Archive

Archive for January 28, 2005

மங்கையர் மலர்

January 28, 2005 2 comments

தனியா:

நான் ஒரு
அதிர்ஷ்டசாலி
கூட்டணியின்றி
ருசிக்காத
என்னை
தனியா என்கிறார்கள்.
கண்ணாடியில்
மட்டுமல்ல…
சமையலிலும்
ரசம்
சரியில்லை என்றால்
திருப்தியிருக்காது


குருபிரியா:

“உன் வரவேற்பு அறையில் ஒன்றுக்கு இரண்டாய்… அமெரிக்கக் கொடிகளை வச்சிருக்கியா? இது உனக்கே நல்லா இருக்கா? இந்த நாட்டில பிறந்து விட்டு அன்னிய நாட்டுக் கொடியைப் போற்றுகிறாயே! இது கட்சி மாறிய அரசியல்வாதி செயல் போன்றது”.

“இதில் என்ன தப்பு? என் பையன்களை வாழவைத்து… ஏன் வாழ வைத்து கொண்டு இருக்கிற நாட்டுக் கொடியை வணங்கினால்… என்ன தப்பு?”.

“சோறு கண்ட இடம் சொர்க்கம்! என்பது போலவா? தாய்நாட்டுப் பற்றே உனக்கும்… உன் பிள்ளைகளுக்கும் இல்லை!”.

“இதற்குப் பெயர் நன்றி சொல்லல். என் குழந்தைகள் மட்டுமல்ல… எத்தனையோ வீட்டுக் குழந்தைகளை வாழ வைத்து… இந்தியப் பொருளாதாரத்தை உயர்த்தும் ஒரு நாட்டுக் கொடியை. நான் வணங்குவதும், மரியாதை செய்வதும் தப்பே இல்லை.”

என் தோழி மட்டுமல்ல… நிறையப் பேர் இப்படிச் சொல்வதை நான் கேட்டிருக்கிறேன். அங்கு என்னவோ… அந்தக் குழந்தைகள் தண்ணி அடிச்சிட்டு… கிளப் டான்ஸ் ஆடுவதாக நிறையப் பேர் கற்பனையில் இருக்கு. அங்கு போய்ப் பார்த்தால்லவா தெரியும். அந்தப் பிள்ளைகள்.. சனி ஞாயிறு கோவிலுக்கு வருவதையும், தைப் பூசம்… விநாயக சதுர்த்தி போன்ற விசேஷங்களில் கோயிலில்… உட்கார்ந்து நெற்றி நிறைய விபூதி குங்குமமும், சஷ்டி கவச பாராயணமுமாக அமர்ந்திருப்பதும் கண்கொள்ளாக் காட்சி.

இந்தியாவில்… கோயிலில் எங்கே இத்தனை பையன்கள் வருகிறார்கள்? நம் நாட்டுப் பண்பை, நல்ல எண்ணங்களை வெளிநாட்டில் காப்பாற்றி, இந்தியாவை புகழச் செய்கிறார்கள். யார் உதவியும் இல்லாமல் அவரவர் வேலைகளை, சமைப்பது, வீடு கிளீனிங்… பாத்திரம் துலக்குவது என்று தனக்குத்தானே செய்து கொண்டு சோம்பித் திரியாத பிள்ளைகளைக் கண்டு நாமல்லவா பெருமைப்பட வேண்டும்!

என் குழந்தைகளை வாழவைக்கும் ஒரு நாட்டின் தேசியக் கொடிக்கு நான் மதிப்பு தருவது தவறில்லையே! நீங்களே சொல்லுங்கள் தோழிகளே!

