Archive

Archive for April 5, 2005

கொட்டாவி – மாயாவி

April 5, 2005 Leave a comment

தமிழ்நாட்டில் எல்லோருக்கும்
எதிர்காலம் நல்லாயிருக்கும்
ஒருவார்த்தை சொன்னாலும்
நான் உண்மையச் சொல்வேண்டா

மகராசன் பல்லவன்தான்
மலையேறச் சொன்னவன்தான்
கடலோரம் கட்டிவச்ச
சிற்பத்தைப் பாரேண்டா

இங்கு நல்லவன் யாருமில்ல
நான் பல்லவன் பேரப்பிள்ள
இந்த ஊரப்பார்த்த தோட்டத்துக்கு
காவல்காரன் நான்தாண்டா

ஆனா, ஆவன்னாவே தெரியாதவண்டா
ஆனால் நாலு பாஷைத் தெரியும் போய்யா
——

பல்லவனின் பெயர சொல்ல
சிற்பங்கள செஞ்சு வச்சான்
உன்னுடைய பெயர சொல்ல
என்ன செஞ்சே நீ

வைக்கோலால் செஞ்ச
கன்னுக்குட்டி நீ

கடற்கரை ஓரத்தில
கலங்கர நடக்குதாம்

ஒத்தைக் கண்ணில்
வழியக் காட்டி
சோம்பி நிக்குதே
ரெண்டு கண்ணும் இருந்தும் கூட
பார்க்க நல்லாயில்லை

இந்த வெள்ளைக்காரன்
எங்களுக்கு சொந்தக்காரன்
இங்கு வெள்ளையனை
வெளியேற
சொல்லவே மாட்டேண்டா

Categories: Uncategorized

ஜெமினி கணேசன் – என் ஆசான்

April 5, 2005 Leave a comment

அமரர் எஸ்.எஸ். வாசன் நூற்றாண்டு மலர் – விகடன் பிரசுரம்: “நான் ஜெமினி ஸ்டூடியோவில் 1946-ல் வேலைக்குச் சேர்ந்தேன். கே.ஆர்.ராம்னாத்துக்கு புரொடக்ஷன் அசிஸ்டெண்டாக வேலை! மாசம் 150 ரூபாய் சம்பளம். அந்த வகையில் ‘சக்ரதாரி’, ‘வள்ளியின் செல்வன்’, ‘ஔவையார்’ ஆகிய படங்களுக்கு புரொடக்ஷன் அசிஸ்டெண்ட்டா இருந்தேன். ஜெமினி ஸ்டூடியோவில் வேலை பார்த்தால் ‘ஜெமினி’ கணேஷ் என்று பெயரும் வைத்துக் கொண்டேன்.

1955-ல் ‘வஞ்சிக்கோட்டை வாலிபன்’ படத்துல என்னை ஹீரோவா நடிக்க வெச்சார் எஸ்.எஸ்.வாசன். வெள்ளிவிழா கண்ட திரைப்படம் அது. என் திரையுலக வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்படுத்திய முக்கியமான படமும் கூட! அதே படத்தை இந்தியிலும் தயாரிச்சார் எஸ்.எஸ். வாசன். பெயர் ‘ராஜ்திலக்’. அதிலும் நான்தான் ஹீரோ.

எஸ்.எஸ். வாசன் டீமில் டிசிப்ளின் உண்டு. எல்லோரையும் தட்டிக் கொடுத்து வேலை வாங்குவார். படத் தயாரிப்பின் அத்தனை விஷயங்களையும் மிகத் துல்லியமாகத் திட்டமிடுவார். ஒரு படம் எடுக்குமுன்பே பக்காவாக ரிகர்சல் பார்த்துவிடுவோம்.

