Home > Uncategorized > தர்மத்தின் வாழ்வுதன்னை சூது கவ்வும்

தர்மத்தின் வாழ்வுதன்னை சூது கவ்வும்


  • விடுமுறை: அமெரிக்காவில் போரில் வீழ்ந்த வீரர்களை நினைவு கூறும் தினம். அதை முன்னிட்டு புத்தாண்டுக்குப் பிறகு முதல் விடுமுறை. இந்தியாவாக இருந்தால் பொங்கல், சுதந்திர தினம், அம்பேத்கார் நாள், குரு கோபிந்த் பிறந்த நாள், மே தினம் என்று சன் டிவியும் இன்ன பிற நிகழ்ச்சிகளும் களிக்கலாம். ‘ஊரோடு ஒத்து வாழ்’ என்பதால், இங்கு ஊர் சுற்ற கிளம்புகிறோம். சூது என்னைக் கவ்வியதா… நான் சூதை கவ்வவிட்டேனா என்பதை லாஸ் வேகாசில் இருந்து திரும்பிய பிறகு சொல்கிறேன்.
  • வலைப்பதிவில்லையேல் வாழ்க்கையில்லை: திருமண நாளைக் கொண்டாட சென்ற விடுமுறையில் கூட பலரும் ஆர்வமாக வலைப்பதிவதை இன்றைய நியு யார்க் டைம்ஸ் அலசுகிறது. சில வித்தியாசமான பதிவுகளை அறிமுகம் செய்தும், குணாதிசங்களை நினைவுகூர்ந்தும் வழக்கமானவற்றை எழுதியிருக்கிறார்கள். வலைப்பதிவாளர் ஒருவர் சொல்வது போல் கிட்டத்தட்ட போதை பழக்கம்தானா இதுவும்?
  • அவசியமில்லாத தகவல்: Trisha’s official tamil site என்று தேடினால் தலை பத்தில் என்னுடைய இங்கிலிஷ் பதிவு வருகிறது.
  • கண்டுக்கினாங்க: இன்னொருவர் ஏதோ நல்லா இருக்குப்பா என்று சொல்லும்போது வரும் சந்தோஷமே தனி. அப்படி இவர் சொன்னதும் மகிழ்ச்சி பிறந்தது.
  • ஏக் நஜர்: 7-G ரெயின்போ காலனி பாடல்கள் பிடித்திருந்தது. அது குறித்து கச்சிதமான விமர்சனம் + அறிமுகம் பார்த்தேன். ட்ரெயிலர் பார்க்க சினிசவுத் போகலாம்.
  • விகடன் கிசுகிசு: மிஸ்டர் மியாவ்: தெலுங்கிலும் தமிழிலுமாகத் தயாரான அந்தப் ‘புது’ப் படம் முதலில் தெலுங்கில் ரிலீஸானது. அங்கே எதிர்பார்த்த ரிசல்ட் கிடைக்காததால் கொஞ்சம் கலங்கிப் போனாராம் பிரகாசமான டைரக்டர்.. ஆனால், தமிழில் படம் தப்புப் பண்ணாது என்ற பேச்சு இருப்பதால் தெம்பாக இருக்கிறார். (சிம்ரன் நடிச்ச கடைசிப் படம் என்பதால் மக்கள் அனைவரும் கனிவோடு விமர்சிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்)
  • சியாமளன் மேட்டர்: 1978 முதல் மே மாதம் ஆசியர்களின் மாதமாக அமெரிக்காவில் கொண்டாடப்பட்டு வருகிறது. Black History Month-க்காக சிறப்புத் திரைப்படங்கள், பேட்டிகள், குறும்படங்கள், துணுக்கு செய்திகள் என்று கலக்கும் தொலைகாட்சிகள் ‘Crouching Tiger…’ஐக் கூட உலகத் தொலைகாட்சிகளில் முதன்முறையாக்கவில்லை.
  • நிரபராதிகள் மேல் அபாண்டம்: குற்றமற்ற வினிதாவின் மேல் போலிப் புகார் தொடுத்ததாக தீர்ப்பு வந்திருக்கிறது. காவல்துறையை கண்டித்த முக்கியமான விஷயத்தை குறித்து யாருமே வலைப்பதியவில்லை.
  • மலரோடு மலர் இங்கு…: ‘பம்பாய்’ படம் போல் தோன்றினாலும் ஒன்பது வருட காத்திருப்புக்குப் பிறகு உஜாலாவும் ஆசாத்தும் மணமுடித்திருக்கிறார்கள். அமெரிக்காவில் ஒருபால் திருமணத்திற்கு எதிராக கொடி பிடிக்கிறார்கள். இந்தியாவிலோ இன்னும் இரு பால் திருமணமே ததிங்கிணத்தோம் போடுகிறது. அமெரிக்காவில் ஒளிபரப்பப்படும் பிபிசியில், இந்த நிகழ்ச்சி எப்போது வரும்?
  • ஒளியிலே தெரிவது?: தமிழ்நாடு மின்சார வாரியம் இணையத்தளம் பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது. ஆனால், சென்னை-மைலாப்பூரில் இருபத்தி நான்கு மணி நேரமாக மின்சாரம் இல்லாததை அறிவிக்காமலும் எப்பொழுது வரும் என்பதை தெரிவிக்காமலும் உள்ளது. பாவம்… இற்றைப்படுத்துவதற்கு அவர்களுக்கும் மின்சாரம் இல்லையோ… என்னவோ?
Categories: Uncategorized
  1. PKS
    May 27, 2004 at 11:02 am

    Baba, So you are going to Last Wages? Have a safe and plesant trip. If you win Jackpot, can we safely assume that you will give up blogging and look after your accounts? Kidding. No offense meant. Have fun.

  1. No trackbacks yet.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: