கிரிக்கெட்டில் நாம் பல இறுதிப்போட்டிகளுக்குத் தேர்வாகிறோ. அதற்கு முக்கிய காரணமாக விளங்குபவர் நியுசிலாந்தை சேர்ந்த ரைட். இந்தியர்களுக்கு பயிற்சியளிக்க வெளிநாட்டு புத்தகங்கள், பார்த்து களிக்க அமெரிக்காவின் காமெடிகள் இருக்கிறது. அதே போல், அடுத்த ஒலிம்பிக்ஸில் இந்தியா பதக்கம் வெல்வதற்காக அயல்நாட்டு கோச்களை நியமித்தால்….
டென்னிஸ் இரட்டையர் – ‘ஆதர்ச தம்பதி’ ஆண்ட்ரி அகஸ்ஸி + ஸ்டெஃபி க்ராஃப்
டென்னிஸ் ஆடவர் – ‘கவன ஈர்ப்பு’ மரையா ஷரபோவா
மகளிர் தொடர் ஓட்டம் – ‘அம்மா… மகள்…’ பண்டாரநாயகே குடும்பம்
ஆடவர் தொடர் ஓட்டம் – ‘அப்பா… மகன்… தம்பி’ புஷ் குடும்பம்
ஆடவர் ஓட்டம் – ‘நாடு விட்டு நாடு ஓடும்’ ஓஸாமா பின் லேடன்
மகளிர் ஓட்டம் – ‘கணவன்களை ஓட்டும்’ எலிஸெபெத் டெய்லர்
உயரம் தாண்டுதல் – ‘எண்ணெய் விலைஏற்றும்’ பாறைநெய் நிறுவனங்கள்
ஆடவர் வட்டு எறிதல் – ‘துணை ஜனாதிபதி’ டிக் சேனி
நீளம் தாண்டுதல் – ‘துணை ஜனாதிபதி வேட்பாளர்’ ஜான் எட்வர்ட்ஸ்
மகளிர் வட்டு எறிதல் – ‘கணக்கிடாமல் மனதின் வேகத்திற்கு பேசும்’ தெரஸா கெர்ரி
கத்திச்சண்டை – ‘ஒலிம்பிக்ஸில் ஃபென்ஸிங் கவனிப்பைப் பெறும்’ ரால்ஃப் நாடெர்
நீச்சல் – ‘எல்லாவிதமான நீச்சலுக்கும்’ டென்னிஸ் குசினிச்
ஒத்திசைந்த நீச்சல் – ‘அறிக்கைகளை வழிமொழியும்’ புஷ் + டோனி ப்ளேர்
நீர்குதிப்பு – ‘பல்டிகளை நன்கு சொல்லித்தரும்’ ஃப்ரான்ஸின் ஜாக் சிராக்
குண்டு எறிதல் – ‘திறமையாக தூக்கி வீசும்’ ஸ்விஃப்ட் படகுக்குழாம்
நீர் போலோ – கெர்ரி ஆதரவு போர்வீரர்கள்
தாளஜதி உடற்பயிற்சி – ‘எல்லாவிதமான பிரசினைக்கும் இரு கருத்து சொல்லும்’ கெர்ரி
உடற்பயிற்சி – அறுபது தாண்டினாலும் இந்தியனா ஜோன்ஸ்
துப்பாக்கிச் சுடுதல் – ‘டெர்மினேட்டர்’ ஆர்னால்ட் ஷ்வார்ஜெனகர்
ட்ரையத்லான் – ‘நடிகர் + இயக்குநர் + தயாரிப்பாளர்’ மெல் கிப்ஸன்
ஹாக்கி – ‘விவரணப்பட கோல் கொண்ட’ மைக்கேல் மூர்
டேக்வாண்டோ – ‘எப்பொழுது, எப்படி அடிப்பார்களோ’ செச்ன்யா விடுதலை விரும்பிகள்
குதிரையேற்றம் – ‘ஈராக்கை சமாளிக்கும்’ அமெரிக்கப்டை
வில்வித்தை – ‘எய்தவனை நோவதா… அம்பை தண்டிப்பதா’ அல் கொய்தா
டேபிள் டென்னிஸ் -‘இல்லினாயில் போட்டியிடும்’ பாரக் ஒபாமாவும் ஆலன் கீஸ்-உம்
பளு தூக்குதல் – ‘உலகத்தையே சமாளிக்கும்’ ஐ.நா. சபை
கூடைப்பந்து – ‘வோட்டு செல்லுமா செல்லாதா’ அமெரிக்க வாக்காளர்கள்
Like this:
Like Loading...
Related
Recent Comments