Archive

Archive for January 10, 2005

எனக்கு வயசாயிடுச்சு போல?

January 10, 2005 4 comments

(இது காதல் படத்திற்கான குறிப்புகள். படித்துவிட்டு படம் பார்த்தால், படம் சுவைக்காது போகுமளவு நட், போல்ட் தகவல்கள் இருப்பதால், க்ளைமாக்ஸ் அறியாமல் பார்க்க விரும்புபவர்கள் தவிர்க்கலாம்!)

Anandhavikatan.com

ஒரு படத்தைக் குறித்து ஒன்றுக்கு மேற்பட்ட விமர்சனங்கள் படிக்கக் கூடாது. அப்படி படித்துவிட்டால், விமர்சனங்கள் நன்கு செரித்தபிறகே படத்தைப் பார்க்க வேண்டும். உடனடியாக படம் பார்ப்பதால், மீனாக்ஸ், பிரசன்னா, ராசா, விகடன், குமுதம் என்று அனைவரின் பார்வையிலும் படம் தென்படும். ஏதோ பார்த்த படத்தையே மீண்டும் பார்க்கும் உணர்வு உண்டாகும். இந்த இமாலயத் தவறை ‘காதலு’க்கு செய்தேன்.

விமர்சனம் படித்துவிட்டு பார்ப்பதாவது தேவலை. சன் டிவி திரை விமர்சனம், டாப் 10, திரைவானம், சூப்பர் சீன்ஸ் என்று எல்லாவற்றிலும் போடும் உருப்படியான காட்சிகளை டிவோ-விலோ, டி.வீ.ஆரிலோ பதிந்து தரிசித்து விட்டு, பாட்டுக்களையும் நீங்கள் கேட்ட பாடல், சூப்பர் 10, ஆடலும் பாடலும், பஜாஜ் உங்கள் சாய்ஸ் பார்த்து விட்டு, சுஜாதாவே சொல்லியிருக்காரே என்று ஏக எதிர்பார்ப்புடன் படம் பார்க்க உட்கார்வது இரண்டாவது கஞ்சன்ஞங்கா தவறு.

முடிவு ஏற்கனவே ஓரளவு தெரிந்ததால் அதிர்ச்சியும் இல்லை; அதிர்வும் இல்லை. அந்த மாதிரி தெருவோர கிராக்கிகளை நிறையப் பார்த்திருக்கிறேன். குப்பை பொறுக்கிக் கொண்டு, தானே பேசிக் கொண்டு, சடாமுடி தாடியுடன், பயமாக இருக்கும். அந்த கெட்டப்பில் பழைய காதலனை கண்டுபிடிப்பது எல்லாம் too much ஆக தோன்றியது.

காதலனை ஏமாற்றியதற்கு பிராயசித்தம் தேடும் காதலி, ஏதோ ஒரு மனநலம் குன்றியவனை, கணவரைக் கொண்டு தத்தெடுக்க வைப்பதே கதை.

இதற்கு ‘மதுர’ முலாம் அழகாகத்தான் இருக்கிறது. கூடப் படிக்கும் பயப்படுகிற பிராமணத் தோழி, ஒரு கை மட்டுமே உள்ள நைச்சியமான சித்தப்பா, சீரியலில் திளைக்கும் திண்டி போத்தி தடி அம்மாக்கள், என்று adjective filled எழுத்தாளர் போல், பழைய காரெக்டரைஸேஷன்களுக்கு நிறைய எக்ஸ்ட்ரா ஃபிட்டிங் கொடுத்திருக்கிறார்கள். தயாரிப்பாளரின் நுணுக்க உணர்வு இயக்குநருக்கும் இருக்கிறது.

ஒரே பாடலில் தொழிலதிபராகவோ அகில உலக புகழ்பெற்ற பாடகியாகவோ ஆக்கப்பெறும் விக்கிரமன் படத்தின் சாயல்களுடன் — சந்தோஷ தனிக்குடித்தன வைபவம் இங்கும் உண்டு. இயல்பு நடைமுறை இங்கு என் மனதை தொட்டது.

