Home > Uncategorized > சாப விமோசனம் – பேஸ்பால்

சாப விமோசனம் – பேஸ்பால்


Red Sox Celebration (c) New York Timesநியு இங்கிலாந்து ரெட் சாக்ஸ் நியு யார்க்/நியு ஜெர்ஸி யான்கீஸை வென்றிருக்கிறார்கள்.

அமெரிக்கா வந்து சில நாட்களே ஆன போது பார்க்க ஆரம்பித்த விளையாட்டு. அதிகம் ரசிக்கவில்லை. ஆனால், உள்ளூர் அணி வெற்றி வாகை சூடிக் கொண்டிருந்ததாலும் அலுவலகத்தில் காபி போடும் சில விநாடி அலசல்களில் பேந்த பேந்த விழித்ததாலும் பார்க்க ஆரம்பித்தேன். ஆட்டம் நடக்கும் ப்ரான்க்ஸில் (Bronx – நியு யார்க்) இருந்து பலகாத தூரம் தள்ளி இருக்கும் எடிஸனில் வசித்தாலும் ‘நம்ம டீம்’ என்னும் அடைமொழி கொடுத்து, விதிகளை நண்பர்கள் விளக்க, விளையாட்டில் ஆர்வம் பிறந்தது.

பாஸ்டன் பெயர்ந்த பிறகு ரெட் சாக்ஸும் சோபிக்கவில்லை. ஆட்டமும் ரசிக்கவில்லை. அதற்கேற்ப அமெரிக்கக் கால்பந்து போன்ற பிற விளையாட்டு அணிகள் கலக்க ஆரம்பிக்க, பேஸ்பந்தை மறந்தே போனேன்.

Boston's Johnny Damon (c) New York Times

வருடா வருடம் நடக்கும் உலகக்கோப்பை (அமெரிக்காவும் தொட்டுக்கக் கொஞ்சமே கொஞ்சம் கனடாவும்) போட்டிகளில் அரையிறுதிக்குத் தகுதியாவது; பிறகு நியு யார்க் ‘எலி – ஜெர்ரி’ யான்கீஸிடம், ‘டாம் – பூனை’யாக அடிபடுவது; எனத் தொடர்ந்தது.

இதற்கெல்லாம் அடுத்த படியாக போன வருடப் போட்டிகளில் இரு அணிகளுக்கும் இடையே கைகலப்பு. பாஸ்டன் ஆடுகளத்தில் சிப்பந்தி ஒருவர் யான்கீஸ் தோற்கும் நிலையில் இருந்ததனால் கெக்கலித்திருக்கிறார். பொறுக்காத ‘நியு யார்க்’தனமையுடன் யான்கீ ஒருவர் கையை ஓங்கியிருக்கிறார். ஏற்கனவே, ஜென்ம விரோதி போல் முறைத்துக் கொண்டவர்கள், பாரதப் போருக்கே இறங்கினார்கள். எனினும், வழக்கமான பாஸ்டன் தோல்வியே முடிவாக இருந்தது.

இந்த எண்பத்தியாறு வருட தோல்விமுகத்துக்குக் காரணமாக சொல்லப்படுவது ‘பேப் ரூத்’ என்னும் ஆட்டக்காரரின் சாபம் என்று சொல்லப்பட்டு வந்தது. அற்புதமாக விளையாடி பேஸ்பால் உலகையே புரட்டிப் போடப் போகும் அவரின் அருமை தெரியாமல், பணத்துக்கு லொத்துப்பிடித்த பாஸ்டனின் ரெட் சாக்ஸ், பேரம் பேசி நியு யார்க்கிற்குத் தள்ளிவிட்டுவிட்டார்கள். அப்பொழுது, மனம் நொந்து அவர் கொடுத்த சாபம் இன்று வரை தொடர்ந்திருக்கிறது.

இந்த வருடமும் வெற்றி எளிதாக விழவில்லை. இப்பொழுது நடக்கும் இந்தியா-ஆஸ்திரேலியா ஐந்துநாள் போட்டிகளில் இரண்டு டெஸ்ட்களைக் கைப்பற்றினால், தொடரில் வெற்றி. அதே போன்று, பேஸ்பாலில் நான்கு ஆட்டங்களை வென்று விட்டால், தொடர் முடிந்து விடும். முதல் மூன்று ஆட்டங்களில் மண்ணைக் கவ்வி, மீதம் இருக்கும் நான்கையும் வென்றாலே, அமெரிக்கன் லீக் தொடரை வெல்ல முடியும்.

Boston's Curt Schilling (c) Boston Globe

ஆடிய முதல் ஆட்டத்திலேயே, நட்சத்திர பந்து வீச்சாளர் ஷில்லிங் அடிபட்டுக் கொண்டார். நேற்றைய ஆட்டத்தில் காலுறையில் ரத்தம் கசிய பந்து வீசி ரெட் சாக்ஸின் மூன்றாவது வெற்றியைப் பெற்றுக் கொடுத்து, தொடரை சமன்படுத்தினார்.

