Archive

Archive for July 19, 2004

கண்ட (!) ஹிந்திப் படங்கள்

July 19, 2004 Leave a comment

1. மர்டர் – வந்தியத்தேவன் சொல்கிறாரே என்று பார்க்காமல் இருந்துவிடாதீர்கள். ஹிந்தி சினிமாவில் ஒரு மைல்கல் முயற்சி 😛

2. மே ஹூ நா? – நிச்சயம் பார்க்கலாம்; கஷ்டப்படாமல் சிரிக்கலாம்; லாஜிக் கேட்காமல் ரசிக்கலாம். ஷெட்டிக்கு பதில் கமல் ஒத்துக் கொண்டிருந்தால்….!

3. ஹம் தும் – ‘When Harry met Sally’ பார்க்காவிட்டால் லயிக்கலாம்; இல்லாவிட்டாலும், ஒருமுறையாவது பார்க்கலாம்.

4. யுவா – ஆய்த எழுத்துப் பார்த்துவிட்டால், தவிர்த்து விடவும்.

5. கல் ஹோ ந ஹோ – தவிர்த்து விடலாம்; காதல் படங்கள் மிகவும் விரும்புபவரைக் கூட தாலாட்டி தூங்க வைக்கும்.

6. முன்னாபாய் எம்பிபிஎஸ் – விழுந்து விழுந்து சிரிக்க வைக்கவில்லை; நிறையவே செண்டிமெண்ட்டலாய் தொட்டார்கள்; காதல், ஆக்ஷன் மட்டுமே வந்த ஹிந்திப் படவுலகின் சூப்பர் ஹிட்டான சாதாரண காமெடி.

காணவேண்டுமா? விட்டு விடலாமா?

1. சமேலி – கரீனா கபூர் கலக்கியிருப்பதாக பேச்சு.

2. Kyun! Ho Gaya Na… – அமிதாப், ஐஸ்வர்யா, விவேக் ஓபராய்…

3. ரெயின் கோட் – ஐஸ்வர்யா, தேவ்கன்; ஆனால்… மீண்டும் புளித்துப் போன பழைய காதலர்களின் சந்திப்பு.

4. லக்ஷ்யா – ரொம்ப நாளாச்சு ஹ்ரிதிக் படம் பார்த்து!

5. வீர் சாவர்க்கர் – அமெரிக்காவில் கிடைக்குதா?

6. மானசரோவர் – Talks about coincidences that hurt people என்கிறார்கள். கேட்க நன்றாயிருக்கிறது. பார்க்க?

7. மீனாக்ஸி – எம்.எஃப். ஹுசேன் 😉

8. மஸ்தி – மூன்று திருமணங்கள்… ஒவ்வொன்றும் ஒரு விதம் 😛 பார்க்க வேண்டும்

9. அப் தக் ச்சப்பன் – நானா படேகர் + ராம் கோபால் வர்மா

10. (மலையாளம்) Vismayathumbathu – பாசில் + மோகன்லால்; Caption கிடைக்கும் டிவிடி வேண்டுமே 🙂

Categories: Uncategorized

மன்மதன்

July 19, 2004 Leave a comment

இசை : யுவன் ஷங்கர் ராஜா

ஓ… மஹிரே
– அனுஷ்கா – 2.5 / 4
கவர்ச்சிப் பாடல். பாடல் நல்லாவே ஆட வைக்குது.

வானமுன்னா…
– ஷங்கர் மஹாதேவன், ஸ்ரீராம் – 2.75 / 4
ஹீரோயிஸப் பாடல். Axiom-கள் நிறைந்த வரிகள்; ரசிகர்களுக்கு சிம்புவின் கட்டளைகள்.

என் ஆசை மைதிலியே
– சிம்பு, சுசித்ரா – 3.25 / 4
உல்டா பாடல் ; ‘ஆசை நூறு வகை’ பாதையில் என்னை சிறிய வயதில் ஆட வைத்த — இன்னொரு ஹிட், ரீ-மிக்ஸ் ஆகிறது. சிம்புவிற்கு பதிலாக ஷங்கரோ/கேகே-வோ குரல் கொடுத்து, பாடல் வரிகளையும் ரெண்டாம் வகுப்பு மாணவியின் உரைநடை காதல் கடிதமாக — ‘மர் கயா’ செய்யாமல் இருந்திருந்தால் 4/4 கொடுத்திருக்கலாம். Still, epilogue-இல் குத்தும் குத்திற்காகவே, மீண்டும் மீண்டும் கேட்கலாம்.