ஹார்ன் அடித்தே பள்ளிக்கூடத்தில் இருந்து ஒருத்தியே ஒருத்தியை மட்டும் சங்கேத பாஷையில் கூப்பிட்டு அழைத்து ஃபர்லாங் தூரத்துக்குப் பேசுவது, பெற்றோரை இடுப்பில் முடிந்து கொண்டே லவ்வுவது, அர்த்த ராத்திரியில் பைத்தியத்தை குடும்பப் பாட்டு பாடாமலேயே அடையாளம் காண்பது என்று யதார்த்தம்… யதார்த்தம்… யதார்த்தம்…

கேர்ஃப்ரீ-இன் product positioning, மிண்டோ ஃப்ரெஷ் விளம்பரத்தை நியாயப்படுத்தல், குறைந்த செலவில் நிறைவான இரவை சென்னையில் கழிப்பது எப்படி போன்ற பாடங்கள் என்று பொதிந்திருக்கும் விஷயங்கள் ஏராளம்.

படத்தில் நிறைய ஸென் போன்ற தத்துவங்களும் உண்டு. ஓடிப் போனால், காதலியின் வீட்டில் இருந்து முடிந்தவரை ‘எடுத்துக் கொண்டு’ வரச் சொல்ல வேண்டும். தளுக் புளுக் என்று இருந்தால் ஹீரோவின் லுக் கிடைக்கும். நீங்கள் சைட் அடிக்கும் மேற்கண்ட குஷ்பூ தோற்றம் உடையவரிடம் கடிந்து பேசினால்தான் காதல் கனியும். ‘மானே தேனே’ வேலைக்கு ஆகாது. பெற்றோர் தொலைக்காட்சி நெடுந்தொடரில் ஆழ்ந்து போனால், பொண்ணு ஓடிப் போவாள்.

திரைப்படம் வெகு வேகமாக செல்கிறது. கனல் கண்ணனின் விநோத அடிதடிகள் கிடையாது. பார்ப்பதற்கு அருமையாக இருக்கிறது.

அமெரிக்க பாஷையில் சொல்வதானால ‘ரொமாண்டிக் காமெடி’.

கோலிவுட் பாஷையில் வெற்றிகரமான காதல் படம் — தொடர்ந்து

 • காதலி பைத்தியமாகி, காதலன் வள்ளி தெய்வானையாக இருவரை மேய்ப்பது,
 • காதலனின் மனைவி பைத்தியமாகுவது,
 • காதலியின் கணவன் சட்டையைக் கிழித்துக் கொள்வது,
  என்று தொடர்ந்து அடுத்த இரண்டு வருடங்களுக்கு திருட்டு விசிடிப் பிரியர்களை காதல் பாயைப் பிராண்ட வைக்கும்.

 • Categories: Uncategorized

  சாகவில்லை மனிதநேயம் – கேடிஸ்ரீ

  January 10, 2005 Leave a comment

  Aaraamthinai:

  முதல் இரண்டு நாட்கள் அரசின் நிவாரண உதவிகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டாலும் தற்போது அரசும் மூழுவீச்சில் நிவாரணப் பணிகளை தன்னார்வ நிறுவனங்களுடன் கைகோர்த்துக் கொண்டு செய்து வருகிறது.
  இன்ன சாதி, மொழி, மாநிலம், நாடு என்றில்லாமல் தன் சகமனிதர்களுக்கு ஏற்பட்ட இழப்பை, கொடுமையை தங்கள் கொடுமையாக பாவித்து, இக்கட்டான சூழலில் அவர்களுக்கு கைகொடுத்து உதவுவதற்கு நான், நீ என்று போட்டி போடும் மனிதர்களை பார்க்கும் போது மனிதநேயம் இன்னும் மடிந்து போகவில்லை என்பது பெருமையாக இருக்கிறது.

  வேளாகன்னி மாதா கோயில் மண்டபம், நாகூர் தர்கா மற்றும் கோயில்களில் சாதிமதம் பாராது பல பேர் தங்கவைக்கப்பட்டிருப்பதும் மனிதநேயத்திற்கான சாட்சி.

  வெள்ளித்திரைகளில் அரிதாரம் பூசி ஒரே ஆளாக பத்து, பதினைந்து பேரை அடித்து நொறுக்குவதும், பணக்கார வீட்டு பெண்ணை துரத்தி துரத்தி காதலிக்கும் நம் தமிழ்த்திரைப்பட கதாநாயகர்கள் போல் 10 லட்சமோ, 20 லட்சமோ நிவாரண நிதி அளித்து விட்டு இத்துடன் நம் கடமை முடிந்தது என்றில்லாமல், பேரழிவு என்று கேள்விப்பட்டவுடன் தனக்கு நேர்ந்தது போல் பதறி துடித்து ஓடிவந்து வாழ்விழ்ந்தவர்களுக்கு ஆறுதலும், அவர்களிடம் உங்களுக்கு கரம் கொடுக்க நான் இருக்கிறேன் என்று கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை செய்து கொண்டிருக்கும் ஹிந்தி நடிகர் விவேக் ஓபராய்யின் மனிதநேயத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது.