இந்தத் தொடரின் ஒவ்வொரு ஆட்டமுமே பல இன்னிங்ஸ்கள் நீண்டு, இரவுத் தூக்கங்களை குறைத்தும், இருதயத் துடிப்பை அதிகரித்தும், சோபாவை அதிகம் தேய்க்காமல் சீட் நுனிக்குத் தள்ளிவிட்டிருந்தது. பேஸ்பாலும் (பழைய) டேவிஸ் கோப்பையும் ஒரே போல. அந்தக் கால டேவிஸ் பந்தயங்களில் கடைசி செட்டுக்கு ‘டை-ப்ரேக்கர்’ கிடையாது. எந்த வீரராவது, எதிராளி பந்து வீசும் ஆட்டத்தை மொத்தமாக முறிக்கும் வரை நீண்டு கொண்டே போகும். அதே போல், எந்த அணியாவது ‘ஹோம் ரன்’ என்று விளிக்கப்படும் கிரிக்கெட்டின் சிக்ஸரை அடிக்காவிட்டால், இரு அணிகளும் ஆட்டத்தை முடிக்காமல் தொடரும்.

நேற்றைய ஆட்டம் முடிந்தபோது நடுநிசி. முந்தாநாள் பின்னிரவு இரண்டு மணி. நியு யார்க்கை வீட்டுக்கு அனுப்பியிருக்கிறார்கள். அடுத்து யாரோ… ஹூஸ்டனா, செயிண்ட் லூயிஸா? எவராக இருந்தால் என்ன 😉

Categories: Uncategorized
 1. October 21, 2004 at 6:32 am

  டேவிஸ் பந்தயங்களில் கடைசி செட்டுக்கு ‘டை-ப்ரேக்கர்’ கிடையாது. எந்த வீரராவது, எதிராளி பந்து வீசும் ஆட்டத்தை மொத்தமாக முறிக்கும் வரை நீண்டு கொண்டே போகும். அதே போல், எந்த அணியாவது ‘ஹோம் ரன்’ என்று விளிக்கப்படும் கிரிக்கெட்டின் சிக்ஸரை அடிக்காவிட்டால், இரு அணிகளும் ஆட்டத்தை முடிக்காமல் தொடரும்.மொத்தம் 9 இன்னிங்ஸ்.முடிவு கிடைக்காவிட்டால் மேலே ஆட வேண்டும்.ஹோம் ரன் அடித்துதான் வெற்றி
  பெற வேண்டும் என்றில்லை.3rd base ல் ஆளிருந்தால்,base hit செய்து 1 ரன் அடித்து வெற்றி பெறலாம். வேறு வழிகளும் உள்ளன.மேலும் எழுத நேரமில்லை.

  sudden death முறை கிடையாது.

  நன்றி, பேஸ்பால் பற்றி எழுதியமைக்கு.

  Go Red Sox

 2. October 21, 2004 at 7:05 am

  நன்றி வாசன். அந்தப் பக்கம் யார் ஜெயிப்பார்கள்?

 3. Anonymous
  October 21, 2004 at 7:35 am

  The curse is still alive… they need to win the world series to break the curse.

  In NLCS, the Astros should win… Texas Vs NE won’t it be like the presidential race :).

  -dyno

 4. Anonymous
  October 21, 2004 at 10:37 am

  Good luck BoSox.
  I hope my fav. Cubs will do the same next year!!!

 5. October 21, 2004 at 11:41 am

  வேண்டவே வேண்டாம் டைனோ! மூதல் தலைவலி ரோஜர் க்ளெமன்ஸ். ஆனால், கார்டின்ல்ஸும் லேசுப்பட்டவர்கள் போல் தெரியவில்லை. இதற்கு முன்பு சந்தித்தபோதெல்லாம் தோற்றிருக்கிறோம். பட்சி சொல்லுது… இந்த தடவை ரெட் சாக்ஸ் வென்றுவிடுவார்கள் என்று 🙂

  நீங்க சொல்வது போல் பலபரிட்சை நடந்தால் நவ.2-க்கு முன்பே, அக்.31 அன்றே ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் சொல்லிவிடலாம் 😀

 6. October 21, 2004 at 12:48 pm

  ஆட்டத்தைப்ப் போலவே பதிவும் அருமை. நேற்றைய ஆட்டம் மறக்க முடியாது.

 7. October 21, 2004 at 1:16 pm

  Bosox and Botox are going down this year என்று ஒரு இடத்தில் படித்தது ;-). இரண்டுல எது கீழ போனாலும் கவலை தான். கெர்ரி விளையாட்டாக, ‘If I have to decide between RedSox winning the world series and me winning the Nov election, I will take election” என்று சொன்னதைக் கூட ‘Fair & Balanced’ ஆட்கள் திருப்பி திருப்பிச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். கடந்த 4 நாட்களாய் ரெட் சாக்ஸ் நேஷனில் கொண்டாட்டம் தான். (அக்நாஸ்டிக்காக இருந்தாலும்) KEEP THE FAITH!!.

 8. October 28, 2004 at 11:40 am

  Super title – bala.

  Please add me to your Tamizhargal pakkam

 1. No trackbacks yet.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: