Archive

Archive for August 10, 2004

ஏபிசிடி அல்ல… நாங்க ஓபிஐ!

August 10, 2004 5 comments

தற்போதைய அமெரிக்காவில் பிறந்த இந்தியர்கள், தங்களை ஏபிசிடி என்று அழைத்துக் கொள்ள வைப்பதில்லை. குழம்பாமல் இருப்பது முதல் காரணம் என்றால், நோரா ஜோன்ஸ் போன்ற பலருக்கு இந்திய வம்சாவழி என்று சொல்லிக்கொள்வதும் பெரிதாகப் பிடிக்காதது இரண்டாம் காரணம்.

இவர்கள் தங்களை ஓபிஐ (ஓவர்ஸீஸ் பார்ன் இந்தியன்ஸ்) என்று அழைத்துக் கொண்டு இந்தியன் ஓவர்ஸீஸ் பாங்க் போன்ற சொந்தக் கணக்கை டாலர்களால் டல் அடிக்காமல் பெருக்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களைப் பற்றிய இந்தியா டுடே (ஜன. 19, 2004) கவர் ஸ்டோ ரியில் இருந்து புகழ் பெற்ற ஓபிஐ-க்களும், மிகச் சிறிய குறிப்புகளும்….

பவர்

* கமலா ஹாரிஸ், 39
– டிஏ என்றழைக்கப்படும் அரசு வக்கீல்
– சான் ப்ரான்ஸிஸ்கோவின் முதல் பெண் டிஸ்ட்ரிக்ட் அட்டர்னி
– ஆப்பிரிக்க-அமெரிக்க அப்பாவிற்கும், இந்திய அம்மாவிற்கும் பிறந்தவர்.

* சத்வீர் சவுத்ரி, 32
– மின்னஸோடா செனேட்டர்
– அமெரிக்க சட்டசபைகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படும் நான்காவது இந்தியர்.
– 32 வயதில் அடையக்கூடிய சாத்தியங்கள் எவ்வளவோ இருக்கிறது

* பர்ம்ஜீத் தண்டா, 34
– இந்தியப் பாரம்பரியம் என்று சொல்லிக் கொள்வதில் அதிக அக்கறை காட்டாதவர்
– இங்கிலாந்து சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

* பாபி ஜிந்தால், 32
– புஷ் அரசாங்கத்தால் பெரிதும் கவனிக்கப்படுபவர்; மதிக்கப்படுபவர்; விரும்பவும் படுபவர்.
– மதத்தை மாற்றி ஓட்டு கேட்டாலும், சொற்ப வித்தியாசத்தில் தோற்றுப்போனார்.
– இந்திய வம்சாவழியை மறக்க நினைப்பவர்
– சுகாதாரத்துறையில் இருக்கிறார்

* கரன் பாடியா
– போக்குவரத்துத் துறை: துணை செயலாளர்

* நீல் படேல்
– டிக் செனியின் கீழே செயலாற்றுகிறார்

* கோபால் கன்னா
– Peace Corps-இன் CIO

* ஷ்யாம் மேனன்
– கல்வித்துறை: நம்பிக்கை சார்ந்த முயற்சிகளின் திட்டக்குழு உறுப்பினர்

* அஜய் குண்டமுக்கால
– வணிகம் : துணை செயலாளர்

* ஸுஹேல் கான்
– போக்குவரத்துத் துறை: சட்ட ஆலோசகர்

அறிவு

* கோவிந்த் பிள்ளை, 20
– சொந்த நிறுவனம்
– மைக்ரோசாஃப்ட்டின் நம்பகத்தைப் பெற்றவர்

* ரூபன் சிங், 27
– முதலீட்டு நிறுவனம் (venture capital) நடத்துகிறார்
– கூடவே நிரலிகள் தயாரிக்கும் நிறுவனம்
– தொட்டுக்க நலிவடைந்த நிறுவனங்களின் நிதிகளை மேய்க்கும் பணி

* நிர்மலா ராமானுஜம், 35
– புற்றுநோயை கண்டுபிடிக்க புதியமுறையை உருவாக்கியவர்
– எம்.ஐ.டி.யினால் நம்பிக்கை நட்சத்திரமாக தேர்வு செய்யப்பட்டவர்

* தேஜல் தேசாய், 31
– தினசரி இன்சுலின் ஊசி போட்டுக் கொள்ளத் தேவையில்லாத வழிமுறையை உருவாக்கியவர்
– சர்க்கரை வியாதி தவிர பல்வேறு நோய்களுக்கான செயற்கை உறுப்புகளைத் தயாரிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார்.

