Archive

Archive for April 20, 2005

கணினி புரட்சி

April 20, 2005 1 comment

nakeeran: விழாவில் பேசிய நக்கீரன் கோபால்:

“தமிழுக்கு ஒரு புதிய கணினித் தகுதி கிடைத்திருக்கிறது. தமிழை உயர்த்துவதற்காக தாத்தா எட்டடி பாய்ந்தால்… பேரனான நான் பதினாறடி பாய்வேன் என்பதை நிரூபித்திருக்கிறார் மத்திய அமைச்சர் தயாநிதிமாறன்…” என்று குறிப்பிட்டார்.

ஹிந்து என்.ராம்… “கலைஞர் தன் தொடக்க காலத்திலிருந்து நடத்திவந்த தமிழ் போராட்டத்துக்கு கிடைத்திருக்கும் இன்னொரு மகத்தான வெற்றி இது” என்றார்.

துக்ளக் சோ இவ்விழாவில் மைக் பிடித்தபோது…

“கம்ப்யூட்டரில் தமிழுக்கு புதிய தகுதி கடைத்திருக்கிறது. இங்கே இன்னொரு தமிழ் கம்ப்யூட்டரும் (கலைஞரைப் பார்த்து) உண்டு. அரசியலில் என்று, என்னென்ன நடந்தது. எந்தெந்த பத்திரிகைகளில் என்னென்ன செய்திகள் வந்தன என்பது அந்த கம்ப்யூட்டருக்கு அத்துப்படி. எனவே மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தினர் இந்த தமிழ் கம்ப்யூட்டரையும் அனலைஸ் செய்யவேண்டும்” என கலைஞரை கம்ப்யூட்டரோடு ஒப்பிட்டுப் பேச அரங்கம் எங்கும் பலத்த சிரிப்பு.

தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்… “இந்திய மொழிகளில் மென்பொருள் கருவிகள் முதலில் தமிழில் செய்யப்பட்டதற்காக தயாநிதிமாறனுக்கு வாழ்த்துக்கள்” என குறிப்பிட்டார்.

விழாவுக்கு வேட்டியில் வந்திருந்த தயாநிதி மாறன்

“இங்கு வந்திருப்பவர்களுக்குத்தான் இந்த இலவச மென்பொருள் கருவிகள் என்பதில்லை. நீங்கள் வீட்டிலிருந்தே இண்டர்நெட்டில் ரிஜிஸ்தர் செய்தால் அடுத்த 7 நாட்களுக்குள் இந்த தமிழ் மென்பொருள் கருவிகள் உங்கள் வீடுதேடி விரைந்து வரும்” என்றார்.

தமிழிலேயே ஈமெயில் அனுப்பலாம். தமிழ் சொற்களை கம்ப்யூட்டரிலேயே எழுத்துப்பிழை திருத்தலாம். தமிழ் அகராதியை கணிணியிலேயே பெறலாம் என பல பயன்கள் கொண்ட இவ்விழாவில் இவற்றை எப்படி பயன்படுத்துவது என்றும் செய்முறை விளக்கம் செய்து காட்டப்பட்டது.

மறுநாள் தஞ்சை தி.மு.க. மாநாடு பரபரப்பிலும் இவ்விழாவிற்கு வந்த கலைஞர்… “இது உலக அளவில் தமிழை கொண்டுசேர்க்கும் முயற்சி” என வாழ்த்தினார்.

Categories: Uncategorized

அந்த நாள் ஞாபகம்

April 20, 2005 Leave a comment

ஏவிஎம் சரவணன்: ”எப்படி வரும்?” என்று கேட்டார் திரிலோக். ”நீங்க எடுக்கறது படிக்காத மேதை. எமோஷனல் ஸ்டோரி. அதில் சீன்கள்ல எமோஷனைக் காட்டணுமே தவிர, காட்ட முடியுமே தவிர, அங்கே போய் ‘செட்’டோட ரிச்னஸை எப்படிக் காட்ட முடியும்? பீம்சிங் எப்படிக் காட்டுவார்?”

”நெறய செலவு பண்ணி ‘செட்’ போட்டாச்சு. என்ன பண்றதுன்னே தெரியல” என்றார் அப்பச்சி.

