Archive

Archive for December 6, 2004

அரை குறை சிந்தனைகள்

December 6, 2004 Leave a comment

‘வெடிகுண்டு கலாச்சாரம் பெருகி விட்டது’ என்றார் முன்னாள் ரஜினி. தமிழக Commando ‘மனிதன்’ திரைப்பட வெள்ளி விழாவின் போது அவ்வாறு சொற்பொழிவாற்றவில்லை.

ஆபாசத்தை வளர்க்க வேண்டாம் என்கிறார் ஜெயலலிதா. ‘ஆடை முழுதும் நனைய நனைய மழை அடிக்குதடி‘ நடித்தவுடன் ஜெயலலிதா சொல்லியிருந்தால் — கவர்ச்சிக்கும் ஆபாசத்துக்கும் இடையே இருக்கும் லஷ்மண் ரேகாவை விளக்கியிருப்பார்.

‘உள்ளே வெளியே’, ‘அண்ணாமலை’ என்று அரை நிர்வாண காட்சிகள் வந்தாலும், இன்னும் lesser known mortals படமெடுத்தால் மட்டுமே பிரச்சினை கிளம்புகிறது.

காதல் அரங்கம் படம் என்பது காமத்தை பற்றி மக்கள் புரிந்துகொண்டு அதன் பிடியிலிருந்து வெளிவர வேண்டும் என்ற ஒரு கல்வியை வெளிப் படுத்தும் விதத்தில் உருவாகி இருக்கிறது என்கிறார் இயக்குநர் வேலுபிரபாகரன்.

இது போன்ற பேட்டிகள் படத்தை விநியோகிப்பதற்கு உபயோகப்படும். கமல் நடித்திருந்தால் முத்த காட்சி எதிர்பார்க்கப்படுகிறது. அவரின் ஆத்மதிருப்தி படம் என்றால் இன்னும் வளைவு சுளிவுகள் காட்டவேண்டியிருக்கும். ஆபாசம் எட்டிப்பார்க்காவிட்டாலும், கமல் படங்களுக்கு கண்டனங்கள் கிளம்பும்.

விகடனில், ‘‘என்ன சார் இது? கமல்ஹாசன்னா டிபனுக்கு கொஞ்சம் செக்ஸ், மத்தியான உணவுக்கு அப்புறம் கொஞ்சம் செக்ஸ், சாயங்காலம் ஜலக்கிரீடை, அப்புறம் தூங்கப் போறதுக்கு முன்னால இன்னும் நெறைய செக்ஸ்… அப்பிடினு நெனச்சுண்டு கிட்ட வந்து பாத்தா, ரொம்ப ஏமாற்றமா இருக்கு!” என்றாராம் பாலகுமாரன்.

ஐம்பதிலும் ஆசை வரும் என்பது போல் மனவொற்றுமையைத் தேடித் தேடி அலைந்து கடைசியில் ஆதர்ச துணையை (கௌதமி?) கண்டுபிடித்திருக்கிறார். நிம்மதியான மனநிலை படைப்பாளிக்கு சாதகமா அல்லது பாதகமா என்பது வழக்காடுமன்ற தலைப்புக்குரிய மேட்டர். அங்கு செல்லாமல், மீண்டும் தமிழ் திரைப்படங்களில் நாம் காண்பது ரசிக்கத்தக்க ஆபாசமா அல்லது அருவருக்கத்தக்க கவர்ச்சியா என்றே தொடர்ந்து யோசிக்கலாம்.

திரைப்படங்களாவது பரவாயில்லை. வீடியோவிலோ, விசிடியிலோ பார்க்கும்போது குறிப்பிட்ட இடங்களை ஓட்டி சுய தணிக்கை செய்துவிடலாம். ஆனால், சினிமாச் செய்திகளைக் காண விழையும் வலைவாசகனின் இடைமுகம் எவ்வாறு இருக்க்கிறது என்று பார்த்திருப்பீர்கள். தட்ஸ்தமிழ், வெப்-உலகம் போன்ற தளங்களில் soft-porn படங்கள் தூவப்பட்டிருக்கும். இலக்கிய பக்கம், அரசியல் செய்திகள் என்று எங்கு சென்றாலும், ‘என் இடையைப் பார்; என் தொடையைப் பார்’ என்று இடது பக்கங்களிலும், பேனர்களிலும் கதாநாயகிகள் க்ளிக்க கூவுகிறார்கள்.

