Archive
இருவர்
இளம் தம்பதிகளுக்காக, கனடாவில் இருந்து வெளிவரும் 2: The Magazine for Couples என்னும் புத்தம்புது பத்திரிகையில் வெளிவந்த மேட்டரின் உல்டா இது:
மணமானவர்களை எவ்வாறு பிரிக்கலாம் என்று நக்கலடித்திருக்கிறார்கள். நம்ம ஊராக இருந்தால் என்ன பெயர் கொடுத்திருப்பார்கள்?
1. The Honeymoaners – தமிழக காங்கிரஸ் கட்சியினர்
2. The Trumps – துக்ளக் சோ-வினர்
3. The Mullets – ??? (தெரியவில்லை)
4. The Re-Gifters – ரீ-சைக்கிளிக்கள்
5. The Swingers – பா.ம.க.-வினர்
6. The Pet Shop Bores – தியாகராஜ பாகவதர் ரசிகர் மன்றம்
7. The Clones – கமல்ஹாசன் ரசிகர் மன்றம்
8. The Hard Cells – ரஜினிகாந்த் ரசிகர் மன்றம்
9. The Zealots – தங்கர் பச்சான் ரசிகர் மன்றம்
10. The Conspicuous Consummators – ஷங்கரின் ‘பாய்ஸ்’
11. The Joined-at-the-Hipsters – ‘ஆய்த எழுத்து’க்காரர்கள்
12. The Breeders – திமுக-வினர்
13. The Brunchosauruses – ??? (தெரியவில்லை)
14. The Better Haves – சசிகலா பரிவாரம்
15. The Dr. Philistines – அரட்டை அரங்கவாசிகள்
16. The Crown Moulders – விஜய டி ராஜேந்திரர்கள்
17. The Brewsome Twosome – ஜனநாயகத்தில் வாக்காளர்கள்.
18. The Silent Partners – தற்போதைய காங்-கம்யூ ஆட்சியினர்
19. The Trophy Couple – நோ காமெண்ட்ஸ் 😛
ரெண்டு வரி நோட்: இணையக் குழுக்களை எப்படி வகைப்படுத்தலாம்?
கருடா சௌக்கியமா – ஆனந்த் சங்கரன்
ஒரு பெரிய பணக்காரன். அவனுக்கு படு சுட்டியாக ஒரு பிள்ளை. எல்லாவற்றையும் தூக்கியெரிவது, கிழே கொட்டுவது அவன் வேலை. தன் மகனின் பிறந்தநாளுக்கு அவன் ஒரு வைர மோதிரத்தை போட்டு அழகு பார்த்தான்.
ஒரு நாள் அந்த பிள்ளை விளையாடும் பொழுது அந்த வைரக்கல் கீழே விழுந்துவிட்டது. அதைக் கண்ட அந்த பொடியன் அதை எடுத்து வாசலில் எரிந்தான். பணக்காரன் வீடாயிற்றே வாசலில் அழகிய தோட்டமும் புற்களும் இருந்தன. இந்த வைரக்கல் அங்கே இருந்த கூழாங்கற்களோடு சேர்ந்து விழுந்து விட்டது.
விழுந்தது வைரக்கல்லாக இருந்தாலும் அது விழுந்த இடம் சாதாரண கூழாங்கற்கள் இருக்கும் இடம். அப்போது அங்கே வந்த அந்த பணக்காரணின் நாய் அருகில் இருந்த பூந்தொட்டியில் காலை தூக்கி தன் வேலையை காட்டியது. அது அருகில் இருந்த அந்த வைரக்கல்லின் மீதுபட்டது.
அப்பொழுது அந்த வைரக்கல் சே ! நான் எவ்வளவு உசத்தி, என்னை வாங்க பணக்காரர்கள் வரிசையில் நிற்கிறார்கள் இருந்தாலும் இப்படி ஆகிவிட்டதே என்று வருந்தியது. அப்பொழுது அருகே இருந்த கூழாங்கல், அட என்ன இப்படி சொல்கிறாய் நீயும் கல், நானும் கல் இங்கு எல்லாமே ஒன்றுதான் என்றது. வைரக்கலுக்கு ஒன்றும் புரியவில்லை, எப்படி தானும் இந்த கூழாங்கல்லும் ஒன்றாக ஆனோம் என்று யோசித்த படி இருந்தது.
அப்பொழுது அங்கே வந்த தோட்டக்காரன் வைரக்கல்லை பார்த்து, ‘அட இந்த கண்ணாடி கல் நல்லாயிருக்கே’ என்று வியந்து அழகு பார்த்தான்.
வைரக்கல்லிற்கு மேலும் வருந்தமாக போயிற்று. என்னது தன் நிலமை இப்படி ஆகிவிட்டதே என்று வருந்தியது.
