார்களே அவற்றை. ….


முதுமை என்பது லாபமா, நஷ்டமா? – ரா.கி. ரங்கராஜன்:
‘அண்ணாநகர் டைம்ஸ் பத்திரிகையில் நீங்கள் எழுதும் கட்டுரைகளைத் தவறாமல் படித்து வருகிறேன். ரொம்ப நகைச்சுவையாக, சுவாரஸ்யமாக எழுதி வருகிறீர்கள்….’ என்று எனக்கு வரும் ஒரு கடிதம் ஆரம்பிக்குமானால் நான் போச்சுடா சாமி என்று எண்ணிக் கொள்வேன். காரணம், அடுத்து என்ன வரிகள் வரும் என்று புரிந்துவிடும்.

காலம் சென்ற டாக்டர் டி. ஞானசம்பந்தன் ‘Future Scenarios’ என்ற தன் புத்தகத்தில், மனிதன் முதுமை அடையாமல் இளமையுடனும் சக்தியுடனும் நீண்ட காலம் வாழ்வதற்கு வகை செய்யும் மாத்திரைகள் எதிர்காலத்தில் கண்டு பிடிக்கப்படலாம் என்றும், அப்படி நேர்ந்தால் ஜனத்தொகை பெருகி, சமுதாயம் பெரும் அபாயங்களைச் சந்திக்க நேரிடும் என்றும் எடுத்துக் காட்டியிருக்கிறார். இதை அடிப்படையாக வைத்து, ஜான் நிதாம் என்பவர் எழுதியுள்ள ஒரு நாவலையும் சுட்டிக் காட்டியிருக்கிறார்.

அந்த நாவலில் ஒரு விஞ்ஞானி, மனிதன் முன்னூறு வருடம் உயிர் வாழ்வதற்கு ஒரு மருந்து கண்டுபிடித்து, அதைத் தன மகளுக்கும் மகனுக்கும் மட்டும் அவர்களுக்கே தெரியாமல் ரகசியமாகக் கொடுத்திருக்கிறார். அதன்படி மூன்று வருடத்துக்கு ஒருமுறைதான் ஒரு வயது ஏறும். ஒரு நாள் அவர்களிடம் அந்த உண்மையை உடைக்கிறார்.

தொடர்ந்து படிக்க அப்புசாமி.காம்

பிகு: நம்ம உஷாவின் கதையை இங்கே படிக்கலாம்.

Categories: Uncategorized
  1. No comments yet.
  1. No trackbacks yet.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: