Archive

Archive for June 9, 2004

லீனா மணிமேகலை

June 9, 2004 Leave a comment

பெண்ணே நீ – Sify.com: ‘அமெரிக்காவில் “எச்’ விசாவில் இருப்பவர்கள், இந்தியாவுக்கு வந்து பெண்களைத் திருமணம் செய்து கொண்டு போகின்றனர். அப்போதுதான் அவர்களுக்கு நிரந்தர குடியுரிமை அமெரிக்காவில் கிடைக்கும். அங்கு சென்றவுடன் நமது பெண்களை வெளியுலகமே தெரியாத அளவுக்கு கூண்டுக்கிளியாக்கி வருகின்றனர். திருமண பந்தத்தைத் தொடரவும் முடியாமல், துண்டிக்கவும் வழியில்லாமல் நாளுக்கு நாள் இந்திய அபலைகளின் எண்ணிக்கை பெருகி வருகிறது. பாதிக்கப்பட்ட அமெரிக்கா வாழ் பெண்களின் துயர் துடைக்க பல சங்கங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. இவர்களைப் பற்றியே ஒரு டாகுமெண்டரி எடுக்கலாம் என்ற எண்ணம்கூட ஏற்பட்டது. அவ்வளவு சோகம் ஒவ்வொரு பெண்ணின் பின்னாலும் இருக்கிறது.’

குமுதம் ஜங்ஷன்:
“மக்களோட கலாச்சாரம் மற்றும் பழக்க வழக்கங்களைப் பதிவு செய்ற எத்னோகிராபிங்கிற செக்ஷன்ல என்னோட மாத்தம்மா படத்தைத் திரையிட்டாங்க. இண்டர்நேஷனல் கமாடடீஸ்’ங்கிற செக்ஷன்லதான் என்னோட பறை டாக்குமென்டரியை திரையிட்டாங்க. உலகம் முழுக்க பெண்களை எப்படி போகப் பொருளாகப் பார்க்கறாங்க, பல்வேறு நாடுகளுக்கு இடையில் பரிமாறிக் கொள்ளப்படறாங்கன்னு அழுத்தமா சொல்ற படங்களை இந்த செக்ஷன்ல பார்த்தேன்.”

Categories: Uncategorized

Belief without Facts: பத்துப் பாட்டு

June 9, 2004 6 comments

1. பயனில பல்லார்முன் சொல்லல் நயனில
நட்டார்கட் செய்தலிற் றீது.

பலர்முன் பயனில்லாத சொற்களைக் கூறுவது, நட்புக்கு மாறாகச் செயல்படுவதைக் காட்டிலும் தீமையுடையதாகும்.

2. ஒல்லும் வகையான அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாஞ் செயல்.

செய்யக்கூடிய செயல்கள் எவை ஆயினும், அவை எல்லா இடங்களிலும் தொய்வில்லாத அறவழியிலேயே செய்யப்பட வேண்டும்.

3. செற்றார் எனக்கை விடலுண்டோ நெஞ்சேயாம்
உற்றால் உறாஅ தவர்.

நெஞ்சே! நாம் விரும்பினாலும் நம்மை விரும்பி வராத அவர், நம்மை வெறுத்து விட்டார் என நினைத்து அவர் மீது கொண்ட காதலைக் கைவிட்டு விட முடியுமா?

4. சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சா னவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது.

சொல்லாற்றல் படைத்தவனாகவும், சோர்வு அறியாதவனாகவும், அஞ்சா நெஞ்சங் கொண்டவனாகவும் இருப்பவனை எதிர்த்து எவராலும் வெல்ல முடியாது.

5. அழச்சொல்லி அல்ல திடித்து வழக்கறிய
வல்லார்நட் பாய்ந்து கொளல்.

தவறு செய்கின்றவர் கண்ணீர் விடுமளவுக்குக் கண்டித்து, அறிவுரை வழங்கக் கூடிய ஆற்றலுடையவரின் நட்பையே தெளிவான நட்பாக எண்ண வேண்டும்.

6. இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது.

இனிய சொற்கள் இன்பத்தை வழங்கும் என்பதை உணர்ந்தவர் அதற்கு மாறாக எதற்காகக் கடுஞ் சொற்களைப் பயன்படுத்த வேண்டும்?

7. தகுதி யெனவொன்று நன்றே பகுதியாற்
பாற்பட் டொழுகப் பெறின்.

பகைவர், அயலோர், நண்பர் எனப்பகுத்துப் பார்த்து ஒருதலைச் சார்பாக நிற்காமல் இருத்தலே நன்மை தரக்கூடிய நடுவுநிலைமை எனும் தகுதியாகும்.

8. பகையகத்துச் சாவார் எளியர் அரியர்
அவையகத் தஞ்சா தவர்.

