Archive

Archive for July 2, 2004

ஓ… மாரியா… ஓ… மரியா…

July 2, 2004 3 comments

MARIA SHARAPOVA
சபாடினியின் அலட்சியம்
ஸ்டெஃபி கிராஃப்பின் ஆளுமை
செரினாவின் துணிச்சல்
வீனஸின் திறமை
ஹின்ஜிஸ் புன்னகை
செலஸ் ‘ஹ்ஹூம்ம்ம்ம்’
க்ரிஸ் எவர்ட் நளினம்
நவ்ரதிலோவா முயற்சி
கோர்னிகாவாவின் அழகு
சொந்த மூளை….

அடுத்த விம்பிள்டன் நாயகி?

Categories: Uncategorized

ஒரு நிமிட வலியா? ஓராயுள் வாழ்க்கையும் தண்டனையா?

July 2, 2004 7 comments

உணர்ச்சிபூர்வமாக பார்த்தால் மரணதண்டனை சரியென்றே தோன்றுகிறது.

நாமக்கல் ராஜா: >>>இரும்பாலான தங்கள் இதயத்தை கழட்டி எடைக்கு போட்டுவிட்டவர்கள்.

அவனுக்கு மரணம் நிகழ்த்துவதால் இந்தியாவில் மாறுதல் எதுவும் வந்துவிடப்போவதில்லை. நாளைக்கே ஒரு அரசியல்வாதியின் கொள்ளுப்பேரனோ, சூழ்நிலைக்கு அடிமையாகும் இன்னொருவனோ, அடக்கப்பட்ட தலித் மீதோ, வேறொரு குழந்தையிடமோ வன்முறை பாய்ச்சிக்கொண்டுதான் இருக்கப் போகிறான். தனஞ்ஜெயை தூக்கிலிடுவதன் மூலம் நீதி நிலைபடுத்தப்பட்டு விட்டதாக நமக்கு சந்தோஷம். அதற்கு பதிலாக, பல ஆயுள் தண்டனை கொடுப்பது, தனிமைச்சிறையில் போடுவது, அவனுடைய ஆயுள் முடியும் வரை வேலை வாங்கி, அதில் கிடைக்கும் நிதியில் பெண்கள் அனைவருக்கும் ஸ்டன் கன் அல்லது பெப்பர் ஸ்ப்ரே கொடுப்பது என அவசர சட்டம் போட்டு, அந்த சட்டத்தை குறித்த விழிப்புணர்வை ‘தனஞ்செய் ஏன் திஹாரில் உள்ளார்’ என்ற விளம்பரங்கள் மூலம் பட்டி தொட்டிகளில் பரப்பலாம்.

Eelanathan: >>>ஒருமுறை சிங்கப்பூர் வந்து பாருங்கள்

சிங்கப்பூர் வளர்ந்த நாடு; இந்தியாவைப் போல் ‘வளரும்’ நாட்டுக்கு மரண தண்டனை தடூப்பூசியாக முடியாது. எயிட்ஸ் விழிப்புணர்வு கூட சென்றடையாத நாட்டில் ‘மரண தண்டனை’க்கு பயந்துபோய், தவறு செய்யும் இச்சை வரும்போது, தடுத்து நிறுத்திக் கொள்வார்கள் என்பதை ஒப்புக்கொள்ள மாட்டேன். மேலும், சிங்கப்பூர் அளவில் சிறிய இடம். புது தில்லியில் இரவு ஒன்பது மணிக்கே கடைகள் மூட ஆரம்பித்துவிடுவார்கள். மவுண்ட் ரோட் போல நடுநாயகமான கன்னாட் ப்ளேஸ் போன்ற இடங்களில் பத்து மணிக்கு மேல் ஆள் நடமாட்டம் இருக்காது. சென்னையில் நைட் ஷோ முடியும்வரையாவது நகரம் களையோடு இருக்கும். அமெரிக்காவில் பின்னிரவு இரண்டு மணிக்குக் கூட கார்களும், மக்களும் சாரி சாரியாகக் காணப்பட்டாலும் கொலை, பாலியல் வன்முறை நடந்துகொண்டேதான் இருக்கிறது. (அமெரிக்காவின் பல மாநிலங்களில் மரண தண்டனை இருக்கிறது.)

தமிழோவியமும் உங்கள் கருத்தை பிரதிபலிக்கிறது. செய்யப்பட்ட குற்றங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப நாற்பது, ஐம்பதாண்டுகள் சிறை வாழ்வு கொடுக்கும் ஆயுள் தண்டனை சட்டம் வரும்வரை மரண தண்டனை சரியே என்று தோன்றலாம்.


go2tamil.com – கொலைக்குக் கொலைதான் தீர்வா?: “1989இல் இந்திராகாந்தியின் கொலைஞனைத் தூக்கில் ஏற்றியபின், இன்றுவரையில் (இந்தியாவில்) எவருமே தூக்கிலிடப்படவில்லை. நிலப்பரப்பைப் பொறுத்த மட்டில், மிகச்சிறிய நாடான சிங்கப்பூரில்தான் அதிகம் மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. 4 மில்லியன் ஜனத்தொகையைக் கொண்ட இந்தச் சிறிய நாட்டில் வருடாவருடம் 70 பேர் மரண தண்டனை பெற்று வருகிறார்களாம். போதை வஸ்து கடத்தும் குற்றவாளிகளே தண்டனை பெறுபவர்களில் அதிகமானவர்களாக இருக்கின்றார்கள்.

மரண பயம் ஏற்படுத்தினால் குற்றங்கள் தொடராது என்பது ஒரு சாராரின் விவாதமாக இருக்கின்றது. உயிரை எடுக்க வேண்டாம். சிறையில் தள்ளி, தனிமையில் விட்டு, கடூழியம் செய்து தன் தவற்றிற்காக ஆயுள் முழுவதும் வருந்த வைப்பதுதான் சரியான தண்டனை என்று இன்னொரு சாரார் வாதாடுகின்றார்கள். ஆனால் இன்றைய காலகட்டத்தில் பழிவாங்கும் குணந்தான் நம்மிடம் மேலோங்கி நிற்கின்றது. மன்னிப்பது விரும்பப்படாத ஒன்றாகி வருகின்றது. பல்லுக்கு பல், கண்ணுக்கு கண் என்ற பழிவாங்கும் உணர்வே நம்மைப் பிடித்தாட்டுகின்றது.”


வக்கீல் பிரபுவிற்கு பதிலாக, என்னுடைய முந்தைய மரத்தடி பதிவு

Categories: Uncategorized