* அஜித் லாலாவனி, 39
– எளிதாக, விரைவாக டிபியை கண்டுபிட்க்கும் சோதனையை கொடுத்தவர்.
– சொந்த நிறுவனத்தின் மூலம் நோய்தடுப்புமுறைகளை ஆராய்ந்து கண்டுபிடிக்கிறார்.

புகழ்

* பிரதிபா வார்கி, 29
– புகழ்பெற்ற மேயோ க்ளினிக்கின் இளமையான பேராசிரியர்.
– அமெரிக்காவில் கற்றதை இந்தியாவுக்குத் தருகிறார்

* மாயா கைமல், 38
– புகைப்படக் கலைஞர்
– ரெசிபி புத்தகங்கள் மூலம் கிடைத்த பெயரை வைத்து, தென்னிந்திய உணவுப் பதார்த்தங்களை விற்க ஆரம்பித்து விட்டார்.

* சஞ்சய் குப்தா, 34
– சி.என்.என். நம்பும் மெடிகல் ரிப்போர்ட்டர்.
– குவைத்தை விடுவிக்கும் வளைகுடாப் போரில், அமெரிக்கக் கடற்படையின் மருத்துவப்பிரிவில் பணிபுரிந்தவர்.
– மூளை அறுவை சிகிச்சையில் கைதேர்ந்தவர்
– அமெரிக்காவின் ‘குமுதம்’ — பீப்பிள் சஞ்சிகையினால், ‘கவர்ச்சிகரமான மனிதராக’த் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

* அடுல் கவாண்டே, 38
– மருத்துவநலத்துறையில் க்ளிண்டனுக்கு ஆலோசகர்
– முன்னாள் துணை ஜனாதிபதி ஆல் கோருக்கு ஆராய்ச்சியாளர்
– ஹார்வார்ட்டில் பேராசிரியர்
– தி நியு யார்க்கர் இதழின் ஆஸ்தான எழுத்தாளர்
– புகழ்பெற்ற ‘அறுவை சிகிச்சை’ புத்தகத்தின் மூலம் டைம் இதழினால் 2002-ஆம் ஆண்டின் தலை-ஐந்து சிறந்த விற்பனைப் பட்டியலில் பெயர் பொறித்தவர்

* ரூபா புருஷோத்தமன், 25
– பொருளாதாரப் புலி
– கோல்ட்மேன் சாக்ஸின் நம்பகமான ஆய்வறிஞர்

* கணேஷ் வைத்யநாதன், 48
– இண்டஸ் காபிடல் மூலம் நிதி நிறுவனங்களுக்கான வர்த்தக நிரலியை வழங்குகிறார்
– இந்தியாவில் முதலீட்டு நிறுவனம் (venture capital)

* மங்கேஷ் ஹத்திகுடூர், 24
– அமெரிக்காவின் புதிய ஹாட் பத்திரிகை + இணையத்தளமான ‘மெண்டல்_ஃப்ளாஸ்’ நடத்துபவர்
– அதே பத்திரிகையை இந்தியாவிற்கும் கொண்டுவருகிறார்

* அஞ்சனா ரஹேஜா, 37
– ஃபோர்ட், சோனி, வர்ஜின் அட்லாண்டிக் என பல வாடிக்கையாளர்களை வைத்திருக்கும் ‘மீடியா மொகல்ஸ்’ நடத்துகிறார்.
– மிகப்பெரிய சந்தையான இங்கிலாந்தின் ஆசியர்களைக் குறிவைத்து சந்தைப்படுத்தும் நிறுவனம்

பாதி இந்தியா.. பாதி வெளிநாடு

* நோரா ஜோன்ஸ், 24
– உலகப் புகழ்பெற்ற, எட்டு கிராமிகளை வென்ற பாடகி
– அப்பா யார் என்று தெரியும் இல்லையா 😉

* மைக்கேல் சோப்ரா, 20
– இங்கிலாந்து அணியில் ஆடப்போகும் கால்பந்து வீரர்
– நியுகாஸ்ல் யுனைடெட்-க்காக ஆடிய முதல் (அரை) இந்தியர்