எழுத்தாளர் பிரபஞ்சனையும் இந்த குருபிரியாவையும் சந்திக்க வைச்சா நல்லா இருக்கும் 😉


ஃப்ளாட்டில் விழும் விட்டில் பூச்சிகள்

வாடகை வீடு வசதிக் குறைவு.
சொந்த வீட்டில் சொகுசாய்
வாழலாம் என, வயிற்றைக்
கட்டி, வாயைக் கட்டி, குருவியாய்
சேர்த்த பணம் போதாமல், சொந்த
பந்தங்களிலிருந்து, சொஸைட்டி
வரை கடன் வாங்கியும் போதாமல்
மனைவி நகைகளை அடகு
வைத்து, ·ப்ளாட் ஒன்று வாங்க,
நண்பன் விரித்த வலையில் வீழ்ந்து
மொத்தத் தொகையையும் முன்னால்
கொடுத்து ஏமாந்த கதை, சோகக்
கதை : வெளியே சொன்னால் வெட்கம்,
உள்ளே இருந்தா துக்கம், இருந்தாலும்
சொல்றேன். சுவரிடம் சொல்லி அழ
லாமென்றாலோ, கலப்பட சிமெண்டில்
கட்டிய சுவர், கட்டிய ஆறு மாதத்திலேயே
காரையாய்ப் பிளந்து நிற்கும் அவலம்.
என் கண்ணீர் பட்டு காணாமல் போய்
விடுமோ என அச்சம்
”நந்தி கன்ஸ்ட்ரக்ஷன், நல்லதொரு
கன்ஸ்ட்ரக்ஷன், அப்டுடேட் மாடலில்
அழகான ·ப்ளாட், நீங்கள் விரும்பும்
விதத்தில், ஆறே மாதத்தில், ஆனந்தமாய்
குடிபோகலாம்” என அன்பொழுக, அருண்
ஐஸ்கிரீமாய் உருக வைத்தார்; கிருஷ்ணா
ஸ்வீட்ஸ் மைசூர்பா வாய்கரைய
வைத்தார் இனிய பேச்சில். இழப்பது
தெரியாமல் வேடன் விரித்த
வலையில் வீழ்ந்தது மான்.
ஆறு ஆறு மாதம் ஆகியும் ஆகாது வீடு,
·ப்ளாட்டிற்கும், அலுவலகத்துக்கும்
நடந்து, செருப்போடு, முட்டியும் தேய்ந்து
விடும். கன்ஸ்ட்ரக்ஷன் முதலாளியைக்
கண்ணால் கூட பார்க்க முடியாது.
உள்ளே இருந்து கொண்டே இல்லை
எனும் அலுவலக நந்திகள் படுத்தும் பாடு
அப்பப்பா! பாஸ் மீட்டிங்கில் இருக்கிறார்
நாளைக்கு வா என்பர். மறுநாள்
சென்றால் அதிகாலை ப்ளைட்டில்
அமெரிக்காவுக்கு, உல்லாஸப் பயணம்
சென்று விட்டதாக அலக்ஷ¢யமாக
சொல்வர். எத்தனை குருவிகள்
சேர்த்த பணமோ, பருந்து பறக்கிறது.
பங்களாவும் காருமாக, பவனி வருவர்.
பங்கு மார்க்கெட்டில் பல கோடி
சுருட்டி, மனைவி பேரில் மாளிகை
அமைப்பர். முள்ளில் போட்ட சேலை
யாகிப் போச்சு. வீட்டிற்குச் சென்றால்
மனைவியோ, ”முழுப் பணத்தையும்
முன்னதாகக் கொடுக்க வேண்டாம்
என முட்டிக் கொண்டேன், வீட்டு
வேலைக்கு ஆள் வைத்தால்,
ஆகும் பணம் என, நாயாய், பேயாய்
உழைத்துச் சேர்த்த காசு எப்போதும்
தும்பை விட்டு வாலைப் பிடிக்கிற வேலை”
என மூக்கைச் சிந்தி, முந்தானையில் துடைக்
கும் மனைவியை, கையை ஓங்கி
அடிக்கச் சொல்லும். கட்டடக்காரரிடம்
காட்ட முடியாமல், கட்டிய மனைவியிடம்
காட்டச் சொல்லும். இல்லத்தால், இல்லாளிடம்
சண்டை!

ஆனதுவரைக்கும், கட்டியது
முடிந்த வரைக்கும் விட்டுக் கொடுத்து,
வீட்டிற்குள் சென்றால், ஒரு பக்கம் கரண்ட்
கட்டாகியிருக்கும், பாத்ரூமில் தண்ணீர்
வாட்டமின்றி, பாத்ரூம், பாத் டப்பாய் மாறி
நிற்கும். இன்னும் எத்தனையோ? எடுத்துச்
சொன்னால் மாளாது. இத்தனையும் மறந்து
ஆசையாய்ப் போட்ட ஊஞ்சலில், உட்கார்ந்து
ஐந்து நிமிஷம் ஆடுவதற்குள், ‘போச்சு!
போச்சு!’ என உயரே இருப்பவர் ஓடி
வருவர். உரத்த குரலில், ‘ஊஞ்சல் சத்தம்
உயரே கேட்கிறது, உறக்கம் போச்சு’
என, ஊஞ்சலாட்டத்துக்குத் ‘தடா’, பொடா
போடுவர்.

ஆறு மாதம் ஆகியது, ஒருநாள்
”கட்டிய ·ப்ளாட்டில் வயலேஷன் இருக்கு,
ப்ளான்படி கட்டவில்லை, இடித்துத் தள்ளு
வோம்”, என முனிசிபாலிடி நோட்டீஸ் வந்து
பொக்ரான் குண்டாய் பயமுறுத்தும். வய
லேஷன் இடத்துக்கும் சேர்த்து பணம் வாங்கிக்
கொண்ட, கன்ஸ்ட்ரக்ஷன் முதலாளியிடம்
போனால், பணம் கட்டியாகி விட்டது என
கூசாமல் பொய்யுரைப்பர், கட்டிய
பணத்திற்கு ரசீதும், ஒரிஜினல் பிளானும்
தர மாட்டார். திருப்பதி பெருமாளைக்
கூடப் பார்த்து விடலாம், திரும்பிக் கூட
பார்க்க மாட்டார். திருநெல்வேலிக்கே
அல்வா கொடுப்பர். நம்பிச் சென்ற
நண்பனும், நைசா நழுவிக் கொள்வான்.
மற்ற ·ப்ளாட்காரர்களும் சேர்ந்து முடிவெடுக்க
லாமென்றாலோ, நவக்கிரகமாக ஒத்து
வரமாட்டார்.
கோயிலுக்கே போக வேண்
டாம் எல்லாம் ·ப்ளாட்டுக்குள்ளேயே இருக்கும்!

போதுமடா சாமி! புது வீட்டு வாழ்க்கை
ஆனந்தம் என்பது அணுவளவு இல்லை என
புண்ணாகி நிற்கையில் அழைப்பு மணி ஓசை
அருமை நண்பன், அவனுக்கொரு ·ப்ளாட் வேணுமாம்
அனுபவம் உள்ள நான் வாங்கித் தரவேணும்
என்ற நண்பனிடம், நான்பட்ட, படும் அனுபவத்தைச்
சொன்னால் கேட்க மறுக்கிறான்
அடம்பிடிக்கிறான், ஐயகோ! என் செய்வேன்?
இதோ! இன்னும் ஒரு, இல்லை, இல்லை
எத்தனை விட்டில் பூச்சிகளோ? விதி
வழி செல்லும் மதி. யான் பெற்ற இன்பம்
இவ்வையகமும் பெறுக.


1997-இல் என்னுடைய காரில் சிடி, டேப், எம்பி3, வைனில் என்று போட்டு பாட்டு கேட்க முடியாது. செல்பேசியும் அதிகம் பிரபலம் ஆகாததால் மிகக் குறைந்த நிமிடங்களே காரில் இருந்து அளவளாவ முடியும். நிறைய ஆங்கிலப் பாடல்கள் கேட்டதில் மனதில் தங்கிப் போன பாடல் இது. முணுமுணுக்க வைக்கும் மெட்டுதான் முதலில் கவன ஈர்ப்பு தந்தது. தெளிவாகப் புரியாத ஆங்கிலப் பாடல்களில் முதலில் கவர்வது இசைதான். அப்புறம் பாடல் வரிகளும் போட்டுத் தாக்க சிடி வாங்கி வைத்துக் கொண்டேன். ஒரு பாட்டினாலே மட்டும் கோடீஸ்வரனாவது ‘சூரியவம்சம்’ மட்டுமல்ல. மெரடித் ப்ரூக்ஸ் போன்ற பலருக்கும் பொருந்தும்.

Meredith Brooks- Bitch Music Video

Categories: Uncategorized