Home > Uncategorized > Sakthivikatan.com

Sakthivikatan.com


Sakthivikatan.com

வேதங்கள் சொல்லும் வாழ்க்கை ரகசியம்! சௌளகர்மா சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்
தொடர்ச்சி…
‘கைகால் ஆகியவற்றைப் போல சிகையும் உடல் உறுப்புகளில் ஒன்று’ என்கிறது தர்ம சாஸ்திரம். புராணக் கதை ஒன்று கேள்விப்பட்டிருப்பீர்கள். பஸ்மாசுரன் என்கிற அரக்கன், பரமேஸ்வரனை நோக்கி தவம் செய்கிறான். நேரில் தோன்றிய ஈசனிடம், ‘‘நான் யார் தலையில் தொட்டாலும் அவர்கள் சாம்பலாகி விடவேண்டும்!’’ என்று வரம் கேட்டான். ஈசனும் அவன் கேட்ட வரத்தைக் கொடுத்தார். சும்மா போனானா பஸ்மாசுரன்? ‘‘நீ கொடுத்த வரம் உண்மைதானா என்று சோதித்துப் பார்க்க வேண்டும், எங்கே உன் தலையைக் காட்டு…’’ என்று ஆரம்பித்துவிட்டான். ஓடி ஓடிப் பார்த்தும் முடியாமல் விஷ்ணுவைக் கூப்பிட்டார் சிவன். அழகிய மோகினி ரூபத்தில் வந்த விஷ்ணுவைப் பார்த்து மயங்கினான் பஸ்மாசுரன். தன்னை மணம் செய்துகொள்ளுமாறு வேண்டினான். ‘‘சரி, உன்னைத் திருமணம் செய்துகொள்கிறேன். அதற்கு முன் நீ ஸ்நானம் செய்துவிட்டு, உன் உடல் எல்லாம் கைகளால் தொடவேண்டும்’’ என்கிறாள் மோகினி. மோகமயக்கத்தில்இருந்த அரக்கனும் அவள் சொன்ன படியே செய்தான். முதலில் தன் தலைமுடியில் கைவைத்தான். எரிந்து சாம்பலாகிப் போனான். உடலைத் தொடு என்கிறபோது சிகையைத் தொட்டது ஏன்? அதுவும் உடல் உறுப்புகளில் ஒன்று என்பதால்தான் இப்படி.
ஆதி சங்கர பகவத் பாதாள், அம்பாளை வணங்கும்போது கேசத்திலிருந்துதான் தன் ஸ்லோகத்தை ஆரம்பிக்கிறார். அம்பாளுக்கு அராளகேசி என்றே ஒரு பெயர் உண்டு.
மொட்டை அடித்துக் கொண்டு ஏதாவது காரியம் செய்தால் அது உசத்தி இல்லை. மொட்டை அடித்துக்கொண்டவரை உடல் ஊனமுற்றோர் என்கிற கோணத்தில்தான் தர்ம சாஸ்திரம் பார்க்கிறது. குளிக்கும்போது கேசம் இருக்கவேண்டும். யாருக்காவது கொடை கொடுக்கும்போது, பகவானின் நாமத்தை ஜெபிக்கும்போது, வேள்வியில் \ ஆகுதியில் பொருட் களை இடும்போது, சந்தியாகால வழிபாட்டின்போது… இப்படி எல்லா நேரத்திலும் சிகை இருக்கவேண்டும் என்று விதி போடுகிறது தர்ம சாஸ்திரம்.
ஸ்நானே தானே ஜெபே ஹோமே சந்த்யாயாம் தேவதார்ச்சனே சிகா க்ரந்த்யம் சதா குர்யாத் இதி ஏதது மனுரப்ரவீர்…
கேசம்ஓர் உடல் உறுப்பு என்கிறபோது, மொட்டை யடித்துக்கொண்டால் ஓர் உறுப்பு குறைந்துவிட்டது என்று பொருள். அது அங்கஹீனம்.
ஒரு தேவதையின் நாமத்தை ஜெபிப்பதற்கு முன்னதாக அந்த தேவதை நம் உடலுக்குள் வந்து சேர்வதாக பாவித்துக்கொள்கிறோம். அப்படி அந்த தேவதை நம் உடலுக்குள் வரவேண்டுமானால் நம் உடலெங்கும் நம் கையால் தொட்டுக்கொள்ள வேண்டும். அப்படித் தொடுகிறபோது கேசத்திலும் தொடவேண்டும் என்று கட்டளை இடுகிறது தந்திர சாஸ்திரம். கேசத்திலும் அந்த தேவதை வந்து இறங்கி நமக்கு நன்மை செய்கிறது. அப்போதுதான் நமக்கு முழுமையான பலன் கிட்டுகிறது.