காதல் வளர்த்தேன்
– கேகே – 3.25 / 4
ஆல்பத்தில் வரும் மெலடிப் பாடல்; க்ளைமாக்ஸ் பாடல் போல, இறுதியில் உச்சகட்டத்தை அடைந்து சமீபத்தில் ரசித்த வேறொரு பாடலை நினைவுறுத்தினாலும் மீண்டும் கேட்க வைக்கும் பாடல். மந்த்ரா பேடியுடன் பாடும் கனவுப் பாடல்?! Very well executed crescendo.

தத்தை தத்தை
– சிம்பு, க்ளிண்டன், வசுந்தரா தாஸ், ப்ளாசி – 1.5 / 4
ராப் செய்கிறேன் என்று கஷ்டப்படுத்துகிறார்கள். தன்னுடைய நிறைகுறைகளை அறிந்து பாடும் இளைய தளபதி போல், சிம்புவும் சொந்த எல்லைகளைத் தெரிந்துகொள்ளுதல் எனக்கு நன்மை பயக்கும்.

மன்மதனே
– சாதனா சர்கம் – 2.5 / 4
எனக்கு சாதனா சர்கத்தின் ஸ்டைலிஷ் தமிழ் ரொம்பப் பிடிக்கும் 😉 சிம்புவின் படத்தை வைத்துக் கொண்டு ஜோதிகா பாடும் சோலோப் பாடல்?!

மன்மதர் & ரதிகளை நோக்கி குறி தப்பாமல் அம்பு விட்டிருக்கிறார் யுவன்.
கேட்க: RAAGA – Manmadhan – Tamil Movie Songs

Categories: Uncategorized

செல்லமே

July 19, 2004 Leave a comment

இசை: ஹாரிஸ் ஜெயராஜ்

வெள்ளைக்கார முத்தம்
– மாலதி – 2/4
வசீகரா ஸ்டைல் பாடல்; வசீகரம் எனக்குத் தென்படவில்லை!

ஆரிய உதடுகள்
– ஹரிஹரன், ஸ்வர்ணலதா – 2.75/4
செம ஆரம்பம். பாடகர்கள் நிலைநிறுத்துகிறார்கள்.
(கண்களே நீயாகப் போனால்
வேறு பார்வை வருமா?
)

கும்மியடி
– சந்தியா – 2/4
கொஞ்சம் அந்தக்கால குரலுடன் கூடிய மெட்டு; முதலிரவு நினைவலைகளைத் தட்டி எழுப்பலாம். ரீமா சென் கதாநாயகி என்று எண்ணிப் பார்த்தால்; எப்படி படமாக்கியிருப்பார்களோ என்றும் கற்பனைக் குதிரையைத் தட்டி விட்டால்; ‘A’ முத்திரை பாடல் வரிகளில் மட்டுமில்லாமல் போய் விடுமோ என்று நினைக்கவைக்கும் பாடல்.

செல்லக் கிளியே
– ரஞ்சித், அனுராதா ஸ்ரீராம் – 1.5/4
சுகமான ரொமாண்டிக் டுயட். ஆனால், அனுராதா ஸ்ரீராம் இருந்தும் பாடலை தூக்கி நிறுத்த முடியவில்லை.

காதலிக்கும் ஆசை (மை சோனாலிஸா…)
– கேகே, மாலதி, சின்மயி, டிம்மி – 1/4
ஹீரோ கெஞ்சுகிறார். இந்த மாதிரி பாடினால், எவராயிருந்தாலும் காதலிக்க ஆரம்பிக்க மாட்டார்கள்.

செல்லமே – ஹாரிஸ் ரொம்பக் கொஞ்சுகிறார்; பாடல் வரிகளால் சாக்லேட் இசை திகட்டுகிறது.

Categories: Uncategorized