Archive
Archive for October 14, 2004
மூன்று தகண்கள் – சொ. மணியன்
October 14, 2004
3 comments
சச்சினும் கங்குலியும், சேவாகும் லஷ்மணனும்
கச்சிதமாய் ஆடுகின்ற காய்ஃபும் விழுந்துவிட்டார்
மிச்சமுள்ள எல்லோரும் மீளாத் துயில்கொண்டார்
இச்சகத்தில் நாம்ஜெயிப்ப(து) என்று ?
பகட்டு, அலட்டலுக்குப் பேர்போன பையா,
சிகரெட்டின் தீப்பிழம்பில் சிக்கிச் சிதைந்து,
சகமனிதர் எல்லோரின் சங்கடத்தைச் சேர்த்தாய்,
மிகமோசம் உன்வாழ்வு போ !
மதுவென்ற மாயை மயக்கத்தில் வீழ்ந்து
இதுவல்ல வாழ்க்கை எனப்புரியா காலம்,
அதுகடந்து இன்று அழுதென்ன லாபம் ?
புதுசாய்ப் பிறப்பெடுப்போம் வா.
- தளை தட்டினால் யாராச்சும் சொல்லுங்க
- எவராவது எசப்பாட்டுப் போடப் போறீங்களா?
Categories: Uncategorized
நவராத்திரி நினைவு
October 14, 2004
Leave a comment
சுண்டல்
1. பயத்தம்பருப்பு சுண்டல்
2. மொச்சை சுண்டல்
3. பட்டாணி சுண்டல்
4. கொண்டைக்கடலை (Lobia) சுண்டல் (சரஸ்வதி பூஜை)
5. (காராமணி) பயறு சுண்டல்
6. கொண்டைக்கடலை (சென்னா) சுண்டல்
7. எள் சுண்டல் (சனி)
8. புட்டு
9. வேர்க்கடலை
Categories: Uncategorized
Recent Comments