Archive

Archive for May 4, 2005

முடுக்கியதும் முடுக்காததும்

1. Google Web Accelerator: கூகிளிடம் இருந்து வலையை முடுக்கி விடுவதற்கான நிரலி வெளியாகியிருக்கிறது. தற்போதைக்கு வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் மட்டுமே வெள்ளோட்டம் விட்டிருக்கிறார்கள்.

அமெரிக்காவில் கூட அகலபாட்டை மக்களுக்கு மட்டுமே வேலை செய்யும். தள உரிமையாளர்களுக்கான வ.கே.கே.களையும் படித்து விடவும்.

2. பேக்பாக் அருமையாக இருக்கிறதாம். யாஹுவின் 360 போலவே பட்டியல் போடலாம்; படங்கள் காட்டலாம்; விக்கி கூட செய்யலாம். jot-ஸ்பாட்டுக்கும் குமுக-எழுத்துக்கும் சரியான போட்டி என்கிறது Micro Persuasion.

3. டாக் ஸேர்ல்ஸின் (Doc Searls) எது வலைப்பதிவு என்பது குறித்த பட-வில்லைகள், சிந்தையை அல்வா கொடுக்காமல் கிளறுகிறது.

4. சமையலறையை புரட்சி செய்து நவீனமாக்குகிறது எம்.ஐ.டி.

5. மசாலா அரைத்து சாப்பிட்டால் புற்றுநோய் ஆபத்து என்று (லண்டன்) டைம்ஸ் அலறுகிறது. (பக்கத்து அடுக்ககத்தில் இருப்பவரின் பையனுக்கு lead அதிகம் இருப்பதாக சொன்னார். சாயத்தில் ஆரம்பித்து பாத்திரங்களில் ஆராய்ச்சி தொடர்ந்து கடைசியில் சாம்பார் பொடியிலும் ரசப்பொடியிலும் லெட் மிகுந்திருப்பதை கண்டுபிடித்தார்கள். மில்லில் அரைக்கும்போது, துருப்பிடிக்காத மெஷினாகப் பார்த்து, அரைச்சு சாப்பிட வேண்டும்.)

6. புத்தகப்புழுக்களுக்கு ஏற்ற வலைப்பதிவுகளை பாஸ்டன் க்ளோப் குறிப்பிட்டிருக்கிறது. அவ்வப்போது எட்டிப்பார்த்தால் அமேசான்(.காம்) உலகை அறியலாம்.

7. அன்னையர் தினத்தை முன்னிடாமல் நியு யார்க் டைம்ஸின் கட்டுரை, மாபெரும் சபைகளில் நடக்கும் மகளிரை அலசுகிறது.

Categories: Uncategorized

ஷல் வீ டெல் தி ப்ரெஸிடெண்ட்?

May 4, 2005 4 comments

யார் ஜெயிப்பார்கள்?
யூகே-வின் தமிழ் வலைவாசிகள் ஏன் தேர்தலை கண்டு கொள்ளவேயில்லை??
டோனி ப்ளெயரின் வெற்றி நிச்சயமா???

  • பிபிசி
  • டைம்ஸ்
  • நியு ஸ்டேட்ஸ்மேன்
  • எகானமிஸ்ட்
  • கார்டியன்
  • என்.பி.ஆர்
  • Categories: Uncategorized

    முன்னுமொரு காலத்தில்

    May 4, 2005 7 comments

    வலையில் இரண்டு மாதங்களாக தொடர்ச்சியாக பதிவது பெரிய விஷயம். இரண்டாண்டு காலமாக ரமணீதரன் வலைப்பதிந்து வருகிறார். வலைப்பதிவு ஏன், நியு ஜெர்ஸி பெட்னா விழா குறித்த பதிவுகள், திரைப்படங்கள், PBS / NPR-இன் All Things Considered, The Connection, On Point என்று விளாசுகிறார்.

    லிட்டில் பிக் மேன், The Hudsucker Proxy, தி ஸ்டிங், Rio Lobo, பிக் ஜேக், The Comancheros, Rio Grande , Sands of Iwo Jima, Cradle will rock, ரிபல் விதவுட் அ காஸ், ப்ளூ க்ரஷ், தி பேட்ரியாட், தி ரெக்ரூட், தி ஹவர்ஸ், தி வேனிஷிங் ஹாரி, un ami qui vous veut du bien (With a Friend Like Harry), சவுண்ட் அண்ட் ஃப்யூரி, Yadon ilaheyya (Divine Intervention), லீவிங் ஜெருசலம் பை ரயில்வே, தி எண்ட் ஆஃப் தி அஃபேர், எ க்ரையிங் கேம், மிட்நைட் இன் தி கார்டன் ஆஃப் குட் அண்ட் ஈவில், என்று பார்த்த படங்களுக்கு எல்லாம் பார்வையோ விமர்சனமோ (இப்பொழுதாவது) முன்வைத்தால் நன்றாகத்தான் இருக்கும்.