அதனால்தான் பழைய காலத்தில் ஒரு சாரார் மாத்திரம்அல்லாமல் சமூகத்தின் அனைத்துத் தரப் பினரும் சிகை வளர்த்து, தங்கள் ஆத்மபலத்தையும் தன்னம்பிக்கையையும் வளர்த்துக்கொண்டார்கள்.
உயிரினங்கள் அனைத்திலும் ஆண்தான் அழகு. மனித இனத்தில் மட்டும் பெண் அழகாக இருக்கிறாள். கச்யப பிரஜாபதியின் பத்தினி அதிதி. இவளைப் பார்த்து பிரம்மா, ‘‘நீ சௌபாக்கியத்தை அனுபவிப்பதற் கும் ஆயுளோடு இருப்பதற்கும் பயன்படும் சிகையை நீக்காதே. அதை அழகுபடுத்திக்கொள்’’ என்கிறார். பெண்ணை முன்னிலைப்படுத்திச் சொன்னாலும் அனுபவமும் ஆயுளும் பெண்களுக்கு மட்டுமா? ஆண்களுக்கும்தானே… எனவே, ஆண்களும் சிகையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
முதல் அறுவைச் சிகிச்சை செய்த ஆயுர்வேத மருத்துவர் சுஸ்ருதர், உடலின் உள்புறத்தை எல்லாம் அறிந்தவர். அவர் சொல்கிறார்:
மஸ்தக அப்யந்தர உபநிஷ்டாத் சிராசந்தி கன்னிபாரம் ரோமாவர்த்த: அதிபதி: தப்ராபி சத்யோமரணம்
‘சகல நரம்புகளின் கூட்டம் உச்சிக்குள்ளிருந்து ஆரம்பிக்கிறது. அதற்கு ரோமாவர்த்தம் என்று பெயர். அங்கே அடிபட்டால் உடனே மரணம் ஏற்படும். அதைக் காப்பாற்றுவதற்காக சிகை வளர்த்துக்கொள்’ என்று வலியுறுத்துகிறார்.
லட்சண சாஸ்திரம் என்று ஒன்று உண்டு. மாடு வாங்குவதைப் பார்த்திருக்கலாம் நீங்கள். மாட்டில் இருக்கும் ரோமச் சுழியை வைத்து அதன் இயல்புகளையும் திறனையும் கணிப்பார்கள். அதுபோல் மனிதர்களின் வருங்காலத்தைக்கூட ரோமத்தை வைத்துக் கணிக்க முடியும். ரோமம் சுழித்து வளரக்கூடாது, நீளமாக, அதிகமாக இருக்க வேண்டும் என்பது லட்சண சாஸ்திரத்தின் உபதேசம்.
உடலின் மற்ற அங்கங்கள் குறிப்பிட்ட வயதுக்கு மேல்வளராது.சிகை மாத்திரம் கடைசிவரை வளரும். நாம் வெட்ட வெட்ட வளர்வதிலிருந்து, இயற்கையே நமக்குத் தேவையான பாதுகாப்புக்காக சிகையை வளரச்செய்கிறது என்று புரிந்துகொள்ள முடியும்.
இன்னொரு கோணம் \ மொட்டை அடித்துக் கொள்வது ஹிந்து தர்மத்தில் இல்லை. ஒரு பெரிய துக்கம் நடந்துவிட்டால் மொட்டையடித்துக் கொள்கிறான். சாதாரணமாக அடித்துக் கொள்வதில்லை.
ஆகாயகங்கை பூமிக்கு வந்தபோது அதைத் தாங்கிப் பிடித்தது சிவன் கேசம்.
லிங்கோற்பவர் விசுவரூபம் எடுத்து நிற்க, விஷ்ணு, அடியைப் பார்க்கப்போகிறார். பிரம்மா, தலை முடியும் ஓர் அங்கம் என்பதற்காக முடியைப் பார்க்கப் போகிறார்.
இப்படி பல கதைகள் புராணத்தில் உண்டு. பெண் என்றால் ‘ஸ்தன கேசவதீ நாரி’ என்று இலக்கணமே உண்டு. குழந்தை பிறக்கும்போதே கேசம் உண்டு. இதனால்தான் நம் அன்றாட வாழ்க்கையில் கேசம் இழையோடிக்கொண்டிருக்கிறது.
காலத்தை ஒட்டி சில மாறுபாடுகளை நாம் ஏற்றுக்கொண்டுவிட்டோம் என்றாலும்கூட அந்த மாறுதல்களால் நாம் என்ன இழந்தோம் என்று தெரிந்துவைத்திருக்க வேண்டாமா? கேசத்தை வைத்துக்கொண்டு அதில் மாறுதல் செய்யலாமே தவிர, கேசத்தையே மொத்தமாக எடுத்துவிடுவது புத்திசாலித்தனம் அல்ல.
