Archive
Archive for October 4, 2004
தீம்தரிகிட
October 4, 2004
Leave a comment
பார்வை – பொன். குமார்
கதவு எடுத்து வைக்க
சுமங்கலி
கல் எடுத்துக் கொடுக்க
கைம்பெண்
கல்லிலேயே நிற்கிறது
கட்டடம்
உள்ளே… வெளியே… – பத்மபாரதி
என்றைக்கும்
அதிர்வூட்டுகிற குழப்பமாக
இதுதான் இருக்கிறது –
ஒவ்வொருவரிடமும்
பிறிதொருவர் பற்றிய
வேறுவிதமான கருத்துகள்
பதுங்கிக் கிடக்கின்றன.
மனிதன் பதில்கள்
நேர்மையானவர்களால் தங்களுக்கு எதிராக விமர்சனம் என்ற பெயரில் அவதூறு செய்வதை நிச்சயம் தாங்கிக் கொள்ள முடியாது. நேர்மையான விமர்சனங்கள் அவர்களை நெகிழ வைத்துவிடும். அயோக்கியர்களால் தங்களுக்கு எதிரான விமர்சனங்களை தாங்கிக் கொள்ள முடியாமல் அவற்றை அவதூறு என்றே சித்தரிக்க முயற்சிப்பார்கள்.
—-
கேள்வி: திருநாவுக்கரசர் ம.பி. எம்பியான பிறகு குர்தா பைஜாமா அணியத் தொடங்கியிருப்பது வரவேற்கத் தக்கதுதானா?
வெளியான இதழ்: தீம்தரிகிட (ஆக. 1-15, 2004)
Categories: Uncategorized
Recent Comments