Archive

Archive for April 4, 2005

துட்டு எக்ஸ்பிரஸ்

April 4, 2005 4 comments

mumbai xpress.com – Official Site

பட வெளியீட்டுக்கு பத்து நாள் கூட இல்லாத போதும் மும்பை எக்ஸ்பிரஸின் ஆடியோ, இன்னும் தமிழகத்தில் கிடைக்கவில்லை. ஆனால், ஏப்ரல் ஒன்றாம் தேதியன்று, ஹிந்து போன்ற நாளிதழ்களில் கால் பக்கத்திற்கு அட்டகாசமான விளம்பரம். இரண்டு லட்சத்திற்கு மேல் ஒலிப் பேழைகள் விற்றுத் தள்ளிவிட்டதற்கு நன்றி நவின்றிருந்தார்கள். வெப் உலகமும் இந்த செய்தியை உறுதிப்படுத்துகிறது.

சச்சின் வாங்கியாகி விட்டது; சந்திரமுகியும் கிடைக்கிறது. ஆனால், மயிலை அசோக் ஆடியோவில் ஆரம்பித்து மியூஸிக் வோர்ல்ட் வரை ‘மும்பை எக்ஸ்பிரஸ்’ மட்டும் இல்லவே இல்லை.

ஸ்பென்ஸர் ப்ளாஸாவில் இருக்கும் கடையில் விசாரித்தபோது சில தகவல்களைச் சொன்னார்கள்:

நாலு பாட்டு மட்டும் போட்டுவிட்டு நாற்பத்தைந்து ரூபாய் கேட்கிறார்கள். ஒரே பாட்டை பத்து தரம் கொடுக்கும் பரத்வாஜ் கூட தமிழகத்தில் ஒகே. நம்மவர்களுக்கு க்வாண்டிடி ரொம்ப முக்கியம். அதே பாட்டையே இன்னும் ரெண்டு தரம் போட்டு ஆறு பாட்டாக்க சொன்னால், ‘முடியாது’ என்று விதண்டாவாதம் புரிகிறார். சரி… அது அவங்களுடைய சொந்த விஷயம். க்வாலிடி மட்டும் போதும் என்று நினைப்பதை எங்களால் தடுக்க இயலாது. ‘சரியாகப் போகாது; நன்றாக விற்காது’ என்று எச்சரிக்கை செய்வது மட்டுமே எங்களால் முடியும்!

‘ஹே ராம்’ வெளிவந்தபோது மொத்தமாக முன்பணம் கட்டி எடுத்துக் கொள்ள சொன்னார்கள். ஆயிரம் காஸெட் வைத்தால் ஐம்பதாயிரம் கட்ட வேண்டும் என்றார்கள். செய்தோம். கடைசியில் படமும் ஹிட்டாகவில்லை. காஸெட்டிலும் பெங்காலி பாட்டு, ஹிந்திப் பாட்டு என்று வாய்மொழியாகப் பேசிப்பேசி ஒழுங்காக விற்கவில்லை. இந்த மாதிரி ‘பெருந்தலைகளின்’ பட காஸெட்டுகள் நினைத்த அளவு விற்காவிட்டால், முன்பணத்தில் ஒரு பகுதியைத் திரும்பக் கொடுத்துவிட்டு, மீந்துபோனவற்றையும் எடுத்துக் கொண்டு விடுவார்கள். ஆனால், ‘ஹே ராம்’ விஷயத்தில் ‘முடியாது… நீங்கள் போட்ட பணம், உங்களின் ரிஸ்க்’ என்று மறுத்துவிட்டார்கள். அப்புறம் ஏதோ ஈடு செய்தார்கள். இருந்தாலும் பெருத்த நஷ்டம்.

இந்த விஷயத்தில் கமல் மட்டும் தனி அணி. ரஜினி போன்ற மற்ற தயாரிப்பாளர்கள் எல்லாம் நஷ்டத்தில் முட்டுக்கொடுக்கும்போது இவர் மட்டும் தனி வழியாக்கிக் கொண்டிருக்கிறார்.

இப்பொழுது மீண்டும் மும்பை எக்ஸ்பிரஸுக்கு தடாலடியாக ‘முழுமையாக முன்பணம் கட்டினால் மட்டும் காஸெட்’ என்று சொல்கிறார். நாலு பாட்டுக்கு நாற்பத்தைந்து அதிகம் என்றால், ‘சந்திரமுகிக்கு மும்பை எக்ஸ்பிரஸ் எவ்விதத்திலும் குறைந்தது அல்ல’ என்று ஈகோ காட்டுகிறார். எங்களால் அவ்வளவு பெரிய ரிஸ்க் எடுக்க முடியாததால்தான் இங்கு இன்னும் கொண்டுவரவில்லை. அதற்குள் விளம்பரம் எல்லாம் போட்டு எங்களுக்கு ப்ரெஷர் கொடுத்து வருகிறார்.

என்று முடித்துக் கொண்டார்.

Categories: Uncategorized

மிஸ்ட் ரி-மிக்ஸ்

April 4, 2005 Leave a comment

ரஜினியால் சந்திரமுகியில் ரி-மிக்ஸ் செய்ய முடியாத பாடல்கள்:

கருணாநிதி தவறாக எடுத்துக் கொள்ளக்கூடும் என்பதால்: தர்மத்தின் தலைவன்

யாரு யாரு
இந்தக் கிழவன் யாரு
அட நாறு நாரு
பிஞ்ச தேங்கா நாரு
ஆளும் வயசு எங்களுக்குக் கிழவா கிழவா
நீங்க ஆடி தீர்த்த ஆளுதானே பொதுவா பொதுவா

———-
ராமதாஸை எதிர்த்துப் பாடியதாக அர்த்தப்படும் என்பதால்: ஊர்க்காவலன்

ஊரு சொல்லும் பேச்சில்
உண்மையிருக்கா
உண்மை சொல்லப் போனால்
வம்பு வழக்கா

அறிவுக்கு மேலே
சக்தியிருக்கா
அன்புக்கு மேலே
பக்தியிருக்கா

(எடுத்த சபதம் )

சந்திரன் சூரியன் மாறி உதிக்கட்டும்
சத்தியம் தோற்காது

சாதிசனம் இங்கு சந்தியில் பேசட்டும்
தர்மங்கள் சாகாது

நல்ல வழி கண்டு
நலம் கொடுப்பேன்

எடுத்த சபதம் முடிப்பேன்
கலங்காதே
உனக்கும் வாழ்வு தருவேன்
மயங்காதே
———-

ரசிகர்களை தொண்டர்களாக மாற்றுகிறார் என்று அவதூறு கிளம்பும் என்பதால்: நான் சிகப்பு மனிதன்

வெண்மேகம் விண்ணில் நின்று
கண்ணே இன்று
பன்னீர் தூவும்

விடிகாலை வெள்ளிமீனே
என் வாழ்வே உன்னால்தானே
கண்ணே நான் அண்ணன் அல்ல
உன்னை ஈன்ற அன்னை நானே

என்னாளும் எந்தன் பக்கம்
தாயே நீ வேண்டும்

உன் ஆவி
எந்தன் ஆவி
இரண்டும் ஒன்றாகும்

உன் கால்கள் இல்லாமல்
என் கால்கள் போகுமோ

என் வானம் இடிவதும்
பகல் விடிவதும்
உந்தன் பார்வையால்
———-

ஜெயலலிதாவின் ஆதரவு கோருகிறார் என்று புரிந்து கொள்வதால்: கொடி பறக்குது

அன்னை மடியில் கண் திறந்தோம்
மண்ணின் மடியில் கண் மறைந்தோம்

அன்னை என்பவள் அருகில் வந்துமே
பிள்ளை அறியவே இல்லையே

பிள்ளை அன்னையை அறிந்த வேளையில்
அன்னை உணரவே இல்லையே

———-

ரஜினி மட்டும் உத்தமரா என்று வாதம் வரப்போவதால்: நான் சிகப்பு மனிதன்

பந்தலும் மேடையும் போட்டுக்கறான்
ஒரு துண்டையும் தோளில் மாட்டிக்கறான்

ஓட்டுக்கள் போட்டிட கேட்கிறான்
அதைப் போட்டதும் புத்திய மாத்திக்கறான்

எல்லாமே வேஷந்தான்
ஏதேதோ கோஷந்தான்
எங்கேயும் தில்லுமுல்லு
திண்டாடுது தேசந்தான்

என்னாளும் கோழைகளா
எதுக்கு வாழணும்
அப்பாவி மனுசனெல்லாம்
சிவப்பா மாறணும்

ஒருத்தனும் இங்கே
சித்தனும் இல்லே
புத்தனும் இல்லே

(எல்லாருமே திருடங்கதான்)

