Archive

Archive for March 22, 2005

உயிர்மை – மார்ச் 2005

March 22, 2005 Leave a comment

சுதந்திரம் பிளவுபடாதது : சங்கராச்சாரியார் விவகாரத்தில் ஜெயலலிதா அரசு காட்டிவரும் தீவிரம் இது ஒரு குற்ற வழக்கு மட்டுமல்ல என்ற சந்தேகத்தை ஒவ்வொரு நாளும் தீவிரமடையச் செய்து வருகிறது. அண்மையில் ஆடிட்டர் குருமூர்த்திமீது சங்கராச்சாரியார் விவகாரம் தொடர்பாக எழுதிய கட்டுரைகளுக்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது

சரவணன்1978 கவிதைகள் : வகுப்பறையில் அவள் விட்டுச் சென்ற கையடக்கக்குடை காலையில் அவள் மேல்விழ இருந்த மழைத்துளிகளால் நனைந்து ஈரப்பதத்துடன் கட்டவிழ்ந்து கறுப்பு பூச்செண்டு போல உள்ளது

விவாதம்: பூனைக்கு யார் மணி கட்டுவது? : “இதுவா தமிழைப் பாதுகாக்கும் வழி?” உயிர்மை பிப்ரவரி “05 இரண்டாவது தலையங்கம் பார்த்தேன். ஒரு மேம்போக்கான பார்வையில் தங்கள் கருத்துச் சரியானதே. அரசியல் சட்டம் நமக்கு கொடுத்த கருத்துச் சுதந்திரம் ஓரளவேனும் பேணப்பட வேண்டும் என்ற வகையில் தங்கள் எண்ணம் சரியானதே. ஆனால் அது மட்டும்தானா? தமிழ் மனங்களில், தமிழர் வாழ்வில், தமிழ்க் கலாச்சாரத்தில் வலிய ஆங்கிலத்தைப் புகுத்துவது எவ்விதத்தில் நியாயம்

பாவண்ணனுக்கு விருது : பாவண்ணன் எஸ். எல். பைரப்பாவின் “பருவம்” நாவலை கன்னடத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்ததற்காக இந்த ஆண்டின் மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதெமி விருதைப் பெறுகிறார்

உள்வட்டம் வெளிவட்டம் – சி. அண்ணாமலை : நாடகம் தொடர்பான தமிழர்களின் அக்கறைகள் கீழாக இருப்பதால், அது தொடர்பாக என்ன நடந்தாலும் பெரிதாகத் தெரிவதில்லை. இது நாடகத்திற்கு மட்டும் நேர்கிற ஒன்றாகக் கூற முடியாது. சினிமா இறைச்சலில், உடல்களின் ஆட்டங்களில் அரசியல் கூத்துகளில் தங்களைப் புதைத்துக்கொண்ட ஊடகம் தவறவிடும் ஒரு பெரும் பட்டியல் உண்டு.

பல்லி வேட்டை – மயூரா ரத்தினசாமி : பல்லிகளைக் கொல்வது பாவம் என்று அவன் வளர்க்கப்பட்டிருந்தான். அவை மனிதனுக்குச் சகுனம் சொல்பவை. பலன் சொல்பவை. அதற்கான பலன்கள் பஞ்சாங்கத்தின் கடைசி அட்டையின் உள்பக்கத்தில் இருப்பதை, அவன் அம்மா காட்டியிருக்கிறாள். மனித உடம்பின் மேல் அவை விழும் இடங்களைப் பொருத்த பலன்களும் அதில் அச்சிடப்பட்டிருந்தன.

அறைகள் – ஜெயமோகன் : அண்ணாச்சிக்கு நெல்லைப் பக்கமாக ஊர். மளிகைக்கடைகளுக்குப் போய் வசூல்செய்து தொகையை சிவகாசி முதலாளிக்கு அனுப்பிவைப்பது தொழில். மணமாகாதவர். குடி, சிகரெட், வெற்றிலைப்பாக்கு எந்த பழக்கமும் இல்லை. சீட்டாடும் கும்பலை அவர்கள் இருப்பதை அறியாதவர்போல நடப்பார். எவரிடமும் அதிகமாகப் பேசமாட்டார். கடன் கேட்பதற்காக எவரிடமும் நட்பு பாராட்டும் “உதவி இயக்குநர்” கும்பல்கூட, அவரை நெருங்குவது இல்லை.