    அப்பொழுது எனக்கு வந்த சந்தேகம். மனிதர் தூங்குவாரா அல்லது கண்ணிமைக்கும் நேரங்கள்தான் உறக்கம் என்று நினைக்கிறாரோ என்று தோன்றும். பிறகு புள்ளை குட்டிக்காரர் ஆகிப்போனார். பாஸ்டன் வந்தபிறகு சகவாசமும் சரியில்லை. கெட்டுப் போயிருக்கிறார் :-/

    The redistricting plan, வானொலி நாடகங்கள், கதைசொல்லிகள், ஞானக்கூத்தனின் கவிவகுப்பு, தமிழன் அடையாளம், கண்ணில் தெரியுது வானம், அவருக்கு ரொம்பப் பிடித்தமான எழுதுபொருளான கவிதை, அன்றைய நாளிலே அவர் அஞ்சிய இன்னொரு சொல்லான பாரதி, உயர்வு நவிற்சி, சரிகைக்குஞ்சச்சொற்கள்,
    காற்றடைத்தபைக்கூற்றுகள், சில கெட்ட உறுப்புகள் என்று எழுந்தவை, எதிர்ப்பட்டவை, பார்வை, மற்றவை என்று அடுக்கி உங்களை வலைபாஸ் (தமிழில் என்ன?) பாதையில் விடப்போவதில்லை.

    (தமழ்ச் சொல் என்றவுடன் கண்ணில் படுவது: மறுப்புக்கூற்று (disclaimer), narcissist masks — தன்னீர்ப்புமுகமூடிகள் போன்ற சொல்லாக்கங்கள்.)

    வானவியற்றுறையையும் விடவில்லை. பெயரிலி ஆகிப் போனதும் இங்கே பதிவது குறைந்து போனது.

    அவருடைய பதிவுகளில் இருந்து:

  • blogger.com தனது அண்மைய அமைப்பு மாற்றுதலோடு நீண்ட உள்ளிடுகைகளை ஏற்றுக்கொள்வதைத் தடை செய்கின்ற நோக்கமேதும் கொண்டதாலேயே, இந்த இரண்டு உள்ளிடுதல்களோடும் BIG POST ERROR என்று சுருக்கமான வரப்புயர விளக்கத்தைப் பெற்றேனோ தெரியாது 🙂 [அல்லது தமிழிலே நீண்டதாய் எழுதியதை ஆங்கிலத்திலே, “நல்ல கருத்துக்களைச் சொன்னார்; கைதட்டிவிடுங்கள்” என்ற பகிடிபோல மொழிபெயர்ப்பாகச் சொல்லியதோ தெரியாது :-D]
  • இன்னொரு ஆறுதலான விடயம், இணையத்தின் அறியப்பட்ட “I don’t care what kind of cake you bake; but, I will top it with my sour cream” அறிஞ்ஞ ஆசாமிக்குஞ்சுமோன்கள் இவரின் திரைப்படவிமர்சனங்களிலே தங்கள் உள்ளீடு என்றளவிலே இதுவரை குப்பை சொட்டாமல், கொட்டாமலிருப்பது.
  • வலைப்பதிதலிலே உள்ள எதையும் விரும்பியவாறு என்ற நாட்குறிப்புச்சுதந்திரத்தைக் கண்டு கொண்டாலும், சொல்லும் பாங்கிலே கொஞ்சம் நிதானமாக, பின்னாலே இரண்டடி வைத்து நின்று நான் சொல்லவருவதை நானே கேட்டு எழுதுவதாகத் தீர்மானம். அன்றாடம் கேட்பதும் காண்பதும் வாசிப்பதுமாக உள்ளே வருவனவற்றிலே எந்தளவு உள்ளே தங்குகிறது என்று தெரியவில்லை. ஒரு மாதம் கழித்துப் பார்த்தால், ‘இத்தனையையும் உள்வாங்கிக்கொண்டதால் என்ன பயன்’ என்ற கேள்வி அடிக்கடி எழுகிறது. சில மாதங்களிலே அடையலின்மேலே அடையற்படிவாய்த் தேங்கி, பாறையாகிப் போய்விடுகிறது. கதை, கவிதை, கட்டுரை எழுதுவதே சூழல்–>இருப்பு–>மூட்டம் காரணமாகத் தேய்ந்து போகையிலே, இந்த வலைப்பதிவு குறைந்த பட்சம் அன்றாட அறிதலிலே ஓரிரண்டையாவது பதித்துக்கொள்ள உதவும்; இன்னும், பத்தாண்டுகளிலே திரும்பிப் பார்க்கையிலே வந்த பாதையும் அறிந்த கருத்துக்களும் எந்தளவு குறிகளையும் நிலைகளையும் மாற்றியிருக்கின்றன என்றாவது அறிவதிலே ஒரு திருப்தி ஏற்படக்கூடும்.
  • Categories: Uncategorized