ஒரு காலத்தில் பகவானுக்கு அர்ப்பணம் கொடுக் கிற பொருளாகவே கேசத்தை வைத்தோம். வேறு உறுப்புகளை பகவானுக்குக் காணிக்கை ஆக்க முடியாது. முடி என்கிற உறுப்பைக் கொடுத்தால் நமக்குப் பாதகம் இல்லை. மறுபடி வளர்ந்துவிடும். அர்ப்பணமாகக் கொடுக்கிற அளவு உசத்தியான பொருளைக் காப்பாற்றி வளர்ப்பதுதானே முறை? ரோமத்தை வாங்கிக்கொண்டு பகவான் நமக்கு அனுக்ரஹம் பண்ணுகிறார் என்பதுதானே நம் சம்பிரதாயம்?
முடி வளர்ப்பதை ஒரு சடங்காக இரண்டு, மூன்று வயதுக்கிடையில் ஒரு நாளில் குழந்தைக்கு அறிமுகப்படுத்தவேண்டும். இதை ஒரு சம்ஸ்காரமாக வைத்தார்கள். இதற்கு சௌளகர்மா என்று பெயர். முதலில் குழந்தையைக் குளிப்பாட்டி தூய்மைப்படுத்த வேண்டும். ஒரு சொம்பில் தண்ணீர் எடுத்து தேவதா சாந்நித்யத்தை அந்தத் தண்ணீரில் வரவழைத்து, குழந்தையை நீராட்டவேண்டும். இதனால் குழந்தையின் உடல் தூய்மையடைவதோடு, அந்த தேவதையின் அனுக்கிரகமும் குழந்தைக்கு வந்து சேர்கிறது. குழந்தைக்கு இனிப்பான ஆகாரம் குறைந்த அளவு கொடுக்கவேண்டும். தலையின் ஓரங்களில் நான்கு பக்கங்களிலும் சிறிதளவு கேசத்தை வெட்டி அழகுபடுத்த வேண்டும். இவையனைத்தையும் குழந்தையின் தகப்பனார்தான் செய்யவேண்டும். சிகையை வெட்டி அழகுபடுத்தும்போது,
யே நாவபத் சவிதா க்ஷ§ரேண ஸோமஸ்ய ராஞோ வருணஸ்ய வித்வான் தேன ப்ரும்மாணோ உபதேதம் அஸ்ய ஆயுஷ்மான் ஜரதஷ்டி: யதாஸத்
என்கிற மந்திரத்தைச் சொல்லவேண்டும். சிகையலங்காரம் செய்யப்படுபவனாகிய இந்தக் குழந்தை ஆயுள் பலத்தோடு இருக்கவேண்டும். கல்வி உள்ளிட்ட சகல சம்பத்துகளையும் பெற்று வாழ வேண்டும். சிந்தை தெளிவாக இருக்கவேண்டும். இந்திரியங்கள் எல்லாம் திறத்தோடு விளங்கவேண்டும். மற்றவர்களுக்கு வழிகாட்டியாக \ ஆதர்ஷ புருஷனாகத் திகழவேண்டும் என்கிற பிரார்த்தனைதான் இந்த மந்திரம். சௌளகர்மாவில் குழந்தைக்கு அருளும் தேவதையின் பெயர் சவிதா.
சௌளகர்மாவுக்கு அனைவரையும் அழைத்து அன்னதானம் செய்யவேண்டும். பக்கத்தில் இருக்கும் கோயிலுக்குக் குழந்தையை அழைத்துப்போய் நமஸ்காரம் பண்ணிவைக்க வேண்டும்.
ஆயுள்பலமும், கல்விச்சிறப்பும், சிறப்பான இந்திரியங்களும் ஒரு சாராருக்கு மட்டும் இருந்தால் போதுமா? எல்லாருக்கும் வேண்டாமா? எனவே அனைத்துப் பிரிவினரும் நன்றாக இருக்கவேண்டி சிகாலங்காரம் செய்துகொள்ள வேண்டும்.

Categories: Uncategorized
 1. Srinivasan.D
  April 14, 2013 at 8:48 am

  hai srinivasan i am post in sakthivikatan job 6 months back no comment please tell cellno 9524483915 bye

 2. January 29, 2014 at 7:08 pm

  But you have to keep in mind that you have two main
  search engines to optimize for. Human visitors cannot see this; but it’s the first thing that a search engine sees when crawling your site.
  Doing all these will not automatically put you on the first page of
  search engines.

 1. No trackbacks yet.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: