Archive

Archive for May 12, 2004

உன்னை நினைத்து – தத்துவப் பாடல்

May 12, 2004 Leave a comment

The Hindu : Tamil Nadu News:
Top Ranker is T. Nivethitha & as in the past, girls’ pass percentage outdid boys
Five secure full marks in maths, physics, chemistry and biology
She wishes to specialise in computer science

கோரஸ்:
பொம்பளைங்க காதலத்தான் நம்பிவிடாதே நம்பிவிடாதே
நம்பியதால் நொந்து மனம் வெம்பிவிடாதே வெம்பிவிடாதே

அத்தான்னு சொல்லியிருப்பா ஆசைய காட்டி
அண்ணான்னு சொல்லி நடப்பா ஆளையும் மாத்தி

ஆம்பளையெல்லாம் அஹிம்ஸாவாதி
பொம்பளையெல்லாம் தீவிரவாதி

—-
பெண்ணெல்லாம் பூமியின்னு எழுதி வெச்சாங்க
அவ பூமி போல பூகம்பத்தால் அழிப்பதனாலா?

பெண்ணெல்லாம் சாமியின்னு சொல்லி வச்சாங்க
அவ சாமி போல கல்லாவே இருப்பதனாலா?

பெண்ணெல்லாம் நதிகள் என்று புகழ்ந்து வச்சாங்க
ஆணெல்லாம் அதில் விழுந்து மூழ்குவதாலா?

நம்பிவிடாதே நம்பிவிடாதே
—-

பெண்ணாலே பைத்தியமாப் போனவன் உண்டு
இங்கே ஆண்களாலே பைத்தியமா ஆனவள் உண்டா?

பெண்ணாலே காவி கட்டி நடந்தவள் உண்டு
இங்கே ஆண்களாலே காவி கட்டி நடந்தவள் உண்டா?

பெண்ணுக்குத் தாஜ் மஹால் கட்டி வெச்சாண்டா
எவளாச்சும் ஒரு செங்கல் நட்டு வெச்சாளா?

நம்பிவிடாதே நம்பிவிடாதே
—-

பெண்ணெல்லாம் பரீட்சையிலே முதலிடம் தாங்க
நம்ம பசங்களத்தான் எங்கே அவங்கப் படிக்க விட்டாங்க

பெண்ணெல்லாம் தங்க மடல் ஜெயிச்சு வந்தாங்க
நம்ம பையன் முகத்தில் தாடியத்தான் முளைக்க விட்டாங்க

பெண்ணெல்லாம் உலக அழகி ஆகி வந்தாங்க
ஆணெல்லாம் காதலிச்சே தலை நரைச்சாங்க

நம்பிவிடாதே நம்பிவிடாதே
—-

Categories: Uncategorized

ரேடியோ மிர்ச்சி நேயர் விருப்பம் (தேர்தல் ஸ்பெஷல்)

May 12, 2004 Leave a comment

கண்ணதாசன் இயற்றிய சினிமா பாடல்கள்:

அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்: ராகுலை நோக்கி காங்கிரஸ்
ஆடி அடங்கும் வாழ்க்கையடா: சந்திரபாபு நாயுடுவுக்காக
ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா: கலைஞருக்காக ரத்தத்தின் ரத்தங்கள்
ஆலய மணியின் ஓசையை நான் கேட்டேன்: திருநாவுக்கரசருக்காக
ஆறு மனமே ஆறு – அந்த ஆண்டவன் கட்டளை ஆறு: ஜெயலலிதாவுக்காக
இரவும் நிலவும் வளரட்டுமே: காங்கிரஸ் ஜனநாயகப் பேரவைக்காக ப.சிதம்பரம்
இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி: ரஜினிக்காக
இயற்கை என்னும் இளைய கன்னி: ரோஜாவுக்காக
உலகம் பிறந்தது எனக்காக:தயாநிதி மாறனுக்காக

தொடர்ச்சி:

அதோ அந்த பறவைபோல வாழ வேண்டும்: சுப்பிரமணிய சுவாமிக்கு
அடி என்னடி ராக்கம்மா என்னென்ன நினைப்பு: ஹர்கிஷன்சிங் சுர்ஜீத்துக்காக
அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்: அப்துல் கலாமுக்காக
அம்மா என்பது தமிழ் வார்த்தை: தமிழக அமைச்சரவையில் நீடிப்பதற்காக மந்திரிகள்
அண்ணன் காட்டிய வழியம்மா: அழகிரிக்காக ஸ்டாலின்
அவள் மெல்ல சிரித்தாள் ஒன்று சொல்ல நினைத்தாள்: வாக்காளருக்காக
அவள் பறந்து போனாளே என்னை மறந்து போனாளே: தோற்றுப்போன எம்.பி.க்களுக்காக
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது: திருமாவளவனுக்காக

முழுப்பாடல் வரிகளுக்கு

Categories: Uncategorized

ஒக சினிமாலு… ஒக கமெண்டரிலு…

May 12, 2004 Leave a comment


‘கனவு மெய்ப்பட வேண்டும்’ குறித்த பிபியின் விமர்சனம் படு ஜோர். விலாவாரியாக படித்துவிட்டதால் படம் பார்த்தபோது ஏமாற்றம் கொடுத்தது. மாதவன் போல் ஸ்மார்ட்டான ஹீரோ; ஒழுங்காக நடிக்கவும் வருகிறது. அடுத்த தரணி படத்தில் விக்ரமிடம் வில்லத்தனம் செய்யாமல் தொடர்ந்து நல்ல வெயிட்டான ரோல்களை செய்ய எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.

படம் பார்த்தவுடன் தோன்றியவை:


  • மோகன் இரண்டாம் முறையாக பஸ்ஸில் இருந்து இறங்கி, ஊர் சீர்பட்டதை பார்த்தவுடனேயே, ‘வணக்கம்’ போட்டிருக்க வேண்டும். அதற்கு மேல் வருபவை எல்லாம் superfluous.

  • ‘ரமணா’, ‘முதல்வன்’ போன்ற ரட்சக ஹீரோவுக்கும் இந்தப் படத்தின் மாகஸஸே விருது பெறும் நாயகனுக்கும் பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை.

  • இயல்பான நகைச்சுவை இரண்டு மூன்று இடங்களில் தென்பட்டது. படம் நெடுகவே sitcom போன்ற காமெடியை தூவியிருக்கலாம்.

  • மோகனை விட அவருடைய மனைவி அதிக வயதுள்ளவராகத் தென்படுகிறார். இன்னும் கொஞ்சம் பொருத்தமானவரை நடிக்க வைக்க மெனக்கெட்டிருக்கலாம்.

  • ஆரம்ப காட்சியான அடி உதை வாங்கும் பத்திரிகை ஆபீஸுக்கும், படத்துக்கும் என்ன சம்பந்தம்?

  • தங்க மடல் மாணவன், தற்செயலாக அம்மாவை சந்தித்தல், சுயேச்சையாக வெற்றிபெறுதல் போன்ற அசாதரண நிகழ்வுகளை நம்பவைக்குமாறு காட்சியமைத்திருந்தாலும், சினிமாத்தனம் ஜொலிக்கிறது.

  • ரம்யா கிருஷ்ணனுக்கு அறுபுதமான குரல் (தாழம்பூவே வாடா). தொடர்ந்து பாட வேண்டும்.

  • ‘குட்டி’ போன்ற நம்பக்கூடியக் கதையையும் நிஜப் பிரசினையையும் எடுத்துக் கொண்ட அதே இயக்குநரின் படம் என்பதை நம்ப முடியவில்லை.

Categories: Uncategorized