Archive
தேர்தல் சிதறல்
தினகரனை தோற்கடித்த ஜே.எம். ஆருண்:
பெரியகுளம்: மிகவும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்ட பெரியகுளம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரான ஜே.எம். ஆருண் வென்றார்.இந்தத் தொகுதியில் இரு முறை வென்று எம்.பியான தினகரனை 21,155 வாக்குகள் வித்தியாசத்தில் ஆருண் தோற்கடித்தார்.
முதல்வர் ஜெயலலிதாவின் உ..பி. தோழியான சசிகலாவின் அக்காள் மகனான தினகரன் எப்படியும் வென்றுவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. காலையில் வாக்கு எண்ணிக்கை ஆரம்பித்ததில் இருந்து தினகரனும் ஆருணும் 1,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னும், பின்னுமாக இருந்தனர். ஆனால், கடைசி கட்ட வாக்குகள் எண்ணப்படும்போது தினகரனை பின்னுக்குள் தள்ளி ஆருண் வென்றுவிட்டார்
- வெற்றி பெற்றவர்கள்:
- வினோத் கன்னா – பிஜேபி – குர்தாஸ்பூர்
- தர்மேந்திரா – பிஜேபி – பிகானர்
- ராஜ் பப்பர் – எஸ்.பி – ஆக்ரா
- ஜெயப் பிரதா -எஸ்.பி – ராம்பூர்
- சுனில் தத் – காங். – மும்பை (வடமேற்கு)
- பங்காரப்பா – ??? – ஷிமோகா
- நவஜோத் சிங் சித்து – அகாலி தள் (பிஜேபி கூட்டணி) – அம்ரிட்ஸர்
- ஈராக் சணடையின் தாக்கங்கள் என்று சொல்லமுடியாது. ‘கோவிந்தா எலெக்ஷனில் கோவிந்தா’ என்றும் நம் பத்திரிககள் எழுத முடியாது. மத்திய பெட்ரோலியம் அமைச்சர் ராம் நாயக்கை கோவிந்தா 48,271 வாக்கு வித்தியாசத்தில் வென்றார். மும்பை மக்கள் சினிமாகாரர்களாகத் தேர்ந்தெடுத்து அனுப்புகிறார்கள். ரோஜா இங்கு நின்றிருக்கலாம்!
- தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி 64 அடி பாய்கிறது. 1999-இல் சோனியா 314,000 வாக்கு வித்தியாசத்தின் வென்ற அமேதியை ராகுல் 3,90,000 வித்தியாசத்தில் வென்றிருக்கிறார்.
- ராஜ்ய சபாவுக்கு முயற்சிக்கப் போகிறவர்கள்:
- முரளி மனோஹர் ஜோஷி – அலஹாபாத் (அமிதாப் கூட நிற்காதபோதேத் தோற்றுவிட்டார்)
- போன மத்திய அமைச்சரவையில் இருந்த முஸ்லீம் அமைச்சரான சையத் ஷாநவாஸ் ஹுசேன் தோற்றுப் போனார்.
- மனோஹர் ஜோஷி தோல்வி: மும்பையில் (வடமத்திய) போட்டியிட்ட, கடந்த லோக் சபாவின் நாயகர் மனோஹர் ஜோஷி 8,615 வாக்கு வித்தியாசத்தில் தோற்றுப் போனார்.
- துணை சபாநாயகர் பி.எம் சயீத்தும் தோற்றுவிட்டார். எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் வென்று வரும் இவர் 71 வாக்கு வித்தியாசத்தில் ஜனதா தள வேட்பாளரிடம் லக்ஷத்வீப்பை இழந்திருக்கிறார். 1967 முதல் பத்து முறை தொடர்ந்து வெற்றி பெற்றவர்.
- ஹசாரிபாக் – யஷ்வந்த் சின்ஹா தோல்வி.
- ஜலந்தர் – ஐ.கே.குஜ்ராலின் மகன்
- ஜலோரில் முன்னாள் மத்திய மந்திரி பூடா சிங் (இவர் இன்னும் காங்கிரஸா?)
- பூபேன் ஹஸாரிகா – பிஜேபி – கௌஹாடி
- ஸ்ம்ரிதி இரானி – பிஜேபி – சாந்தினி சௌக் (A case of counting the chickens before they are hatched – மீனாக்ஸ்)
- பல்ராம் ஜாக்கர் – காங். – சுரூ (ராஜஸ்தான்) – இன்னாள் சபாநாயகர்களேத் தோற்றுவிட்டார்கள். இருந்தாலும் காங்கிரஸ் ஜெயிக்கும்போது, இவர் மட்டும் தோற்றுவிட்டாரே!?
- கிரிஜா வ்யாஸ் – காங். – உதய்பூர் – ராஜஸ்தானில் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட ஒரே பெண் வேட்பாளரும் தோல்வி; எல்லாம் அசோக் ஜெலாட்டின் திட்டமிட்ட பழிவாங்கல் என்று அன்றே டைம்ஸ் சொல்லிவிட்டது.
- நஃபீஸா அலி – காங். – தெற்கு கொல்கத்தா (முன்னாள் உலக அழகி இவர்; மௌஷுமி சாடர்ஜி என்ன ஆனாங்க?)
- தர்பங்காவில் கீர்த்தி ஆசாத் பின்னடைவு (முடிவு என்னாச்சு?)
