Archive

Archive for October 18, 2004

ஈசனின் திருத்தலங்கள்!தேவாரத் திருவுலா!

October 18, 2004 Leave a comment

Welcome to Sakthivikatan.com
விண்முட்டும் கோபுரங்கள், விரிந்து பரந்த திருக்கோயில்கள்.. இவையே பாரதத்தின் பழைமைக்கும் பெருமைக்கும் சாட்சி சொல்பவை. சமுதாயமாகக் கூடிவாழும் வாழ்க்கைக்கும் ஆதாரமாக இருப்பவை. அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்துள்ள ஆண்டவனை மனக்கண்ணால் கண்டு பரவசப்பட்ட அடியார்கள் கூட, புறக்கண்களாலும் கண்டு தொழ கோயில் களைத் தேடித் தேடிச் சென்று பாடிப்பாடி பரவியுள்ளனர்.
திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் சுந்தரமூர்த்தி சுவாமிகளும். தேன்சொட்டும் தேவாரப் பாடல்களால் சிவப் பரம்பொருளைப் பாடிப் பரவியவர்கள். இவர்கள் பற்பல ஊர்களுக்கும் பயணம் செய்து, அற்புதத் தலங்கள் பலவற்றைத் தரிசனம் செய்தவர்கள். தங்களோடு அடியவர்களையும் அழைத்துச் சென்று தரிசனம் செய்யவைத்தவர்கள். பல அரிய திருக்கோயில்களைத் தங்கள் திருவுலாவில் கண்டுபிடித்தும் கொடுத்தவர்கள் இப்பெருமக்கள்.
உடல் வருத்தத்தைப் பொருட் படுத்தாமல் பயணித்து, இறைவனை நாடிப்போய் அடியார்கள் பாடிப் பெருமிதப்பட்ட திருத் தலங்கள், ‘பாடல் பெற்ற தலங்கள்’ என்று அழைக்கப்படுகின்றன.
சைவத் திருமுறைகள் பன்னிரண்டாகத் தொகுக்கப் பட்டிருக்கின்றன. முதல் ஏழு திருமுறைகள் சம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர் ஆகியோர் பாடிய தேவாரப் பாடல்கள். தேவாரம் பாடிய இந்த மூவர் முதலிகள் சென்று வணங்கிப் பாடிய தலங்கள், ‘தேவாரத் திருத்தலங்கள்’ எனப்படுகின்றன. இவை மொத்தம் 274.
எட்டாவது திருமுறை திருவாசகம். இதில் மாணிக்கவாசகர் பல சிவத்தலங்களைப் பாடுகிறார். இவை ‘திருவாசகத் தலங்கள்’ எனப்படுகின்றன.
திருமாளிகைத் தேவர் உள்ளிட்ட ஒன்பது அடியார்கள் அருளிச் செய்தவை ஒன்பதாவது திருமுறை. இதில், தேவாரப்பாடல்களில் இடம்பெற்றுள்ள தலங்கள் தவிர, மேலும் ஏழு திருத்தலங்கள் பாடல்பெறுகின்றன. இவை ‘திருவிசைப்பாத் தலங்கள்’ என்று வழங்கப்படுகின்றன.
பத்தாவது திருமுறையான திருமந்திரம், தமிழ் வேதமாகவும் சித்தாந்த, வேதாந்த விளக்கமாகவும் உள்ளது. இதன் ஆசிரியர் திருமூலர். இவர் தலங்களுக்குச் சென்று, அங்குள்ள கோயில் திருமணியைத் தரிசித்து, தலத்திலுள்ள மூர்த்தியைப் பாடியவரில்லை.
திருஆலவாயுடையார் உள்ளிட்ட பதினோரு பெருமக்கள் அருளிய பதினோராவது திருமுறைப் பாடல்களிலும் பல திருத்தலங்கள் பாடப்பெறுகின்றன. காரைக்கால் அம்மையாரால் திருவாலங்காடு, சேரமான் பெருமாள் நாயனாரால் திருக்கயிலாயம் மற்றும் திருவாரூர், நக்கீரதேவ நாயனாரால் திருக்காளத்தி மற்றும் திருவலஞ்சுழி ஆகிய ஊர்கள் சிறப்பான பாடல்களைப் பெறுகின்றன.
இவை தவிர, ஐயடிகள் காடவர்கோன் ‘«க்ஷத்திர திருவெண்பா’ என்றே பல திருத்தலங்களின் பெருமைகளைப் பாடுகிறார். இந்தப் பதினோராவது திருமுறையில் இடம்பிடிக்கும் தலங்கள், தேவாரத் தலங்களாகவும் அமைகின்றன. பன்னிரண்டாவது திருமுறையாக அமைவது, சேக்கிழார் பெருமான் பாடி அருளிய ‘திருத்தொண்டர் புராணம்’ எனப்படும் ‘பெரிய புராணம்’ ஆகும்.
சிவனடியார்களின் வரலாறுகளைக் காவிய முறையில் கூறும் இந்த நூலில், அடியார்களின் வாழ்வோடு தொடர்புடைய ஊர்களின் பெயர்கள் குறிப்பிடப்படுகின்றன. இந்த ஊர்களும் தலங்களும் வரலாற்றுப் போக்கில் குறிக்கப்படுகின்றனவே அன்றி, தனியாகத் திருத்தலப் பதிகங்களோ, பாடல்களோ பெற வில்லை. அப்படி இடம்பெற வாய்ப்பும் இல்லை.
திருமுறைகளில் பாடல் பெறும் அனைத்துத் திருத்தலங்களும் ‘திருமுறைத் திருத்தலங்கள்’ என்று பெயர் பெற்றாலும் வழக்கத்தில், தேவாரத் திருத்தலங் களான 274 தலங்களே அவ்வாறு அழைக்கப்படுகின்றன.
சைவத் திருத்தலங்களில் ‘வைப்புத்தலங்கள்’ என்றும் ஒரு வகை உண்டு. தனக்கென்று தனியாக ஒரு பதிகம் இல்லாமல், வேறொரு தலத்தைப் பற்றிய பதிகத்திலோ, பாட்டிலோ ஒரு தலம் குறிப்புப் பெறும்போது, அது Ôவைப்புத் தலம்Õ எனப்படுகிறது.
காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கிஓதுவார்தமை நன்னெறிக்குய்ப்பது வேத நான்கினும் மெய்ப்பொருளாவது நாதன் நாமம் நமச்சிவாயவே..
என்று நமசிவாயத் திருநாமத்தையே வாழ்வின் ஆதாரமாகக் கொண்டு அற்புதங்கள் பலவும் நிகழ்த்தி, சிவன் திருவருளைத் தாமும் பெற்று பிறருக்கும் பெற்றுத் தந்த திருஞானசம்பந்தர் மற்றும் அப்பர், சுந்தரர் ஆகிய மூவரும் தேவார முதலிகள் என்றும் சொல்லப்படுவதுண்டு.
பல தலங்களைத் தொழுது நெகிழ்ந்து பாடிய இவர்கள், பல தலங்களில் இறைவனையே நெகிழச் செய்தவர்கள். தலங்களைத் தேடி இவர்கள் போனதும் உண்டு.. இந்த அடியார்கள் வரவேண்டும் என்று இறைவனே நாடிக் காத்திருந்ததும் உண்டு. ஏன், ஆண்டவனே அழைத்துப் போனதும் உண்டு!
தேவாரத் திருத்தலங்கள் யாவும் ஆண்டவன் அருளும் அடியார் பெருமையும் கலந்தவை. Ôசிவப்பரம்பொருளை வணங்கும் முன்னர் சிவனடியார்களை வணங்கவேண்டும்Õ என்பது வழிபாட்டு விதி. ஆண்டவனேகூட, அந்த அடியார் களின் உள்ளங்களில்தான் கோயில்கொள்கிறார்.
உள்ளம் பெரும் கோயி லாகக் கொண்ட உன்னதத் தொண்டராம் சம்பந்தரும் நாவுக்கரசரும் சுந்தரரும் வழிபட்ட தலங்கள் சொல்லச் சொல்லத் தீராத மதிப்புக் கொண்டவை அல்லவா..! அங்கெல்லாம் நாமும் பயணிப்போமா..?
மூவர் முதலிகள் வழிவகுக் கின்றனர். கரம்பிடித்து அழைத்துச் செல்ல, தேவாரப் பாடல்கள் காத்திருக்கின்றன. வாழ்த்தும் வாயோடும் நினைவகலா நெஞ்சோடும் வணங்கும் தலையோடும் ஈசன் எந்தை இணையடித் திருவுலா…
தொடங்கலாமா..?
‘‘ஐயனே..!’’‘‘ஐயனே.. இறைவா..!’’ ‘‘முக்கண் பரமனே! என்னரும் நாதரே..!’’ ‘‘ஹ§ம்.. என்ன கூப்பிட் டாலும் காதில் விழாதே..!’’ ?பார்வதிதேவி பெருமூச் செறிந்தாள். சிறிது நேரம் கழிந்தது.‘‘என்ன பார்வதி, அழைத் தாயோ..?’’ சிவபெருமான் கேட்டார்.
‘‘ஆம் ஐயனே! பலமுறை கூப்பிட்டுப் பார்த்தேன். ஆனால், நீங்கள் ஏதோவோர் உலகத்தில் இருந்தீர்கள்..’’
‘‘என்ன செய்ய பரமேஸ்வரி? தேவாரப் பாடல் களைக் கேட்டுக்கொண்டிருந்தேன். பூலோகத்தில் ஓர் ஓதுவார், உள்ளம் கனியப் பாடிக்கொண்டிருந்தார். தேவாரப் பாடல்களைக் கேட்டால், எனக்கு மற்றதெல்லாம் மறந்துபோய்விடுமே…’’
‘‘புரிகிறது பரமனே… சம்பந்தப் பிள்ளையும் சுந்தரனும் பாடும்போதே, நீங்கள் பெண்டாட்டி, பிள்ளையைக்கூட மறந்துவிடுவீர்களே! ஒரு சந்தேகம் ஐயனே.. இப்போது இருபத்தோராம் நூற்றாண்டு. சம்பந்தரும் நாவுக்கரசரும் சுந்தரரும்தான் பூவுலகத்தில் இல்லையே.. இன்னமும் உங்களுக்குத் தேவார மயக்கம் தீரவில்லையா?’’
‘‘ஏதேது, நூற்றாண்டுக் கணக்கெல்லாம் பேச ஆரம்பித்துவிட்டாயே பரமேஸ்வரி… எத்தனை ஆண்டுகள் ஆனாலென்ன அம்பிகையே.. தேவாரம் தேவாரம்தான்! ஒவ்வொரு கோயிலிலும் நாம் உலாவரும்போது, அந்தந்தக் கற்சுவர்களில்கூடத் தேவார எதிரொலி கேட்பதை எத்தனை முறை நானும் நீயும் ரசித்திருக்கிறோம்..!’’
‘‘நாம் ரசிப்பதென்ன.. நம் செல்வ மகன் விநாயகன் அதைக் கேட்டு, எத்தனை முறை நடனமே ஆடியிருக்கிறான்..?’’
‘‘எவ்வளவு அற்புதமான பாடல்கள்! அழகான தமிழ், அளவான சொற்கள்… என்ன ஆனந்தமான அனுபவம்..!’’
திடீரென்று பார்வதிதேவி சிரித்தாள்.
‘‘என்ன தேவி?’’
‘‘ஒன்றுமில்லை.. கேட்டுக் கேட்டுப் பாடல்களை வாங்கினீர்களே! அதை நினைத்தேன்…’’
‘‘மழபாடிக்கு சுந்தரனை வரவழைத்ததைச் சொல்கிறாயா? மழபாடியை மறந்து, ஆலம்பொழிலிலேயே தங்கிவிட்டான் அவன். அதுதான் அவனுக்கு நினைவுபடுத்தி வரச் சொன்னேன்!’’
‘‘மழபாடிக்கு வந்ததும் எப்படியெல்லாம் பாடினான் சுந்தரன்! Ôமறந்துவிட மாட்டேன்Õ என்று மறைமுகமாகச் சொல்ல, ‘இனி யாரை நினைக்கேனே..’ என்று வேறு பாடினான்..’’
‘‘எங்கே, எங்கே.. உமா, இன்னொரு முறை சொல்லு.. தேவார வரிகளை உன் வாயால் கேட்பது இன்னும் சுகமாக இருக்கிறது…’’
உமாதேவியார் முழுப்பாடலையும் இசையுடன் பாடுகிறார்?
பொன்னார் மேனியனே புலித் தோலை அரைக்கசைத்துமின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை அணிந்தவனே மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே அன்னேயுன்னையல்லால் இனி யாரை நினைக்கேனே!’
தலையாட்டி ஆனந்தமாக ரசிக்கிறார் சிவபெருமான்.
பார்வதியம்மை பாடிக்கொண்டிருக்க.. அந்த நேரம் உள்ளே வந்த விநாயகரும் முருகனும்கூட மெய்ம்மறந்து நின்றார்கள்.
‘‘அப்பாவுக்கு தேவாரம் என்றால் மிகவும் பிடிக்கும்..’’ முருகப்பெருமான்.
‘‘அப்பாவுக்கென்ன.. நம் அனைவருக்குமே மிகவும் இஷ்டமாயிற்றே! இந்த அகிலம் முழுமைக்குமே தேவாரம் பிடித்தமானதாயிற்றே..!’’
‘‘தேவாரப் பாடல்களை அப்பா கேட்டு வாங்கியிருக்கிறார். ஞானசம்பந்தரின் தேவாரத்தை மேலும்மேலும் கேட்டு ரசிப்பதற்காகவே, அவருக்குத் தங்கத் தாளம் தந்தார். நாவுக்கரசரின் பாடல்களைக் கேட்பதற்காக, வேதாரண்யத்தில் கோயில் கதவுகளைத் திறக்காமல் தாமதப்படுத்தினார். பாச்சிலாசிரமத்தில் சுந்தரர் திட்டியதையும் கேட்டு ஆனந்தித்தார்!’’ என்று விளக்கமே கொடுத்தார் விநாயகர்.
‘‘என்ன அண்ணா, திருவையாற்றில் சுந்தரரை ஓலமிட வைத்து, உங்களை மறுஓலம் கொடுக்கச் சொன்னாரே.. எல்லாம் பாட்டுக் கேட்கும் பரம ஆசையில்தானே..!’’ ?புன்னகையோடு கேட்டான் முருகன்.
பல திருத்தலங்களில் இருக்கும் திருக்கோயில்களுக்கும் சென்று இறைவனை வழிபட்டனர் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் மற்றும் சுந்தரமூர்த்தி சுவாமிகள் ஆகியோர். இவர்களின் தேவாரத்தைப் பற்றி சிவபெருமானே சொன்னதாக ஒரு பொன்மொழி உண்டு.
திருஞானசம்பந்தர், ‘தமிழ்ஞானசம்பந்தன்’ என்று தன்னை முன்னிறுத்திப் பாடுவார். நாவுக்கரசரோ, சிவனைப் பாடி, தான் கரைந்துபோவார். சுந்தரரோ,?எந்தத் திருத்தலத்துக்குப் போனா லும் பாட்டுப் பாடுவாரோ, இல்லையோ.. பொன், பொருள் கேட்டுப் பாடுவார்!
இவற்றையெல்லாம் வைத்து சிவபெருமான் சொன்னாராம்? ‘‘ஞானசம்பந்தன் தன்னைப் பாடினான்; நாவுக்கரசன் என்னைப் பாடினான்; சுந்தரனோ பொன்னைப் பாடினான்!’’

