Archive
ஓட்டுப் பெட்டி
இரண்டு தேர்தல்கள் சூடு பிடித்திருக்கிறது.
‘மதுர’விற்கு போடுங்க ஓட்டு என்கிறார்கள் : www.new7wonders.com (மார்க்கம்). இன்றைய தினமலரிலும் அறைகூவுகிறார்கள்: மீனாட்சி கோயிலை உலக அதிசயமாக்க தேவை உங்கள் ஓட்டு.
உலக அதிசயமாக தேர்ந்தெடுக்கப் பட்டால், கோவிலில் தீ பிடித்தால் பாதுகாப்பு ஏற்பாடுகள் சரியாக இருக்கிறதா, சுற்றுலா வசதி எப்படி மேம்படுத்தலாம் என்று எல்லாம் எழுத அருமையான வாய்ப்பு கிடைக்கும்.
இரண்டாவது 2004 Weblog Awards. இந்தியப் பழங்குடியில் இருந்து எவராவது அகப்படுகிறாரா என்று துழாவியதில் Rajan Rishyakaran மட்டுமே கண் முன்னே வந்தார். அவரும் தென் கிழக்கு ஆசியாதான். இந்தியாவும் அது சார்ந்த தரமான வலைப்பூக்களும் பரிந்துரைக்கப்படவே இல்லை. நம்மவர்களுக்கு என்றுதான் பதவி, பட்டம், வெற்றி ஆசைகள் வருமோ 😛
கொடுக்கும் விருதுகள் பட்டியல் கவர்ச்சியாக இருக்கிறது. அவற்றை அப்படியே தமிழுக்கு கொண்டு வந்தால் இப்படி சொல்லலாம்:
1. தலைசிறந்த வலைப்பூ
2. சிறந்த புதிய பதிவு (ஜூன் 2004-த்திற்கு பிறகு ஆரம்பிக்கப்பட்டது)
3. சிறந்த குழுப் பதிவு (ஒன்றாவது பரிந்துரைக்க முடியுமா?)
4. சிறந்த நகைச்சுவை/கிண்டல்/நக்கல் பதிவு
5. சிறந்த சமூக/கலாசார பதிவு
6. சிறந்த புகைப்படப் பதிவு
7. சிறந்த வடிவமைப்பூ
8. சிறந்த கட்டுரையாளர்
9. சிறந்த சிறுகதையாளர்
10. சிறந்த கவிஞர்
11. சிறந்த மேற்கத்திய பதிவுகள்
12. சிறந்த ஈழ பதிவுகள்
13. சிறந்த தமிழக பதிவுகள்
14. பெண்களுக்கான சிறந்த பதிவு
15. சிறுவர்களுக்கான சிறந்த பதிவு
16. சிறந்த அரசியல் பதிவு
17. சிறந்த வலதுசாரி பதிவு
18. சிறந்த இடதுசாரி பதிவு
19. சிறந்த ஊடகப் பதிவு
20. சிறந்த முகமூடி பதிவு
21. சிறந்த கேலி சித்திர பதிவு
22 சிறந்த சமய பதிவு
எல்லோருக்கும் ஒரு விருது வழங்க வேண்டுமானால், இன்னும் ஈராறு தலைப்பை சேர்த்துக் கொள்ளலாம் ;;-)
மறதி அல்லது வெட்கங்கெட்டவர்கள் – ஞாநி
thatstamil.com: ராஜீவ் ஆட்சிக்காலத்தில் ப.சிதம்பரம் உள்துறை இணை அமைச்சராக இருந்தபோது பஞ்சாப் தீவிரவாதிகளுக்கு அனுப்பப்பட்டது என்று கருதப்பட்ட ஆயுத சரக்குப் பெட்டகம் டெல்லி விமான நிலையத்திற்கு ஆப்கானிஸ்தனிலிருந்து வந்தது. விமான நிலைய காவல் துறை இதை சோதனை போட்டுக் கொண்டிருந்தபோதே அதை ‘ரா’ உளவுத்துறை அதிகாரிகள் வந்து தங்களுக்கானது என்று எடுத்துச் சென்று விட்டார்கள். அந்த பெட்டகத்தில் இருந்த ராக்கெட் லாஞ்சர் போன்ற சில ஆயுதங்கள் அடுத்த சில வாரங்களில் பஞ்சாபில் ஒரு தீவிரவாத குழுவால் பயன்படுத்தப்பட்டன.
அவை வெடித்த சமயம்தான் நடாளுமன்றத்தில் பஞ்சாப் மாநில நெருக்கடி நிலை நீடிப்புக்கு ஒப்புதல் தீர்மானம் நிறைவேற வேண்டிய நாள். ஒப்புதல் தரப்பட்டுவிட்டது. இந்த ஒப்புதலுக்காக உளவுத்துறை ஏற்பாடு செய்த வேலை இது என்று அப்போது பத்திரிகையாளர் திரேன் பகத் அம்பலப்படுத்தினார். (பின்னால் அவர் ஒரு சாலை விபத்தில் இறந்தார்.) அது பற்றி அவையில் கேள்வி எழுந்ததும், ப.சிதம்பரம் ஓர் அரசு தேசப் பாதுகாப்புக்காக சில விஷயங்களில் ஈடுபட வேண்டியிருக்கும். அவற்றைப் பற்றி அவையில் விவாதிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்வதாக சொன்னார். அத்துடன் நம் பிரதிநிதிகள் அதை விட்டுவிட்டார்கள். எதெல்லாம் அரசு ரகசியம் பார்த்தீர்களா? தீவிரவாதிகளுக்கு எதிரி நாடுகள் மட்டும் அல்ல நம் அரசே கூட உதவி செய்யும் என்ற விசித்திரங்கள் அரசு ரகசியம்தானே.
முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:
அறிவுத்திறன் குறைந்தவர்களுக்குத்தான் நினைவாற்றலும் குறைவாக இருக்கும். உரையாடல் சொற்பொழிவு, தகவல்கள், காதில் கேட்பது, படிப்பதை நீண்டநாள் நினைவில் வைத்திருக்கும் திறன் எனக்கு உண்டு. மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலுடன் நடந்த உரையாடல் விவரங்களை நான் எனது நினைவாற்றல் மூலம் மீண்டும் வெளியிட்டேன்.
ஆங்கிலம் இந்தியர்களை உயர்த்தியதா?
இதுவரை வெளிவராத பாரதியின் படைப்புகள் கண்டுபிடிப்பு என்னும் சுரேஷ் கண்ணனின் பதிவைப் படித்தேன். இந்த வார தினமணிக்கதிரில், 22 பிப்ரவரி 1910-இல் விஜயாவில் எழுதிய கட்டுரையின் சாம்பிள் கொடுத்திருக்கிறார்கள்.
கதிரில் இருந்து:
பாரதி ஆசிரியராக இருந்த ஒரே நாளிதழான “விஜயா’வில் வெளிவந்த, இதுவரை நூல் வடிவம் பெறாத கட்டுரை இது. டிசம்பர் 5 காலை, கோவை பாரதி வித்யா பவனில் வெளியிடப்படும் “பாரதி – விஜயா கட்டுரைகள்’ என்னும் நூலிலிருந்து “கதிர்’ வாசகர்களுக்காக முன்னோட்டமாக இங்கு வெளியிடப்படுகிறது. நூலின் பதிப்பாசிரியர் ஆ.இரா. வேங்கடாசலபதி. நூலின் 25 பக்க அளவிலான விரிவான முன்னுரையில் தன் தேடல் முயற்சியையும் தொகுத்தெடுத்த முறையினையும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார் அவர். “காலச்சுவடு’ வெளியிட்டுள்ள இந்நூலின் மொத்தப் பக்கங்கள் 440; விலை ரூ. 225.
நன்றி: Dinamani.com – Kadhir
Recent Comments