ஜெ. மீது திருநாவுக்கரசர் கடும் தாக்கு
எனக்கு புதுக்கோட்டை கிடையாது, தமிழகத்தில் எங்கும் போட்டியிடக் கூடாது, பாஜக பிரசாரத்திற்குக் கூட நான் வரக் கூடாது, நான் கூட்டத்திற்கு வந்தால் அதிமுகவினர் வரக் கூடாது என்று அடுத்த கட்சியின் விவகாரங்களில் தலையிட்டு வெற்றி வாய்ப்பை தட்டிக் கழித்து விட்டது அதிமுக. நான் கூட்டத்திற்கு வந்தால் நாங்கள் வர முடியாது என்று அதிமுக அமைச்சர்கள் எங்களது கட்சித் தலைமையை மிரட்டினார்கள். அம்மா திட்டுவார் என்று காரணம் கூறினார்கள்.
எல்லாம் நானே என்ற அகம்பாவ உணர்வுடன் அதிமுக தலைமை செயல்பட்டது. வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை பாஜகவுக்குக் கொடுக்காமல் வேண்டும் என்றே தோற்கக் கூடிய தொகுதிகளை ஒதுக்கியது. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவராகவே முன்வந்து அதிமுகவுக்கு ஆதரவு கொடுத்தார். அதை முறையாக பயன்படுத்தவில்லை. ரஜினி புகைப்படத்தைப் பயன்படுத்திய அதிமுகவினரை கட்சியை விட்டு நீக்கினார்கள். இதுபோல நடந்தால் எப்படி ரஜினி ரசிகர்கள் அதிமுகவுக்கு ஓட்டு கேட்பார்கள்?
டைம்ஸ் ஆஃப் இந்தியா:
கூட்டணி – முண்ணனி
பிஜேபி 184
காங். 215
பிறர் 140
போன லோக்சபாவில்:
தேசிய முண்ணனி: 298
காங்.: 135
பிறர்: 110
கர்நாடகா (224/224)
கூட்டணி – முண்ணனி
பிஜேபி 84
காங். 65
பிறர் 75
பாக். ஒரு புதிரின் சரிதம் – நாகூர் ரூமி
புதிர் அவிழ்க்கும் விரல்: “காஷ்மீரில் தொடர்ந்து ஏன்தான் அடித்துக்கொள்கிறார்கள்? குண்டு வைத்துக்கொண்டே இருக்கிறார்களே ஏன்? தமிழ்நாட்டிலிருந்து காஷ்மீர் சென்றவர்கள் தங்களை ‘மதராஸி’ என்று அறிமுகப்படுத்திக் கொண்டால் பதிலுக்கு காஷ்மீரிகள், “ஓ ஹிந்தி?!” (ஓ, இந்தியனா?!) என்று ஏன் கேட்கிறார்கள்? அப்போ காஷ்மீர் மக்களின் மனதில் இந்தியம் இல்லாததற்கு என்ன காரணம்? பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கு இருக்கின்ற ஜென்மப்பகைக்கு காஷ்மீர்தான் காரணமா? அப்போ காஷ்மீர் பிரச்சனைக்கு என்ன காரணம்? ஏன் காஷ்மீருக்கு அனுப்பப்படும் அமைதிப்புறாக்களெல்லாம் குண்டடிபட்டு சாகின்றன? இதற்கெல்லாம் ரிஷிமூலம், நதிமூலம் என்ன? இப்படி நிறைய கேள்விகள் ஒவ்வொரு இந்தியனின் மனதிலும் இருக்கத்தான் செய்கிறது. அதற்கெல்லாம் ஒரு ஆதாரப்பூர்வமான 184பக்க பதில்தான் இந்த நூல்.
புத்தகத்திலிருந்து:
- ‘வெள்ளைக்கார’னிடம் அடிமையாக நாம் இருந்தபோது நம் நாட்டை ‘ஆண்ட’ ராஜாக்களுக்கு இருந்த அதிகாரம் எவ்வளவு தெரியுமா? “ராஜாக்கள் என்று பெயர்தானே தவிர, அவர்களுக்கு ஒரு மாவட்ட கலெக்டருக்கான அதிகாரங்கள்தான் இருந்தன. பிரிட்டிஷ் அரசின் உத்தரவில்லாமல் ஒரு கொசுவர்த்திச் சுருள் கொளுத்தி வைக்கக்கூட அவர்களால் முடியாது”(பக்கம் 13).
- ஆப்கனை ஆண்டுகொண்டிருந்த சுல்தான், “தம் நாட்டின் எல்லையை, சிந்துநதி வரைக்கும் விஸ்தரித்துவிட வேண்டும் என்று நேரம் கிடைக்கும்போதெல்லாம் கனவு கண்டு வந்தார்”(பக்கம் 18). “நேரம் கிடைக்கும்போதெல்லாம்” என்ற வார்த்தைகளில்தான் இந்த வாக்கியத்தின் உயிர் உள்ளது!
- காஷ்மீருக்கு பாக். படைகளால் ஆபத்து என்றதும் நேரு பதறிவிட்டார். ஏன்? “காரணம், அவர் கமலாவை மணப்பதற்கு முன்பிருந்தே காஷ்மீரைக் காதலித்தவர்” (பக்கம் 25).”
நன்றி: சிஃபி சமாச்சார்
Recent Comments