Home
> Uncategorized > பொங்குமாக்கடல் – அருணன்
பொங்குமாக்கடல் – அருணன்
ஈரோடு தமிழன்பன் – “நடை மறந்த நதியும் திசை மாறிய ஓடையும்“
1. செம்மாங்குடிகள் பாட்டில்
இசையிருக்கிறது
நம் கொல்லங்குடிகள் பாட்டில்
இதயம் அல்லவோ இருக்கிறது
கற்றவனுக்குக்
கம்பன் அமுதக் கிண்ணம்
கல்லாதவனுக்கோ
கண்ணதாசனும்
பட்டுக்கோட்டையும்
கஞ்சிக் கலயம்
சினிமாப் பாட்டு பற்றிய சர்ச்சையே கவிதையாகியிருக்கிறது. எளியவர்பால் கொண்ட அன்பு, கலையில் எளிமையை அழகாக நியாயப்படுத்தியிருக்கிறது.
2. நீ உயர முடியவில்லை
என்பதற்காக மலை மீது
கற்களை விட்டெறியாதே
உனக்கும்
உண்மைக்கும் ஊடல் என்றால்
பொய்யின் கன்னத்திலா
போய் முத்தமிட்டுக்
கொண்டிருப்பாய்
எதிர்க்க வேண்டும் என்பதற்காகவே எதிர்ப்பவர்களை இதைவிடக் கவித்துவமாகக் கண்டித்துவிட முடியுமா?
நன்றி: பொங்குமாக்கடல் – அருணன் : வசந்தம் வெளியீட்டகம்; பக்கங்கள்: 400; விலை: ரூ. 150/-
வெளியான இதழ்: இந்தியா டுடே
Categories: Uncategorized
Comments (0)
Trackbacks (0)
Leave a comment
Trackback
Recent Comments