Home > Uncategorized > ஆவி வார்த்தை

ஆவி வார்த்தை


கல்லூரி காலத்தில் ஒய்ஜா போர்டில் ஆவி கூப்பிடுவது பிடித்தமான பொழுதுபோக்கு. அப்படி ஒரு முறை நடிகர் முத்துராமனை அழைத்துப் பேசிய குறிப்புகள்.

1. ஆவியுலகத்தில் எத்தனை பகுதிகள்?
நான்கு (A, B, C, D)

2. ஆவியுலகத்தில் எந்தப் பகுதியில் இருப்பவர்கள் எல்லா உலகத்தையும் பார்க்கமுடியும்?
ஏ, பி

3. சி, டி பகுதியில் இருப்பவர்க்கு விமோசனம் உண்டா?
உண்டு.

4. அவர்கள் எவ்வளவு நாள் இருக்க வேண்டும்?
சுமார் 8 வருடம்

5. ஆவியுலக்த் தலைவர் யார்?
Divsdrep

6. அவர் எந்த நாட்டுக்காரர்?
துபாய்

7. உங்களுக்கு அந்தப் பதவி கிடைக்குமா?
கிடைக்காது.

8. அவர் எந்தப் பகுதியில் இருக்கிறார்/

9. நீங்கள் பி-யிலிருந்து ஏ-க்குப் போக முடியுமா? (விருந்தினராக/விசிட்)
முடியாது.

10. நீங்கள் அங்கேயே புண்ணியம் செய்து ஏ பகுதிக்கு செல்ல முடியுமா?
முடியும்

11. எந்த விதத்தில் என்று கூற முடியுமா?
முடியாது

12. காலயிலும் மாலையிலும் பூஜை செய்கிறீர்களா? அதனால் நன்மை என்ன?
போடா (மறக்கவே முடியாத பதில் 😉

13. ஆவியுலகத்தில் இருக்கிறவர்கள் உருவத்தைப் பார்க்க முடியுமா?
முடியும்

14. எதிர்காலத்தைப் பற்றி சொல்கிற சக்தி உண்டா?
இல்லை.

15. அந்த சக்தி எந்தப் பகுதியில் உள்ளவர்க்கு உண்டு?

16. இன்னும் எத்தனை நாட்களுக்கு நீங்கள் அந்தப் பகுதியில் இருக்க வேண்டும்?
10 வருடங்கள்

17. பேய்க்கும் ஆவிக்கும் வேறுபாடு உண்டா?
உண்டு

18. பேய் என்று எப்படி கண்டுபிடிப்பது?
இருள் பகுதியில் இருப்பவர்கள்

19. அங்கு நீங்கள் சந்தோஷமாக இருக்கிறீர்களா?
ஆமாம்

20. உங்களுக்கு திடமான உடம்பு உண்டா?
கிடையாது.

21. ருசி, வாசனை இவற்றைப் புரிந்துகொள்ள முடியுமா?
முடியும்

22. இறந்தவர்கள் ஆவி அந்த வீட்டின் முன் எத்தனை நாளைக்குச் சுற்றி வரும்?
15 நாட்கள்

23. முனீஸ்வரன் என்பது ஆவியா? கடவுளா?
கடவுள்

24. காட்டேரி என்பது பேயா?
ஆமாம்

25. முனீஸ்வரன் என்பதில் பாகுபாடு என்ன?
கெட்டது… நல்லது

26. ஏ பகுதியில் இருப்பவர்களைக் கூப்பிட்டால் வருவார்களா?
வர மாட்டார்கள்

27. விபத்துக்கு உள்ளானவர்கள் எந்தப் பகுதியில் இருப்பார்கள்?
எல்லாப் பகுதிகளிலும்

28. நோய்வாய்ப்பட்டவர்கள், நாள்பட இருந்தவர்கள் எந்தப் பகுதியில் இருப்பார்கள்?
பி

29. சி, டி பகுதியில் இருப்பவர்கள் நல்லவர்களா? கெட்டவர்களா?
கெட்டவர்கள்

30. தற்கொலை செய்தவர் எந்தப் பகுதி?
எங்கு வேண்டுமானாலும்

31. சி, டி-யில் இருப்பவர்கள் பேய்கள் மாதிரியா?
ஆம்

32. கெடுதல் செய்யாமல் தடுக்க உங்களால் முடியுமா?
முடியாது

33. கெடுதலை தடுக்க என்ன வழி
தெரியாது

34. மந்திரவாதிகளால் முடியுமா?
முடியாது

35. சாமி வந்து ஆடுகிறவர்கள் சாமியா, ஆவியா?
ஆவி

36. கடவுள் மனிதர்கள் மேல் வருவார்களா?
இல்லை

37. நீங்கள் காந்தி, நேரு எல்லாம் பார்த்து இருக்கிறீர்களா?
ஆமாம்

38. அவர்கள் எந்தப் பகுதியில் இருக்கிறார்கள்?