  அரசு மேற்கொண்டிருக்கும் நிவாரணப்பணிகளில் போதிய வேகம் இல்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம் கூறிக்கொண்டிருக்கையில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், ”கடலூர் மாவட்டத்தில் நிவாரணப் பணிகள் சிறப்பாக நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியர் ககன்தீப்சிங் பேடியை மக்கள் பாராட்டுகிறார்கள். நாங்களும் பாராட்டுகிறோம்..” என்று பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

  இதற்கிடையில் தமிழகத்திற்கு சுற்றுலா பயணியாக வந்த பல வெளிநாட்டவர்கள் குறிப்பாக ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்த பெர்னார்ட் முல்லர் என்பவர் மதுரை செஞ்சிலுவை சங்கத்துக்கு சென்று சுனாமி பேரழிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன்னால் பண உதவி செய்ய முடியாவிட்டாலும் உடல் உழைப்பை தரத் தயாராக உள்ளதாக தெரிவித்ததும், பிரான்ஸ் நாட்டு தலைநகர் பாரீஸில் இருந்து பிளெஸ்ஸில்கினேர் என்ற பெண்மணி மீட்புப் பணியில் தன்னை இணைத்துக் கொண்டதும் இன்றைய பத்திரிகை செய்திகள். அதுமட்டுமல்லாமல் நார்வே நாட்டைச் சேர்ந்த தாமஸ் இலியாஸின் மற்றும் அவரது மனைவி ஆஸின்மேரி ஆகியோர் தங்களுக்கு படிப்புக்காக கொடுக்கப்பட்ட மூன்று லட்சம் ரூபாயிலிருந்து முப்பதாயிரம் ரூபாயை நிவாரண நிதியாக வழங்கியது குறிப்பிடத்தக்கது.

  இது இப்படியிருக்க பணம் உதவி மட்டும் செய்தால் போதும்.. அத்துடன் நம் கடமை முடிந்தது என்று நினைக்கும் நம்மில் சிலரை நினைத்து மனது நெருடாமல் இல்லை!”

  நன்றி: ஆறாம்திணை.காம்

  Categories: Uncategorized

  சுனாமி – ஜெயமோகன்

  January 10, 2005 Leave a comment

  சுனாமிப் பேரழிவும் பேரழிவு அரசியலும்: அனுபவக் குறிப்புகள் – ஜெயமோகன்
  Thinnai:

  நான்செல்லும்போது பிணம் தேடும்வேலைகள் மும்முரமாக நடந்துகொண்டிருந்தன. கத்தோலிக்க சர்ச்சின் பாதிரியார்கள் தலைமையில் மீனவ இளைஞர்களே முதன்மையாக களத்தில் இருந்தார்கள். கூடவே சீருடை அணிந்த ஆர் எஸ் எஸ் தொண்டர்கள். சேவாபாரதியின் பாட்ஜ் அணிந்த ஆர் எஸ் எஸ் காரர்கள். குளச்சல்பகுதியில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத் தொண்டர்கள்.

  மனித சடலங்களுக்கு ஒரு மரியாதையை நாம் எப்போதுமே அளிப்போம். இங்கே எதுவுமே இல்லை. தலைமாடு கால்மாடாக தாறுமாறாகக் கிடந்தன. ஆண் பெண் கலந்து. அரை நிர்வாணமாக. ஊதி உப்பி தோல் உரிந்து. குறிப்பாக குண்டான பெண்களின் மேல்தொடைகளும் ஆண்களின் தொப்பைகளும் நம்பமுடியாதபடி பெரிதாக ஊதியிருப்பது அசப்புப் பார்வைக்கு துணுக்குறச்செய்வது.

  மனம் குமையவைப்பவை குழந்தை உடல்கள். நாம் கொஞ்சி முத்தமிட்டு மகிழ்ந்த குண்டுக்கால் கைகள் குட்டித்தொப்பைகள் .அவற்றைப் பார்ப்பது ஒரு தகப்பனின் நரகம்.