* ரோனா மித்ரா, 27
– அமெரிக்க பிராஸிக்கியூட்டர்களை வைத்து எழுதப்பட்ட ‘தி ப்ராக்டிஸ்’ தொடரில் நடிப்பவர்.
– பல படங்களில் நடித்து வருபவர்
– புகழ்பெற்ற மாடல்

* சைரா மோகன், 25
– சானல், கால்வின் க்ளின், விக்டோ ரியாஸ் சீக்ரெட் என்று எல்லாப் பெருந்தலைகளுக்கும் மாடல்

* ஜிமி மிஸ்ட்ரி, 30
– இந்தியப் பிண்ணனி கொண்ட மிஸ்டிக் மஸூர், ஈஸ்ட் இஸ் ஈஸ்ட், தி குரு போன்ற படங்களின் நாயகன்
– இங்கிலாந்து தொலைக்காட்சியின் முண்ணனி நடிகர்

ஆட்டம்…பாட்டம்

* பர்மீந்தர் நக்ரா, 29
– பெண்ட் இட் லைக் பெக்கம் – நாயகி
– அமெரிக்காவின் ‘மெட்டி ஒலி’ – ஈ.ஆர். தொலைக்காட்சித் தொடரில் முக்கிய வேடம்

* மனோஜ் ஷ்யாமளன், 34
– 🙂

* மார்க் டேவார்ஸன், 27
– ‘டோ பாஸ்’ என்ற குழுவை இசைக்கும் ஜாஸ் கலைஞர்

* பாபி ஃப்ரிக்ஷன், 30
– பிரிட்டிஷ் ரேடியோவின் புகழ்பெற்ற வீடியோ ஜாக்கி
– புதிய ஆல்பம் வெளிவருகிறது

* ஆசிஃப் மாண்டவி, 30
– சாகினாஸ் ரெஸ்டாரண்ட் என்னும் விமர்சகர்களால் ரசிக்கப்பட்ட ஷோவின் மூளை, நாயகன், இயக்குநர்

* சைமன் & டைமண்ட், 35/36
– அபாசி இந்தியன், ஷனையா ட்வெயின், நஸ்ரத் ஃபதே அலிகான் என்று பலரோடு இசையால் இணைந்தவர்கள்

* ஆசிஃப் கபாடியா, 30
– தி வாரியர் படத்தின் மூலம் விருதுகளை வென்றவர்
– ஆஸ்கார் வெல்லக்கூடிய கதைகளை எழுதுகிறவர்

* ஜும்பா லஹிரி, 37
– 2000-த்தின் புலிட்சர் பரிசு வென்றவர்.
– சுவாரசியமான இந்திய காரெக்டர் கொண்ட கதைகளை வித்தியாசமான நடையில், எளிமையாக எழுதுபவர்.

இன்னும் நிறைய பேரை அடுக்கியிருந்தார்கள். பார்த்தபோது, கொஞ்சம் பொறாமையும், நிறைய ஆசையும் வருவதை தடுக்க முடியவில்லை! செயல்திட்டம்தான் பாக்கி 🙂
-பாஸ்டன் பாலாஜி

நன்றி : இந்தியா டுடே

(“In the future everyone will be world-famous for 15 minutes”: Andy Warhol)

Categories: Uncategorized

அடல்ட்ஸ் ஒன்லி காட்சிகள்

August 10, 2004 9 comments

மரத்தடி:

இந்த மாதிரி மேட்டர் எல்லாம் வயது வந்தோர் மட்டுமே படிப்பார்கள் என்றாலும், எச்சரிக்கவேண்டியது தற்கால நடைமுறை. ‘மேட்டர்’ சீன்களைப் பட்டியலிடுவதால் டீனேஜ் வயசை எட்டிப் பார்த்தவர்கள் மட்டும் இதைப் படிக்கக் கடவது.
—————-

ரசமாக காதலைச் சொன்ன சில திரைப்படங்களைப் பட்டியலிடும் ஆசை. ஆங்கிலம் என்றால், ரேப் சீன் இல்லாமலேயே நிறைய தேறும். என்னுடைய லிமிடெட் அறிவுக்கு எட்டியதில் இருந்து….

