Home > Uncategorized > துட்டு எக்ஸ்பிரஸ்

துட்டு எக்ஸ்பிரஸ்


mumbai xpress.com – Official Site

பட வெளியீட்டுக்கு பத்து நாள் கூட இல்லாத போதும் மும்பை எக்ஸ்பிரஸின் ஆடியோ, இன்னும் தமிழகத்தில் கிடைக்கவில்லை. ஆனால், ஏப்ரல் ஒன்றாம் தேதியன்று, ஹிந்து போன்ற நாளிதழ்களில் கால் பக்கத்திற்கு அட்டகாசமான விளம்பரம். இரண்டு லட்சத்திற்கு மேல் ஒலிப் பேழைகள் விற்றுத் தள்ளிவிட்டதற்கு நன்றி நவின்றிருந்தார்கள். வெப் உலகமும் இந்த செய்தியை உறுதிப்படுத்துகிறது.

சச்சின் வாங்கியாகி விட்டது; சந்திரமுகியும் கிடைக்கிறது. ஆனால், மயிலை அசோக் ஆடியோவில் ஆரம்பித்து மியூஸிக் வோர்ல்ட் வரை ‘மும்பை எக்ஸ்பிரஸ்’ மட்டும் இல்லவே இல்லை.

ஸ்பென்ஸர் ப்ளாஸாவில் இருக்கும் கடையில் விசாரித்தபோது சில தகவல்களைச் சொன்னார்கள்:

நாலு பாட்டு மட்டும் போட்டுவிட்டு நாற்பத்தைந்து ரூபாய் கேட்கிறார்கள். ஒரே பாட்டை பத்து தரம் கொடுக்கும் பரத்வாஜ் கூட தமிழகத்தில் ஒகே. நம்மவர்களுக்கு க்வாண்டிடி ரொம்ப முக்கியம். அதே பாட்டையே இன்னும் ரெண்டு தரம் போட்டு ஆறு பாட்டாக்க சொன்னால், ‘முடியாது’ என்று விதண்டாவாதம் புரிகிறார். சரி… அது அவங்களுடைய சொந்த விஷயம். க்வாலிடி மட்டும் போதும் என்று நினைப்பதை எங்களால் தடுக்க இயலாது. ‘சரியாகப் போகாது; நன்றாக விற்காது’ என்று எச்சரிக்கை செய்வது மட்டுமே எங்களால் முடியும்!

‘ஹே ராம்’ வெளிவந்தபோது மொத்தமாக முன்பணம் கட்டி எடுத்துக் கொள்ள சொன்னார்கள். ஆயிரம் காஸெட் வைத்தால் ஐம்பதாயிரம் கட்ட வேண்டும் என்றார்கள். செய்தோம். கடைசியில் படமும் ஹிட்டாகவில்லை. காஸெட்டிலும் பெங்காலி பாட்டு, ஹிந்திப் பாட்டு என்று வாய்மொழியாகப் பேசிப்பேசி ஒழுங்காக விற்கவில்லை. இந்த மாதிரி ‘பெருந்தலைகளின்’ பட காஸெட்டுகள் நினைத்த அளவு விற்காவிட்டால், முன்பணத்தில் ஒரு பகுதியைத் திரும்பக் கொடுத்துவிட்டு, மீந்துபோனவற்றையும் எடுத்துக் கொண்டு விடுவார்கள். ஆனால், ‘ஹே ராம்’ விஷயத்தில் ‘முடியாது… நீங்கள் போட்ட பணம், உங்களின் ரிஸ்க்’ என்று மறுத்துவிட்டார்கள். அப்புறம் ஏதோ ஈடு செய்தார்கள். இருந்தாலும் பெருத்த நஷ்டம்.

இந்த விஷயத்தில் கமல் மட்டும் தனி அணி. ரஜினி போன்ற மற்ற தயாரிப்பாளர்கள் எல்லாம் நஷ்டத்தில் முட்டுக்கொடுக்கும்போது இவர் மட்டும் தனி வழியாக்கிக் கொண்டிருக்கிறார்.