39. சி, டி பகுதியில் இருப்பவர்களைக் கூப்பிட்டால் வருவார்களா?
வரமாட்டார்கள்

40. நீங்கள் ஒருவருக்கு கெடுதல் செய்தால் தண்டனை உண்டா?
உண்டு

41. அங்கு ஜாதி, மதம் உண்டா?
இல்லை

42. மற்ற கிரகங்களைப் பார்த்ததுண்டா?
இல்லை

43. மற்ற கிரகங்களைப் பற்றி கூற முடியுமா?
இல்லை

44. அவி உலகத்தில் இருக்கின்ற ஆவிக்கு வளர்ச்சி உண்டா?
உண்டு

45. ஆவிகளுக்கு அதிவேகமாகப் போகக்கூடிய சக்தி உண்டா?
உண்டு

46. நீங்கள் இந்தக் கிண்ணத்தில் அடைபட்டு இருப்பது சந்தோஷமா? கஷ்டமா?
சந்தோஷம்

47. காலையும் மாலையும் 5-7 வரை பூஜை நேரம். கூப்பிடக் கூடாது என்கிறார்களே… உண்மையா?
ஆம்

48. கூப்பிட்டால் வருவீர்களா?
மாட்டேன்

49. பிராணிகளுக்கு தனி உலகம் உண்டா?
உண்டு

50. நீங்கள் அந்த உலகத்தைப் பார்த்து இருக்கிறீர்களா?
இல்லை

51. அதைப் பார்க்கக் கூடாது என்று கட்டளை உண்டா?
உண்டு

குறிப்பு:
* இதே மாதிரி வேற்று கிரகவாசி நம்மிடம் வந்து கேள்வி கேட்டால், பதில்கள் எவ்வாறு இருக்கும்?!
* பல பதில்கள் எங்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு அமைந்திருந்தது.
* இன்றைய சூழலில் வேறு யாரையாவது கூப்பிட்டு இதே கேள்விகளைக் கேட்டு cross-examine செய்யவேண்டும்

Categories: Uncategorized
  1. February 9, 2005 at 8:32 am

    Balaji,
    Have you ever tried to record the voice of spirit?.. yesterday i was thinking of asking this to you. I heard it is posible to record the voice, may be you can try to record the voice in your computer. Just start the recording and ask questions… i am thinking of tryign this.. if get soemthing let you know. 🙂

  2. February 9, 2005 at 9:56 am

    இன்னும் அந்த முயற்சியில் இறங்கவில்லை முத்து. பெரும்பாலான சமயங்களில் ‘ஒய்ஜா போர்டை’யே பயன்படுத்தியிருக்கிறோம். Skeptic மக்களை ஓரளவு வியக்க வைப்பதாலும், எளிதாக இருப்பதாலும் அவ்வாறே தொடர்ந்திருக்கிறோம். இப்பொழுதெல்லாம் இந்த மாதிரி விளையாட நேரமே கிடைப்பதில்லை.

    உங்க முயற்சி எவ்வாறு சென்றது என்று அறிய ஆவலாய் உள்ளது!

  3. Anonymous
    February 9, 2005 at 10:45 am

    Dear BALA,
    I am amazed that you could remember all these (so many!) questions from your college days 😉

    //12. காலயிலும் மாலையிலும் பூஜை செய்கிறீர்களா? அதனால் நன்மை என்ன?
    போடா (மறக்கவே முடியாத பதில் ;-)//

    This is a GOOD question. Why the “Avi” got irritated, I do not understand (may be because, I am human, after all) !!!

    //35. சாமி வந்து ஆடுகிறவர்கள் சாமியா, ஆவியா?
    ஆவி//

    So, we should from now on call such people as “ஆவி வந்து ஆடுகிறவர்கள்” 😉

    enRenRum anbudan
    BALA

  4. February 9, 2005 at 10:56 am

    51 கேள்வியும் ஞாபகம் வைத்துக் கொள்வதா :-))

    கலந்து கொள்ளாதவர்களுக்காகவும், மறுபடி வேறு யாரையாவது கூப்பிடும்போது இதே கேள்விகளைத் திரும்பக் கேட்டு குறுக்கு விசாரணை செய்யவும் ‘நோட்ஸ்’ எடுத்து வைத்துக் கொண்டோம். பழைய குப்பையைக் கிளறியதில் இருந்து தட்டச்சினேன்.

  5. February 9, 2005 at 1:09 pm

    அந்த ஆவி சொன்னது அத்தனையும் உடான்ஸ்

    இப்படிக்கு,
    Z பகுதி ஆவி

    🙂

  6. mahaasamrat
    November 10, 2008 at 3:51 pm

    this is cheating

  1. No trackbacks yet.

Leave a reply to KARTHIKRAMAS Cancel reply