எஸ்.எஸ். வாசன் இறந்த நாளில் அவர் அருகிலேயே கடைசிவரை இருந்து சுடுகாட்டுக்கும் தூக்கிச் சென்றேன். ஜெமினி பேனரில் ஹீரோவாக நான் செய்தது என்னவோ மூன்றே படம்தான். ‘வஞ்சிக் கோட்டை வாலிபன்’, ‘மிஸ். மாலினி’, ‘வாழ்க்கைப் படகு’. ஆனால், எனக்கு பேரும் புகழும் கிடைக்கச் செய்தவர் என் ஆசான் எஸ். எஸ். வாசன் என்பதில் சந்தேகமில்லை!”


aaraamthinai.com :: கேடிஸ்ரீ: “தமிழகத்தில் புதுக்கோட்டையில் 1920ம் ஆண்டு நவம்பர் மாதம் 17ம் தேதி அன்று வழக்கறிஞர் ஜெனரலாக இருந்த நாகராஜ ஐயரின் மகனாக பிறந்தவர் ராமசாமி கணேசன் என்கிற ஜெமினி கணேசன். பட்டப்படிப்பை முடித்தப் பின் சென்னை தாம்பரத்திலுள்ள கிறிஸ்துவ கல்லூரியில் விரிவுரையாளராக சிறிது காலம் பணியாற்றினார்.

முதன் முதலாக ‘மனம் போல் மாங்கல்யம்’ என்கிற திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க ஜெமினி ஒப்பந்தம் ஆனார். 1953ல் இப்படம் வெளிவந்தது. இதைத் தொடர்ந்து ‘கணவேனே கண் கண்ட தெய்வம்’, ‘மிஸ்ஸியம்மா’, ‘மாதர் குல மாணிக்கம்’, ‘கல்யாண பரிசு’, ‘களத்தூர் கண்ணம்மா’, ‘தேன் நிலவு’, ‘கொஞ்சும் சலங்கை’, ‘சுமைதாங்கி’, ‘கற்பகம்’, ‘பணமா பாசமா’, ‘பூவா தலையா’ போன்றவை அவர் நடித்த படங்களில் சில… அவரது சொந்த தயாரிப்பில் உருவாகி அவர் பல வேடங்களில் நடித்த ‘நான் அவனில்லை‘ படம் மிகவும் சிறப்பாக பேசப்பட்டது.

ஜெமினி கணேசன் பல திருமணங்கள் செய்தவர். இவரின் முதல் மனைவி அலுமேலு என்கிற பாப்ஜி. இவருக்கு 5 மகள்கள். தற்போது உடல்நலம் சிறிது குன்றிக்காணப்படுகிறார். ஜெமினியின் இரண்டாவது மனைவி பிரபல திரைப்பட நடிகை சாவித்திரி. அன்றைய காலக்கட்டத்தில் ஜெமினி – சாவித்திரி ஜோடியின் நடிப்பில் பல படங்கள் வெற்றிகளை அள்ளித் தந்தது. ஜெமினி – சாவித்திரிக்கு சதிஷ் என்ற மகனும், சாமுண்டிஸ்வரி என்ற மகளும் பிறந்தனர். பழம்பெரும் நடிகை புஷ்பவல்லியை மூன்றாவது திருமணம் செய்து கொண்டர். ஹிந்தி திரைப்பட உலகின் கனவு கன்னியாக அன்றும், இன்றும் திகழும் பிரபல நடிகை ரேகாவும் ஜெமினியின் மகள்தான்.”

Categories: Uncategorized

அரசு பதில்

April 5, 2005 Leave a comment

அரங்கநாதன்,
கூத்தாநல்லூர்.

‘சானியா மிர்ஸாவை அழகான பெண் என்கிற ஒரே காரணத்துக்காக தகுதிக்கு மேல் தலையில் தூக்கி வைத்துக்கொண்டு கொண்டாடுகிறார்கள்’ என்று காட்டமாக விமர்சித்திருக்கிறாரே ஷோபா டே?

இளமை என்பது குருவித்தலையை போன்றது, அளவுக்கு மீறிய புகழ்ச்சி என்கிற பனங்காயை அதில் வைத்தால் கழுத்து சுளுக்கிக்கொண்டு விடும் என்கிற ஆதங்கத்தோடுதான் அப்படி எழுதியிருப்பாரோ என்று நினைத்தேன். அப்படியில்லை, எரிச்சலோடு எழுதியிருப்பதாகவே தெரிகிறது.

நன்றி: kumudam.com

Categories: Uncategorized