  அரசு உதவிகள் புதன்கிழமைவரை சொல்லும்படி எங்கும் இல்லை. தைரியமாக கையிருப்புத்தொகையை செலவிடவும் ஆரம்பித்த பல அதிகாரிகள் இருந்தார்கள். ஆனால் பெரும்பாலான அதிகாரிகள் அதை ஒரு வகை கூலியற்றவேலை என எண்ணி தவிர்க்கவே முயன்றார்கள், பொறுப்பில்லாமலும் எரிச்சலுடனும் இருந்தார்கள் என்று சொன்னார்கள். குறிப்பாக ரெவினியூ அதிகாரிகள் [கிராமநிர்வாக அதிகாரி] பிணங்களைப் பதிவு செய்ய அவர்கள் ஆதாரங்கள் கேட்டு நிறைய சிக்கல் செய்தார்கள் என்றார்கள்.இன்னும் குறிப்பாக பெண் அதிகாரிகள் எந்த விதமான பொறுப்பும் இல்லாமல் இருந்தனர். களத்துக்குப்போன பெண் அதிகாரிகள் அனேகமாக எவருமே இல்லை என்று பலர் சொல்லி கேள்விப்பட்டேன். நான் எவரையுமே பார்க்கவில்லை.

  அரசு தரப்பிலிருந்து மிகப்பெரிய தவறு பஸ்களை நிறுத்தியது. சுனாமி அடித்த ஞாயிற்றுக்கிழமை ஏராளமான மக்கள் டிக்கெட் எடுக்காமல் பஸ்களில் எறி தப்பி ஓடினார்கள். அவர்கள் வழக்கப்படி ஆத்திரத்தில் சில பஸ்கள் மேல் தாக்கியதாகவும் சொன்னார்கள். உடனே நேசமணி போக்குவரத்து நிர்வாகம் எல்லா கடலோர பஸ்களையும் ரத்துசெய்துவிட்டது. செவ்வாய்கிழமைவரை எதுவும் ஓடவில்லை. அது உருவாக்கிய சிக்கல் சாதாரணமல்ல. இம்முடிவை யார் எடுத்தது என்று தெரியவில்லை.


  சாதாரண மாநாட்டுக்குக் கூட நான்கு லட்சம் பேரைக்கூட்டும் திமுக ஏன் சில நூறு தொண்டர்களைக் கூட அனுப்ப முடியவில்லை? மதிமுகவின் களநடைபோடும் சீருடைத் தொண்டர்கள் எங்கே? எந்த அரசியல் கட்சியும் வியாழன்வரை என் கண்ணுக்குப் படவில்லை. சன் டிவி தமிழக அரசை குறை சொன்னதே, திமுக தலைவர்கள் தங்கள் தொண்டர்கள் ஒருலட்சம் பேருடன் களமிறங்கியிருந்தால் அது எவ்வளவு பெரிய இமேஜை உருவாக்கியிருக்கும் ! கோடிக்கணக்கான ரூபாய் செலவில் நடத்தும் நூறு மாநாடுகளுக்கு அது சமம் அல்லவா? வை. கோபால்சாமி செய்திருக்கலாமே? அவருக்கு சீருடைப்படை உண்டே ? அடுத்த தேர்தலுக்குக் கூட அது பெரிய உதவியாக இருக்குமே. ஏன் செய்யவில்லை? சன் டிவி தொண்டு நிறுவனங்கள் களத்தில் உள்ளன என்று பொதுவாக சொல்லியபடியே இருந்தது. அவையெல்லாம் மத நிறுவனங்கள் என்று சொல்லவில்லை.

  மீட்புப்பணிக்கு எட்டு வேன் நிற்க மந்திரி கூட பந்தாவுக்கு எண்பது வேன் போயிற்று. ஏராளமான கார்கள் சூழ மன்னர்கள் போல வருகிற அரசியல்வாதிகள் ஒவ்வொருவரும் கலெக்டர் வலதுபக்கமும் எஸ்பி இடதுபக்கமும் நிற்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால் முக்கியத்துவம் போய்விடும் என்றும் நினைக்கிறார்கள். மக்கள் மத்தியில் வைத்து கலெக்டரிடம் சில கேள்விகள் கேட்டு சில கட்டளைகள் போட்டுவிட்டு அபப்டியே போவார்கள். திமுக மந்திரிகள் ஒருபடிமேலேபோய் அதிகாரிகளை மக்கள்முன்வைத்து திட்டி வசைபாடினார்கள்.

