Archive

Archive for June 16, 2004

வலைப்பதிவாளர்களுக்கு வழிகாட்டல் நெறிகள்

June 16, 2004 Leave a comment

பாராவின் கட்டளைகளைத் தொடர்ந்து வலைப்பதிவுகளுக்கு என்று ஏதாவது தார்மீக நெறிகள் இருக்கிறதா என்று தேடியபோது, இந்த வழிகாட்டுதல்கள் கிடைத்தது.

அவர்கள் கட்டளைகளின் சாராம்சம்:
நேர்மை + நியாயம்

 • திருடாதே!
 • ஆதாரம், நன்றி, சுட்ட இடம் எங்கே என்பதை சொல்லி விடுங்கள்.
 • பரபரப்பு தவிர்.
 • வதந்தி வேண்டாம்.
 • எது உங்கள் கருத்து, எது பட்டாங்கு (fact) என்பதை தெளிவாக்கவும்.

  தீங்கின்மை

 • பாதிக்கப்படுபவர்களை கருத்தில் கொள்.
 • தனி மனித சுதந்திரத்தில் தலையீடு கூடாது.

  பொறுப்பு

 • தவறுகளை திருத்திக் கொள்.
 • விளம்பரதாரர்களுக்காக பதிவுகளை மாற்றாதே.
 • சக வலைப்பதிவர்களின் ஒழுங்கீனமான செய்ல்பாடுகளை அம்பலப் படுத்து.
 • மற்றவர்களுக்கு சொல்லும் உயரிய நியதிகளை நீ முதலில் பின்பற்று.

  கொசுறு: பாரா முன்பொரு நாள் கொடுத்த பிடிக்காத பத்து

 • Categories: Uncategorized

  0.004″ வாமன வித்தியாசம்

  June 16, 2004 4 comments

  இந்தப் பதிவு வயது வந்தோர்களுக்கு மட்டுமே ஏற்றது. கணேஷ் சந்திரா போல் இருபத்தொன்று வயதுக்குக்குக் கீழ் இருப்பவர்கள் தவிர்த்து விடலாம்.

  Viveka Babaji -வீட்டில் இருக்கும் கருப்பு-வெள்ளை டிவியில் அந்த விளம்பரம் வந்தால் அணைத்து விடுவார்கள். செய்திகளுக்கு முன் வரும் ‘நிரோத்’ விளம்பரம் சில காலத்துக்குப் பின் அனுமதிக்கப் பட்டது. என்ன சொல்ல வருகிறார்கள், எதற்கு பயன்படுத்தலாம் என்பது ஓரளவு புரிந்திருந்தாலும், சுய தேடலும் ஆர்வமும் மிகுந்தது மட்டுமே மிச்சம். செய்தித்தாள்களில், விளம்பரப் பலகையில் என்று நிறைய இடங்களில், இருவர் கை கோர்த்து – பீச் மணலில் அந்தி மயங்குவதை, ரசிப்பதை பார்க்கலாம். அதற்கும் நிரோத்துக்கும், குடும்ப கட்டுபாடுக்கும் என்ன சம்பந்தம் என்று விளங்காத அப்பாவிகளாக நாங்கள் மூவரும் இருந்தோம். இந்த மாதிரி விஷயங்களை விளக்குவதற்காகவேனும் ஆறாம் வகுப்பில் இருந்தே செக்ஸ் எஜுகேஷன் வர வேண்டும் என்று காரசாரமாக விவாதிப்போம். எங்களுடன் வம்பு செய்யும் 10-டி பசங்களுக்குக் கூட அதில் கருத்தொற்றுமை நிலவியது.

  ஸ்கூலில் இருந்து திரும்பிவரும் வழியில் உள்ள பெட்டிக்கடையில் நிரோத்தை கேட்டுப் பெறுவது என்று நண்பர்கள் முடிவெடுத்தோம். ஸ்டிக்கர்களுக்கும், ஐஸ்-க்ரீம்களுக்கும் மட்டும் செலவு செய்யும் பணத்தை சேமித்து, ஒரு பாக்கெட் வாங்கி மூவரும் அலசலாம் என திட்டம். கடைக்காரன் கை விரித்து விட்டான். ·பார்மஸியில் விசாரித்து பார்த்தவுடன், அவர், என்னுடைய அப்பாவிடம் போட்டுக் கொடுத்துவிட்டார். அந்த ·பார்மஸி எங்களுக்கு ராசியானது இல்லை. வீட்டை விட்டுத் தள்ளி மெயின் ரோடில் இருப்பதாலும், அங்கு மருந்து வாங்கிய ஒரு முறை – எனக்கு நோய் குணமாகததாலும், அந்தப் பக்கம் ·பைவ் ஸ்டார் வாங்கக் கூட கால் வைக்க மாட்டோம். அவருக்கு எப்படி என்னையும், என்னுடைய அப்பாவையும் அடையாளம் தெரிந்தது என்பது, இன்னும் எனக்குத் தெரியாது.

  பிலானி போய் இறங்கி, ‘மோகம் முப்பது நாள்’ ராகிங் முடிந்து, சீனியர்களுடன் சமபந்தி போஜனம் ஆரம்பித்த பிறகு, என்னுடைய நெடுநாள் ஆசையை நிறைவேற்றும் வாய்ப்பு அரங்கேறியது. நிரோத் என்ற் அல்பதனமாய் சிந்திக்காமல், மூட்ஸ் வாங்கி ஆளுக்கொரு ஆராய்ச்சியில் ஈடுபட்டது குறித்து சொல்ல வெட்கமாய் இருக்கிறது. பூஜா பேடிகளும், தீப்தி பட்நாகர்களும் இருந்தால்தான் பயன்படும் என்பது வாங்கிய பிறகுதான் தெரிகிறது. இப்பொழுது இங்கு எழுத வந்தது அது குறித்து அல்ல.

  ஆணுறைகளில் நடக்கும் புரட்சியை குறித்து அறிமுகம் செய்வதே இந்தப் பதிவின் நோக்கம். ஞாயிற்றுக்கிழமை அமெரிக்க நண்பர்கள் சிலரை சந்திக்க நேர்ந்தது. வழக்கமான அமெரிக்க என்.பி.ஏ கூடைப்பந்து, சவுத் பார்க் சிலாகிப்பு எல்லாம் முடிந்தவுடன் போர்க்கால அடிப்படையில் ஸ்வீடனில் ஆணுறை வழங்கும் அரிய திட்டத்தை சொன்னார்கள். அமெரிக்காவின் கல்லூரிகளிலும் இது போன்ற திட்டங்கள் இருக்கிறது. இலவச ஆணுறை, சல்லிசான விலையில் கருத்தடை சாதனங்கள் என அனைத்தையும் விடுதியின் வாசலிலேயே டெலிவரி கொடுத்து விடுவார்கள். இலவசமாகக் கொடுக்கும் ஆணுறையின் அகல, நீளங்களை ஹார்வார்ட் மாணவர்களின் H-Bomb நடத்திய அலசலுக்குப் பேச்சு தாவியது. இலவசமாக தரப்படும் ஆணுறை 0.007 இன்ச் தடிமனாக இருக்கிறது என்பதே அந்தக் கட்டுரையின் முக்கிய புலம்பல். அவர்களுக்கு உலகின் தலை பத்து காண்டம் பட்டியலில் இருந்து சில ஆணுறைகள் மட்டுமாவது சகாய விலைகள் விற்கப்பட வேண்டும் என்று முழங்க ஆரம்பித்தனர். சராசரி ஆணுறையின் தடிமன் 0.003″ மட்டும்தான்.

  எனக்குத் தெரிந்து எக்ஸ்ட்ரா ஸ்ட்ராங்காக, முள் வைத்து, கொம்பு கொடுத்து, முனை நீட்டி, கோடு போட்டு, இருட்டில் தகதகத்து, கலர் கலராய், டிஸைனர்களின் வரிகள் போட்டு, யானை போல், குதிரை போல் விதவிதமான வடிவங்களில் விற்பதை லோக்கல் ·பார்மஸியில் அலசியிருக்கிறேன். பாட்டுப் பாடும் ஆணுறைகள் கூட பார்த்திருக்கிறேன். சமீபத்தில் பாக்கெட் வைத்தவை கூட விற்பனைக்கு வந்ததாக கேள்பட்டிருக்கிறேன்.

  ஆனால், 0.004″ கொடுக்கும் அனுபவத்துக்கும்; 0.007″ பயன்படுத்தினால் கிடைக்கும் அனுபவத்துக்கும் என்ன பெரிய வித்தியாசம், இருவருக்கும் இடையே இருந்துவிடப் போகிறது!?! தெரிந்தால் ஒரு பதில் போடுங்க 🙂

  Categories: Uncategorized