ஸ்டூடியோவில் செட் போட்டு அங்கே ஷ¥ட்டிங் முடிந்த பின்பு, அந்த செட்டைப் பிரித்து விடுவதுதான் எங்கள் வழக்கம். அதே செட்டை பிறகு யாருக்கும் வாடகைக்கு விடுவதில்லை. மெஹர்பான் செட்டைப் பொறுத்தவரை, அதன் ‘ரிச்னஸ்’ஸை படத்தில் காட்ட முடியவில்லையே என்ற ஆதங்கம் அப்பச்சிக்கு இருந்தது.

”சரி… இந்தப் படம் முடிஞ்ச பிறகு இந்த செட்டைப் பிரிக்க வேணாம்” என்றார் ”இந்த செட்டுக்குப் பொருந்தி வராப்போல ஒரு கதை ரெடி பண்ணுங்க”

”பொருந்தி வராப்போலன்னா, இதுக்கு சோஷியல் சப்ஜெக்ட்ஸ் சரிப்பட்டு வராது. க்ரைம் த்ரில்லர் தான் பொருந்தி வரும். செட்டுக்கு ஸ்கோப் இருக்கும்” என்றார் திருலோக்.

பூட்பங்களா, பீஸ் ஸால் பாத், கும்நாம், டார்க் பங்களா போன்ற நாங்கள் பார்த்திருந்த படங்களையெல்லாம் மிக்ஸ் பண்ணி, ஒரு க்ரைம் த்ரில்லர் கதையை தயார் செய்தோம். அதுதான் ‘அதே கண்கள்!’

டி.என். பாலுவை வைத்து காமெடி ட்ராக்கை மட்டும் தனியாக எழுதினோம். டி.ஆர். ராமண்ணாவிடம் இருந்தவர் பாலு. ‘நான்’, ‘குமரிப்பெண்’ போன்ற படங்களில் பிரபலமான காமெடி ட்ராக்கை எழுதியவர். ஒரே வாரத்தில் முழு ஸ்கிரிப்டையும் தயார் செய்து விட்டோம்.

இந்தப் படத்துக்கு வேதா இசையமைத்தார். இலங்கை வானொலியில் புகழ் பெற்ற மயில்வாகனன்தான், இந்த வேதாவை என் சகோதரர் குமரனுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.

”இவருக்கு இசையமைக்க வாய்ப்புத் தாருங்கள். பாடல்களை இலங்கை வானொலி மூலம் ‘ஹிட்’டாக்கிக் காட்டுவது என் பொறுப்பு’ என்று மயில் வாகனன் உறுதியும் தந்திருந்தார்.

இதில் வேடிக்கை என்னவென்றால், எந்தப் பாடல்களை வானொலி மூலம் ஹிட்டாக்கிக் காட்டுகிறேன் என்று மயில் வாகனன் உறுதி தந்திருந்தாரோ, அந்தப் பாடல்கள் வெளியானபோது அவர் இலங்கை வானொலியில் பணியில் இல்லை. இருந்தாலும் பாடல்கள் யாவும் இனிமை காரணமாக தாமாகவே பிரபலமாயின.

நன்றி: kalki

Categories: Uncategorized

மந்திரமுகி கதை

April 20, 2005 3 comments

அமெரிக்காவில் சொட்டைய கூஜாவின் வீட்டை பழனி வாங்குகிறான்.

சூனியக்காரி மந்திரமுகி இந்த வீட்டில் ஆயிரம் தலைகளை காவு வாங்கியதாக சரித்திரம். கடைசியாக போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர் சொட்டைய கூஜா. இதனால் அவளின் ஆஸ்தான கேப்டன் சவுரவ் (கிரிக்கெட் வீரன்) ஓய்வு பெற்றதாக தகன எரிப்பாளர் தாடிவாலா முன்கதை சுருக்குகிறார்.

மந்திரமுகியால் பலி வாங்கப்பட்ட ஆயிரம் வீரர்களின் ஆவிகளும் சொட்டைய கூஜாவின் வீட்டில் உலாவுவதாக வதந்தி. அவற்றை சச்சின் டெண்டுல்கரின் முப்பதடி மட்டை காத்திருப்பதாக ஐதீகம். மந்திரமுகியின் அறையில் இருந்து எட்டிப் பார்த்தால் சேப்பாக்கம் மைதானம் இன்றும் தெரிகிறது. சேப்பாக்கத்தின் பெவிலியனில்தான் முன்னாள் அணித் தலைவன் சவுரவ் வசித்திருந்தான்.

இந்நாளில் அங்கு டிராவிட் வசிக்கிறார். அவரும் கிரிக்கெட் கேப்டன்தான்.