Categories: Uncategorized

Sakthivikatan.com

October 18, 2004 2 comments

Sakthivikatan.com

வேதங்கள் சொல்லும் வாழ்க்கை ரகசியம்! சௌளகர்மா சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்
தொடர்ச்சி…
‘கைகால் ஆகியவற்றைப் போல சிகையும் உடல் உறுப்புகளில் ஒன்று’ என்கிறது தர்ம சாஸ்திரம். புராணக் கதை ஒன்று கேள்விப்பட்டிருப்பீர்கள். பஸ்மாசுரன் என்கிற அரக்கன், பரமேஸ்வரனை நோக்கி தவம் செய்கிறான். நேரில் தோன்றிய ஈசனிடம், ‘‘நான் யார் தலையில் தொட்டாலும் அவர்கள் சாம்பலாகி விடவேண்டும்!’’ என்று வரம் கேட்டான். ஈசனும் அவன் கேட்ட வரத்தைக் கொடுத்தார். சும்மா போனானா பஸ்மாசுரன்? ‘‘நீ கொடுத்த வரம் உண்மைதானா என்று சோதித்துப் பார்க்க வேண்டும், எங்கே உன் தலையைக் காட்டு…’’ என்று ஆரம்பித்துவிட்டான். ஓடி ஓடிப் பார்த்தும் முடியாமல் விஷ்ணுவைக் கூப்பிட்டார் சிவன். அழகிய மோகினி ரூபத்தில் வந்த விஷ்ணுவைப் பார்த்து மயங்கினான் பஸ்மாசுரன். தன்னை மணம் செய்துகொள்ளுமாறு வேண்டினான். ‘‘சரி, உன்னைத் திருமணம் செய்துகொள்கிறேன். அதற்கு முன் நீ ஸ்நானம் செய்துவிட்டு, உன் உடல் எல்லாம் கைகளால் தொடவேண்டும்’’ என்கிறாள் மோகினி. மோகமயக்கத்தில்இருந்த அரக்கனும் அவள் சொன்ன படியே செய்தான். முதலில் தன் தலைமுடியில் கைவைத்தான். எரிந்து சாம்பலாகிப் போனான். உடலைத் தொடு என்கிறபோது சிகையைத் தொட்டது ஏன்? அதுவும் உடல் உறுப்புகளில் ஒன்று என்பதால்தான் இப்படி.
ஆதி சங்கர பகவத் பாதாள், அம்பாளை வணங்கும்போது கேசத்திலிருந்துதான் தன் ஸ்லோகத்தை ஆரம்பிக்கிறார். அம்பாளுக்கு அராளகேசி என்றே ஒரு பெயர் உண்டு.
மொட்டை அடித்துக் கொண்டு ஏதாவது காரியம் செய்தால் அது உசத்தி இல்லை. மொட்டை அடித்துக்கொண்டவரை உடல் ஊனமுற்றோர் என்கிற கோணத்தில்தான் தர்ம சாஸ்திரம் பார்க்கிறது. குளிக்கும்போது கேசம் இருக்கவேண்டும். யாருக்காவது கொடை கொடுக்கும்போது, பகவானின் நாமத்தை ஜெபிக்கும்போது, வேள்வியில் \ ஆகுதியில் பொருட் களை இடும்போது, சந்தியாகால வழிபாட்டின்போது… இப்படி எல்லா நேரத்திலும் சிகை இருக்கவேண்டும் என்று விதி போடுகிறது தர்ம சாஸ்திரம்.
ஸ்நானே தானே ஜெபே ஹோமே சந்த்யாயாம் தேவதார்ச்சனே சிகா க்ரந்த்யம் சதா குர்யாத் இதி ஏதது மனுரப்ரவீர்…
கேசம்ஓர் உடல் உறுப்பு என்கிறபோது, மொட்டை யடித்துக்கொண்டால் ஓர் உறுப்பு குறைந்துவிட்டது என்று பொருள். அது அங்கஹீனம்.
ஒரு தேவதையின் நாமத்தை ஜெபிப்பதற்கு முன்னதாக அந்த தேவதை நம் உடலுக்குள் வந்து சேர்வதாக பாவித்துக்கொள்கிறோம். அப்படி அந்த தேவதை நம் உடலுக்குள் வரவேண்டுமானால் நம் உடலெங்கும் நம் கையால் தொட்டுக்கொள்ள வேண்டும். அப்படித் தொடுகிறபோது கேசத்திலும் தொடவேண்டும் என்று கட்டளை இடுகிறது தந்திர சாஸ்திரம். கேசத்திலும் அந்த தேவதை வந்து இறங்கி நமக்கு நன்மை செய்கிறது. அப்போதுதான் நமக்கு முழுமையான பலன் கிட்டுகிறது.
அதனால்தான் பழைய காலத்தில் ஒரு சாரார் மாத்திரம்அல்லாமல் சமூகத்தின் அனைத்துத் தரப் பினரும் சிகை வளர்த்து, தங்கள் ஆத்மபலத்தையும் தன்னம்பிக்கையையும் வளர்த்துக்கொண்டார்கள்.
உயிரினங்கள் அனைத்திலும் ஆண்தான் அழகு. மனித இனத்தில் மட்டும் பெண் அழகாக இருக்கிறாள். கச்யப பிரஜாபதியின் பத்தினி அதிதி. இவளைப் பார்த்து பிரம்மா, ‘‘நீ சௌபாக்கியத்தை அனுபவிப்பதற் கும் ஆயுளோடு இருப்பதற்கும் பயன்படும் சிகையை நீக்காதே. அதை அழகுபடுத்திக்கொள்’’ என்கிறார். பெண்ணை முன்னிலைப்படுத்திச் சொன்னாலும் அனுபவமும் ஆயுளும் பெண்களுக்கு மட்டுமா? ஆண்களுக்கும்தானே… எனவே, ஆண்களும் சிகையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
முதல் அறுவைச் சிகிச்சை செய்த ஆயுர்வேத மருத்துவர் சுஸ்ருதர், உடலின் உள்புறத்தை எல்லாம் அறிந்தவர். அவர் சொல்கிறார்:
மஸ்தக அப்யந்தர உபநிஷ்டாத் சிராசந்தி கன்னிபாரம் ரோமாவர்த்த: அதிபதி: தப்ராபி சத்யோமரணம்
‘சகல நரம்புகளின் கூட்டம் உச்சிக்குள்ளிருந்து ஆரம்பிக்கிறது. அதற்கு ரோமாவர்த்தம் என்று பெயர். அங்கே அடிபட்டால் உடனே மரணம் ஏற்படும். அதைக் காப்பாற்றுவதற்காக சிகை வளர்த்துக்கொள்’ என்று வலியுறுத்துகிறார்.
லட்சண சாஸ்திரம் என்று ஒன்று உண்டு. மாடு வாங்குவதைப் பார்த்திருக்கலாம் நீங்கள். மாட்டில் இருக்கும் ரோமச் சுழியை வைத்து அதன் இயல்புகளையும் திறனையும் கணிப்பார்கள். அதுபோல் மனிதர்களின் வருங்காலத்தைக்கூட ரோமத்தை வைத்துக் கணிக்க முடியும். ரோமம் சுழித்து வளரக்கூடாது, நீளமாக, அதிகமாக இருக்க வேண்டும் என்பது லட்சண சாஸ்திரத்தின் உபதேசம்.
உடலின் மற்ற அங்கங்கள் குறிப்பிட்ட வயதுக்கு மேல்வளராது.சிகை மாத்திரம் கடைசிவரை வளரும். நாம் வெட்ட வெட்ட வளர்வதிலிருந்து, இயற்கையே நமக்குத் தேவையான பாதுகாப்புக்காக சிகையை வளரச்செய்கிறது என்று புரிந்துகொள்ள முடியும்.
இன்னொரு கோணம் \ மொட்டை அடித்துக் கொள்வது ஹிந்து தர்மத்தில் இல்லை. ஒரு பெரிய துக்கம் நடந்துவிட்டால் மொட்டையடித்துக் கொள்கிறான். சாதாரணமாக அடித்துக் கொள்வதில்லை.
ஆகாயகங்கை பூமிக்கு வந்தபோது அதைத் தாங்கிப் பிடித்தது சிவன் கேசம்.
லிங்கோற்பவர் விசுவரூபம் எடுத்து நிற்க, விஷ்ணு, அடியைப் பார்க்கப்போகிறார். பிரம்மா, தலை முடியும் ஓர் அங்கம் என்பதற்காக முடியைப் பார்க்கப் போகிறார்.
இப்படி பல கதைகள் புராணத்தில் உண்டு. பெண் என்றால் ‘ஸ்தன கேசவதீ நாரி’ என்று இலக்கணமே உண்டு. குழந்தை பிறக்கும்போதே கேசம் உண்டு. இதனால்தான் நம் அன்றாட வாழ்க்கையில் கேசம் இழையோடிக்கொண்டிருக்கிறது.
காலத்தை ஒட்டி சில மாறுபாடுகளை நாம் ஏற்றுக்கொண்டுவிட்டோம் என்றாலும்கூட அந்த மாறுதல்களால் நாம் என்ன இழந்தோம் என்று தெரிந்துவைத்திருக்க வேண்டாமா? கேசத்தை வைத்துக்கொண்டு அதில் மாறுதல் செய்யலாமே தவிர, கேசத்தையே மொத்தமாக எடுத்துவிடுவது புத்திசாலித்தனம் அல்ல.
ஒரு காலத்தில் பகவானுக்கு அர்ப்பணம் கொடுக் கிற பொருளாகவே கேசத்தை வைத்தோம். வேறு உறுப்புகளை பகவானுக்குக் காணிக்கை ஆக்க முடியாது. முடி என்கிற உறுப்பைக் கொடுத்தால் நமக்குப் பாதகம் இல்லை. மறுபடி வளர்ந்துவிடும். அர்ப்பணமாகக் கொடுக்கிற அளவு உசத்தியான பொருளைக் காப்பாற்றி வளர்ப்பதுதானே முறை? ரோமத்தை வாங்கிக்கொண்டு பகவான் நமக்கு அனுக்ரஹம் பண்ணுகிறார் என்பதுதானே நம் சம்பிரதாயம்?
முடி வளர்ப்பதை ஒரு சடங்காக இரண்டு, மூன்று வயதுக்கிடையில் ஒரு நாளில் குழந்தைக்கு அறிமுகப்படுத்தவேண்டும். இதை ஒரு சம்ஸ்காரமாக வைத்தார்கள். இதற்கு சௌளகர்மா என்று பெயர். முதலில் குழந்தையைக் குளிப்பாட்டி தூய்மைப்படுத்த வேண்டும். ஒரு சொம்பில் தண்ணீர் எடுத்து தேவதா சாந்நித்யத்தை அந்தத் தண்ணீரில் வரவழைத்து, குழந்தையை நீராட்டவேண்டும். இதனால் குழந்தையின் உடல் தூய்மையடைவதோடு, அந்த தேவதையின் அனுக்கிரகமும் குழந்தைக்கு வந்து சேர்கிறது. குழந்தைக்கு இனிப்பான ஆகாரம் குறைந்த அளவு கொடுக்கவேண்டும். தலையின் ஓரங்களில் நான்கு பக்கங்களிலும் சிறிதளவு கேசத்தை வெட்டி அழகுபடுத்த வேண்டும். இவையனைத்தையும் குழந்தையின் தகப்பனார்தான் செய்யவேண்டும். சிகையை வெட்டி அழகுபடுத்தும்போது,
யே நாவபத் சவிதா க்ஷ§ரேண ஸோமஸ்ய ராஞோ வருணஸ்ய வித்வான் தேன ப்ரும்மாணோ உபதேதம் அஸ்ய ஆயுஷ்மான் ஜரதஷ்டி: யதாஸத்
என்கிற மந்திரத்தைச் சொல்லவேண்டும். சிகையலங்காரம் செய்யப்படுபவனாகிய இந்தக் குழந்தை ஆயுள் பலத்தோடு இருக்கவேண்டும். கல்வி உள்ளிட்ட சகல சம்பத்துகளையும் பெற்று வாழ வேண்டும். சிந்தை தெளிவாக இருக்கவேண்டும். இந்திரியங்கள் எல்லாம் திறத்தோடு விளங்கவேண்டும். மற்றவர்களுக்கு வழிகாட்டியாக \ ஆதர்ஷ புருஷனாகத் திகழவேண்டும் என்கிற பிரார்த்தனைதான் இந்த மந்திரம். சௌளகர்மாவில் குழந்தைக்கு அருளும் தேவதையின் பெயர் சவிதா.
சௌளகர்மாவுக்கு அனைவரையும் அழைத்து அன்னதானம் செய்யவேண்டும். பக்கத்தில் இருக்கும் கோயிலுக்குக் குழந்தையை அழைத்துப்போய் நமஸ்காரம் பண்ணிவைக்க வேண்டும்.
ஆயுள்பலமும், கல்விச்சிறப்பும், சிறப்பான இந்திரியங்களும் ஒரு சாராருக்கு மட்டும் இருந்தால் போதுமா? எல்லாருக்கும் வேண்டாமா? எனவே அனைத்துப் பிரிவினரும் நன்றாக இருக்கவேண்டி சிகாலங்காரம் செய்துகொள்ள வேண்டும்.

Categories: Uncategorized

உபநயனம் — சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

October 18, 2004 Leave a comment

வேதங்கள் சொல்லும் வாழ்க்கை ரகசியம்!
கல்வி கற்க, மாணவனை ஆசிரியரிடம் அழைத்துச் செல்வது உபநயனம் என்று பார்த்தோம். கல்வி தந்து அறியாமையை அகற்றுபவர் _ குரு. ‘கு’ என்றால் அந்தகாரம். இருட்டு. அறியாமை என்கிற இருட்டு. ‘ரு’ என்றால் அதை அகற்றுபவர். அறியாமை என்கிற இருளில் இருந்து வெளிச்சத்துக்குக் கொண்டு வருபவர். ‘தமஸோமா ஜ்யோதிகமய’ என்கிற வேதவாக்கை ஆராயவேண்டும். ‘குசப்த: து அந்தகார: ஸ்யாத், ருசப்த: தன்னிவர்த்தக:’ என்பது ரிஷி வாக்கு.

மனிதனைக் கவ்வியிருக்கும் அறியாமையை அறவே அழிக்கும் திறன் குருவிடம் இருக்கிறது. அறிஞன் ஆகிவிட்டால் தன்னையும் உலகையும் புரிந்துகொள்வான். பிறர் உதவியின்றித் தனது முழுமையில் மகிழ்ச்சி காண்பான்.
பறவை இனங்களிலிருந்தும் விலங்குகளிலிருந்தும் மனிதனைப் பிரித்து, உயர்த்திக் காட்டுவது கல்வி _ அதனால் விளைந்த அறிவு. எல்லோருக்கும் கல்வி வேண்டும். கல்வி கற்பவன் பூணூல் அணிந்துகொண்டு குருவிடம் செல்வான். ‘கல்வி கற்க வந்திருக்கும் மாணவன்’ என்பதை குரு தெரிந்துகொள்வார். அரசர்கள், வியாபாரிகள் போன்றவர்களுக்குப் பூணூல் இருக்கும்.