அமர்க்களத்தில் சாவுக்கும் அஞ்சாமல் போரிடுவது பலருக்கும் எளிதான செயல், அறிவுடையோர் நிறைந்த அவைக்களத்தில் அஞ்சாமல் பேசக்கூடியவர் சிலரேயாவர்.

9. அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை
வியந்தான் விரைந்து கெடும்.

மற்றவர்களை மதிக்காமலும், தன் வலிமையை உணர்ந்து கொள்ளாமலும், தன்னைத் தானே பெரிதாக விளம்பரப் படுத்திக் கொண்டிருப்பவர்கள் விரைவில் கெட்டுத் தொலைவார்கள்.

10. இடிக்குந் துணையாரை யாள்வாரை யாரே
கெடுக்குந் தகைமை யவர்.

இடித்துரைத்து நல்வழி காட்டுபவரின் துணையைப் பெற்று நடப்பவர்களைக் கெடுக்கும் ஆற்றல் யாருக்கு உண்டு?

நன்றி: திருக்குறள் – கலைஞர் உரை

Categories: Uncategorized

எஸ். வைத்தீஸ்வரனின் இணையத்து சுவர்கள்

June 9, 2004 Leave a comment

EXPECTATION: she is waiting for the call in the jungle

நன்றி: Vaidheeswaran’s Art Gallery

Categories: Uncategorized

இந்திரா பார்த்தசாரதி: ஆறாம்திணை.காம்

June 9, 2004 Leave a comment

தெ. மதுசூதனன் :

எழுதிய முதல் நாவல் ‘காலவெள்ளம்’, இதில் அரசியல் அரங்கில் நிகழும் சதுரங்க விளையாட்டை நாவல் களத்துக்குள் கொண்டு வந்தார். குருதிப்புனல், சுதந்திர பூமி, தந்திரபூமி ஆகிய நாவல்களும் அரசியல் சார்பு வகைப்பட்ட படைப்புகளாகவே வெளிவந்தன.

இந்திரா பார்த்தசாரதியின் நாவல்கள் பலவும் நகர வாழ்வின் பாசாங்குகளை விமரிசிக்கும் தன்மையைக் கொண்டுள்ளது. இளம் வயதிலேயே டெல்லியில் இருக்க நேர்ந்ததால் நகரவாழ்வியல் மீதான மதிப்பீடுகள் விழுமியங்கள் குறித்த விசாரணையை தனது படைப்புகளில் வெளிப்படுத்தினார். டெல்லி வாழ்வில் பல கலாசார அதிர்ச்சிகளை சந்தித்தார். குறிப்பாக தமிழ் மத்தியதரக் குடும்பங்களில் உள்ள போலித்தன்மைகள் பாசங்குகள் இவரது படைப்பில் தனித்தன்மை பெற்றது. இந்திரா பார்த்தசாரதியின் நாவல்களில் உரையாடல்கள் மிகுந்து இருக்கும். பாத்திரங்கள் பெரும்பாலும் உரையாடல்கள் வழியே உருவாகும். உளவியல் சார் அணுகுமுறை இவரது எழுத்தில் முக்கியமாக இழையோடிக் கொண்டிருக்கும்.

குருதிப்புனல் நாவலுக்கு சாகித்ய அகாதமி பரிசும், இராமனுஜர் நாடகத்துக்காக சரஸ்வதி சம்மான் விருதும் பெற்றுள்ளார். 1991ல் சிறந்த இந்தியபடமாய் தேசிய விருது பெற்ற முதல் தமிழ் படமான ‘மறுபக்கம்’ படத்தின் கதை இந்திரா பார்த்தசாரதி எழுதிய உச்சிவெயில் என்ற குறுநாவலே. இ.பா. போலந்து நாட்டு வார்சா பல்கலைகழகத்திலும் சிலகாலம் பணியாற்றியவர். கணையாழி இதழின் கெளரவ ஆசிரியராகவும் பணியாற்றியவர். இவர் எழுதிய நாடகப்பிரதிகளில் ஒன்று ‘ஓரளங்கசீப்’. சரித்திர நாடகம் சமகால அரசியலின் ஒத்திசைவைப் பெற வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தவர்.

படைப்புகள்

நாவல்கள்

தந்திரபூமி
சுதந்திரபூமி
ஹெலிகாப்டர்களும் கீழே இறங்குகின்றன
குருதிப்புனல்
உச்சிவெயில்
கிருஷ்ணா கிருஷ்ணா

நாடகம்

போர்வை போத்திய உடல்கள்
மழை
இறுதியாட்டம்
கொங்கைத் தீ
ஔரங்கசீப்
இராமானுஜர்

கட்டுரை

தமிழ் இலக்கியத்தில் வைணவம்
என்றுமுள்ள தமிழ்

Categories: Uncategorized