நல்ல வேளையாக அப்பொழுது வீட்டு எஜமானன் அங்கே வர, தோட்டக்காரன் அந்தக் கல்லை அவரிடம் கொடுத்தான். எஜமானன் அதைப் பார்த்தது நல்லபடியாக வைரக்கல் கிடைத்துவிட்டது. இதை மறுபடியும் தங்க மோதிரத்தில் பதித்து தான் அணிந்து கொள்ள வேண்டும் நினைத்துக்கொண்டான்.
அப்பொழுது வானொலியில் கண்ணதாசன் எழுதிய ‘பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது..’ பாடல் ஒலித்தது.
குழந்தைகளுக்கான கதை எழுத ஆனந்திடம் திறமை இருக்கிறது என்று எனக்குத் தோன்றுகிறது.
Purloining
நன்றி: ஆறாம்திணை.காம்
ஹி..ஹி.. படம் வரைவது எப்படி? – கார்ட்டூனிஸ்ட் சுதர்ஸன்:
“சித்திரக்கலை பயில்வது சுலபம். வித்தையை எப்படியும் கற்றே தீருவேன் என்று ஆவல் அவசியம். சித்திரம் வரைய முற்படுவோர்களுக்கு மனித உருவங்களை முதன் முதலில் வரையும் போது கூச்சம், பயம் ஏற்படும். உருவம் சரியாக அமையுமோ அமையாதோ என்ற அச்சமே அது. அச்சத்தை அகற்றிடல் வேண்டும்.
ஜனரஞ்சகமான பத்திரிகைகளில் பற் பலவிதமான படங்கள் வாசகர் கவனத்தைக் கவரும். கதை படங்கள் (Illustration), கேலி சித்திரம் (Cartoon) தமாஷ் படம் (Humur Joke) ஹாஸ்யத் துணுக்குகள் (Funny Picture) முதலியன இருக்கும். ஒவ்வொன்றுக்கும் தனித் தன்மை உண்டு.
பத்திரிகைகளில் வரும் தமாஷ் துணுக்குகளைப் பல பகுதிகளாகப் பிரிக்கலாம். 1. சிலேடை ஹாஸ்யம், 2. சீஸன் ஜோக். 3. செய்தி சிரிப்பு, 4. சிரஞ்சீவித் துணக்கு, 5. சினிமா உலகம். இப்படி எத்தனையோ.”
கவிஞர் விக்கிரமாதித்யன் – சந்திப்பு: சந்திரா
உடுமலை நாராயண கவிராயர் – தெ.மதுசூதனன்:
“1933 -இல் சிதம்பரம் ஜெயராமன் கதாநாயகனாக நடித்த ‘கிருஷ்ணலீலை’ என்ற படத்திற்கு வசனம், பாடல்கள் எழுதுவதுடன் உடுமலையாரின் பயணம் தொடங்குகிறது. பெரியார் கொள்கைகளில் பிடிப்புள்ளவராக இருந்தார். இதனால் தனது கடைசி நாள் வரை திராவிட இயக்கத்தின் தீவிர பிரச்சாரகராகத் திகழ்ந்தார். ‘குடியரசு’, ‘திராவிட நாடு’ பத்திரிகைகளில் இவரது தனிப்பாடல்கள் வெளியிடப்பட்டன. திராவிட இயக்க மாநாடுகள் உடுமலையாரின் பாடலுடன்தான் துவங்கப்பட்டன.
அண்ணாதுரை வசனம் எழுதிய ‘வேலைக்காரி’ (1951) படத்தில் ‘ஓரிடந்தினிலே’ கருணாநிதியின் பராசக்தி (1952) ‘கா… கா.. கா..’ முதலிய புகழ் பெற்ற பாடல்களை எழுதினார். ‘நல்லதம்பி’யில் (1949) வரும் இந்திர சபா கூத்தும், கிந்தனார் காலட்சேபமும் தமிழ்த் திரையுலகின் மறக்க முடியாத படைப்புகள். இவரது பகுத்தறிவு, கடவுள் மறுப்பு கருத்தாக்கம் ஓங்கி நிற்பது ‘சொர்க்க வாசலில்’ (1954) தான்.”
‘காட்டையும் மேட்டையும் உழுகாமப் போனா
கஞ்சிக்கு வருமே டேஞ்சரு
கட்டுப் பாட்டுக்குள் அடங்காதவர்கள்
கட்சியில் -ருப்பது டேஞ்சரு
ஓட்டுப் போடத் தெரியாவிட்டால்
நாட்டுக் கதனால் டேஞ்சரு
உலகம் போற்றும் உத்தமரானால்
உயிருக்கே ரொம்ப டேஞ்சரு
தன்னல மற்ற தியாகிகளுக்குச்
சர்க்கார் பதவி டேஞ்சரு
சர்க்கார் பதவி கொண்டவனுக்கே
தாட்சண்யத்தால் டேஞ்சரு
அண்ணன் தம்பியைப் பகைத்தவனுக்கு
அடுத்தவராலே டேஞ்சரு
அறிவில்லாதவன் எவனோ அவனுக்கு
அவனே வெரிவெரி டேஞ்சரு’
– ‘மாதர் குல மாணிக்கம்‘ (1956)
Recent Comments