Archive
அம்பானி ஒரு வெற்றிக் கதை
இந்த வார ஆன்லைன் ஆனந்த விகடனில் சொக்கன் எழுதிய அம்பானி புத்தகத்திலிருந்து பொன்மொழிகளை எடுத்து விட்டிருக்கிறார்கள். அனேகமாக, புத்தகம் முழுதும் தூவப்பட்டிருக்கும் என்று நினைக்கிறேன்.
தமிழோவியத்தில் மின் புத்தகமாக வெளிவந்த இது பரவலான கவனிப்பைப் பெற்றிருக்கிறது. போன வாரம் ஆடித் தள்ளுபடிக்கு சென்று வந்த என்னுடைய அண்ணன், இந்தப் புத்தகத்தை ‘சென்னை சில்க்ஸ்’-இல் பார்த்திருக்கிறார். விசாரித்துப் பார்த்ததில் அவர்களின் நிறுவனரை இந்தப் புத்தகம் பெரிதும் பாதித்திருக்கிறது. உடனே, புத்தகத்தை வாங்கி, அங்கு வேலை செய்யும் அனைவருக்கும் இலவசமாக விநியோகித்து இருக்கிறார்.
நல்ல புத்தகத்தைப் படித்து, அதைப் பகிர்ந்தும் கொள்ளும் வித்தியாசமான முதலாளி!
- தொழிற்சாலைகளையும் யந்திரங்களையும் மட்டுமல்ல, மனிதர்களையும் எப்போதும் நவீனப்படுத்திக்கொண்டே இருக்கவேண்டும்.
- கனவு காண்பதற்கான தைரியம் உங்களுக்கு உண்டா? ஆம் எனில், நீங்கள் ஜெயிப்பதற்கு ஒரு பெரிய உலகமே காத்திருக்கிறது.
- நியாயமான விமர்சனங்களுக்குப் பதில் சொல்லவேண்டியது உங்கள் கடமை. அதேசமயம், அநியாயமாகக் குற்றம் சாட்டுகிறவர்களுக்கு, மௌனத்தையே பதிலாகத் தாருங்கள்.
- எதுவானாலும், குறித்த நேரத்தில், குறித்த செலவில் செய்து முடிப்பதுதான், உங்கள் தொழிலின் மீது பிறருக்கு நல்ல நம்பிக்கையை உண்டாக்கும்.
- நீங்கள் நேரடியாக சம்பந்தப்பட்ட விஷயங்களில் மட்டும் கவனம் செலுத்திக் கொண்டிருக்காமல், உங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதையும் உன்னிப்பாகக் கவனித்துக் கொள்ளுங்கள்!
அம்பானி ஒரு வெற்றிக் கதை – Tamiloviam.com
யாரோ ஒருவன் இடம்மாறி இறங்குகிறான்
பொன். இரவீந்திரன்
‘கந்தையானாலும்
கசக்கிக்கட்டு
சரிதான்.
அது காயும்வரை
எதைக் கட்டுவது?’
ஒவ்வொரு
இரவு நேரப் பயணத்திலும்
பேருந்தோ
இரயிலோ
யாரோ ஒருவன்
தூக்கம் இழக்கிறான்
யாரோ ஒருவன்
பட்டினி கிடக்கிறான்
யாரோ ஒருவன்
எதையோ
பறி கொடுத்துத்
தவிக்கிறான்
யாரோ ஒருவன்
இடம் மாறி
இறங்கித் தொலைக்கிறான்
யாரோ ஒருத்தி
கணவனுக்குத்
துரோகம் இழைக்கிறாள்
மணமகளாய்
மாப்பிள்ளையுடன்
மகளை
வழியனுப்பி
வீடு வந்த அம்மாவின்
சுருக்குப் பைக்குள்
சுருங்கிக் கிடக்கின்றன
மகளின்
காதல் கடிதங்கள்
(குமரன் பதிப்பகம் – ரூ.40/-)
Recent Comments