oOo

எண்பதுக்களுக்கு முன் தலை பத்து சூடான காட்சிகள்:

1. வனமோகினி – தவமணி தேவி

2. சந்திரலேகா – ரஞ்சன், டி.ஆர். ராஜகுமாரி

3. ஜகதல பிரதாபன் – பி.யு. சின்னப்பா, சரோஜினி (தேவலோக நர்த்தகி தன் ஒவ்வொரு ஆடையாக கழற்றி எரிவது, புதிய ‘முந்தானை முடிச்சு’ ஊர்வசியின் அந்தக்கால அவதானிப்பு)

4. அம்பிகாபதி – தியாகராஜி; பாகவதர், சந்தானலட்சுமி (‘சந்திர சூரியர் போகும் கதி மாறினும்’)

5. ஹரிதாஸ் – எம்.கே.டி., டி.ஆர். ராஜகுமாரி (மன்மதலீலைய வென்றார் உண்டோ)

6. பொன்முடி – நரசிம்மபாரதி, மாதுரிதேவி

7. ஸ்ரீவள்ளி – டி.ஆர். மகாலிங்கம், குமாரி ருக்குமணி

கவர்ச்சி என்பது வேறு, கிளாமர் என்பது வேறு என்று நம் நடிகைகள் புரிந்து வைத்திருப்பதைக் கூடத் தெரியாமல், வன்புணர்வு காட்சிகள், ஆண்களை கிளர்ச்சியூட்டும் விதம் அமைந்த சில படங்கள்.

8. உத்தம புத்திரன் – சின்னப்பா
9. நல்ல காலம் – T. S. பாலய்யா
10. அரங்கேற்றம் – ஜெயசித்ரா

oOo

எண்பதுக்களுக்குப் பின் தலை பத்து சூடான காட்சிகள்:

1. ராஜபார்வை – கமல், மாதவி (அந்திமழை பொழிகிறது)

2. பிரம்மா – சத்யராஜ்;, பானுப்ரியா

3. முந்தானை முடிச்சு – தீபா, பாக்யராஜ்;

4. சலங்கை ஒலி – ஜெயப்ரதா, கமல் (மௌனமான நேரம்…)

5. மறுபிறவி – மஞ்சுளா, முத்துராமன்

6. மூன்றாம் பிறை – சில்க் ஸ்மிதா, கமல் – பொன்மேனி உருகுதே

7. பகலில் ஒரு இரவு – ஸ்ரீதேவி, ஜெய்கணேஷ்

8. மிஸ்டர் ரோமியோ – பிரபுதேவா, நக்மா (நாளை உலகம் இல்லையென்றால்)

9. தேவராகம் – அரவிந்த்சாமி, ஸ்ரீதேவி

10. கீழ்வானம் சிவக்கும் – மேனகா, சரத்பாபு

ஜஸ்ட் மிஸ்
11. அலைகள் ஓய்வதில்லை – கார்த்திக், ராதா

நான் எந்த முக்கியமான படத்தையாவது இன்னும் பார்க்காவிட்டால், குறிப்பிட மறந்திருந்தால், கண்டித்து மடல் போடலாம் 😉

— பாஸ்டன் பாலாஜி

Categories: Uncategorized

தி. ஜானகிராமன் படைப்புலகம் – நீல பத்மநாபன்

August 10, 2004 Leave a comment

Yahoo! Groups : RaayarKaapiKlub:

“தொடராக எழுதப்படுவதாலோ ஜனரஞ்சகப் பத்திரிகைகளில் வெளியானதாலோ இலக்கியதரத்தை இழந்துவிட வேண்டுமென்பதிலை என்பதற்கு ஜானகிராமனின் நாவல்கள் சான்றுகள். சரளமாக வாசித்துச் செல்லும் அம்சங்கள் நிறைந்தவை ஜானகிராமனின் நாவல்கள். பாலுணர்ச்சி கவர்ச்சி இதற்கோர் காரணமாகச் சொல்கிறவர்கள் இருக்கலாம். ஆனால், இந்தப் பாலுணர்வு சம்பந்தப்பட்டவை ஒரு ஆன்மிக தளத்தில் உணர்வநமைதியுடன் விரிக்கப்படுகிறதே தவிர கிளர்ச்சியூட்டும்படி இருப்பதாக சொல்ல முடியுமா?