எத்தனை எத்தனை சாமியடா
இதில் என்மதம் உன்மதம் சண்டையடா

எத்தனை எத்தனை சாதியடா
இதில் முட்டுது மோதுது மண்டையடா

கல்லான தெய்வங்கள்
காணாம நின்னாச்சு
எல்லாரும் கோயில்கட்டி
இங்கே இப்போ என்னாச்சு

தன்னால புரிஞ்சுகிட்டு
எல்லாரும் திருந்தணும்
இல்லாட்டி நடந்ததுக்குப்
பின்னால வருந்தணும்

அஞ்சுவதென்ன
கெஞ்சுவதென்ன
புண்ணியமில்லே

எல்லாருமே திருடங்கதான்
சொல்லப்போனா குருடங்கதான்
நம்ம நாட்டிலே
நடு ரோட்டிலே
வீட்டிலே காட்டிலே
எல்லாருமே திருடங்கதான்
சொல்லப்போனா குருடங்கதான்

பொன்னான பாரதம்
புத்தி கெட்டு போச்சுடா
சொன்னானே பாரதி
சொன்னதென்ன ஆச்சுடா
எல்லாரும் இன்னாட்டு மன்னனில்லே
மன்னனில்லே
———-

கூட்டணி கட்சிகளைக் காத்திருக்கச் செல்வதாக நினைக்க வைப்பதால்: தளபதி
பார்வை பூத்திட
பாதை பார்த்திட
பாவை ராதையோ வாட

இரவும் போனது
பகலும் போனது
மன்னன் இல்லையே கூட
———-

விஜய்காந்த் சண்டைக்கு வருவார் என்பதால்: ராஜாதி ராஜா

தற்காப்புக்காக நான் போடும் சண்டை
தப்பாக ஒருநாளும் போனதில்ல

சரக்கு இருந்தா
வித்துப்பாரு

யேய் வெத்துவேட்டு
ஓரங்கட்டு

என்கிட்ட மோதாதே
நான் ராஜாதிராஜனடா
வம்புக்கு இழுக்காதே
நான் வீராதிவீரனடா

இனி தப்பாட்டம் என்னோடு ஆடாதே
அட…
அப்புறமா குத்துப்பட்டு ஓடாதே
——–

ரசிகர்களை சும்மா உசுப்பேத்தி விடுகிறார் என்பதால்: ப்ரியா

பாடிப் பாடி அழைக்கின்றேன்
ஜாடையாக செய்தி சொல்வாய்
பாதையொன்று கண்டு கொள்ள
நீயும் பாடுவாய்

தயக்கமென்ன
கலக்கமென்ன

தேவீ
குரல்கொடு

ஓ… ப்ரியா…

நேரம் பார்த்து நெருங்குவேன்
காவல் தாண்டி காக்க வந்தேன்
போட்டியென்று வந்த பின்னே
நேரில் மோதுவேன்

கவலையில்லை
மயக்கமில்லை
——–

முன்பின் முரணில் ஜான் கெர்ரியாகிப் போவார் என்பதால்: மனிதன்

கடவுள் மனிதன் படைத்தானா
கடவுளை மனிதன் படைத்தானா
அட…
ரெண்டு பேரும் இல்லையே!
——–

பணக்காரன்

படைத்தவனின் துணையிருக்க
அடுத்தவனின் துணையெதற்கு
இதயத்திலே துணிவிருக்க
வருத்தமிங்கே உனக்கெதற்கு

ஊரெல்லாம் உந்தன் பேரை
போற்றும் நாள் வரும்

காத்திருப்பது எத்தனை பேரோ
உன்னிடம் தோற்பதற்கு

——–

அடுத்த வாரிசு

பலகாலம் உனக்காக மனம் ஏங்கி வாடுதே
வருகின்ற தை மாதம் சொந்தம்
அணிகின்ற மணமாலை பந்தம்
இரவோடும் பகலோடும் இன்பம்

——–

காளி

காலம் நம்மைப் பார்த்து
கண்ணடித்தால் பதவி வரும்
அதுவே
மெதுவாக ஜாடை செய்தால்
சிறையும் வரும்
பலிக்கும் வரையில்
மகராஜா…

நமக்கும் இதுதான் அவதாரம்
உன்பேரையும் என்பேரையும்
ஊரார் சொன்னால்
சந்திரனும் இந்திரனும்
நெருங்கிட வேணாமா?

வாழும் மட்டும் நன்மைக்காக
வாழ்ந்து பார்ப்போம்
வாடா நைனா
வாழ்வு யார் பக்கம்
அது நல்லவர் பக்கம்

அட
ஆடியில் செய்தவன்
ஆவணி வந்ததும்
அனுபவிப்பானடா
அவன் தேடிய வினையே
வீட்டுக்கு வரலாம்
பின்னால் பாரடா!

Categories: Uncategorized