காலப்போக்கில் அது அலட்சியப்படுத்தப்பட்டாலும் கல்யாணத்துக்கு முன் பூணூல் போட்டுக்கொள்வதும் கல்யாணச் சடங்குகள் முடிந்ததும் அதைக் கழற்றிவிடுவதும் இன்றும் பலரால் கடைப்பிடிக்கப்படுகிறது. தெய்வ வடிவங்களுக்கும் நாம் பூணூல் போட்டு மகிழ்கிறோம். ஜீவராசிகளைப் படைக்கும் பிரம்மா பூணூலோடு காட்சியளிக்கிறார். ‘யக்ஞோபவீதம் பரமம் பவித்ரம் ப்ரஜாபதே: யத்ஸஹஜம் புரஸ்தாத்’ என்கிற வரியைக் கவனிக்கவும்.
கல்வி கற்க நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் தேவை. அதிக ஆயுள் இருப்பது பிரம்மாவுக்கு மட்டும்தான். பூணூல் அணிந்தால் ஆயுள், ஆரோக்கியம் இரண்டும் நிலைக்கும் என்பது வேதவாக்கு. ‘ஆயுஷ்யம் அக்ரயம்’ & என்பதைக் கவனிக்கவும். பிரம்மனைப் போல் ஆயுளும் ஆரோக்கியமும் பெற்றிட, கல்வி கற்கும் மாணவனுக்குப் பூணூலை சிபாரிசு செய்தார்கள் முனிவர்கள்.

குருவிடமிருந்து காதால் கேட்டுக் கல்வி கற்கவேண்டும். குரு சொல்லும் வார்த்தைகளின் உட்கருத்து, அதன் தரம், உயர்வு, பெருமை இவை அனைத்தையும் அவர் சொல்லும் பாணியிலிருந்து தெரிந்துகொள்ளவேண்டும். அப்போதுதான் தத்துவ விளக்கத்தின் தெளிவு புலப்படும். புத்தகம் பார்த்துக் கல்வி கற்பதில் இவை அனைத்தையும் இழக்க வாய்ப்புண்டு. தபால் கல்வியைவிட கல்லூரிக் கல்வி சிறந்தது என்பது எல்லோருக்கும் தெரியும். படித்ததைச் சேமிக்க வேண்டிய இடம் _ மஸ்திஷ்கம் (மூளை). அதில் பதிவு செய்துவிட்டால் என்றும் அழியாமல் இருக்கும். தேவைப்படும்போது ஞாபகத்துக்கு வரும். புத்தகமில்லாமல் எல்லாவற்றையும் காதால் கேட்டுத் தெரிந்துகொள்ளவேண்டும் என்ற எண்ணத்தில் மாணவனை குருவிடம் அனுப்பும் வழக்கத்தை ஏற்றுக்கொண்டார்கள்.

அறுவடையான பிறகு நெல்மணிகளைச் சேமித்து வைக்கோலை ஒதுக்கிவிடுவோம். அதுபோல் நூல்களில் இருக்கும் விஷயங்களை மூளையில் பதியவைத்து நூல்களை அகற்றிவிடவேண்டும் என்பதுதான் முனிவர்கள் சொல்வது. ஒன்று தெரிகிறது, எந்தக் கல்வியானாலும் எந்தத் தத்துவ விளக்கமானாலும் எதை நாம் புரிந்துகொள்ளவேண்டுமானாலும் அது நிரந்தரமாக நம்மிடம் நிலைத்திருக்கவேண்டுமானால், அதை மூளையில் பதியவைக்கவேண்டும் என்பதே கல்வியாகக் கருதப்பட்டது. வேறு பொருட்களை நம்பாமல் தன் மூளையை மட்டுமே நம்பும்படியான ஒரு சூழலை ஏற்படுத்திக்கொடுத்தார்கள்.

பிறர் சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல், நம் மூளைத் திறனால் ஆராய்ந்து ஏற்றுக்கொள்ள வேண்டும். காளிதாஸர் சொல்வார்:
புராண மித்யேவ ந ஸாது
ஸர்வம்
நசாபி காவ்யம் நவமி
த்யவத்யம்
ஸந்த பரீக்ஷ்ய அந்யதரத்
பஜந்தே
மூட: பரப்ரத்யய நேய புத்தி: ‘பழையது என்பதாலேயே எல்லாம் நல்லது என்று நினைக்காதே. புதியது என்பதாலேயே அது உபயோகப்படாது என்று தள்ளிவிடாதே. இரண்டையும் ஆராய்ந்து பார்த்து, எது நல்லதோ அதை எடுத்துக்கொள். இதை விட்டுவிட்டு யாரோ சொன்னார்கள் என்பதற்காக எதையும் ஆராயாமல் அப்படியே கடைப்பிடிப்பவன் முட்டாள்’ என்கிறார் காளிதாஸர்.

இந்த ஆராயும் தகுதியை வரவழைப்பதுதான் கல்வியின் நோக்கமாகக் கருதப்பட்டது. ஆகையால், காதால் கேட்டு மூளையில் வாங்கிக் கற்கவேண்டும் என்கிற அந்தக்காலக் கோட்பாடு எக்காலத்துக்கும் பொருந்துவது. தான் மட்டும் செம்மை பெறுவதாக இல்லாமல், தன்னைச் சுற்றி இருப்பவர்களையும் சமூகத்தையும் தனது அனுபவத்தால் செம்மைப்படுத்தி எல்லாரையும் வாழவைக்கும் அளவுக்கு கல்விக்குத் திறன் உண்டு. ஆகையால் சிறு வயதில் இருப்பவன் உபநயனம் என்கிற சடங்கோடு சேர்த்துக் கல்வி கற்க முயற்சிக்கவேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

ரகுவம்சம் என்ற காவியத்தில் அரச குலத்தினரின் நடைமுறைகளைப் பற்றி விளக்கும் காளிதாஸர்,
‘சைஸவே அப்யஸ்த
வித்யானாம்
யௌவனே விஷயைஷணா’
என்கிறார். ராஜவம்சத்தைச் சேர்ந்தவர்கள், எந்தக் கல்வியைக் கற்றால் வேறு எதையும் கற்கத் தேவை இல்லையோ, அந்த விதமான கல்வியைச் சிறுவயதிலேயே கற்கத் தொடங்கினார்கள் என்கிறார்.

ஆகையால் சிறுவயதிலேயே, தெளிவான, சந்தேகத்துக்கு இடமில்லாத, மூளையில் பதிவதான கல்வியை குருவின் கிரகத்தில் இருந்து கற்பது கடமைகளுள் ஒன்று என்பதால், அதை சம்ஸ்காரங்களுள் முக்கியமானதாக வைத்தார்கள். இப்படியான கல்வி கற்க உடலாரோக்கியம் மட்டும் போதாது. உள்ளத் தூய்மையும் வேண்டும். அவ்வளவு சிறு வயதில் உள்ளத் தூய்மை ஏற்படுத்துவது எப்படி? அவனது நடை, உடை, பாவனைகளை மாற்றி அவன் மனதில், ‘நாம் கல்வி கற்கச் செல்கிறோம். குருவிடம் நம்பிக்கை வைக்கவேண்டும். அவர் சொன்னதைக் கேட்கவேண்டும். அவர் சொல்லும் விஷயங்களை வாங்கிக்கொள்ளவேண்டும். அதை மனதில் பதியவைக்கவேண்டும். இவையனைத்தும் நம் கடமை’ என்கிற எண்ணத்தை அரும்பவைக்க இந்தச் சடங்கு மறைமுகமாக உதவுகிறது.

கல்வி, வாழ்க்கைக்குப் பயன்படுகிறது. ஆன்மிகத்துக்கும் பயன்படுகிறது. வாழ்க்கை, சுவைக்கப்பட்ட பிற்பாடு ஆன்மிக வழியில் திரும்ப அந்தக் கல்வியே வழிவகுக்கிறது. மனிதனாகப் பிறப்பெடுக்கும்போதே காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சரியம் இப்படி எதிரிடையான எண்ணங்கள் இருக்கும். ஸ்நேகம், கருணை, தயை, தாட்சண்யம், பரோபகாரம், அன்பு இந்த குணங்களும் கலந்தே மனதின் அடித்தளத்தில் நீறுபூத்த நெருப்பு மாதிரி இருக்கும். படிப்படியாக கெட்ட எண்ணங்களை அழித்து, மெள்ள மெள்ள நல்ல எண்ணங்களை வளர்த்துக்கொள்ள உதவி செய்வது சம்ஸ்காரம். தீய சிந்தனைகளைத் தலைதூக்க விடாமல் செய்யவேண்டும். நல்ல எண்ணம், தலைநிமிர்ந்து பிரகாசிக்க வாய்ப்பு ஏற்படுத்தித் தரவேண்டும். இவை இரண்டும்தான் சம்ஸ்காரத்தின் செயல்பாடு. வெளிப்படையான சில சட்டதிட்டங்கள், நியதிகளை ஏற்படுத்தி, அந்தச் சின்ன வயதில் படிப்பைத் தவிர அவன் மனம் வேறு எதிலுமே ஈடுபட வாய்ப்புத் தராமல், தாய்_ தந்தையை விட்டு வெளியே வந்து, குருதான் எல்லாமே என்கிற கட்டுப்பாட்டு உணர்வைத் தோற்றுவிப்பதற்கு உபநயன சம்ஸ்காரம் செய்யவேண்டி இருக்கிறது.

வேதத்தில் இருந்து தொடங்கி சாஸ்திரம், புராணம், இதிகாசம், நீதிநூல்கள் என்று சம்பிரதாயமாக வந்திருக்கிற எல்லா நூல்களையும் புரட்டிப் பார்த்தால் ஒன்று புலப்படும். படித்து முடிக்கையில் நமக்கு ஒரு தத்துவ விளக்கம் கிடைத்திருக்கும். ராமாயணம் படிக்கிறான் ஒருவன். என்ன தெரிந்துகொள்கிறான்? ராமனைப் போல வாழவேண்டும்; ராவணனைப் போல வாழக்கூடாது என்று உணர்கிறான். பாரதத்தைப் படிக்கிறான். அதில் என்ன கிடைக்கிறது? எங்கெல்லாம் தர்மம் இருக்கிறதோ அங்கெல்லாம் வெற்றி இருக்கிறது. எங்கே அதர்மம் இருக்கிறதோ அங்கே தோல்வி இருக்கிறது என்கிற தத்துவ விளக்கம் இவன் சிந்தையில் ஏறும்போது நல்ல எண்ணங்கள் ஏற்பட வழிகிடைக்கிறது.

‘ராமன் செய்ததை எல்லாம் செய். கிருஷ்ணன் சொன்னதை எல்லாம் செய். கிருஷ்ணன் செய்ததைச் செய்யாதே’ என்று ஒரு பழமொழியே சொல்வார்கள். மனதை அடக்கும்போது மகிழ்ச்சி கிடைக்கும் என்று புரியவைப்பது உபநயன சம்ஸ்காரம்.

Categories: Uncategorized

வேதங்கள் சொல்லும் வாழ்க்கை ரகசியம்!

