Archive

Archive for May 9, 2004

அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டி – 2004

1. கல்கியில் நான்கு பக்கங்களுக்கு மிகாமல்…
2. உறுதிமொழிக் கடிதம்…
3. அறிமுக எழித்தாளர் எனில்… இன்னொரு உறுதிமொழிக் கடிதம்
4. கடைசித் தேதி – ஜூன் 15
5. அனுப்ப வேண்டிய முகவரி
‘அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டி – 2004’
ஆசிரியர், கல்கி,
கல்கி பில்டிங்ஸ்
47-NP ஜவாஹர்லால் நேரு சாலை
ஈக்காடுதாங்கல்
சென்னை – 600 097

முழு விவரங்களுக்கு Kalki Online.

Categories: Uncategorized

சிறுவர் புத்தகங்கள் – ஆர். பொன்னம்மாள் (8)

இதுவரை : 1 | 2 | 3 | 3.5 | 4 | 5 | 6 | 7

நன்னெறிக் கதைகள்: நன்னெறிச் செய்யுள் முப்பதுக்கும் அர்த்தம் எழுதி முப்பது கதைகள் சொல்லப் பட்டிருக்கின்றன. முப்பதிலும் நகைச்சுவை, வீரம், படிப்பினை எல்லாமே நிறைந்திருக்கும்.

கருணை வள்ளல்: ரத்னபாலாவில் வெளி வந்த பழங்கால புலவர் வரலாறுகளும் கலந்து தந்த சிறுகதைத் தொகுப்பு. பரிமாறும் போது புலவரை அவமதிக்க முதுகில் ஏறிக் கொண்ட புலவரை உப்புமூட்டை தூக்கிய சகிப்புத் தனமையும், தந்தை இல்லாத போது வந்த புலவரை வெறுங்கையோடு அனுப்ப மனமில்லாமல்தான் விளையாடியத் தங்கத் தேரை சிற்றரசன் மகன் நீட்டுவதும் மறக்க முடியாத வரலாறு.

பொன்னான காலம்: திரு. சோமு அவர்கள் பள்ளி விடுமுறையில் மாணவர்கள் நடிக்க ஓரங்க நாடகங்கள் வேண்டும் என்று கேட்டு வாங்கிய நாடக நூல். மொத்தம் எட்டு நாடகங்கள். பெற்றவர்களின் கஷ்டங்களைப் புரிந்துகொள்ளும் விதத்தை நயமாகச் சொல்கிற நாடகம் ‘பூக்கள் பலவிதம்’. துன்பம் பிறரைத் துன்புறுத்தும் அளவு போகக்கூடாது என்பதை ‘மன அழுக்கு’ நாடகம் மூலம் உணர்கிறோம்.

(சிறு குறிப்பு வளரும்)

Categories: Uncategorized

கல்கி : மே-2-2004

நேரமிது..!
அப்பனே!
பிள்ளையாரப்பா,
அவசரமாய் ஒரு பிரார்த்தனை!

தும்பிக்கையைச் சுருட்டி,
தொந்தியையும் சுருக்கி,
காதுகளை மடக்கி,
அர்ஜெண்ட்டாய் நீ ஓர்
அண்டங் காக்கையாக வேணும்!

அகத்தியன் பிறந்து வந்து
அரசியல்வாதி ஆகிவிட்டான்!

இன்னுமொரு முறை நீ – அவன்
கமண்டலத்தைக் கண்டுபிடித்து
காவிரியைக் கவிழ்த்துவிடு!
-வி


வைகோ பேட்டி

கே: தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாகப் பேசாமல் ஈழத் தமிழர்களுக்கு அனுதாபம் தெரிவிப்பதோடு மட்டும் நிறுத்திக் கொண்டால், இப்படிப்பட்ட அரசியல் பழிவாங்கலைத் தவிர்க்கலாமே?