அலைவரிசை 12 — ஜே. ஜி. பல்லார்ட் :: மொழிபெயர்ப்பு – எம். எஸ் : “மீண்டும் யோசித்துப் பார்” என்றான் ஷெரிங்காம். மாக்ஸ்டெட் தலையில் அணியும் ஒலிவாங்கியை இயக்கிவிட்டு காதுகளில் பொருத்திக்கொண்டான். ஒலித்தட்டு சுழலத் தொடங்கியதும் அதில் ஏதாவது புரிகிறதா என்று அறிய முயன்றான்.

மதிப்புரை: கடக்க முடியாத விதியின் நிழல் : தமிழில் சிறுகதைகளும் கவிதைகளும் பெரும் மனஎழுச்சிகளை உருவாக்க முடியாத ஒரு கால கட்டத்தில் சமீபத்தில் எழுதப்பட்ட சில நாவல்கள் தமிழில் படைப்பு மொழியினையும் களத்தினையும் மிகத் தீவிரமாக விரிவுபடுத்திக் கொண்டிருக்கின்றன.

வசுமித்ர கவிதைகள் : குளியலறை விதானத்தில் தொங்கும் தூக்குக் கயிறும் சிறுமி நேயாவின் நெடுநல் வாடையும்

சுகுமாரன் கவிதைகள் : கரைந்துகொண்டேவந்த காகம் வீட்டைக் கடக்கும்வரை சிறகடிக்காமலேயே பறந்தது ஒவ்வொரு வாசலாக முகர்ந்தபடி விசாரித்துவந்த தெருநாய் மெளனத்தால் வெருண்டு தாவியது.

கோகுலக்கண்ணன் கவிதைகள் : தூக்கத்தில் சிரிக்கும் குழந்தைகள் கனவில் விரியும் பூக்களின் இதழ்களை மெல்லத் தின்று உடலெங்கும் படர்ந்து அகலும். தாளாத குளிரில் படுக்கையை சட்டென்று நனைக்கும் குழந்தைகள் ஒரே சமயத்தில் அழும் சிலீரென்று

பதிவுகள்: சிறுகதைகளின் நாடகமாக்கம் — வெளி ரெங்கராஜன் : சில சிறப்பான சிறுகதைகளை நாடக வடிவில் நிகழ்த்திப் பார்க்கும் ஒரு முயற்சியாக கூத்துப் பட்டறை அண்மையில் பிரேம்சந்த், புதுமைப்பித்தன் மற்றும் சுந்தர ராமசாமியின் தேர்ந்தெடுத்த ஐந்து சிறுகதைகளை நாடகவடிவில் வழங்கியது. ஒரு புதினம் நாடக வடிவம் பெறும்போது, படிக்கும்போது கிடைக்கப்பெறும் மன உணர்வுகளுக்கு இணையான வேறொரு தளத்தில் கூடுதலான மனச் சலனங்களையும், புதினத்தின் சாரமான ஒரு உணர்வு அதிகபட்ச நிரூபணம் பெறும் சாத்தியங்களையும் கொண்டிருக்கிறது

பதிவுகள்: அசோகமித்திரன் 50 : அசோகமித்திரனின் 50 ஆண்டுகால எழுத்துலகப் பயணத்தை கொண்டாடும் விதமாக கடவு இலக்கிய அமைப்பும், கிழக்கு பதிப்பகமும் இணைந்து பிப்ரவரி 12 அன்று பிலிம்சேம்பரில் ஒரு நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தன

நூலகம் : மனிதர்கள் நாடுகள் உலகங்கள், ஆசிரியர்கள் : ஜா. மாதவராஜ், சு. வெங்கடேசன் வெளியீடு : பாரதி புத்தகாலயம், 2, குயவர் வீதி, ஜோன்ஸ் சாலை, சைதாப்பேட்டை, சென்னை – 15 பக்கம் : 48 விலை : ரூ 10

ஏகாதிபத்தியம், பாசிசம், உலகமயமாதல் என மூன்றாம் உலக நாடுகளின் வாழ்வையும் வளத்தையும் சூறையாடிவரும் கொடுங்கரங்களின் சரித்திரத்தை இந்நூல் சுருக்கமாகவும் செறிவாகவும் சித்தரிக்கிறது.

கடிதங்கள்: எம். யுவனின் கவிதைகள் மீண்டும் சிக்கனமான மொழியின் வசீகரத்தை அணிந்துள்ளது. “மிச்சம்” கவிதையும் அதற்கடுத்த கவிதைகளும் உலக வரைபடத்தையும் அக மனதையும் பொருத்திப்பார்க்க விழைகிறது. ஆதவன் தீட்சண்யா, முகுந்த் நாகராஜன் கவிதைகளும் சிறப்பானது.

