Home > Uncategorized > வடக்கும் தெற்கும்

வடக்கும் தெற்கும்


மிஸ்டர் கழுகு

Vikatan.com: “விவேக் ஓபராய் சுனாமி மீட்புப் பணியில் இறங்குவதற்கு முன்பு, குளிர்பான கம்பெனி ஒன்று நடிகர் விஜய்யை அணுகியதாம். சுனாமியால் பாதிக்கப்பட்ட ஏதேனும் ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து குறைந்தபட்சம் இரண்டு வார காலம் தங்கியிருந்து உதவிகள் புரியச் சொன்னதாம். மளமளவென்று வளரும் ‘சச்சின்‘ படத்தை மனதில் கொண்டு இயலாமையை தெரிவித்துவிட்டாராம் விஜய்.”

“நடிகை சிம்ரனையும் இதே கோரிக்கையுடன் அணுகியதாம் அந்த குளிர்பான கம்பெனி. தான் கர்ப்பமாக இருப்பதை சொல்லி, இணைந்து பணியாற்ற முடியாமைக்கு வருத்தம் தெரிவித்து ஒதுங்கிவிட்டாராம் சிம்ரன்.”


“தமிழகத்துக்குப் பிரதமர் இரண்டாம் முறையாக வந்தார். இந்த முறை சென்னை விஜயமும் இருந்தது. முதல்வரும் போய்ச் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது தி.மு.க&வைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களான டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் ஆகியோர் ஆஜர்.ஆனால், காங்கிரஸ் அமைச்சர் கள் யாரும் எட்டிக்கூடப் பார்க்கவில்லை. அதுமட்டுமல்ல… தமிழ்நாட்டில் சேத நிலவரங்கள் பற்றி பிரதமருக்கு முதல்வர் விளக்கிக்கொண்டிருந்தபோது, அருகிலிருந்த டி.ஆர்.பாலு சில பாயிண்ட்களை எடுத்துக் கொடுத்தார்…”

“ஓ! இதைத்தான் முதல்வர், ‘

டி.ஆர்.பாலு உதவிகரமாக இருந்தார்

‘ என்று தனது அறிக்கையில் சொல்லியிருக்கிறாரா?”

Categories: Uncategorized
 1. January 11, 2005 at 7:59 pm

  விவேக் ஓபராய் அந்த ஊரிலேயே தங்கி இப்படி உதவி பண்ணுகிறாரே… 16-வது நாள் வைபவத்தில் கூட குடும்பத்தில் ஒருவர் போல கலந்திருக்கிறாரே என்று திங்களிரவு சன்- னில் பார்த்தபோது பேசிக்கொண்டிருந்தோம்.

  இன்று பத்திரிக்கையில் வந்த ஒரு செய்தி…

  அன்று நடந்த நிகழ்ச்சியில் அந்த ஊர்மக்கள் கலந்துகொள்ளவில்லையென்றும், பின்னர் ஏன் என்று விவேக் விசாரிக்கும்போது தெரியவந்த விஷயம்:
  “விவேக் இங்கு இருப்பதால், அரசு கொடுத்துக்கொண்டிருந்த அரிசி, பருப்பு 2 நாட்களாக கொடுக்கப்படுவதில்லை. அவர் கட்டி வரும் குடிசைவீடுகளும் அப்படியே நிற்கிறது. அவர் நாளைக்கு ஊருக்குப்போயிட்டா யார் உள்ளூர்வாசிகளுக்கு உதவி பண்ணுவார்கள்….????”

  எங்க போயி முட்டிக்கிறதுன்னு தெர்ல….

 2. January 11, 2005 at 8:03 pm

  மற்றப்படி விவேக் ஓபராயை- பின்னுருத்தி இயக்குவது குளிர்பான நிறுவனம் என்பது இங்குதான் படிக்கிறேன். ஒருவேளை அவர்கள் கேட்டு விஜய்/சிம்ரன் மறுத்திருந்தால் தவறொன்றுமில்லை. உள்ளபடியே மனதுவந்து செய்வது வேறு… கூலிக்கு மாரடிப்பது வேறு. ஆனால், எனக்கு விவேக் ஓபாராய் மேல் இருப்பது – அவர் எப்படி அந்த கிராமத்துக்கு அழைத்து செல்லப்பட்டு போயிருந்தாலும், இப்போது மனமுவந்து உதவி செய்கிறார்.

 3. January 11, 2005 at 8:26 pm

  முதல் செய்தி கடுப்பேத்துகிறது.

  விவேக் ஓபராயே தன்னுடைய சொந்த விருப்பத்தினால்தான் களத்தில் இறங்கியதாக படித்தேன். அவர் செய்வதைப் பார்த்து, இங்கிருக்கும் பெப்ஸி/கோக்-குக்கும் இந்த ஐடியா தோன்றியிருக்கலாம்.

  திரைப்படத்தில் தோன்றுவது ‘நடிப்பு’தான் என்று உள்மனத்துக்கு உரைத்தாலும், வீரவசனம் பேசி, ஆக்ஷன் கிங் போல நடிக்க மட்டும்தான் இவர்களுக்கு வருமா?

  அதுவும் அதிமுக்கியமான படம் நாலு வாரம் தள்ளி வெளிவந்தால் ஃபைனான்சியர் எல்லாம் தலையில் துண்டு போட்டு விடுவார்களா?

  ஒரு படத்துக்கு மூன்றரை கோடி வாங்குகிறார் விஜய். வருடத்திற்கு குறைந்த பட்சமாய் மூன்று படமாவது வெளிவருகிறது. பத்து கோடி வருட சம்பளம் உள்ள விஜய், அளித்திருக்கும் நிதியும் ஒண்ணும் பெரிய அளவில் இல்லை. வெறும் பத்து லட்சம்.

  வாய்ச்சவடாலில் மட்டும் நடிகர்களுக்கு குறைச்சலில்லை.

 4. Anonymous
  January 12, 2005 at 12:47 am

  Is it a planted story to belittle Vivek’s efforts by people/govt stung by his spontaneity ?

 1. No trackbacks yet.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: