Archive
அரசு பதில்
எஸ்.ஜனார்த்தனன், சின்னதாராபுரம்.
‘தமிழ்நாடு விளங்காமல் போனதற்கு சினிமா பைத்தியங்களாக தமிழர்கள் இருப்பதுதான் காரணமா?
அது உண்மையாக இருக்கும் பட்சத்தில், திரையரங்கங்கள் எல்லாம் நிரம்பி வழிந்து கொண்டிருக்க வேண்டுமே? தமிழ்நாட்டு அரசியலைத் தீர்மானிக்கும் சக்தியாக சினிமா ஆரம்ப காலத்தில் இருந்தது வேண்டுமானால் ஒரு காரணமாக இருக்கலாம்.
வி.மாரிமுத்து, பரப்பாடி.
சிறந்த கலைப் படைப்பு என்பதற்கு அளவுகோல் என்ன?
(1)வாழ்க்கையின் அம்சம் ஒன்றை அந்தப் படைப்பு புதிதாக வெளிப்படுத்துகிறதா? வெளிப்படுத்தப்பட்ட விஷயம் உண்மையானதுதானா?
(2) அது அழகாகவும், சொல்ல முற்பட்ட பொருளுக்கு ஏற்ற முறையிலும் அமைந்திருக்கிறதா?
(3) கலைஞனுக்கும் அவன் படைத்த படைப்புக்கும் உள்ள உறவு சத்தியமானதா? மூன்றாவதாகச் சொன்ன இந்த அளவுகோல், மிக முக்கியமானது. படைப்பவனிடம் உதித்த அதே உணர்ச்சிகள், அதைப் படிப்பவனுக்கோ, பார்ப்பவனுக்கோ, கேட்பவனுக்கோ ஏற்படச் செய்வதே அந்தச் சத்தியம்தான்’ (சொன்னது டால்ஸ்டாய்)
பரிநீதா
இசை: ஷாந்தனு மொய்த்ரா (Shantanu Moitra)
பாடலாசிரியர்: ஸ்வனாந்த் கிர்கிரே (Swanand Kirkire)
சாய்ஃப் அலி கான், வித்யா பாலன், ரேகா, சஞ்சய் தத், தியா மிர்சா
பியா போலே – சோனு நிகம், ஷ்ரேயா கோசால்
அந்தக் கால மனீஷா கொய்ராலா போல் இருக்கிறார் நாயகி வித்யா பாலன். காதலை இயற்கையின் பல வண்ணங்களோடு ஒப்பிடும் வரிகள். 1942- எ லவ் ஸ்டோரி போன்ற மெல்லிய இசை. கொஞ்சும் ஷ்ரேயா கோசாலின் குரல் வெகு பாந்தமாக வருடுகிறது.
மீண்டும் மீண்டும் கேட்கலாம்
கஸ்தோ மஸா – சோனு நிகம், ஷ்ரேயா கோசால்
குழந்தைகளுடன் பயணிக்கும் ஹீரோ அறிமுகப் பாடல். கனவுக் காதலர்களை வர்ணிக்கிறார்.
படம் பார்த்த பிறகு மேலும் பிடித்துப் போகலாம்
சுனா மன் கா ஆகன் – சோனு நிகம், ஷ்ரேயா கோசால்
பிரிக்கப்பட்ட இளஞ்ஜோடிகளின் தொக்கி நிற்கும் கேள்விகள். இடைவேளைக்குப் பின் சோகத்தைப் பிழிய உதவும்.
பரவாயில்லை
கேஸி பஹேலி ஜிந்தகானி – சுநிதி சௌஹான்
மும்பையில் மூடப்பட்ட பார்களில் வரும் ஜாஸ் இசை போல் இடுப்பை மெதுவாக வளைத்து ஆடிப்பார்க்க வைக்கிறார்கள். திரையில் ரேகா தோன்றுவார்.
ராத் ஹமாரி தோ – சித்ரா, ஸ்வனாந்த்
சுவர்க்கோழி ரீங்காரமிட, இராப்பாடகனின் சோக அழைப்போடு துவங்குகிறது.
அமைதியான நேரங்களில் கேட்கலாம்
தினக் தினக் தா – ரீடா கங்குலி
கல்யாண முன்னோட்டத்தின் குரூப் டான்ஸ். திரைப்படத்தின் துள்ளல் பாடல். ஹிந்திக்குக் கிடைத்திருக்கும் புதிய இலா அருணான, ‘ரீடா கங்குலி’ வெகு சீக்கிரமே தமிழில் ரகஸியாவுக்குக் குரல் கொடுத்து விடுவார்.
இது நம்ம பாட்டுங்க
ஹுயி மேன் பரிநீதா – சோனு நிகம், ஷ்ரேயா கோசால்
முதற் பாடலான பியா போலே-வின் சோகப் பதிவு.
படத்தை ஆவலுடன் எதிர்பார்க்க வைக்கும் பாடல்கள். பாடல்கள் கேட்க: RAAGA – Parineeta – Hindi Movie Songs
Recent Comments