ஏடுகளில் படிந்த இருண்ட காலம் – பிரேம்::ரமேஷ் : நூல்களை அழித்தல் ஒரு வரலாற்று நிகழ்வு. மேற்குலகின் கிறித்துவத் திருச்சபை தனது மேலதிகாரத்தை நிறுவி பிற கிறித்துவப் பிரிவுகளையும், மாற்றுச் சிந்தனை மரபுகளையும் அழித் தொழிப்பதைக் கடமைகளில் ஒன்றாகக்கொண்ட அக்கால கட்டத்தில் நூல்களை எரித்தல் தின நிகழ்வாக மாறியிருந்தது.

அடிவானத்திற்கு அப்பால் : ஹினா-மட்சுரி — ஜெயந்தி சங்கர் : நம் நாட்டில் கொண்டாடப்படுவதைப்போலவே ஜப்பானிலும் கொலு கொண்டாடப்படுகிறது. ஆனால், மார்ச் 3 ஆம் தேதிதான் “ஹினா – நோ – செக்கு” அல்லது “ஹினா – மட்சுரி” எனப்படும் ஜப்பானிய “கொலு” கொண்டாடப்படுகிறது. ஹினா என்றால் பொம்மை, மட்சுரி என்றால் விழா. இதை “சிறுமிகள் விழா” என்றும் கூடச் சொல்கிறார் கள்.

இலங்கை – கேள்விக்குறியாகும் போர் ஓய்வு :: இளைய அப்துல்லாஹ : என்ன பாடுபட்டும் யுத்தத்தையும் இலங்கையையும் பிரிக்க முடியாது போலிருக்கிறது. 2002 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி விடுதலைப்புலிகளும் இலங்கை அரசும் போர் ஓய்வு ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டதன் பின்பு இராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் சின்னச் சின்ன உரசல்கள் இருந்தன

பின்குறிப்பு — லால் சலாம் :: சுகுமாரன் : பல பெருமைகளும் பலப்பல விமர்சனங்களும் இ. எம். எஸ்ஸைப் பற்றியுண்டு. அவற்றுக்கான நியாயங்களும் உண்டு. எளிமை என்பது ஓர் உயர்ந்த இயல்பு என்று அவரைச் சந்தித்த சந்தர்ப்பத்தில் தான் எனக்குத் தோன்றியது.

மூங்கில் இலை மேலே – வேழமுடைத்த தமிழ்நாடு :: தியடோர் பாஸ்கரன் : இவ்வுலகின் மிகப் பழைய காட்டுயிர்களில் யானையும் ஒன்று. இன்று இருக்கும் இரு வகையான யானைகளில் – ஆப்ரிக்க யானை மற்றும் ஆசிய யானை – ஆசிய வகை அழிவின் விளிம்பில் ஊசலாடிக் கொண்டிருகின்றது. இருப்பது மொத்தமே 50, 000 ஆசிய யானைகளே.

Categories: Uncategorized

Roast of Jeff Foxworthy

March 22, 2005 Leave a comment

காமெடி செண்ட்ரல்: நண்பர்களுக்குள் சதாய்த்துக் கொள்வோம். மேடையில் தோன்றி மகிழ்விக்கும் நகைச்சுவையாளர்களும் சுய எள்ளலோ அல்லது பார்வையாளர்களின் குணங்களை நக்கலடித்தோ சிரிக்க வைப்பார்கள்.

பல புகழ்பெற்ற காமெடிக் கலைஞர்கள் ஒன்று சேர்ந்து ஒருவருக்கொருவர் கிண்டலும் கேலியும் செய்து கொண்டாலும் — பல்லைக் கடித்து புன்னகையோடு வெட்கப்பட்டுக் கொண்டு, நம்மை மட்டும் ஜாலியாக இருக்கவைக்கிறார்கள். அடுத்த முறை ‘டா’ போட்டு பேசும் நண்பர்களைக் கண்டால், சதாய்க்க பல விஷயங்களும் தேறுகிறது.

நல்லா இருக்குங்க… ஒளிபரப்பப்படும் நேரம், ஓசி வீடியோ போன்ற மேலும் விபரங்களுக்கு: COMEDY CENTRAL : TV Shows : Roast

Categories: Uncategorized

கோடை விருப்பம்

March 22, 2005 Leave a comment

Wall Street Journal:

குளிர் பானத்தில் தங்களுக்கு முக்கியமான அம்சம் எது?

* சுவை — 480 வாக்குகள் (42%)
* கலொரி (Calories) — 325 வாக்குகள் (29%)
* கஃபீன் (Caffeine) — 68 வாக்குகள் (6%)
* குளிர்பானங்கள் பருகுவதில்லை — 263 வாக்குகள் (23%)

என்னுடைய வோட்டு: குளிர்பானங்கள் பருகுவதில்லை

Categories: Uncategorized