Archive
கொழுப்பாச்சி – 2
ஒரிஜினல் கொழுப்பாச்சி – 1
கொசுறு :: அல்வா தலைநகரம்
திமுக தொண்டர் படை:
வாரே வாரே
வாராரே
அட தள்ளு
செல்வி ஜெயலலிதா:
வாரே வாரே
வாராரே
ஒத்துடா
ஜெயகாந்தன் தொண்டர் படை:
வாரே வாரே
வாராரே
அடங்குடா
ஜெயகாந்தன்:
நீ எந்த ஊரு
நான் எந்த ஊரு
முகவரி தேவையில்ல
இல்ல இல்ல
ரத்தத்தின் ரத்தங்கள்:
நீ எந்த உறவு
நான் என்ன உறவு
சொந்தத்தில் அர்த்தம் இல்ல
இல்ல இல்ல
தொப்புள் கொடி உறவா
இல்ல இல்ல
அல்ல
கட்சிக்கொடி உறவா
இல்ல இல்ல
ஜெயகாந்தன்:
ஹே
மேட்டுக்குடி உறவா
இல்ல இல்ல
அட
கள்ளு கட உறவா
இல்லவே இல்ல
கலைஞர் கருணாநிதி:
உன்ன யாரோ பெத்திருக்க
என்னை யாரோ பெத்திருக்க
ஆனாலும்
நீயும் நானும்
அண்ணன் தம்பிடா
—————
ஜெயகாந்தன்:
சாமி வரம் தந்திட்டா
கொட்டும் மழை கொட்டும்டா
ஏழை மனம் பொங்கும்டா
நான் அய்யனாரு பக்தண்டா
செல்வி ஜெயலலிதா:
மண்ண நம்பி வேரு
விண்ண நம்பி ஆறு
என்ன நம்பி யாரும்
கெட்டதில்ல பாரு
சோனியா காந்தி:
உனக்கொரு பேரு
எனக்கொரு பேரு
ஒண்ணு சேர்த்து பாரு
இந்தியன்னு பேரு
ஜெயேந்திரர்:
பொறப்பும் இறப்பும் அவன் கையிலே
நாம வாழும் வாழ்க்கை நம்ம கையிலே
—————
ரஜினிகாந்த்:
அம்மை அப்பன் தானடா
ஓ…
நம்மையாளும் சாமிடா
சசிகலா:
கருவறை தோழிடா
ஓ…
நம்ம உயிர் நாடிடா
கமல்ஹாஸன்:
கண்ணப் பொத்தி வாழு
காதப் பொத்தி வாழு
வாயப் பொத்தி வாழு
நம்ம காந்தி மொழி கேளு
ஓ…
ஜெயகாந்தன்:
ஆத்திகம்தான் மூச்சு
சத்தியம்தான் பேச்சு
ஆசை எல்லாம் போச்சு
நம்ம புத்த கொடி ஏத்து
ஓ…
விஜயேந்திரர்:
அட பொறப்பும் இறப்பும் அவன் கையிலே
நாம வாழும் வாழ்க்கை நம்ம கையிலே
சன் தமிழ்
இன்றைய சன் செய்திகளில் கிடைத்த பிழைகள்:
1. India and China are not rivals.
இந்தியாவும் சீனாவும் பகைவர்கள் கிடையாது.
2. திரையில் காட்டப்பட்ட செய்தி அறிக்கையில் இருந்து:
… வருமாரு …
மிஸ்டர் கழுகு – ஜெயகாந்தன்
Vikatan.com ::
“ஞான பீட விருது பெற்ற ஜெயகாந்தனை, தமிழ் உணர்வோடு நேரில் சந்தித்து வாழ்த்த நினைத்தார் கருணாநிதி. பண்போடும் பரிவோடும் இதைச் செய்ய நினைத்தாலும் ஜெயகாந்தன் தரப்பிலிருந்து வந்த ரியாக்ஷன் அதிரச் செய்ததாக ஒரு தகவல்!”
“என்ன..?”
“கருணாநிதிக்கு உயர் பாதுகாப்பு வளையம் இருக்கிறது. எனவே, அவர் எங்கு போவதாக இருந்தாலும்… அதற்குமுன் பாதுகாப்பு அதிகாரிகள் போய் அந்த இடத்தைப் பார்வையிட்டுத் திரும்புவது வழக்கம். அதன்படி, ஜெயகாந்தன் வீட்டுக்குக் போக நினைத்தார்கள். அதற்குமுன், பாதுகாப்பு அதிகாரி ஒருவர் போன் போட்டாராம். ‘நாங்க தி.மு.க. தலைவர் வீட்டுல இருந்து பேசுறோம். தலைவர் உங்களைப் பார்க்க திட்டமிட்டு இருக்காங்க. உங்க முகவரி சொல்ல முடியுமா?’ என்று கேட்டதுதான் தாமதம். எதிர் பக்கத்திலிருந்து கனமான குரலில், ‘என் முகவரி தெரியாதா? முதலில் உங்கள் தலைவரின் முகவரி என்ன, அதைச் சொல்லுங்கள்? அவருக்கு முகவரி உண்டா?’ என்று எதிர்க் கேள்வி வந்ததாம். என்ன பதில் பேசுவதென்று தெரியவில்லையாம் அந்த அதிகாரிக்கு. அப்படியே போனை வைத்து விட்டாராம்”
“நிஜமாகவே சொல்கிறீர்?”
“தகவல் கேள்விப்பட்டு தி.மு.க. வட்டாரத்திலும் இதேபோல்தான் அதிர்ச்சி காட்டுகிறார்கள். ‘படைப்பாளிகளுக்கு கர்வம் இருக்க வேண்டியதுதான். சில கொள்கைப் பிடிப்புகளும் இருக்க வேண்டியதுதான். ஆனால், அடுத்தவர் மனதைப் புண்படுத்தும் வகையில் வார்த்தைகளை விடுவது நாகரிகமா?’ என்று தங்களுக்குள் வேதனையுடன் கேட்டுக் கொள்கிறார்கள்!”
Recent Comments