வைகோ: பழிவாங்குவார்கள் என்று பயந்து கொண்டு கருத்துச் சொல்லாமல் இருந்தால், அதைவிடக் கோழைத்தனம் எதுவும் கிடையாது. பெரியார், ராஜாஜி போன்ற தலைவர்கள் மற்றவர்களுக்குப் பிடிக்கிறதோ பிடிக்கவில்லையோ, ஏற்றுக் கொள்கிறார்களோ இல்லையோ, தங்கள் கருத்துக்களை சொல்லி வந்தார்கள்.

ஈழத் தமிழர்கள் பக்கம் நியாயமிருக்கிறது என்று சொல்வது தவறா? தமிழர் இனப் பிரச்னை இவ்வாறுதான் உலகத்தின் கவனத்துக்கு வந்திருக்கிறது. கிளிநொச்சியில் புலிகள் தலைவர் பிரபாகரன், இருபத்தியிரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களுடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்துவதை தொலைக்காட்சிகள் காட்டுகின்றன, பத்திரிகைகளில் போட்டோக்கள் வருகின்றன. இப்படி லட்சக்கணக்கான மக்கள் படிப்பதையும், பார்ப்பதையும் நான் மேடையில் சொன்னால் என்ன தவறு? கருத்துச் சுதந்திரத்துக்காக நீதி கேட்டு, நான் சூப்ரீம் கோர்ட்டில் வைத்த வாதம் இதுதான். என் மனுவில் இருந்த நியாயத்தை ஏற்றுக் கொண்டு, தீவிரவாத இயக்கத்தை ஆதரித்து கருத்துச் சொல்வது தவறில்லை; அதற்கு நிதி கொடுப்பது, ஆயுதம் கொடுப்பது, ஆள் சேர்ப்பது ஆகியவைதான் குற்றங்கள், என்று சொல்லியிருக்கிறது. இது கருத்துச் சுதந்திரத்துக்குக் கிடைத்த வெற்றி.

எனவே எந்த அச்சுறுத்தல், பயமுறுத்தல், பழிவாங்கல் இருந்தாலும், என் கருத்துக்களைத் தொடர்ந்து சொல்வேன். ஏழு வருடங்கள் தண்டனை கொடுத்தாலும் ஏற்றுக் கொண்டு சிறைக்குச் செல்வேன்.


சிரித்து வாழ வேண்டும் – நாகேஷ்

எனக்கு (‘திருவிளையாடல்’ நூறாவது நாள்) விழா அழைப்பிதழே அனுப்பப்படவில்லை! மனசு நொந்து போனேன்.

எனக்கு விழாவில் பெரிய கௌரவம் செய்ய வேண்டாம். விழாவுக்கு அழைக்கப்படும் குறைந்த பட்ச மரியாதை கூடத் தரப்படவில்லை. ம்… தருமிக்கு பொற்கிழி கிடைக்காமல் போனது மாதிரி, அந்தக் கதாபத்திரமாய் நடித்த எனக்கு, படத்தின் நூறாவது நாள் விழா அழைப்பிதழ் கூடக் கிடைக்காமல் இப்படி ஓர் அவமானம்! இதுவும் ஒரு திருவிளையாடல்தானோ?

தருமிபட்ட அவமானம்


முதல் மழை – ஆர். வெங்கடேஷ்

‘காதலுக்காகவும், கல்யாணத்துக்காகவும், ஒருத்தியின் இயல்பைக் கைவிடச் சொல்வது அதர்மம்’ – என்று காதலின் சமத்துவத்தையும், கதொரொளியே அறியாத விடியலை நோக்கி காலத்தை அழித்துக் கொள்ளும் போராளிகளையும், லட்சியப் படிப்பை முடித்து கம்ப்யூட்டர்களுடன் குடித்தனம் நடத்தும் யந்திர இளைய சமுதாயத்தையும், தேர்ந்த, சுருக்கமான வார்த்தை வடிவங்களில் கண்முன் நிறுத்தும் கதைகள். பழைய திரைப்படங்களைப் பார்த்த திருப்தி தரும் தொகுப்பு.

‘புக்பேங்க்’ பகுதியில் விஷ்வக்

நன்றி: கல்கி – மே-2-2004

Categories: Uncategorized