இப்பொழுது மீண்டும் மும்பை எக்ஸ்பிரஸுக்கு தடாலடியாக ‘முழுமையாக முன்பணம் கட்டினால் மட்டும் காஸெட்’ என்று சொல்கிறார். நாலு பாட்டுக்கு நாற்பத்தைந்து அதிகம் என்றால், ‘சந்திரமுகிக்கு மும்பை எக்ஸ்பிரஸ் எவ்விதத்திலும் குறைந்தது அல்ல’ என்று ஈகோ காட்டுகிறார். எங்களால் அவ்வளவு பெரிய ரிஸ்க் எடுக்க முடியாததால்தான் இங்கு இன்னும் கொண்டுவரவில்லை. அதற்குள் விளம்பரம் எல்லாம் போட்டு எங்களுக்கு ப்ரெஷர் கொடுத்து வருகிறார்.

என்று முடித்துக் கொண்டார்.

Categories: Uncategorized
 1. Anonymous
  April 4, 2005 at 1:04 pm

  Ţɡº¸¡§Ä Å¢Àã¾ Òò¾¢.
  – ¬Éóò ºí¸Ãý

 2. April 4, 2005 at 3:00 pm

  Who said it had only four songs? Check out the list here: Songs

  Pricing is a prerogative of the producer. If the customer wants it, the distributor has to buy it. People are throwing advices to cine artistes and this is one among them.

  Kamal is probably afraid of MP3 songs being floated, but they are already available!

 3. April 4, 2005 at 8:02 pm

  பாலா, எனக்கு இன்னும் ஒரு லாஜிக் புரியவில்லை. டிஜிட்டலில் படமெடுக்கும் கமல் ஏன் இன்னமும் 45 ரூபாய்க்கு கேசட் விற்கிறார்? 50 ரூபாய்க்கு சென்னை ரிச்சி தெருவில் FM ரேடியோக்களை கூவி விற்கும் காலமிது. இங்கே ஒரு கேசட் எப்படி 45 ரூபாய் கொடுத்து வாங்குவார்கள். பேசாமல், அவர், பாடலையும், கொஞ்சம் டிரைய்லரையும் சேர்த்து, பின் விவரங்கள் அடக்கி 60 ரூபாய்க்கு விசிடி, ஆடியோ சிடி கொடுத்து விடலாம். இல்லையென்றால், இந்தியாவில் ஐட்யூன்ஸ் போல ஏதாவது கடை திறந்தாலேயொழிய இந்திய ஆடியோ மார்க்கெட்டுக்கு மோட்சம் கிடைக்காது என்று பட்சி சொல்கிறது. ஏமாற்றமாய் இருக்கிறது, கமல் தனக்கென ஆடியோ நிறுவனம் தொடங்கி, அதனை நிர்வகிக்கும் நிதிக்கு, படத்தின் ஆடியோவில் கைவைக்கிறார் என்று தோன்றுகிறது. தொழில்நுட்பம் வளர்ந்து விட்ட இக்காலத்தில் பேசாமல், ஆடியோ நிறுவங்களே எம்.பி.3 சிடி தந்து விடலாம் என்று தோன்றுகிறது.

 4. April 5, 2005 at 10:02 am

  நாராய்ண்… அதிகாரபூர்வ ஆடியோ கிடைக்குமுன்பே, ‘புதுசு கண்ணா புதுசு’ – எம்பி3 சிடிக்கள் அறுபது ரூபாய்க்கு கிடைக்கிறது. (தற்போதைய சிடியில் மும்பை எக்ஸ்பிரசும் அடக்கம்; ஆனால் காஸெட்/சிடி கிடைக்கவில்லை.)

  அமெரிக்காவில் ஐ-பாட் பிரபலம் என்பதாலும் பத்து வயது சிறுவர்களையும் நீதிமன்றத்துக்கு இழுத்ததால் file-swapping குறைந்திருப்பதாலும், ஐ-ட்யூன்ஸ் நன்றாக வரவேற்புக்குள்ளானது.

  ஆடியோ சிடியில் கமலின் பேட்டி, இளையராஜாவின் முன்னோட்டம் என்று பாடல்களைத் தவிர ஏதாவதொன்றை இணைக்கலாம்.

  திருட்டு விசிடி, எம்பி3க்கள் எல்லாம் எளிதில் கிடைத்தாலும் லேண்ட்மார்க்கில் விற்பனையும் கூட்டமும் அமோகமாக இருப்பது சந்தோஷமாக இருக்கிறது.

 1. No trackbacks yet.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: