Archive

Archive for May 15, 2004

வலைப்பூ குறுக்கெழுத்து (விடைகள்)

May 15, 2004 Leave a comment

வலைப்பூ குறுக்கெழுத்து (விடைகள்)


இடமிருந்து வலம்
1. அன்பே சிவமாய் அமர்ந்திருக்கிறார் – (5) : வாமதேவன்
3. புத்தம் சரணம் கச்சாமி – (2,3) : என் முரசு
5. இக்கு இல்லாத தமிழ் Think Tank – (3,2) : தமிழ் டுபு(க்கு)
8. உறுமி – (3) : மேளம்
9. ஆர்க்டிக்காரரின் குறிப்பு – (5,3) : நாடோடியின் பதிவு
10. இவ்வார வலைப்பூ ஆசிரியர்களுக்கு மட்டுமல்ல; மீனாக்ஸின் ·பேவரிட் இலக்கிய வடிவங்கள், தலைகீழாக – (4,6) : கவிதைப் பதிப்புகள்
13. இளைஞன் – (4) : குறும்பூ
14. குழம்பிப் போன தமிழ் சைவம் – (3) : ள்பிளை(பிள்ளை)

மேலிருந்து – கீழ்
1. தை வருதா? பந்தல் கட்டி, கச்சேரி; இல்லாவிட்டால் வாய்ப்பந்தல்கள்! (4,4) : வார்த்தை மேடைகள்
2. முதல் போன கார்த்திக் – (1, 4) : (வந்)தே மாதரம்
3. ஜெமினி பிக்சர்ஸ் படக்காரரின் பதிவு தன்னிலைபடுத்தினால் – (2,9) : என் புத்துயிர்ப்புகள்
4. கண்ணன் போட்ட கட்டுமானப் படம் – (3) : ரதம்
6. நாமக்கல் வலைப்பூ ஆசிரியர் – (2,3) : ராஜா பதவி
7. இருக்கிறதா? இல்லையா? – (4) : கடவுள்
9. சபாநாயகம் சொல்லும் கருப்புக்கனி (3,3) : நாகப் பழம்
11. மாமே பிச்சு உதறிட்டீங்க – (4) : கலக்கு
12. எட்டிப் பார்க்கலாம் – (3) : கதவு

ஒருவர் மட்டுமே போட்டியில் கலந்து கொண்டு அனைத்துப் பரிசுகளையும் வெல்கிறார் – பவித்ரா.

Categories: Uncategorized

இந்தியா டுடே: மே-12-2004

May 15, 2004 Leave a comment

அலமாரி
உண்மை சார்ந்த உரையாடல்கள் – தொகுப்பாசிரியர்: கண்ணன்
வெளியீடு: காலச்சுவடு – பக்கங்கள்: 288 – ரூ.140/-

– நிகழ்கால சிந்தனைப் போக்குகளின் பல்வேறு மடங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நேர்காணல்கள்.


உங்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு
தேர்தலில் தாவூத் போட்டியிட அனுமதிக்கலாமா?

1. கிரிமினல் குற்றச்சாட்டு உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட தடை வேண்டும்.
2. கொடூர குற்றங்கள் செய்து தண்டனை பெற்றவர்கள் மட்டுமே தடை செய்யப்பட வேண்டும்.
3. கிரிமினல் பிண்ணனி உள்ளவர்களை அரசியல் கட்சி வேட்பாளராக நியமனம் செய்யக்கூடாது.
4. மேல்முறையீடு நிலுவையில் உள்ளவர்கள் கூட தடை செய்யப்பட வேண்டும்.
5. எந்த சிவில் அல்லது கிரிமினல் குற்றச்சாட்டு இருந்தாலும் வேட்பாளர்கள் தடை செய்யப்பட வேண்டும்.

தாவூத் மீது தேசத்திற்கு எதிரான சதியிலிருந்து தாக்குதல்கள், கொலைகள் என்று பல குற்றச்சாட்டுகள் இருகின்றன. ஆனால், அவர் மீது குற்றப்பத்திரிகைதான் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றவாளி என்று நிரூபணமாகவில்லை.


பிரச்சாரம்: தலைவர்களின் பயணம்
வாஜ்பேயி ஜனவரி 13லிருந்து 65,999 கிமீ பயணம் செய்திருக்கிறார்.
சோனியா டிசம்பர் 27லிருந்து 58,982 கிமீ பயணம் செய்திருக்கிறார்.


இந்த வார சலசலப்பு
நான் தமிழை நேசித்ததால் கலைஞரை நேசித்தேனே தவிர கலைஞரை நேசித்ததற்காக தமிழை நேசிக்கவில்லை.
– டி.ராஜேந்தர் (தினத்தந்தியில்)

புகைப் பிடிக்கும் பழக்கம் புராண காலத்திலிருந்தே இருக்கிறது. ஏதோ பாபா படத்தில் மட்டுமே இப்பழக்கம் உள்ளதாக ராமதாஸ் சொல்வது விசித்திரமாக உள்ளது.
– இல.கணேசன் (தினமலரில்)


நன்றி: இந்தியா டுடே மே-12-2004

Categories: Uncategorized

ஆன்மிகப் புத்தகங்கள் – ஆர். பொன்னம்மாள் (10)

May 15, 2004 Leave a comment

பாண்டுரங்க மகிமை என்னும் பக்த விஜயம்: கிரி ட்ரேடிங் மற்றும் காமகோடி நிறுவனர் திரு. சொர்ணகிரி அவர்கள் பக்த விஜயம் எழுதும்படி கேட்டுக் கொண்டது 1980-இல். 96-இல் இருந்து காமகோடியில் ‘பரமாச்சார்யாள் பாதையிலே’, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி, எல்லை தெய்வங்கள், விவேக சிந்தாமணி என்று பல பகுதிகளில் ‘ஆழ்வார்களின் வரலாற்றையும்’ மாதப் பகுதியாக எழுதி வந்தார். வேமன்னா, கோபால்தாசர் போன்ற பக்தர்கள் வரலாறு சேர்ந்து பெருகிக் கொண்டே போய், நாராயண பட்டத்ரி, பில்வமங்கள், எழுத்தச்சன் என்று மலையாள அடியார்களும் இணைய ஜூன் 2003-இல் புத்தகமாக வெளிவந்தது. ஆயிரம் பக்கங்களைத் தாண்டும் இந்த நேர்த்தியான வெளியீட்டை எவர் படிக்கத் தொஅங்கினாலும் கீழே வைப்பது சிரமம். பள்ளி இடைவேளையில் வந்து எழுதிய மட்டும் இங்க் மை காய்வதற்கு முன் சுடச்சுடப் படித்துவிட்டு ஓடிய அந்த இனிய பொழுதுகளையும் மறக்க முடியவில்லை; படித்த பெரியோர்களின் தியாக உணர்வும் பொதுமனித அக்கறையும் வராலாறுகளும் மறக்கவில்லை.

தேவி திருவிளையாடல்: இதுவும் 1980-இல் எழுதி முடிக்கப்பட்டது. ஆனால், 1997-இல்தான் வானதியால் வெளியிடப்பட்டது. பராசக்தியின் லீலைகள்; மதுரை, காசி, கன்யாகுமரி வரலாறுகளும், மகிஷாசுரமர்த்தனி, சும்பநிசும்ப, பண்டாசுர வதம் எல்லாம் சொல்லப்பட்டிருக்கும் ஆன்மீக நூல்.

தசாவதாரம்: கங்கை புத்தக நிலைய வெளியீடாக டிசம்பர் 2001-இல் வெளிவந்த நூல். 184 பக்கங்களில் அனாவசியமான வர்ணனைகள் எதுவுமில்லாமல் பத்து அவதாரங்களையும் சிறுவர்களுக்கு ஏற்ற கதை வடிவில் சொல்லப்பட்டிருக்கின்றன.

(சிறு குறிப்பு வளரும்)

Categories: Uncategorized