  ஆனால் நம் நிர்வாக முறையில் கலெக்டர் என்பவர் மிக முக்கியமான அதிகாரி. எல்லா ஃபைலும் அவரால்தான் கையெழுத்து போடப்படவேண்டும். அவர் இல்லாமல் வேலைகள் அப்படியே நிற்கும். ஒரு வி ஐ பி வந்து போனால் உடனே அடுத்த விஐபி வந்தார் . கலெக்டர் இப்படி மாட்டிக் கொள்வதைப்பற்றி பலரும் திட்டிவருத்தப்பட்டார்கள். ரெவினியூ அதிகாரிகள் பிணங்களை பதிவுசெய்ய என்ன அடையாளம் கேட்க வேண்டும் என்று குழப்பம். அதை கலெக்டர் கூடிப்பேசி உத்தரவாக இறக்க வேண்டும். கலெக்டர் வி ஐ பிகக்ளை உபசரித்தபடி அலைந்தார். மூன்றாம்நாள்தான் உத்தரவு போடப்பட்டதாக சொன்னார் ஒருவர் .


  குளச்சல் முகாமில் அப்படி வீணான சோறு நிறைய கிடந்தது. ஒருவரிடம் கேட்டேன் , அவர்களுக்கு வேண்டியதைக் கேட்டு அதைக் கொடுக்கலாமே என்று. இல்லை அன்னதானம் செய்தால்தான் புண்ணியம். அவர்கள் சாப்பிட்டுவிட்டு வாழ்த்துவதை நாம் காதால் கேட்கவேண்டும் என்றார். மதத்தின் இன்னொரு முகம் இது


  பிராமணர்கள் பெரும்பாலும் இப்படித்தான் இருக்கிறார்கள். சேவைக்காக ஒரு பிராமணராவது நேரடியாகக் களமிறங்கினார் என்று இன்றுவரை நான் காணவோ கேட்கவோ இல்லை. பல நூற்றாண்டுகளாக தனித்துவாழ்ந்த அக்ரஹார வாழ்க்கை அவர்களுக்கு உருவாக்கியிருக்கும் மன அமைப்பு அது. அதைத் தாண்டியவர்கள் மிக மிகக் குறைவே. இயல்பான சாதிசமூக மனதைத் தாண்டுவது மிகவும் சிரமம்.


  வெறுப்பை உருவாக்கிய இன்னொரு அம்சம் இப்போது ‘ஆறுதல் கூற’ வரும் சிதம்பரம் ,கார்திக் சிதம்பரம், முக ஸ்டாலின் ஆகியோருக்கு கட்சிக்காரர்கள் ‘வருங்கால முதல்வரே தமிழகத்தின் எதிர்காலமே ‘என்றெல்லாம் சொல்லி வெளியிடும் பத்திரிகை விளம்பரங்களும் சுவரொட்டிகளும். அவை பல்லாயிரக்கணக்கான ரூபாய் மதிப்புள்ளவை. அப்பணம் நிவாரணத்துக்கு அளிக்கப்படலாகாதா என்ற கேள்வி போகட்டும், இது அநாகரீகமாக உள்ளது.

  நன்றி: திண்ணை

  Categories: Uncategorized

  புலன் விசாரணை

  January 10, 2005 Leave a comment

  Tamil Nadu Police arrest junior Shankaracharya – Sify.com | SC grants bail to shankaracharya – Rediff

  கொடி அசைந்ததும் காற்று வந்ததா?
  காற்று வந்ததால் கொடி அசைந்ததா!

  ஒருவரை உள்ளே தள்ளி சாம, தான, பேத (தண்டம் too?!) முறைகளில் விசாரிக்கும் நேரம் முடிந்து போய்விட்டது. இப்பொழுது அடுத்தவர். ஜூனியர் விகடனுக்கு ஜூனியர் தீனி போடும் மாதமிது.

  உங்களைக் குறித்து ‘முதலாமவர்’ இதைச் சொல்லியிருக்கிறார். நீங்கள் செய்த இன்ன பிற அட்டூழியங்களை சூசகம் காட்டியிருக்கிறார் என்று பயமுறுத்தலாம். இவரிடம் இருந்து ஆடிக் கறக்கலாம்; அவரைக் குறித்த துப்புகளை பாடியும் கறக்கலாம். நடுவில் intermediary ஆக விளங்கிய சுந்தரேச அய்யர் போன்ற பலரையும் துண்டித்திருக்கிறார்கள்.

  மடியில் கனம் இல்லாவிட்டால் பயம் வேண்டாம்!?

  ‘அட்டகாசம்’ படம் பார்க்காவிட்டாலும் நேற்று பார்த்த ‘டாப் 10’-இல் துரோகியை அடையாளம் காட்டும்படி விண்ணப்பிக்கும் பகையாளியிடம் அஜீத் வசனம் பேசுகிறார்:

  அண்ணாச்சி… எந்தத் தொழிலில் இல்லாவிட்டாலும், இந்தத் தொழிலில் நேர்மை ரொம்ப முக்கியங்க!”

  Categories: Uncategorized