தி.ஜா.ரா. நாவல்களில் இலக்கிய அம்சம் குறைந்து போகாமல் நிற்பதின் காரணம் என்ன?

(1) நடைமுறை வாழ்வை ஊன்றிப் பார்த்து சின்னச் சின்னத் தகவல் கூட விடுபட்டுப் போய்விடாமல் எந்த அதிமேதாவித்தனமும் காட்டாமல் கலைநயத்துடன் விச்ராந்தியாக சொல்லிச் செல்லும் பாங்கு. வர்ணனைகளில் கூட செயற்கைத் தன்மையோ அவசரமோ இல்லாத ஓர் நிதானப் போக்கு. இந்த மெது நகர்தலால், நடைமுறை வாழ்க்கைப் பிம்பங்களால், பெரிய புத்திகூர்மையில்லாத – ஆனால் காரிய கௌரவமிக்க சாதாரண வாசகர்களால் கூட அவர் எழுத்தை சுவாரஸ்யமாக வாசிக்கவும் ரஸிக்கவும் முடிகிறது. அந்த நிகழ்வுகள், வர்ணனைகள், சொற்சித்திரங்கள் நெடுநாட்கள் வாசகர் மனதை நெருடிக் கொண்டிருக்கின்றன.

மோகமுள்ளை வாசித்த எல்லோருக்குமே யமுனா பாபுவிடம் கேட்கும் ‘தவிச்சதெல்லாம் இதற்குத்தானே’ என்ற சொற்றொடரை அத்தனை சீக்கிரம் மறந்து விட முடியுமா?

(3) முதல் நாவல் ‘அமிர்த’த்திலேயே ஆரம்பத்தில் கோயில் தெற்குப் பிரகாரத்தில் தக்ஷணாமூர்த்திக்குப் பதினேழாவது நமஸ்காரத்தைப் பண்ணிக் கொண்டிருந்த அமிர்தத்தைப் பார்த்து “அந்தக் கல் தெய்வத்திற்கு வாயிருந்தால், ‘இந்தத் தெற்கத்தி அனாதையை இவ்வளவு கௌரவப்படுத்தும் நீ யாரம்மா?” என்று நிச்சயமாகக் கேட்டிருக்கும்” (பக்கம் 1) என்று எழுதத் தொடங்கிய போதிருந்த இந்த நையாண்டித் தோரணை – அங்கதச்சுவை கடைசிவரை – மரப்பசு, நளபாகம் அணையாமல் அவரிடம் செயல்பட்டது என்பது விசேஷம்தானே?
…..

‘வீடு’ கதையில் டாக்டர் சந்தானம் வீட்டில் இல்லாத வேளையில் டாக்டரின் மனைவி அம்பு பக்கத்தில் படுத்திருக்க கம்பவுண்டர் மகாதேவன் டாக்டரின் மெத்தையில் தூங்கிவிட்டு டாக்டர் வந்தது அறிந்து ஓசைப்படாமல் ஓடிப்போய் சீர்காழிப் பாயில் தூங்காமல் தூங்கியதைக் கண்ட டாக்டரின் மனக்குமுறல் – ‘சக்தி வைத்தியம்’ – சிறுகதைத் தொகுப்பு – 1978

“சீ வயிற்றைப் புரட்டுகிறது, அம்மா! அப்பா! நல்ல வேளையாக நீங்கள் இப்போது இல்லை. உங்கள் பிள்ளையை, தெருவோடு போகிற பயல் இப்படி உள்ளே நுழைந்து முதுகில் குத்துகிற கண்ராவியைப் பார்க்காமல் போனீர்களே! மூன்று மணியாகி விட்டது, தூக்கம் வரவில்லை. விளக்கைப் போட்டேன். அம்பு மல்லாந்து, முழங்கால்கள் இரண்டும் தெரியத் தூங்குகிறாள். வாய் லேசாகத் திறந்திருக்கிறது. ஐயோ! பெரிய சுரைக்காய் போல் வழவழவென்று கால், பொட்டு கட்டி ஆடுவாளே தெருவாசலில், அவளைப் பார்ப்பது போல் என் உடம்பு சுட்டது. அம்பு அவளை விட அழகு! அந்தக் கிழவியை விட அழகு! அப்படியே பிழிந்து அவளை வாயில் ஊற்றிக் கொள்ள வேண்டும் போலிருக்கிறது. ஆனால், மகாதேவன் இந்தக் காலகண்ணாடியைப் பிழிந்து ஊற்றி நெஞ்சில் வைத்துக் கொண்டுவிட்ட மாதிரி இருக்கிறதே – என் நெஞ்சம் சுடுகிறது.”

கடைசியில் மகாதேவன் கூட வாழ கணவனிடம் வீட்டை கேட்ட அம்பு மகாதேவனின் திடீர் மரணத்தில் விசித்து விசித்து அழும்போது கணவன் மனவோட்டம் “அம்பு அழும்போதுகூட எத்தனை அழகாக இருக்கிறாள்! அந்தக் கண்ணும் நீள முகமும் நெற்றியின் சரிவும் எத்தனை அழகு கூடிவிட்டது! ஒரு கண்ணீர்த் துளியால் முகம் கூட அழகாகச் சிவந்திருக்கிறது.”

குடியிருந்த வீட்டை விற்க வேண்டியதில்லை என்ற அவர் தீர்மானம் இந்த மனைவியின் கூட அதே வீட்டில் மீண்டும் இல்லற வாழ்வைத் தொடங்குவதற்காகத்தானே…!

‘அம்மா வந்தாள்’ நாவல் வெளிவருவதற்கு முன்னால் எழுதப்பட்ட கதை இது (1964).

கிழடாகிப் போன அம்மாவைக் கவனிக்க நேரமில்லாமல் கொண்டவள் கூட குலவிக் கொண்டிருந்த ஒரு பிள்ளை (‘அன்பு வைத்த பிள்ளை’ – கதை, யாதும் ஊரே (1967) சிறுகதைத் தொகுதி); கடைசி நேரத்தில் ‘ஜலம் ஜலம்’ என்று தொண்டை நனைக்கக் கூவி கிடைக்காமல் மண்டையைப் போட்டுவிட்ட அம்மாவின் செத்த போஸைப் போட்டோப்படம் எடுக்க முடியாதுன்னு போட்டோ க்கிராபர் கைவிரித்தபோது, ‘இதுக்குக் கூடவா நான் கொடுத்து வைக்கலை?’ என்று தேம்பும்போது வெளிப்படும் சற்று குரூரமான அங்கதச் சுவை ஜானகிராமனுக்கு மட்டுமே கைவந்த கலை.

உணர்ச்சித் தீவிரமான கட்டங்களில் கூட கதாபத்திரங்களை அதிகம் பட்டுக்கொள்ளாமல் நகர்த்துவதில் இந்தக் கதாசிரியனுக்கு இருக்கும் திறமை நன்கு வெளிப்படும் கதை ‘கண்டாமணி’. விஞ்ஞான வாத்தியாரின் உதவியாளர் காலமானதற்கு காரணம் அவர் என்ற சேதி பரவாமல் இருக்க ‘கைநீளத்தில் பஞ்சலோகத்திலே கண்டாமணி வாங்கித் தொங்கவிடு’வதாக யுகேஸ்வரனிடம் வேண்டிக் கொண்டதை நிறைவேற்றிய மார்க்கம் அந்த மணிச்சத்தத்தில் குற்றவாளி உணர்வுடன் துடிப்பது ‘முழுச் செவிடர்கள் எப்படியிருப்பார்கள்’ (யாதும் ஊரே – கதைத் தொகுதி) என்று அவர் கற்பனை செய்து பார்க்கும் கடைசி வாக்கியத்தில் எத்தனைக்கு அனாயசமாக வெளிப்பட்டிருக்கிறது!

(மத்திய சாகித்திய அகாதமி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், கருத்துக்களம் இணைந்து சென்னை உலகப் பல்கலைக்கழக மையத்தில் வைத்து 24-25 நவம்பர் 2001-இல் நிகழ்த்திய “தி.ஜானகிராமன் படைப்புலகம்” கருத்தரங்க தொடக்கவிழாவில் ஆற்றிய சிறப்புரையிலிருந்து).

நன்றி: இலக்கியச் செல்நெறிகள் – நீல பத்மநாபன் – ராஜராஜன் பதிப்பகம் – ரூ. 70/-

Categories: Uncategorized