Home > Uncategorized > Voltaire in Exile by Ian Davidson

Voltaire in Exile by Ian Davidson


வால்டேரை குறித்து ஏழாம் வகுப்பு சரித்திரப் புத்தகத்தில் படித்தது உண்டு. அதன் பிறகு ‘சின்ன ராசாவே சித்தெறும்பு என்னக் கடிச்சுதா’ என்ற சத்யராஜின் ‘வால்டேர் வெற்றிவேல்’, அவருக்கும் இவருக்கும் என்ன சம்பந்தம் என்று குழம்ப வைத்தார். அமெரிக்காவில் ஒளிபரப்பாகும் A&E-இல் ஒருவரின் வரலாற்றை ஒரு மணி நேரத்தில் அடக்கும் வரை பொறுமையில்லாமல், வால்டேரை குறித்துத் தேடியபோது ஐயான் டேவிட்ஸன் கிடைத்தார்.

சிந்தனையாளர் வால்டேரின் (வால்டேர் எத்தனை வால்டேரடா) சிறை வாழக்கையையும், அவரின் படைப்புகளையும் அலசும் புதிய புத்தகத்தின் டைம்ஸ் மதிப்புரையில் இருந்து:

* மனித உரிமையை ஏளனம் செய்தவர் 180 டிகிரி அபவுட் டர்ன் அடித்து மனித உரிமைக்காகப் போராடிய கதையை சொல்லும் புத்தகம்.

* சகிப்புத்தன்மையற்ற, மூடநம்பிக்கைகள் நிரம்பிய கிறித்துவர்; பணக்கார மெய்யியலாளர் — நிதித்துறையில் நிகழ்த்திய சாகசங்களை ராபின்ஸன் அடுக்குகிறார்.

* Absolutism(???)-இன் எதிரி, neo-classical(???)-இன் ஆதரவாளராக எவ்வாறு விளங்கினார் என்பதை விவரிக்கிறது.

* முப்பதாயிரத்துக்கு மேற்பட்டவர்கள் இறந்த லிஸ்பன் பூகம்பம், அதனால் உதித்த கண்மூடித்தனமான கடவுள் நம்பிக்கை குறித்த கிண்டல், போரில் தோற்றதற்காக சுட்டு தண்டிக்கப்பட்ட உற்ற நண்பனின் பிரிவு, ஆகியவற்றை உள்ளடக்கி எழுதப்பட்ட Candide-இன் விமர்சனம்.

* பாரிஸில் சட்டம் படித்த சரிதையில் ஆரம்பித்து, பண்ணைத் தொழிலாளிகள் வரி கொடுத்து அல்லல்படுவது என்று வால்டேரின் அஞ்ஞாதவாசம் அல்லாத வாழ்க்கையையும் புத்தகம் தொட்டுச் செல்கிறது.

* ப்ரொடெஸ்டண்ட்களுக்கு எதிரான காலகட்டம் அது. ரோமன்-கத்தோலிக்க சேவைக்கு செல்லாவிட்டால் ஆயுள் தண்டனை வழங்கப்பட்ட காலத்தில் Protestant கத்தோலிக்கர்களுக்காக வால்டேர் தீவிரமாகப் போராடியுள்ளார். ழான் கலஸ் (Jean Calas) தன்னுடைய மகனை பிரிவு மாறியதற்காக கொலை செய்ததாக குற்றம் சாட்டப்படுகிறார். சாட்சி எதுவும் இல்லாமல், விசாரணை கண்துடைப்பு முடிந்தபிறகு, கையையும், கால்களையும் சிதைக்க உத்தரவிடப்படுகிறது. தவறான தீர்ப்புக்கு மன்னிப்பும், நஷ்டஈடும் வால்டேர் வாங்கித் தந்திருக்கிறார்.

* பாண்டிச்சேரியை ஆங்கிலேயரிடம் இழந்துவிட்ட ஃப்ரெஞ்சு படைத் தலைவரின் மேல் தேசத்துரோகமும், அரசு சொத்துக்களைக் களவாடியதாகவும் பழிபோடப் படுகிறது. இவரை காப்பாற்ற முடியாவிட்டாலும், அந்த தீர்ப்பின் அநியாயங்களை மக்களிடம் விதைத்திருக்கிறார்.

* வால்டேர் சில சமயம் கோழையாகவும், பல சமயம் சீர்திருத்தவாதியாகவும் மாறி மாறி காட்சியளித்தது; பதவிக்கு அடிபணிந்து போய் பதவியில் இருப்பவர்களின் செயல்பாடுகளை எதிர்த்தது; கடவுள் நம்பிக்கையில்லாமல், ஆன்மிகப் பற்று வைத்திருந்தது; சிந்தனையாளராகவும், வர்த்தகப்புலியாகவும் ஒருங்கே ஒன்றையொன்று குழப்பாமல் செயல்பட்டது; பெரும்பணக்காரர்களின் செலவை கண்டித்தாலும், அவர்களைத் துறந்து விட இயலாதது; என்று வால்டேருக்குள் இருக்கும் சாதாரண மனிதனைக் கண்டெடுக்கிறார் ராபின்ஸன்.

இந்தியாவில் இருந்து எழுத்தாளர்கள் நாடு கடத்தப் படுவதில்லை. சல்மான் ருஷ்டி போன்ற சிலர் மீண்டும் தாய்நாட்டைத் தொடுவதற்கு தடைகள் இருந்திருக்கலாம். புகழேந்தி போன்ற சிலர், மன்னன் மகளுடன் சீதனமாக ஒட்டக்கூத்தருக்கு விலை போயிருக்கலாம். அப்பர் போன்ற சிலர் கஷ்டப்பட்டிருக்கலாம். ஆனால், நாட்டை விட்டு துரத்தப்பட்டவர்கள் உண்டா?

புத்தகம் இன்னும் வாங்கவில்லை. வால்டேர் குறித்த வேறு முக்கிய புத்தகங்கள் இருந்தால் சொல்லுங்கள்.
-பாஸ்டன் பாலாஜி
————————–
Hardcover: 368 pages
Publisher: Atlantic Books; (July 8, 2004)
$47.96

“People seem to think that our century is merely ridiculous,” he
sighed, “in fact, it is horrible.”

Categories: Uncategorized
  1. July 30, 2004 at 8:36 am

    சமீபத்தில் எங்கோ படித்த/கேட்ட நினைவு – வால்டேர் “I may not agree with your views, but I will fight to death for your right of expressing it” என்றவர் என்று. உண்மையில் அவர் அப்படிக் கூறவில்லை, ஆனால் அவரது வாழ்க்கையை விமரிசித்த ஒருவர் அவர் அப்படி இருந்தார் என்று கூறியதாகச் சொல்லப்பட்டது. அதில் இருந்து அவர் பற்றித் அதிகமாகத் தெரிந்து கொள்ள ஆவல்.

  1. No trackbacks yet.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: