Archive

Archive for September 15, 2004

நெட் வினாடி வினா

September 15, 2004 Leave a comment


இந்தக் கேள்விகள் அனைத்திற்கும் வலைப் பக்கத்தை விடையாகத் தரவேண்டும். அனைத்து செய்திகளும், தகவல்களும், படைப்புகளும், இணையத்தில் இருக்கிறது. சில தமிழ் வலையிதழ்கள்; சிலது ஆங்கில வலைப்பதிவுகள்; சில பின்னூட்டங்கள்; நிகழ்ச்சி நிரல்கள்; செய்திகள்… இன்ன பிற. கூகிள், அனுமானம், கேள்விஞானம், என பலவற்றையும் பயன்படுத்தவும்!


1. தோடி திரைப்படப் பாடல்கள்

* என்னைப்போல் பெண்ணல்லவோ – வணங்காமுடி
* கங்கைக் கரை மன்னனடி – வருஷம் 16
* இசைக் கேட்க எழுந்தோடி (ஒரு நாள் போதுமா) – திருவிளையாடல்

தேவை: சுட்டி

2. பெண்களுக்கு பத்து துப்புகள்
For knowing what men want: Food, Sex and Silence. Feed them, f%&! them and shut the f%&! up (Courtesy: Stand-up comedy of Chris Rock). I know! They will always be a work in progress!

தேவை: வலைப்பதிவு

3. கடவுள் இருக்கிறாரா? மகிழ்ச்சி என்றால் என்ன? வாழ்க்கையின் அர்த்தம்? தவிர்க்கவியலாத மரணத்தையும் துன்பத்தையும் ஏன்/எப்படி சகிப்பது? காதலுக்கும் காமத்துக்கும் இடையே உள்ள போராட்டத்தைத் தவிர்ப்பது எப்படி? கெட்டவை என்று ஏதாவது உண்டா? – சொல்லப்போகிறவர்கள் சி.எஸ். லூயி-யும் சிக்மண்ட் ஃப்ராயுடும்

தேவை: தொலைக்காட்சி

4. இந்த வருடம் அர்ஜுனா விருது பெறும் கிரிக்கெட் வீரர்கள் யார்?

தேவை: பெயர்(கள்)

5. Jew என்று தேடினால் மட்டும் டிஸ்க்ளெய்மர் போடும் தேடி எது? ஏன்?

தேவை: சுட்டி

6. கொள்ளிடம், அம்மா, உள்ளத்து ஓசை – இடையே உள்ள ஒற்றுமை என்ன?

தேவை: சுட்டி + காரணம்

7. எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய ‘உலக சினிமா” என்ற 750 பக்கங்கள் கொண்ட புத்தகத்தை, ‘கனவுப்பட்டறை’ வெளியிடுகிறது. உலகின் சிறந்த 100 படங்கள், 50 சிறந்த இயக்குநர்கள், 25 சிறந்த இயக்குநர்களின் நேர்காணல்கள், திரைப்பட வரலாறு அனைத்தும் கொண்ட தொகுப்பு இது.

தேவை: பத்திரிகை

8. கூகிளை யாஹூ நெருங்குகிறது என்கிறார் இவர். www, com என்று தேடியதால் அவ்வாறு சொன்னதாக சொல்கிறார்.

தேவை: ஆங்கில வலைப்பதிவு சுட்டி

9. நாகாலாந்து குறித்து: National Socialist Council

தேவை: பின்னூட்டத்தின் சுட்டி

10. குமார்மூர்த்தி எழுதிய ‘சப்பாத்து” கதையை பா.அ.ஜெயகரன் நாடகமாகவும் கனடாவில் மேடையேற்றினார். நானும் அதைப்பார்த்திருக்கின்றேன். மறைந்த குமார்மூர்த்தி எனது நண்பனும் கூட. அவருடைய ‘சப்பாத்து” கதை ஒரு வயது வந்த இளைஞன் தனது காலுக்குப் பொருத்தமாக சப்பாத்து ஒன்றை வாங்குவதற்காக கனடாவில் கடைகடையாக ஏறி இறங்கி தேடி வாங்கி கடைசியாக கோவிலில் தொலைத்து விடுவதாக அமைத்திருக்கின்றார். எனது சப்பாத்துக் கதை எனது குடும்பத்தில் எனது அக்காவின் மகன் ஆசையாக ‘நைக்கி’ சப்பாத்து தனது பிறந்த நாளிற்கு வாங்கி முதல் நாள் பிள்ளையார் பால் குடிக்கின்றார் பார்க்க வா என்று நண்பர்கள் அழைத்துச் சென்று பறிகொடுத்தது. இரண்டிலும் சாயல் இருக்கின்றது. அண்மையில் இலங்கையில் எடுக்கப்பட்ட ‘செருப்பு” என்ற குறுந்திரைப்படத்திலும் எனது சப்பாத்தில் வருவது போல் ஒரே சாயலான காட்சி- அதாவது பிள்ளை சிறுகச் சிறுகச் சேர்த்த பணத்தை தாயார் தனது தேவைக்காக எடுப்பது போல், வந்திருந்தது.. அப்போது அந்தத் திரைப்படத்தைப் பார்த்த எனது நண்பன் கூறினார் சுமதி…..இந்த ‘செருப்பு” திரைப்படத்தைப் பார்த்து விட்டு சுமதி ரூபன்.. செருப்பைக் களவு எடுத்து விட்டார் என்று கூறினாலும் கூறுவார்கள் என்று. அதே வேளை இலங்கையில் ஒரே நேரத்தில் ஒரே கருவைக் கொண்ட செருப்பு, சைக்கிள் எனும் இரு குறுந்திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. எனது குறுந்திரைப்படங்களான ‘இனி”, ‘மனுஷி”, ‘உஷ்” போன்றவை பேசப்பட்ட அளவிற்கு ‘சப்பாத்து” பேசப்படவில்லை. அதன் கரு ஆழமற்றது என்று தெரிந்தும் எனது பிள்ளைகளிற்காக அதனைச் செய்தேன். மூன்று தரமான குறுந்திரைப்படங்களைத் தரும் திறமைகொண்ட சுமதி ரூபன் சப்பாத்து போன்ற ஒரு கருவைக் களவாட வேண்டிய அவசியமில்லை என்றே நம்புகின்றேன்.
சுமதி ரூபன்

தேவை: சுட்டி

நன்றி!

Categories: Uncategorized