Archive

Archive for May 2, 2005

மாணவிகளை நிர்வாணமாக்கி சோதனை

தினகரன் :: ராய்ப்பூர், ஏப். 28 – ராய்ப்பூரில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவிகள் நிர்வாணப்படுத்தி சோதனை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த மார்ச் மாதம் 10 ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெற்றது. அப்போது தேர்வில் காப்பி அடிப்பவர்களை பிடிப்பதற்காக நியமிக்கப்பட்ட – பறக்கும் படையினர் ஒரு வகுப்பிலிருந்த 35 பெண்களை தனி அறைக்கு அழைத்துச் சென்று ஆடைகளை அவிழ்த்து பரிசோதனை செய்த பின்னரே தேர்வு எழுத அனுமதித்தார்களாம். ஒரு மணிநேரம் இந்த சோதனை நடந்ததாக கூறப்படுகிறது. இந்த கேடு கெட்ட செயல் சட்டீஸ்கர் மாநிலம் உமாரிய என்ற ஊரில் நடந்துள்ளது. இந்த விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. இது குறித்து முழு விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணையின் முடிவில் கிடைக்கும் தகவல்கள் அடிப்படையில் தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில கல்வி அமைச்சர் ராஜேஷ் முனத் தெரிவித்தார்.

Categories: Uncategorized

முஸ்லிம் திருமண விவாகரத்துக்கு புதிய கட்டுப்பாடு

May 2, 2005 5 comments

vikatan.com :: முஸ்லிம்கள் மும்முறை ‘தலாக்’ கூறி விவாகரத்து செய்வதற்கு முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் புதிய கட்டுபாடு விதித்துள்ளது.

போபாலில் நடைபெற்ற அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்டவாரியத்தின் 2 நாள் பொதுக்குழு கூட்டத்தின் முடிவில், நிருபர்களிடம் பேசிய வாரியச் செயலாளர் அப்துல் ரகீம் குரேஷி “முஸ்லிம் திருமண விதிமுறை மாதிரிச் சட்டம் ‘நிக்காஹ் நாமா‘ தயாரிக்கப்பட்டு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டுள்ளது.

அல்லாஹ் பார்வையில் ‘தலாக்‘ செய்வது மிகவும் வெறுக்கத்தக்க ஒன்றாகும். எனவே முஸ்லிம்கள் விவாகரத்து செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

தம்பதிகள் விவாகரத்து செய்ய முடிவு செய்தால், அதற்குரிய கால அவகாசம் கொடுக்கப்படவேண்டும். ‘தலாக்’ என்பது கடைசி ஆயுதமாகப் பயன்படுத்தப்படவேண்டும் என்பதே ‘நிக்காஹ் நாமா’வில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சமாகும்.

‘தலாக்’ கூறுபவர்கள் ஒரே முறையில் மூன்று முறை ‘தலாக்’ கூறமுடியாது. ஒரு ‘தலாக்’க்கும் இன்னொரு ‘தலாக்’க்கும் குறைந்தபட்சம் ஒரு மாத இடைவெளி இருக்கவேண்டும். ஒரு முறை ‘தலாக்’ சொன்னால் அதை மூன்று மாதத்துக்குள் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்” என்று தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு: NDTV

Categories: Uncategorized