October 18, 2004 Leave a comment

உபநயனம் – சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

ஐந்து வயதில் எழுத்து சொல்லிக் கொடுத்தோம். அது அட்சராப்யாசம். ஏழு வயதில் ஆரம்பிப்பது கல்வி. பரிணாம வளர்ச்சியில், தான் வாங்கிக்கொண்டதை மனதில் நிறுத்தி மறுபடி வெளியிடும் திறன் ஏழாம் வயதில்தான் வருகிறது. இதுவே உபநயன சம்ஸ்காரம் செய்ய ஏற்ற வயது.

‘கேட்பவற்றைக் கிரகித்து மனதில் நிறுத்தும் சக்தி அறுபது வயதுவரை இருக்கும்’ என்கிறது ஆயுர்வேதம். அறுபது வயதுக்குப் பிறகு இந்தச் சக்தி குறையத் தொடங்கும். ஒரு முதியவர், நாள் முழுக்கச் செய்தித் தாளைப் புரட்டிப் புரட்டிப் படித்துக் கொண்டே இருப்பார். ‘பேப்பரில் என்ன விசேஷம்?’ என்று கேட்டால் ‘பெரிசா ஒண்ணும் இல்லே…’ என்பார். அவ்வளவுதான் அவர் நினைவாற்றல்.

கர்ப்பகாலத்தையும் சேர்த்து எட்டாம் வயதில் உபநயனம் செய்விக்கவேண்டும் என்கிறார்கள். அதாவது, பிறந்து ஏழாவது வயதில். ஐந்து, ஆறு வயதுகளில் எழுத்து அறிமுகமாகிறது. ஏழாம் வயதில் இருந்து விசேஷமான கல்வியைக் கற்றுக்கொள்ளத் தொடங்கவேண்டும்.

பழைய காலத்தில் ஒரு நடைமுறை இருந்தது. குருகுல வாசம். குரு இருக்கும் இடத்தில் மாணவன் சென்று தங்கிக் கல்வி கற்பான். குரு தனிக் கவனம் செலுத்தி மாணவனுக்குக் கற்பிப்பார். மாணவனும் அதே கவனத்தோடு கற்றுக்கொள்வான்.

நமது தற்போதைய மேற்கத்தியக் கல்வி முறையில் ஓர் ஆசிரியர் பல மாணவர் களுக்குக் கற்பிப்பதால் எல்லா மாணவர்கள் மீதும் சமமான கவனம் செலுத்த முடியாமல் போகிறது. அதனால்தான் ஒரு மாணவன் நூறு மதிப்பெண்களும் இன்னொருவன் முப்பது மதிப்பெண்களும் வாங்க நேர்கிறது. இந்தக் குறை இருக்கக்கூடாது என்பதற்காகத் தான் நம் முன்னோர்கள் குருகுல வாசத்தைப் பின்பற்றினார்கள். குருவுடனான இந்த நேரடித் தொடர்பு மாணவனுக்கு உதவியாக இருக்கும் என்று கருதினார்கள்.

யார் யாருக்கு, எந்தக் கல்வி உகந்ததாக இருக்கிறதோ குருவானவர் அதைக் கற்பிப்பார். இதில் எந்தப் பாகுபாடும் கிடையாது. ராஜா மகனாக இருந்தாலும் சரி, சாதாரணக் குடிமகனாக இருந்தாலும் சரி… குருகுலத்தில் இருவரும் ஒன்றுதான். அங்கே ‘இவனுக்குக் கல்வி கற்றுக்கொடுப்பது என் கடமை!’ என்பதுதான் குருவின் எண்ணமாக இருக்கும். ‘இவரிடம் கல்வி பெறுவது என் உரிமை’ என்பதாக மாணவன் எண்ணுவான். இங்கே பணத்துக்கோ வேறு விஷயங்களுக்கோ சிந்தனை செல்வதில்லை. கிருஷ்ண பகவான் இளவரசனாக இருந்தாலும் சாந்தீபனி முனிவரின் ஆசிரமத்தில் குசேலனோடு சமமாக இருந்துதான் படித்தான்.

ராமன், தன் சகோதரர்களோடு குருகுல வாசம் செய்துதான் கல்வி பெற்றார். அவர் பெரிய ராஜாவின் பிள்ளை ஆயிற்றே… அவர் என்ன கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது? அவருக்கு ராஜ்யபாரத்தைச் சுமக்கிற கல்வி கொடுத்தார்கள். குதிரையேற, போர்புரிய, நிர்வாகம் செய்ய, ஆயுதங்கள் பிரயோகிக்கக் கற்றுக் கொடுத்தார்கள்.

இப்படியாக _ வியாபாரம், அன்றாட வாழ்க்கையைச் சிறப்பாக வாழ, தொழில் செய்ய, வேதக் கல்வி… என்று அவரவருக்கு உகந்த கல்வியை குருகுலத்தில் சொல்லித் தந்தார்கள். இதற்குத்தான் உபநயன சம்ஸ்காரம் என்று பெயர்.

கல்வி இல்லையென்றால், அவன் குருடன். அவனால் எந்தக் காரியத்தையும் ஒழுங்காகச் செய்ய முடியாது. ஒரு மனிதனுக்கு அடிப்படைத் தேவை \ கல்வி. அப்படி இவனைக் கல்வி கற்க அனுப்புவதை ஒரு சம்ஸ்காரமாகக் கடைப்பிடிக்கச் சொல்கிறது தர்மசாஸ்திரம்.

இந்த சம்ஸ்காரம் எவ்வளவு உயர்ந்ததென்று சொல்கிறேன். இந்த உலகில் நாம் பலரோடு சேர்ந்து வாழவேண்டியிருக்கிறது. நமது தேவைகளையெல்லாம் நிறைவேற்றிக்கொள்ள வேண்டியிருக் கிறது. இந்த வாழ்க்கை நமக்குச் சரியாகக் கிடைக்கவேண்டுமானால் அதற்கு வழிகாட்டியாக இருப்பது கல்விதான். அன்றாட வாழ்க்கையை எப்படி எதிர்கொள்வது, சிரமங்கள் ஏற்படும்போது அவற்றைத் தீர்ப்பது எப்படி என்கிற அறிவை நமக்கு ஊட்டுவது கல்வி. அதனால்தான் ‘கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு’ என்கிறோம்.

இந்த பூமி நமக்கு எவ்வளவு சுகத்தைக் கொடுக்கிறது..! இவ்வளவு சுகங்களையும் அனுபவிப்பவர்கள் மூன்று விதமானவர்கள். ஒருவன் சூரன். இன்னொருவன் கல்விமான். மற்றவன் ஊழியம் செய்பவன். சூரன் ராஜ்யத்தை ஆள வந்ததால் அனைத்தையும் அனுபவிக்கிறான். அவனுக்குச் ஊழியம் செய்பவனும் ‘காக்காய் பிடிப்பதன்’ மூலம் காரியங்களைச் சாதித்துக்கொள்கிறான். கல்விமானுக்கோ அவன் விரும்பியதெல்லாம் சிரமமில்லாமலேயே கிடைத்து விடுகிறது. இதைத்தான்&

ஸ்வர்ண புஷ்பாம் ப்ரதிவீம்
சின்வந்தி புருஷா: த்ரய:
சூரஸ்ய க்ருதவித்யஸ்ய
யஸ்ய ஜானாதி சேவிதும்

என்கிறது ஒரு ஸ்லோகம். ‘எந்தக் கல்வியைக் கற்றுக்கொண்டால், காலமாறுபாட்டிலும் அது உதவுகிறதோ அந்தக் கல்வியைக் கற்றுக்கொள்’ என்றார்கள். கொஞ்ச நாளுக்கு முன் பி.காம். படிப்புக்கு அலைந்தார்கள். அப்புறம் கம்ப்யூட்டர் வந்தது. அதையடுத்து மைக்ரோ பயாலஜி படித்தால்தான்ஆச்சு என்றானது. ஒன்று வரும்போது இன்னொன்றுக்கு மகத்துவம் குறைந்துவிடுகிறது. இந்தக் குறைபாடுஇல்லாமல், மாறும் காலத்துக்கு ஏற்ப மாறிக்கொள்ளும் கல்வியைக் கற்றுத் தருபவர் குரு. ‘உப’ என்றால் ஆசிரியரிடம்; ‘நயனம்’ என்பதற்கு கொண்டுவிடுதல் என்று பொருள்.

இப்படிப்பட்ட கல்விக்கு விடுவதற்கு முன் சில தகுதிகள் வேண்டும். மாணவனுக்கு விநயம் & பணிவு இருக்கவேண்டும். குரு சொல்வதைக் கேட்கவேண்டும். ‘வித்தையுள்ளவன் தூங்கான். விசாரமுள்ளவன் தூங்கான். அர்த்தமுள்ளவன் (பணமுள்ளவன்) தூங்கான். அனர்த்தமுள்ளவன் தூங்கான்’ என்று ஒரு பழமொழி உண்டு. வித்தை கற்றுக்கொள்ள விரும்புகிறவன் தூக்கத்தைக் குறைத்துக்கொள்ள வேண்டும். உனக்கு சுகம்தான் வேண்டும் என்றால் கல்வியை விட்டுவிடு. கல்வி வேண்டு மென்றால் சுகங்களை விட்டுக்கொடு. சுகத்தை நினைத்துக்கொண்டால் கல்வி வராது. கல்வியே கண்ணாக இருக்கும்போது சுகம் இருக்காது&

சுகார்த்தீசேத் தெதேத் வித்யாம்
வித்யார்த்தீசேத் தெதேத் சுகம்
சுகார்த்தீந: குதோ வித்யா
வித்யார்த்தீந: குதோ சுகம்

என்கிறது வேதம்.

கல்விக்குப் போகுமுன் எதைக் கட்டிக் கொடுத்தார்கள்? ரெண்டு பிஸ்கட், கொஞ்சம் பால், இடைவெளியில் தின்னச் சில பழத்துண்டுகள்… இவற்றைக் கட்டிக் கொடுக்கவில்லை. அவன் வாழ்நாள் முழுமைக்கும் தேவையான நல்ல குணங் களின் விதைகளைக் கட்டிக்கொடுக்கச் சொன்னார்கள். வெறுமனே சொல்லிக் கொடுக்காமல் உபநயன சம்ஸ்காரத்தின் மூலமாகத் தகுதியை ஊட்ட வேண்டுமென்றார்கள்.

