Archive
குரங்குளை விரட்டும் பாட்டு
Music India OnLine – Mumbai Express (Tamil)
மும்பை மகாநகர்
இந்தியாவின் வர்த்தக வாசல்
வாசல் சின்னது
பணக்காரங்கப் புழங்குற இடமாச்சே
ஆனால்
கொல்லைப்புறம் பெருசு
ஏழைங்கப் பொழைக்கிற இடம்
உலகத்தின் மிகப்பெரிய ஏழைக் குப்பம்
நானும் என் தங்கச்சியும்
இங்கதான் இருக்கோம்
அக்கா பேரு இன்பா
என் தங்க பேரு சிற்றின்பா
குடிசையில் இருக்கிறவங்க கூட
எங்களப் பார்க்கலாம் ரசிக்கலாம்
ஆனா
லேசில் தொட முடியாது
எங்க தொழில் என்னன்னு கேக்கறீங்களா?
குரங்கு வளர்க்கறோம்
குரங்குகள் சரணாலயம்
சில குரங்குகள்
காது கண்ணு வாயப்
பொத்திட்டு உக்காந்திருக்கும்
ஆனா
வாயில கை வெச்சிருக்கிற குரங்குக்கு
கண்ணும் காதும் ஓப்பன்
கண்ணுல கை வெச்சிருக்கிற குரங்குக்கு
காதும் வாயும் ஓப்பன்
அது போதுமே எங்களுக்கு
எல்லாக் குரங்கும்
ஒருநாள்
எங்ககிட்ட வந்தே தீரும்
இதோ புதுசா மூணு வருதே
பாருங்க
மும்பை எக்ஸ்பிரஸ்
குரங்கு கையில் மாலை
கொடுத்ததாரு வேலை?
தொடுத்து வச்ச நாரும்
தேறாதுடா
குறைக்கும் நாயின் வாலை
நிமித்தி வைக்க போல
இறுக்கிக் கட்டினாலும்
மாறாதுடா
வத்தியும் பீடியும்
வெவ்வேறு ஜாதிதான்
வத்தியின் இடத்தில்
வைக்காத பீடிதான்
தெனாலிராமன் தலையில்
தேசிங்குராஜன் கிரீடம்
தூக்கிவைக்கும் மூடப்
பரம்பரை
கரகாட்டக் குதிரையேறி
நவக்கிரகம் சுத்தக் கிளம்பிடும்
பரமார்த்த குருவின் சீடன்
பரம்பரை
கோவணத்தக் கட்டக்கூட வக்கில்லாம
வானில் வீடு கட்டறேன்னு அளப்பான்
கூறையேறிக் கோழிபிடிக்கத் தெம்பில்லாம
வைகுண்டத்தக் காட்டுறேன்னு கதைப்பான்
கழுதைக்கென்ன தெரியும்
கற்பூரத்தோட வாசம்
சூடமேத்திக் காட்டும்
சுறாங்கனி
குப்பை நாயைக் கூட்டி
குளிக்கவச்சுப் பூச்சூட்டி
கூடந்தன்னில் வச்சா
திரும்ப ஓடும்
தெருவுக்கே
Quality Guarantee: Any faux pas in the above lyrics are purely due to the poor quality of the MP3.
குமுதம் – அங்குமிங்கும்
குமுதம் #2-வோ, குங்குமம் #1-ஓ தெரியவில்லை!
ஏப்ரல் 14 முதல் சுஜாதாவின் கற்றதும் பெற்றதும் வழியில் மதனும் தன்னுடைய பதிவுகளை குமுதத்தில் தொடங்கவிருக்கிறார்.
விஜயகாந்த்தின் பிரச்சாரமும் கொள்கை விளக்கமும் இன்னொரு தொடராக துவங்குகிறது.
ஜெமோவின் தொடர் போல் இல்லாமல், இவையிரண்டுமாவது kumudam.comல் வெளியாக வேண்டும்.
அட்டையைக் கழற்றாமலே மூன்று முக்கியப் பத்திரிகைகளும் ஒரே மாதிரி ஆகிக் கொண்டிருப்பதற்கு லேட்டஸ்ட் சாட்சி: இந்த வார விகடன் மற்றும் குமுதம் இரண்டிலும் அட்டைப்படத்தையும் கவர் ஸ்டோரியும் தரிப்பவர் ‘காதல்’ சந்தியா.
ஜெயமோகனின் குமுதம் தொடரைப் பற்றிய இணையப்பேச்சு கண்ணில் (அடி)படவில்லை. vikatan.comல் ‘நீல வானம் இல்லாத ஊரே இல்லை…’ என்று க.சீ.சிவ குமார் எழுதிவருகிறார். ஜெ.மோ.வின் தொடர் நன்றாகத்தான் இருக்கிறது. மரத்தடியில் பதில் கொடுத்ததையே புத்தகமாக்குகிறார். இவற்றையும் புத்தகமாகப் போடாமல் விட்டுவிடுவாரா!
ஆங்கிலமும் இல்லாமல் தமிழும் இல்லாமல் அவசர முடிவுகளாக ஒரு வலைப்பதிவு போட்டுக் கொண்டிருக்கிறேன்.
என்னுடைய அம்மா பொன்னம்மாளின் ‘காமகோடி’ எழுத்துக்களை (மீண்டும்) சேமிக்க ஆரம்பித்துள்ளேன்.
குங்குமம் இன்னபிற பத்திரிகைகளை இணையம் மூலம் வாங்க indianmagazinesonline.com உபயோகமாகமாக இருக்கும். இந்தத் தளத்தின் மூலமாக சில காலம் தமிழ் இந்தியா டுடே மற்றும் கல்கி வாங்கியதில் ஓரளவு நல்ல அனுபவம். வாரம் தவறாமல் கரெக்டாக அனுப்பி விடுகிறார்கள். மூன்று மாதம் பயன்படுத்தியதில் இந்தியா டுடே ஒரு வாரமும் கல்கி ஒரு வாரமும் வராமல் படுத்தியது.
(அவற்றை வழக்கம் போல் இந்தியத் தபால் துறை சுருட்டியிருக்கும் என்று நினைக்கிறேன். காலச்சுவடு/உயிர்மை ஆண்டுச் சந்தா செலுத்தினாலும் சில மாதங்கள் வராமல் தவறிப் போவது ஏன் என்று விசாரித்தபோது, நண்பர் ஒருவர் சொன்ன காரணம்: ‘விகடன், குமுதம் போல் நிறைய சந்தாதாரர்கள் இருந்தால் உங்களுக்கு இதழ் வராமல் போவதற்கு சாத்தியக்கூறுகள் குறைவு. ஆனால், குறைவான சந்தாக்காரர்கள் இருக்கும் பத்திரிகை உங்களிடம் இருந்து திருடப்படுவதற்கு probability அதிகம்தானே?!’)
Recent Comments