Archive

Archive for February 10, 2005

பொறிப்புரை

February 10, 2005 8 comments

ச.திருமலை: ஒரு ஹிந்துத்துவா ஆதரவாளர் ‘காதல்’ படத்தைப் பார்த்திருந்தால் இப்படி எழுதியிருப்பாரோ:

‘மதுரை என்பது ஒரு கோவில் நகரம். ஹிந்துக்களின் முக்கியமான கோவில், பிரமாணடமானக் கோவில் உள்ள நகரம். உலக அதிசயத்தில் ஒன்றா என்று வாக்கெடுப்பு நடத்தப்படும் நகரம்.

அந்த நகரத்தைக் காண்பிக்கும் பொழுது கேமரா கோணம் அங்குள்ள மசூதி ஒன்றை பிரமாண்டமாகக் காட்டி, அரபி மொழியில் ஓதப்படும் ஒலியின் பிண்ணனியில், மீனாட்சி அம்மன் கோவிலை சிறிதாகக் காண்பிக்கிறார் ஒரு போலி மதச்சார்பின்மைவாதியான பாலாஜி சக்திவேல். அந்தக் கோணம் ஏதோ மெக்கா மெதினாவைக் காண்பிப்பது போல் இருந்தது. நிச்சயம் அந்தக் கோணம் தற்செயலான ஒன்றாக இருந்திருக்காது. ஒரு பிரமாண்டமான கோவிலை சிறுமைப் படுத்தும் முயற்சியே இது.

இது போக இவர் பல காட்சிகளில் கிறிஸ்துவக் கடவுள்களுக்கும் தேவாலயங்களுக்கும் காண்பிக்கும் முக்கியத்துவம் இந்துக் கடவுள்களுக்குக் காண்பிப்பக் படுவதில்லை. மேலும் பழநிக்குப் பாதயாத்திரை போகும் பக்தர்களை கேலி செய்யும் விதத்தில் ஒரு வசனமும் வருகிறது. தி க காரர், மற்றும் கிறிஸ்துவரான தேவசகாயத்தின் கடையான எண்ணெய்ப் பலகாரக் கடைக்கு முக்கியத்துவம் கொடுத்துக் காண்பிக்கப் படுகிறது. திண்டுக்கல்லில் ஈ வே ரா சிலையைக் காண்பிக்கின்றார்கள்.

காதலுக்கு ஆதரவு அளிப்பவராக ஒரு கிறிஸ்துவரையும் எதிர்ப்பு தெரிவிக்கும் கொடுமனம் படைத்தவர்களாக குங்குமம் வைத்துள்ள ஒரு இந்துவும் காட்டப் படுகிறார்கள். ஆகவே இது முழுக்க முழுக்க ஒரு இந்து மத விரோதி எடுத்த படமே என்பது உறுதியாகிறது’.

Yahoo! Groups : RaayarKaapiKlub Messages : Message 10797 — அ. ராமசாமி :: தீம்தரிகிட


நிலாச்சாரல்.காம் :: “ஒட்டக்கூத்தர் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்

குலோத்துங்க சோழனின் அவைக்களப் புலவரும் குருவுமான ஒட்டக்கூத்தர் புகழேந்தியை எக்காரணமுமின்றிச் சிறையிலடைத்துவிட்டார். இந்த விவரத்தைக் கேள்வியுற்ற ராணிக்குக் கோபம் வந்து விட்டது. அதனால் அவள் அரசன் அந்தப்புரத்திற்கு வரும் சமயம் அறைக்குள்ளே புகுந்து கொண்டு கதவைத் தாழிட்டுக் கொண்டாள். மன்னன் குரல் கொடுத்தும் கதவைத் திறக்கவில்லை. அந்த நாளில் மகாராணிகள் ஊடல் கொண்டால் மன்னர்கள் தங்கள் அவைக்களப் புலவரை அனுப்பி சமாதானம் செய்து வைப்பது வழக்கம். அதன்படியே குலோத்துங்கனும் தனது அவைக்களப் புலவரும் குருவுமான ஒட்டக்கூத்தரை அனுப்பினான்.

நானே இனியுன்னை வேண்டுவதில்லை நளினமலர்த்
தேனே கபாடந் திறந்திடு திறவா விடிலோ
வானேறனைய வாள் விரவிகுலாதிபன் வாசல் வந்தால்
தானே திறக்கு நின் கையிதழாகிய தாமரையே!

இந்தப் பாடலைக் கேட்ட அரசியின் கோபம் அதிகமாகவே அவள் கதவின் இன்னுமொரு தாழ்ப்பாளையும் தாளிட்டுக் கொண்டாள். அப்படித்தான் ‘ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்” சொற்றொடர் உருவானது.

ஒட்டக்கூத்தரின் மீது மனைவியின் கோபத்திற்குக் காரணம் புகழேந்திப் புலவர் சிறையிலிருப்பதுதான் என்பதைப் புரிந்து கொண்ட அரசன் உடனே புகழேந்தியை விடுதலை செய்து அவரை அந்தப்புரத்திற்கு அனுப்பித் தன் மனைவியை சமாதானம் செய்யும்படிக் கேட்டுக் கொண்டான். புகழேந்தி அரசியின் வாசலுக்கு வந்து

இழையன்றிரண்டு வகிர் செய்த நுண்ணிடை யேந்தியபொற்
குழையன்றிரண்டு விழியணங்கே கொண்ட கோபந் தணி
மழையன்றிரண்டு கைப் பாணாபரண நின் வாசல் வந்தால்
பிழையன்றிரண்டு பொறாரோ குடியிற் பிறந்தவரே!

எனும் பாடலைக் கூறியதும் அரசி இரண்டு தாழ்ப்பாள்களையும் திறந்தாள்.

பாடல்களின் விரிவுரைக்கு: nilacharal.com

Categories: Uncategorized