முதலில் கற்றுக்கொள்ள வேண்டியது வேதம். ஏன் வேதம் கற்றுக்கொள்ள வேண்டும்? அந்தப் பெரும் பொக்கிஷத்தைக் காப்பாற்றி அடுத்த அடுத்த தலைமுறை களுக்கு வழங்க வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. அரசாங்கத்தை ஆளவிருப்பவன் ராஜ்ய பரிபாலனத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும். வியாபாரம் செய்ய விரும்புபவன் அதற்குத் தேவையானதைக் கற்றுக்கொள்ள வேண்டும்.

அன்றாட வாழ்க்கையில் வெற்றி பெறுவது மாத்திரம் அல்ல கல்வியின் நோக்கம். உள்ளத்தையும் அது பதப்படுத்தவேண்டும். மனிதராகப் பிறந்த நம்மை மோட்சப் பிராப்திவரை கொண்டுசெல்ல, ஆன்மிக முழுமையைக் கொடுக்க, துக்கமே இல்லாமல் ஆனந்தமாக வைத்திருக்க… எந்தக் கல்வி உதவுகிறதோ, அதுவே சிறந்த கல்வி! அறியாமையை அழித்து, தான் யார் என்பதை அறிவதற்குக் கல்வி உறுதுணையாக இருக்கவேண்டும்.

மனதைத் தூய்மை செய்வது சனாதனக் கல்வி. எளிய வாழ்க்கை மற்றும் உயர்ந்த சிந்தனையைத் தருவது அது. ஏனெனில், வேதம் ஒரு தனி மனிதனால் சொல்லப்பட்டதல்ல. நம் வாழ்க்கையைச் செம்மைப்படுத்திக்கொள்ள உதவும் வேதத்தை சேமித்துவைக்க, தேவைப்படுகிற நேரத்தில் எடுத்துக்கொடுக்க, அந்தத் தொகுப்பை நிரந்தரமாக வைக்க வேதக் கல்வி அவசியம். அதை வலியுறுத்துவதே உபநயன சம்ஸ்காரம்.

இதைப் பெரும்பாலும் ஒரு சாராரே மேற்கொண்டு வருகிறார்கள். ஆனால், உபநயன சம்ஸ்காரம் ஒரு சாராருக்கு மட்டுமல்ல.

கர்ப்பாஷ்டமேஷு ப்ராமண உபநயீத
கர்ப்பைகாதெசேஷு ராஜன்யம்
கர்ப்பத்வாத்யசேஷு வைஸ்யம்!
என்கிற ஸ்லோகத்திலிருந்து, இது ராஜாக்களுக்கும் வைஸ்யர்களுக்கும்கூட உண்டு என்று தெரிந்து கொள்ளலாம்.

ஒரு கல்யாணத்துக்குப் போகிறோம். நிகழ்ச்சி பலபேரின் ஒத்துழைப்போடு நடக்கிறது. உணவு வேளையில் ஒருவர் பாயசம் பரிமாறுகிறார். ஒருவர் தண்ணீர் எடுத்துவைக்கிறார். இன்னொருவர் ஊறுகாய் போடுகிறார். இவர்களில் பாயசம் போடுபவர்தான் உயர்ந்தவர்; ஊறுகாய் போடுபவர் சுமாரானவர்; தண்ணீர் எடுத்துவைப்பவர் தாழ்ந்தவர் என்று பாகுபாடு பார்க்கிறோமா? இல்லையே!

இன்னோர் உதாரணம்: ஒரு நிறுவனம் இருக்கிறது. அதில் எக்ஸிகியூட்டிவ் கமிட்டி, மார்க்கெட்டிங், அட்மினிஸ்ட்ரேஷன், லேபர் என்றெல்லாம் பிரிவுகள் இருக்கின்றன. இந்தத் துறைகளில் ஒன்று உயர்ந்தது, ஒன்று தாழ்ந்தது என்று சொல்ல முடியாது. உயரதிகாரி செய்வதைத் தொழிலாளியால் செய்யமுடியாது; தொழிலாளி செய்வதை உயரதிகாரியால் செய்யமுடியாது. இதனைஇதனான் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விட்டிருப்பார்கள். அதில் எந்த ஒரு துறை இல்லையென்றாலும் நிர்வாகம் சீராக இயங்காது.

அதேபோல கல்வியிலும் உயர்வு \ தாழ்வில்லாத பிரிவினைகள் உண்டு. சிறு வயதிலிருந்து தங்களுக்கு எந்தக் கல்வியில் இஷ்டமோ அந்தக் கல்வியில் ஞானத்தை வளர்த்துக்கொள்ளவேண்டும்.

வேதக் கல்வி பயின்று, அதன் மகத்துவம் குன்றாமல் காப்பாற்றுவது பெரும் பொறுப்பு. அந்தப் பொறுப்பை ஏற்க விரும்புபவனிடம்அதைக் கொடுக்கவேண்டும். இதற்கெனவே வழிவழியாக, நாம் இதுவரை பார்த்த சம்ஸ்காரங்களை எல்லாம் முறையாகச் செய்துவந்தவன், உபநயன சம்ஸ்காரத்துக்கும் தயாராக இருக்கிறான்.

மற்றபடி சனாதனம், மனிதர்களிடையே பேதம் பார்ப்பதில்லை. சனாதனத்தில் கோணல் இல்லை. கோயில் எந்த இனத்துக்கு? எல்லா மனிதர் களுக்காகவும்தான். ஒரு கோயிலில் உற்சவம் என்றால் பூசாரி, தேர் இழுப்பவர்கள், வாத்யம் இசைப்பவர்கள், பந்தல் போடுபவர், மாவிலை கொணர்பவர், காவல்காரர் என்று எல்லோருக்கும் பங்கு இருக்கிறது. அவரவர்களைக் கௌரவித்து, வேண்டியதை வாங்கிக் கொள்கிறோம்.

அதேபோல, சனாதனம் பணம் சேர்க்க விடுவதில்லை. ‘ஏழைக்கு, பசித்தவனுக்கு தானம் செய்’ என்கிறது. ‘தேவைக்குமேல் சேர்த்து வைத்திருப்பவன் திருடன்’ என்கிறது. ஒரு நாவிதர் இருக்கிறார் என்றால் அவர் தன்னை நம்பி வாழவில்லை. தன் கலையை நம்பியேவாழ்கிறார். அவரைக் கௌரவித்து, அவரது கலையை மதிக்கப் பழகவேண்டும். அவர் செய்யும் வேலைக்கு நாம் ஏதோ கூலி கொடுப்பதாக எண்ணுவது தவறு.

சனாதனக் கல்வியில் அகங்காரத்துக்கு இடமில்லை. உள்ள உயர்வுக்கு வழிவகுப்பது உபநயன சம்ஸ்காரம்.

Categories: Uncategorized

உபநயனம் — சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

October 18, 2004 Leave a comment

Sakthivikatan.com:

கல்வி, உள்ளத் தூய்மையை ஏற்படுத்தவேண்டும். உயர்ந்த சிந்தனையை ஊக்குவிக்க வேண்டும். நல்லது கெட்டது ஆகியவற்றை ஆராயும் திறனை உருவாக்கவேண்டும். உண்மை பொய் ஆகியவற்றைப் பாகுபடுத்துவது, அதன் உயர்வு தாழ்வைப் புரிந்துகொள்வது ஆகிய சாதுரியத்தை ஊட்டவேண்டும். தூய்மையான வாழ்க்கை வாழத் தேவையான உயர்ந்த சிந்தனைகளைத் தோற்றுவிப்பதாக இருக்கவேண்டும். அன்றாட வாழ்க்கையின் தேவைகளைப் பூர்த்தி செய்வதோடு, ஆன்மிக வாழ்க்கையில் வெற்றியடையச் செய்வதாகவும் கல்வி இருக்கவேண்டும். எதை அறிந்தால் இவை அனைத்தும் நம்மில் முழுமையை ஏற்படுத்துமோ, அது கல்வி என்பது சனாதன தர்மத்தின் கணிப்பு.

அந்தக் கல்விக்குத் தயார் செய்வதுதான் உபநயன சம்ஸ்காரம். இதற்கு அப்தோபதேசம் என்றும் ஒரு பெயர் உண்டு.
வாழ்க்கைப் பயணத்துக்கு ஓர் இலக்கு இருக்கிறது. நமது செயல் பிறரையும் வாழவைப்பதாக இருக்கவேண்டும். நம்மை, பிறர் பின்பற்றுமாறு வாழ்வதே செம்மையான வாழ்க்கை. பஞ்சபூதங்கள் எப்படி தானும் செழிப்பாக வளர்ந்து, ஜீவராசிகளுக்கு ஆனந்தத்தை அள்ளிக் கொடுக்கிறதோ, எப்படி மனிதனுக்கு ஆசானாகச் செயல்படுகிறதோ அதேபோல் நாமும் வாழவேண்டும்.

பிரபஞ்சத்தில் காணப்படும் பொருட்கள் அனைத்தும் விசித்திரமானவை. படைப்பின் ரகசியம் தெரியாத சாதாரண மனிதச் சிந்தனைக்கு இது புலப்படாது. மனிதனும் பஞ்சபூதக்கலவையாக உருப்பெற்றவன்தான்! ஐந்து பூதங்களின் தன்மை மனிதனிடம் உள்ளது. ‘ஆத்மவத் ஸர்வபூதானி ய: பச்யதி ஸபச்யதி’ & தன்னைப் போல மற்ற உயிரினங்களையும் மதிக்கும் குணம் மனிதனுக்கு வேண்டும். ‘ஆத்மன: ப்ரதிகூலானி பரேஷாம் நஸமாசரேத்’. நமக்கு துயரத்தை ஏற்படுத்தும் செயல்களை நாம் பிறருக்குச் செய்யக்கூடாது. நம்மைக் கிள்ளிப் பார்த்து வலியை உணர்ந்து பிறரைக் கிள்ளுவதைத் தவிர்க்கவேண்டும். எல்லா உயிரினங்களின் உள்ளேயும் ஊடுருவியிருக் கும் சைதன்யம் (உயிர்), அளவுகோலில் சமமானது தான். பரிணாம வளர்ச்சியில் தரமும் சுபாவமும் கொஞ்சம் வேறுபட்டிருக்கலாம்.