காவேரியை பழனி காதல் மணம் புரிந்திருக்கிறான். இது பிரிந்திருந்த பழனியின் பழங்குடியில் பிளவை வலுப்படுத்துகிறது. என்றாலும் பழனியின் மொத்த குடும்பமும் அறுபடை வீடுகளுடன் மந்திரமுகி மாளிகையில் குடிபுகுகிறது.

இவர்களுடன் மறைவாணனும் விடுமுறையை பழனியுடன் களிக்க வருகிறார். வீட்டை கவனித்துக் கொள்ள அவுட் ஹவுஸில் பாட்டியும் பேத்தி சச்சுவும் வசிக்கிறார்கள். சச்சுவை சர்ச்சு என்றழைத்து வெறுப்பேத்துவதை கர்ம சிரத்தையாக மறைவாணன் சிறப்புற செய்து வருகிறார். எனினும், சர்ச்சுக்கு… சாரி… சச்சுவுக்கு மரை கழண்டுவிட மறைவாணனிடம் காதல் வந்து விடுகிறது.

‘மறைவாணன் இருக்க மரை கழல்வதேன்’ என்று படம் நெடுக வசனம் இடம் பெறுகிறது.

மற்றவர்க்குள் மனதுக்குள் மறைத்து வைப்பதை மறைவாணன் தன்னுடைய அமெரிக்கப் படிப்பால் உணர்ந்துகொள்கிறார். புகழ்பெற்ற பல மனவியல் பேறாயர்களையும் பேராசிரியர்களையும் மாணாக்கர்களாக வைத்துக் கொண்டவர்.

அக்கம்பக்க குழந்தைகளுக்கு சச்சு வாய்ப்பாடு கற்றுத் தந்து வருகிறார். காலையில் எழுந்தவுடன் ‘ஒரோண் ஒண்ணு… ஈரோன்னு இரண்டு’ என்று தமிழ் நாராசமாக நித்திரையை கஷ்டப்படுத்துவதால், வகுப்புகளை நிறுத்த உத்தரவிடுகிறார் மறைவாணன். பெரிய இடத்து பழனி நண்பனாக இருப்பதால், இது எளிதில் சாத்தியமாகிறது. வாய்ப்பாடுகளைப் படிக்காமல் தான் கழற்றி வைத்த நட்/போல்ட்களை மெக்கானிக் வேலை பார்க்குமாறு அறுவுறுத்தி சிறுவர்களை விரட்டியடிக்கிறார். பொழுதுபோக்கு நின்று போனதால் சச்சுவின் காதல் வலுவடைகிறது. சச்சுவை மேலும் கவருமாறு ‘ஒன் ஒன் சார் ஒண்… டூ ஒண் சார் டூ’ என்று ஆங்கிலப் புலமையை காட்டி நம்மையும் முடுக்குகிறார் மறை.

காவேரிக்கு கர்னாடகமாக அடைந்து கிடக்க போரடிக்கிறது. பக்கத்தில் சென்று காய்ந்து போன மந்திரமுகியின் அறைக்குள் நுழைய ஆசை. ஆனால், புக விட மாட்டேன் என்று தடுத்து வருகிறார்கள். சச்சுவின் உதவியை நாடுகிறார் காவேரி. நண்பனிடம் தனது மதிப்பை உயர்த்த மறைவாணனும் சச்சுவின் உதவியைக் கோருகிறான்.

சச்சுவும் சேவல் பண்னையை பழனியின் மேல் ஏவி விடுகிறாள். மறைவாணன் சேவல்களிடமிருந்து பழனியைக் காப்பாற்றுகிறான். மாம்பழத்தில் விஷம் தோயித்திருப்பதை பழனிக்கு உணர்த்துக்கிறான்.

  • சச்சு பழனியைக் கொல்ல முயன்றது ஏன்?
  • மந்திரமுகியால் பலி வாங்கப்பட்ட ஆயிரம் வீரர்களின் ஆவிகளும் பழனியின் அறுபடை வீட்டாரையும் பிடித்திருக்கிறதா?
  • டிராவிட் நிலைமை என்ன ஆச்சு?
  • ஆயிரம் வீரர்களின் ஆவிகளை மேய்க்க வரவழைக்கப்பட்ட புது பயிற்சியாளர் யார்?

    மந்திரமுகியின் இத்தைகைய புதிய கேள்விகளுக்கு சொட்டைய கூஜாவின் விடையை வெள்ளித்திரையில் காண்க!

    – பாஸ்டன் பாலாஜி

  • Categories: Uncategorized