எப்பொழுதாவது எட்டிப் பார்க்கும் மேனேஜரும், நமுட்டுச் சிரிப்போடு ‘வேலையை முடிச்சா சரி’ என்று சென்று விடுகிறார். வீட்டில் நிலைமை இன்னும் மோசம். ‘ராத்திரி முழிச்சிருந்து இது என்ன வேடிக்கை?’ என்று வினா. நான் இலக்கியம்தான் படிக்கிறேன் என்பதை நம்ப மறுக்கும் பக்க அமைப்புகள். நானறிந்த இணையத்தளங்களில் சென்னைஆன்லைன்.காம் மட்டும் தேவலாம்.

செக்ஸ் வாசகர்களைக் கூட்டி வருகிறது.

சில ஆங்கில சினிமாச் செய்திகள் வழங்கும் தளங்களின் வலைமுகங்களையும் பாருங்கள்:

 • E!
 • IMDB
 • Hollywood
 • AOL

  ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் என எல்லாருமே கவர்ச்சிப் படுத்துவதில்தான் பிழைக்கிறார்கள். ஹாலிவுட் அந்தரங்க செய்திகளை பரபரப்பாக்கினாலும், நடிகைகளின் எசகிபிசகான போஸ்டருடன் வலையிடுவதில்லை. தமிழ் வலைத்தளங்கள் பெரும்பாலும், கவர்ச்சிப் படம் இல்லாமல் செய்திகளே வெளியிடுவதில்லை. ஆர்.எஸ்.எஸ். புண்ணியத்தால் இது மட்டுப்படலாம்.

  (கொங்கு-ராசா சொன்னதின் மூலம்) கிருபாவின் வலைப்பதிவிற்கு திடீரென்று நூற்றுக்கணக்கில் பின்னூட்டங்கள் வருவது தெரிந்து கொள்ளலாம்.

  Sex sells.

  த்ரிஷாவின் குளியலை கண்டனம் செய்யவும் அந்த ஹோட்டலில் தங்கிய பிற நடிகைகளின் வீடியோக்கள் கிடைக்குமிடத்தைத் தெரிந்து கொள்ளவும் குடும்பத்தை வம்புக்கிழுக்கவும் நிறைய வாய்ப்புகள். வாய்ப்பு கிடைத்தால் பார்க்காமல் இருப்பாயா, உன் குலப்பெண்ணாக இருந்தால் இதே காமத்துடன் டவுன்லோட் செய்வாயா என்று கேள்விகள்.

  மேல்தட்டு மக்களிடையே மட்டும் புகழ்பெற்றிருந்த மாடல் ‘பாரிஸ் ஹில்டன்‘ இவ்வாறு புகழ் பெற்றார். காதலுடன் எடுத்த முதலிரவு ஒளிப்பதிவை இணையத்தில் வழங்கியதன் மூலம் இமேஜ் அடிபட்டாலும், அப்பாவி பெண் அடைமொழி கிடைத்தது. தொலைக்காட்சித் தொடர் தொடர்ந்தது. பட்டி தொட்டியெங்கும் அறிமுகமாகி வாசனாதி திரவியம், ஆடை வகைகள் என்று அறிமுகம் நடக்கிறது.

  குளியலைறையில் படம் பிடிக்க த்ரிஷாவும், தமிழ்சினிமா.காமில் தொடர் எழுத சிம்ரனும் ஆணையிட்டிருக்கமாட்டார்கள். ஆனால், சிம்ரன் தன்னை ஒரு தலையாகக் காதலித்ததாக கமல் பீற்றிக் கொள்வது போல் அலட்டிக்கவும் மாட்டார்கள்.

  நடிகைகள் பகவத் கீதையின் படி பற்றற்ற நிலையில் தங்கள் நடிப்பைத் தொடர வேண்டும். கொஞ்ச காலம் கழித்து சன் டிவியில் ‘உறவுக்காக’ நடிக்கும்போது கிளிசரின் தேவைப்படாமல், தங்களின் explotation-ஐ நினைத்தே எளிதில் கண்ணீர் அருவிகள் கொட்ட வைக்கலாம்.

 • Categories: Uncategorized