மரம் என்று மொத்தமாகக் குறிப்பிட்டாலும் புளி, பலா, தென்னை என்று வகைப்படுத்தும் போது வேறுபாடு இருக்கத்தான் செய்கிறது. ஆனால், உயர்வு தாழ்வு இல்லை. அனைத்துமே மற்றவர்களுக்கு உதவிகரமாக இருந்து முழுமை பெறுபவை. பூமி படைக்கப்பட்டது மனிதனுக்காக மட்டுமே அல்ல. அது தனக்கு மட்டுமே சொந்தம் என்று எண்ணுவதை மனிதன் கைவிடவேண்டும். காடு பலதரப்பட்ட செடிகொடிகளும் மரங்களும் நிரம்பிச் செழிப்பாகத் தென்படுகிறது. தரத்திலும் சுபாவத்திலும் வித்தியாசம் இருந்தாலும் அனைத்தும் ஒன்றாகவே வளர்ந்துதான் முழுமை நிலைமையை அடைகின்றன. தன்னோடு சேர்ந்து வளரும் காட்டு விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் உணவு, உறையுள், நிழல் முதலியவற்றைத் தருகின்றன. இயற்கையின் இந்த குணம், மனிதனுக்குப் பாடம். ஆறறிவு இல்லாத இனங்கள், ‘கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’ என்பதைச் செயல் வடிவில் உணர்த்துகின்றன. இதை நாம் கண்டுகொள்ள வேண்டும்.

இயற்கை என்பது மனித குலத்தின் ஆசான் என்கிறார் சரகர். ‘கிருத்னோஹி லோகோ புத்திமதாம் ஆசார்ய:’ அதாவது _ முழு உலக மும் மனம் படைத்த மனிதனுக்கு ஆசான். காட்டையும் அழித்து விலங்கினங்களையும் கூட்டில் அடைத்து வேடிக்கைப் பொருளாக மாற்றுபவனை சனாதன தர்மம் ஏற்றுக் கொள்ளாது. இயற்கையைப் புண்படுத்திய அவனுக்கு மனஉளைச்சல் வாயிலாகத் தண்டனையை அனுபவிக்கச் செய்து அவனைத் தூய்மைப்படுத்துகிறது இயற்கை. இயற்கையின் தண்டனையிலிருந்து, தான் தப்பமுடியாது என்பதை மனிதன் உணர வேண்டும். குற்றம் புரிந்தவனைச் சிறையில் அடைத்து அவன் செய்த குற்றத்தை உணர ஒரு வாய்ப்பு தருகிறோம். சட்டத்தின் பிடியில் அகப்படாத, இயற்கைக் குற்றவாளிகளை திறந்தவெளி ஜெயிலில் உலவச் செய்து பிச்சைக்காரனாக மாற்றி துயரம், சமூக அவமதிப்பு இவற்றால் தவறை உணரவைப்பது இயற்கை.

பகவான் கண்ணன் பார்வையில் குசேல னும் சிசுபாலனும் ஒன்றுதான். குசேலன் தண்டனையை அனுபவித்து முடித்தபிறகு தன்னோடு சேர்த்துக்கொண்டார் கண்ணன். சிசுபாலனுக்கு தண்டனையைக் கொடுத்து உடன் சேர்த்துக் கொண்டார். கந்தன் அரக்கனைத் தண்டித்து கோழியாகத் தன்னுடனே வைத்துக்கொள்ளவில்லையா? கோபிகைகளையும் முனிவர்களையும் ஒன்றாகவே கருதினார் கிருஷ்ணர். இந்தக் கண்ணோட்டத்தை மனதில் ஏற்படுத்தும் விதை, ஸனாதன தர்மத்திடம் இருக்கிறது. பெரியகோட்டை அழித்து, சின்னக்கோட்டைப் பெரியகோடாக மாற்றக்கூடாது. பெரியகோட்டை அழிக்காமல் சின்னக்கோட்டை வளர்க்க வேண்டும். வளர்க்கத்தான் உரிமை இருக்கிறது. நமக்கு அழிக்க உரிமை இல்லை.

ஆடு மாடுகளும் சிங்கம் புலிகளும் மனித இனமும் எல்லாமே வேண்டும். படைப்பை மாசுபடுத்தாமல் அவற்றின் சுதந்திரத்தைப் பறிக்காமல் அவற்றோடு இணைந்து வாழும் பாங்கு நமக்குள் வளரவேண்டும். அது இயற்கைக் கல்வியில் கிடைக்கும். அது சனாதன தர்மத்தால் காப்பாற்றி வைக்கப்பட்டிருக்கிறது. அதைக் கற்க முற்படுகிறவனைத் தகுதியுடையவனாக்குவது உபநயன சம்ஸ்காரம்.

வேதம் பொதுச்சொத்து. அதன் உருவம் சிதையாமல் காப்பாற்றப்படவேண்டும். கால மாற்றத்தால் ஆசாபாசங்க ளோடு உருவாகும் மனிதச் சிந்தனைகள் அதை மாசுபடுத்த அனுமதிக்கக்கூடாது. காலத்தைக் கடந்த சிந்தனைகள் அதில் இடம் பெற்றிருக்கிறது. மனித இனத்தின் இன்னல்களை அகற்றும் உயர்ந்த சிந்தனைகள், மனித யோசனைக்கு உட் படாத சிந்தனைகள், மனித இனத்தால் விமரிசிக்கப்பட முடியாத உண்மைகள்… இவற்றை அடுத்தடுத்த தலைமுறைக்கு சொத்தாக, தோன்றும்போதிருந்த உருவம் மாறாமல் அளிக்கவேண்டும்.

கல்வி முறையானது உள்ளத் தூய்மைக்கும் ஆன்மிகச் சிந்தனைக்கும் உகந்ததாக இருக்கவேண்டும். பொருளாதார முன்னேற்றம், புலன்களின் வேட்கையைத் தணித்தல் ஆகிய வற்றுக்கு மட்டுமே பயன்படுகிற கல்வி முழுமைபெற்றதல்ல. சனாதன தர்மத்தின் கல்வி, உள்ளத் தூய்மையை ஏற்படுத்தும். சிந்தனை வளத்தைப் பெருக்கும். வாழ்க்கையின் அடிப்படை யான குறிக்கோளை எட்ட உதவி செய்யும். அதை விட்டு விட்டால் நாம் ஆதாரமான ஒன்றை இழந்தவர்களாவோம். அதை ஏற்றுக்கொண்டால் பண்பட்ட மனிதராக மாறி, தெய்வத்தன்மைக்கு நிகராக உயர்ந்து உண்மை வாழ்க்கையின் சுவையைச் சுவைத்து மகிழலாம்.

Categories: Uncategorized

உபநயனம் – சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

October 18, 2004 Leave a comment

வேதங்கள் சொல்லும் வாழ்க்கை ரகசியம்!

Sakthi Vikatan:“கல்வி கற்கத் தயாராகிவிட்ட மாணவனை மங்கள நீராட்டும் சடங்குக்கு ‘உதகசாந்தி’ என்று பெயர். ‘உதகம்’ என்றால் தண்ணீர். தண்ணீரை ‘உதகம்’ என்று குறிப்பிடும்போது அதன் உயர்வு பன்மடங்கு பெருகுகிறது. ‘உத்’ என்றால் தண்ணீர். ‘தகம்’ என்றாலும் தண்ணீர் என்றுதான் அர்த்தம். ‘கம்’ என்றாலும் தண்ணீர் என்றுதான் பொருள்!

அந்தச் சொல்லைத் தாறுமாறாகச் சிதைத்தாலும் சிதைந்த ஒவ்வொரு துண்டிலும் அதன் அர்த்தம் முழுமையாகத் தென்படுகிறது. கண்ணாடியைத் துண்டுதுண்டாக உடைத்தாலும் உடைந்த ஒவ்வொரு துண்டுமே கண்ணாடியாகச் செயல்படுவதைக் கவனித்திருப்பீர்களே… ‘தான் சிதைந்தாலும் அர்த்தம் சிதைபடாத சொல்’ என்று போஜராஜா குறிப்பிடுகிறார். உதகம், தகம், கம் ஏதேஸமானார்த்தகா:

தேவலோகத்திலிருந்து முதன்முதலில் பூமிக்குக் கொண்டுவரப்பட்டது என்பதால் தண்ணீருக்கு ‘உதகம்’ என்று பெயர் வந்தது என்கிற தகவல் வேதத்தில் நமக்குக் கிடைக்கிறது. உதாநிஷுர் மணீநிதி தஸ்மாது தகமுச்யதெ.

பகீரதன் மேல்லோகத்திலிருந்து கங்கையை வரவழைத் தான் என்பது புராணம். வானத்திலிருந்து மழையின்மூலம் தண்ணீர் கிடைக்கிறது. உயிரின் ஆதாரம் நீர். ஜீவாதாரமான உதகத்தை ஒரு குடத்தில் நிரப்பி, தேவதைகளை மந்திரத்தால் வரவழைத்து, வழிபட்டு, பரிசுத்தமான தண்ணீரைக் கொண்டு மாணவனின் உடலையும் உள்ளத்தையும் மாசற்றதாக ஆக்கவேண்டும்.

‘சாந்தி’ என்றால் தேவையற்ற, விபரீதமான எண்ணங்கள் தலைதூக்காமல் அடக்குவது என்று பொருள். கல்வி கற்பவனுக்குப் பொறுமை, நேர்மை, அடக்கம், கடமை உணர்ச்சி, சத்யம், அன்பு, பண்பு ஆகியவை வேண்டும். இவற்றை அளிப்பது உதகசாந்தி. மாணவனின் வலக்கரத்தில் காப்பு கட்டவேண்டும். அதற்கு ‘ரஷாபந்தனம்’ என்று பெயர். எதிர்பாராமல் ஏற்படும் இன்னல்கள், இவனைத் தாக்காமல் தடுக்க அது பயன்படும்.

முன்னோர்களை வழிபடுவது நமது மரபு. அதற்கு ‘நாந்தீ’ என்று பெயர். நாந்தீ என்றால் ஒட்டுமொத்தமான செழிப்பு என்று பொருள். அதை நம் முன்னோர்கள் கொடுப்பார்கள். அவர்களை நினைத்து அன்னதானம் செய்யவேண்டும். நம் பிறப்புக்குக் காரணமான வர்கள், நமக்காக செல்வத்தைவிட்டுச் சென்றவர்கள், பண்பைப் புகட்டியவர்கள், வாழவைத்தவர்கள், நம் துன்பங்களைப் போக்கியவர்கள், நமக்காக இன்னல் சுமந்தவர்கள், எதிர்பார்ப்பு இல்லாமல் நம்மைக் கவனித்துக்கொண்டவர்கள்… இவர்கள்தான் அமரர்களான நம் முன்னோர்கள்! அவர்களை வழிபடுவது பண்பு மட்டுமல்ல, கடமையும்கூட என்று சுட்டிக்காட்டி, ‘முன்னோர் களை வழிபடு’ என்று தர்மசாஸ்திரம் அறிவுறுத்துகிறது.

தாவரங்கள் எப்படித் தன்னை வளர்த்துக் கொண்டு பிறருக்குத் தன்னை அர்ப்பணித்து மகிழ்கிறதோ அப்படி மாணவனும் தன்னலம் மறந்து பொதுநலத்தில் அக்கறை கொள்ளவேண்டும் என்ற கருத்து அடங்கிய இந்தச் சடங்கை ‘அங்குரார்ப்பணம்’ என்று சொல்வார்கள். அங்குரம் என்றால் முளை. முளை வளர விதைப் பது என்பது தாத்பரியம். தகப்பனார் மாணவனுக்கு மந்திரத்தோடு பூணூலை அணிவிக்கவேண்டும். ‘பூணும் நூல்’ என்று அதற்குப் பலரும் விளக்கம் கொடுத்துவருவது ஒருவகை. ஆனால், அது வெறும் அணிகலன் அல்ல; அடையாளமும் அல்ல. அது தேவதைகளின் கோயில். தொண்ணூற்றி ஆறு இழைகள் (ஓர் இழை ஏறக்குறைய ஒரு சாண் அளவு) கொண்ட நீளமான நூலில் தயாரானது அது. பிறகு அந்த நூல், ஒன்பதாக மடிக்கப்பட்டிருக் கும். கடைசியில் அது மூன்றாக மடிக்கப்பட்டவுடன் பூணூலின் முழு உருவம் தோன்றிவிடும்.

நமது உடல் இருபத்தைந்து தத்வங்களால் உருப்பெற்றது. ஸத்வம், ரஜஸ், தமஸ் (அமைதி, சுறுசுறுப்பு, சோம்பல்) என்ற மூன்று குணங்கள் நம் மனதில் இருக்கும். பிரதமை முதலிய பதினைந்து திதிகள், ஞாயிறு முதலிய ஏழு கிழமைகள், அச்வினி முதலிய இருபத்திதேழு நக்ஷத்திரங்கள், நான்கு வேதங்கள், மூன்று காலங்கள், பன்னிரண்டு மாதங்கள் இவை அத்தனையையும் சேர்த்து தொண்ணூற்றி ஆறு ‘தத்வங்கள்’ இருப்பதைச் சுட்டிக்காட்டி தொண்ணூற்றாறு இழைகள் என நிர்ணயித்திருக்கிறார்கள் நம் முன்னோர். திதி வாரம் சநக்ஷத்ரம் தத்வவேதகுணான்விதம். காலத்ரயம் ச மாஸா: ச ப்ரம்ம ஸூத்ரம் ஹி ஷண்ணவம் என்பது சான்றோர் வாக்கு.

ஓம் என்ற பிரணவம், அக்னி பகவான், நாகதேவதை கள், சந்திரன், நம் முன்னோர், உயிரினங்களைப் படைத்த கடவுள், உயிரினங்களின் ஆதாரமான வாயு தேவதை, சுகாதாரம் கொடுக்கும் சூரிய தேவதை, மற்ற தேவைகளைப் பூர்த்தி செய்யும் அத்தனை தேவதைகளும் என்கிற வரிசையில் ஒன்பது தேவதைகள், ஒன்பதாக மடிக்கப்பட்ட நூலில் நித்யவாசம் செய்கிறார்கள். அதாவது குடிகொண்டிருக்கிறார்கள். ஓம்காரோக்னி: ச நாக: ச ஸோம: பிதுப்ரஜாபதீ. வாயு: சூர்ய: ச ஸர்வ: ச தந்து தேவா அமீநவ.

ஆன்மிகம், ஆரோக்கியம், தைரியம், மகிழ்ச்சி, நட்பு, இரக்கம், சுத்தம், ஆயுள், பண்பு ஆகிய ஒன்பதையும் நூலில் இருந்துகொண்டு மாணவர்களுக்கு அளிப்பவர்கள் அவர்கள். ஒரு நாட்டின் கொடி பல வண்ணத் துணியால் ஆனது. அதை நாம் வெறும் கொடியாகப் பார்ப்பதில்லை. நாட்டின் மொத்தக் கலாசாரமும் கௌரவமும் இதில் அடக்கம் என்ற எண்ணத்தோடு பார்க்கிறோம். பூணூலையும் அந்த விதமாகத்தான் பார்த்தார்கள் நம் முன்னோர். சிலையாகப் பார்த்த உருவத்தை, கும்பாபிஷேகத்துக்குப் பின்னால் கடவுளாகப் பார்க்கிறோம். சாதாரணக் குடிமகனாக இருந்தவர் உறுதிமொழி ஏற்றுக்கொண்ட பிறகு மந்திரியாக மதிக்கப்படுகிறார். காதலர்களாக இருந்தவர்கள் பதிவுத் திருமணத்துக்குப் பிறகு தம்பதி என்று அழைக்கப்படுகிறார்கள். மண்ணிலும் மரத்திலும் நீரிலும் நெருப்பிலும் கடவுளைப் பார்க்கும் பண்பு நம்மிடம் உண்டு. மண்ணைப் பிசைந்து லிங்கம் அமைத்து வழிபட்டார் ராமர். பூரி ஜகன்னாதன் தோன்றியது மரத்தில். கங்கையும் காவேரியும் தெய்வங்கள். திருவண்ணாமலை தீபச்சுடர் கடவுளின் உருவம். இவ்வளவு ஏன், வெற்றிடத்திலும் (சிதம்பரம்) கடவுள் உண்டு.

பாம்பும் நமக்கு நாகதேவதை. பசு நமக்கு கோமாதா. கஜபூஜை செய்து யானையை வணங்குபவர்கள் நாம். சராசரத்தை ‘தத்வ’ விளக்கமாகப் பார்க்கிறோம். ‘எந்தப் பொருளில் தனிச்சிறப்பை நீ பார்க்கிறாயோ அது எனது ஆற்றல்!’ என்ற கண்ணனின் வாக்கு கீதையில் ஒலிக்கிறது. நமது நாட்டு மண்ணை, கோபியாகவும் திருமண்ணாகவும் நெற்றியில் வைத்து கௌரவிக்கிறோம். துளசியும் வில்வமும் நாம் வணங்கும் தெய்வங்கள். அரசமரத்தை மும்மூர்த்தியாக பாவித்து வணங்குவதையும் சுற்றிவருவதையும் பார்க்கிறோம். அரச மரத்துக்கு உபநயனம் செய்விப்பதும் கல்யாணம் செய்துவைப்பதும் நம் நல்ல எண்ணங்களின் பிரதிபலிப்பு. தூணிலும் துரும்பிலும் தென்படும் தெய்வம் நூலிலும் தென்படும் என்கிற நம்பிக்கை வலுவாக இருக்கவேண்டும். அசையாத நம்பிக்கையும் அதோடு இணைந்த செயல்பாடும் இலக்கை எட்ட உதவும்.

மாணவன் அக்னி பகவானை வணங்கவேண்டும். அதற்கு ஸமிதா தானம் என்று பெயர். அவனுக்கு ஸமித்து (அரசமரக் குச்சி) அளிக்கவேண்டும். நான் அளித்த உணவை (ஸமித்து) உண்டு நீ ஒளிமயமாகத் திகழ்கிறாய். பிறருக்கு ஒளி வழங்குகிறாய். தேவர்களுக்கு நீ ஒளிவிளக்கு. மனிதர்களுக்கு என்னை ஒளிவிளக்காக மாற்றிவிடு என்று வேண்டுகிறான். அக்னே தேஜஸ்வின் தேஜஸ்வீ…. குரு… நீ கல்வி கற்கும் மாணவன். கடமைகளில் கண்ணாக இரு. விழிப்புடன் இரு. பசிக்கு உணவு என்பதை ருசிக்கு உணவு என்பதாக மாற்றாதே. ஆசிரியருக்குக் கட்டுப்படு. உறக்கத்தில் ஆழ்ந்துவிடாதே. இந்த ஆறு கட்டளைகளை தகப்பனார் ஞாபகப்படுத்துவார். புதுத் தெம்பு, புதுப் பொலிவு, புதுப் பிறவி இம்மூன்றையும் பெற்று குருகுலம் சென்று கல்வி கற்பது உபநயனம்.”

Categories: Uncategorized

வீரப்பன் வீரமரணம்

October 18, 2004 3 comments

-) Nothing relevant1. பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்!?

2. அமெரிக்கத்தேர்தல் சமயத்தில் ஒஸாமா பிடிபட்டால், கெர்ரிக்கு பாதகம். ஆனால், தற்போதைக்கு அவன் மாட்டிக் கொள்வது போல் தெரியவில்லை. சதாம் போல், வீரப்பன் போல் திடீர் என்று நவ. 2-க்கு முன் காட்சியளிக்கலாம்.

3. சேத்துக்குளி உட்பட பலரும் ‘என்கௌண்டர்’ ஆகியிருக்கிறார்கள்.

4. சுட்டுக் கொல்லப்படாமல், உயிரோடு பிடித்திருந்தால், நிறைய பின்புலம் தெரிய வந்திருக்கும். வீரப்பனின் ஸ்விஸ் வங்கியெண் என்ன?

Is Jaya Durga Mata5. நீதிமன்றங்களில் ஆஜர் செய்வித்திருந்தால் — பூலான் தேவி போல் வீரப்பனை சென்னை கோட்டையருகே சுட்டிருப்பார்கள். ஆனால், அதற்குமுன்பு வீரப்பனின் infrastructure, பணப்பட்டுவாடாத்தடங்கள், போன்றவை தெரிய வந்திருக்கும்.

6. ‘ஆவி அமுதா’ வீரப்பனோடு பேசுவாரா?

7. சத்தியமங்கலத்தில் இருந்து வேறு எதுவும் ‘நிஜ’ வீரப்பனோ, ‘புதுசு கண்ணா புதுசு’ வீரப்பர்களோ வராமல் இருக்க வேண்டும்.

8. முன்னாள் சென்னை கமிஷனர் விஜயகுமார்(தானே) இப்பொழுது வீரப்பனைப் பிடித்திருக்கிறார். மீண்டும் சென்னை கமிஷனர் ஆகிவிடுவாரா?

9. ‘தமிழர் விடுதலைப் படை’ எப்படி இருக்கிறது? தலைமறைவா அல்லது அவர்களும் இறந்திருக்கிறார்களா?

10. ஜெயலட்சுமி போனார்… வீரப்பனார் வந்தார்.

ARUN VIEWS | Forest brigand Veerapan shot dead – Sify.com | Rediff

Categories: Uncategorized