Archive

Archive for September 1, 2004

போஸ்

September 1, 2004 Leave a comment

ஸ்ரீகாந்த், ஸ்னேஹா
இசை: யுவன் ஷங்கர் ராஜா
இயக்குநர்: ‘தயா’ செந்தில் குமார்

1. நிஜமா நிஜமா3.5/4 – கேகே, ஷ்ரேயா கோஸல் – நா முத்துகுமார்
ரொம்ப பிடிச்சிருக்கு. அப்பா ‘பெரிய’ ராஜாவின் ஸ்டைலாகவும் இல்லாமல், அதிரடி வேகமாகவும் அதிராமல், பாடல் முழுக்க மேற்கோள் சொல்லக்கூடிய வரிகள், ரிகர்ஸிவ் ரிபீட் செய்யவைக்கிறது.

2. என்ன என்ன ஆச்சு1/4 – தேவன், மாதங்கி – பா விஜய்
முதலில் காதல் தேசத்தின் ‘ஹலோ டாக்டர்’. அடுத்து இந்தப் பாடல்… டாக்டர் என்று வந்தாலே, அந்தப் பாடல் எனக்கு அதிகம் ரசிக்காமல் போகிறதோ என்று பயமாக இருக்கிறது. (வசூல் ராஜாவை விட்டுவிடலாம்)

3. வைத்த கண்3.25/4 – மது பாலகிருஷ்ணன், ஸ்ரீவர்த்தினி – பா விஜய்
நியுவின் ‘சர்க்கரை இனிக்கிற சர்க்கரை’ மாதிரி இருக்கிறது என்று சிலர் சொல்லலாம். ஆனால், அதை விட ஆர்வமான ஆரம்பம் + பெட்டர் ப்ரெஸெண்டேஷன். ஆண் குரலுக்கு மீண்டும் ‘நிஜமா நிஜமா’ கேகே –> ஸ்ரீகாந்த் ஆகியிருக்கலாம். பா விஜய்-க்கு யாராவது ஆக்ஸிஜன் கொடுப்பது அவசியம். ரீங்காரமிடும் இசை, கனவுலக ஆடைகள் என்று மின்னப்போவதில், பாடல் வரிகள் மட்டும் இளிக்கிறது.

4. டோலி டோலி2.5/4 – ஷாலினி சிங் – தாமரை
மாதவனுக்கு ‘டோல் டோல்’; ‘டோலி டோலி’ ஸ்னேஹா அறிமுகப் பாடலாக இருக்கும்.

5. பொம்மலாட்டம்2.75/4 – கார்த்திக், சித்ரா சிவராமன் – பா விஜய்
ஏட்டிக்கு போட்டி டப்பாங்குத்து டூயட் இல்லாத காஸெட்டா? ஆனால், பிசாசு, ராட்சஸி எல்லாம இல்லமல் ஸ்னேஹாவின் சுங்கிடிச் சேலையும், ஸ்ரீகாந்த்தின் தார்ப்பாய்ச்சி வேஷ்டியும் செய்யும் சில்மிஷடத்துடன் கவரும்.

நன்றி: RAAGA – Bose – Tamil Movie Songs

Categories: Uncategorized

பத்துப் பாடல்கள்

September 1, 2004 11 comments

நான் அடிக்கடி கேட்ட தத்துவ/சோகப் புலம்பல்களில் இருந்து பத்து பாடல் வரிகள். இவற்றை விட புகழ்பெற்ற பாடல்கள் இருந்தும், போன தடவையே, மக்கள் அனைவரும் ஊதித் தள்ளியதால், 6,7,9 ஆகியவை தனியார் தொலைக்காட்சியின் ஆதிக்கம் ஆரம்பித்தபிறகு வந்த படங்களிலிருந்து வந்திருக்கிறது!

———————————————

1. ஆறு கரையில் அடங்கி நடந்திடில் காடு வளம் பெறலாம்…
…பாதை தவறிய கால்கள் விரும்பிய ஊர் சென்று சேர்வதில்லை…

2. மரணத்தில் இல்லாத துன்பம் உன் கண்ணீரில் வந்ததம்மா…
…கண்ணே நீ வாடாத நந்தவனம்
கண்ணீரைத் தாங்காது இந்த மனம்

3. நேற்று இவன் ஏணி
இன்று இவன் ஞானி
ஆளைக் கரை சேர்த்து
ஆடும் இந்தத் தோணி

4. முன்னாடி வாழ்க்கை
கல்லு பட்ட கண்ணாடி போல
என் பொண்டாட்டி வாழ்க்கை
முள்ளுமேல பட்டாடை போல…

5. ராதையோடு ஆசைக் கண்ணன் பேசக் கூடாதோ…

6. வான்மழையில்தான் நனைந்தால்
பால்நிலவும் கரைந்திடுமா
தீயினிலே நீ இருந்தால்
நிலவொளிதான் சுகம் தருமா

7. உன் கைகள் என் பேனா துடைக்கின்ற கைகுட்டை
நீ தொட்ட அடையாளம் அழிக்காது என் சட்டை

8. புள்ளி வச்சு கோலம்தான் போட்டது அந்த சாமீ
கோலங்கள மீறித்தான் ஆடுது இந்த பூமி
…பூவெல்லாம் சாமிதான்
நாமெல்லாம் நாரு

9. சரணம் 1: உன் பேரை நான் எழுதி
என்னை நான் ரசித்தேன்
சரணம் 2: கூந்தலில் சூடினாய்
வாடுமுன் வீசினாய்
அடீ… காதல் பூவைப் போன்றதுதானா

10. ஒரு ராத்திரி
ஒரு காதலி
விளையாடத்தான் போதுமா?
ஒரு சூரியன்
பல தாமரை
உறவாடினால் பாவமா?

—————————————

Categories: Uncategorized